Posts

Showing posts from September, 2012

தெய்வங்கள்

தெய்வங்கள்

வரதட்சணையா? வேதனையா?

Image
கிழங்களே கீழ புத்தி கொண்டோரே....... நாள் முழுதும் நல்லது செய்யாதவரே....... மூடங்களே  மூளையில்லா மூடவரே....... வாழவேண்டிய வாரிசுகளை வஞ்சிப்பவரே....... தாழ்ந்த புத்தியால் தடம் மாறிய மிருங்களே......... வாழ்க்கைக்கு வழி  சொல்லாத வயோதிகரே..... இன்னுமா தேவை இல்லறதுக்கு வரதட்சனை? எண்ணிப்பார் ஏமாரபோவது யாரென்று? ஏய்காதே எள்ளளவு எண்ணிப்பாரீர்! எதிகாலத்தில் உண்ண உணவின்றிருப்பீர் ! சொல்லொன்னா சோகத்தை எதிர்கொள்வீர் கள்ளமில்லா நல்லுறவை காசாக்காதீர்! கண்ணீரால் கஷ்டத்தை வாங்காதீர்! நல்வழி வழிகாட்டி நன்றாக வாழ வையுங்கள்!

காலை வணக்கம்

இன்றும் நான்....... எழுட்சியோடுதான் உள்ளேன் இன்னும் சில மணித்துளிகளில் எழுந்து வருவேன்............... குழந்தையாக ? ... கூனி மறைவேன் கிழவனாக...... என்றுமே ... என்னால் முடியும் இன்றும்.. நாளையும்... முடியும்... முடியும்......முடியும் காலை வணக்கம் ! என்னை காணும் அனைவருக்கும்!!!

எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்

Image
செடியிலே வலை பின்னி சிங்கராமாய்! செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்! நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்! நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்! எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள் எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை! எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்! அமிலம் சுரந்து அத்தனையும் முடித்து அழகாய் வலை அரவறம் தெரியாமல்  ஆனந்த தொட்டிலில் அதிசிய பிறவி-எதிரியை  ஆட்கொள்ளும் ஆளுமை சக்தி நீ! பலசாலியல்ல பயமுறுத்தும் கண்களால் சில நொடியாவது சிந்திக்க வைக்கிறாய்! சிக்கனமாய் இடத்தை சூழ்ந்து கொள்கிறாய்! தக்கணமே எதிரியை தனிமையில் விடுகிறாய்! உயிருக்காகவா உனக்காகவா உரிமைக்காகவா? உண்மையில் எதற்காக வாழ்கிறாய் நீ? என்ன செய்து சாதிக்க நினைக்கிறாய்! எத்தனை நாள் உயிர் வாழ்ந்திட இருக்கிறாய்! முடியும் என்பதை முன்னிறுத்தி சொல்கிறாய்! முயற்சி செய்ய முன்னோட்டம் தருகிறாய்! புதிய  வாழ்கையை  புரிய வைக்கிறாய்-புதிராய்? பிள்ளைகள் வாழ காத்து நிற்கிறாய் !!!  

உன்னையே நேசி உண்மையாய் யோசி

இளம் வயதிலேயே இன்னலை தீண்டியவளே ! இதற்காகவா பிறந்தாய் இவ்வளவுநாள் வளர்ந்தாய் ! உனக்காக வாழ்ந்திடு  உணர்ச்சியை பகிந்திடு ! ஒரு  வருடஇன்பம் ஒருவருக்கும் திருப்தி இல்லை கணக்காக நடந்தால் கண்ணியத்தில் குறையுமில்லை பிறரருக்காக பார்க்காதே பிறருக்காக வாழாதே! இளைமை  என்பது இன்றைய நாள்தான் இனிமை என்பது இளமைக்கும்  தேன்தான் இன்றைய வாழ்வை இனிமையாக்க  முயற்சி செய் ! உறவுக்காக இருக்கும் உன் பிள்ளைகளை நேசி ! இப்போதும் தப்பில்லை இனிசொல்ல வழியில்லை மாண்டு  போனவனுக்காக மீண்டும் தப்பு செய்யாதே ! கோழைக்காக நீயும் கேள்விக்குறியாய்  இருந்திடாதே ! நீ தான்  நீதிபதி நின் வாழ்க்கைக்கு அதிபதி மறுமணம் தப்பில்லை மறுவாழ்வு கசப்பதில்லை உருவாக்கு   புதுயுகம் உனைபோற்றும் இந்த உலகம் துணிந்திடு செயல்பாடு துயரத்தை வென்றிடு !!!

விதவையாக்கியது யார்? வேதனை வேதனை சுமப்பது நான்?

Image
காலமும் பார்த்து நேரமும் பார்த்து கல்யாணம் கடமையாக பண்ணி வச்சாங்க கட்டமெல்லாம்   பொருத்தம் பார்த்து-கண்ணியமாய் கடவுளிடம்  சொல்லிதானே சேர்த்து வச்சாங்க பெற்றவரும் மற்றவரும் பொருத்தம் பேசி சுற்றமும் நட்பும்  சொந்தமும் சூழதானே நற்றமிழ் நல்லோரும் நம்மூர் கடவுளின்-முன்னிபாக பற்றினேன் பரவசமானேன் பக்தியால் உருகினேன் இத்தனையும்  செய்ததால் இனிமேல் பயமில்லை இன்பத்துக்கு  எல்லையில்லை  யாருக்கும் பயமில்லை பார்க்கும் போதெல்லாம்  படுத்தேன்  இணைந்தேன்-ஆனந்தமாய் பக்கமிருப்பான்  பிள்ளைகள் பிறந்ததும் என்றிந்தேன் பிறந்த வீட்டில் பிள்ளைகளுடன் இருந்தபோது இருந்த இடம் விபச்சாரியிடம் விருந்தானான் வருந்தினான்  வாங்கி கொண்ட நோயினால்-மருந்தால் திருந்துவான் என நினைத்து தேடினேன் நிம்மதியை எதையும் சொல்லவில்லை யாரிடமும் பேசவில்லை மனதை கல்லாக்கி  மாயந்துவிட்டான் தூக்கில் மறுநிமிட செய்தியில் நான் மாயந்துவிட்டேன்-மனதால் மணவாழ்வில் சாய்ந்துபோனேன் சறுகானேன் குற்றம் செய்தது நானா அல்லது கும்பிடும் தெய்வம் குற்றவாளி தானா நம்பிய பெற்றோரா நண்பர்களா- நரகமாய் நாள் நட்சத்திரம் நல்லோர்

இயற்கையின் மறுபிறப்பு

விதை செடியாகி செடி மரமாகி மரம பூ பூத்து பூ கனியாகி கனி விதையாகி விதை மீண்டும் என்னவாகும்? எல்லாம் வினைபயன்? விதை பயன்? என்ன சொல்ல முடியும்? எல்லா விதையும் முளைப்பதில்லை எல்லோர் உறவும் பிறபுக்கல்ல ,உறவுக்கு? எப்படி சொல்வது யாரிடம் கேட்பது? அனைத்தும் அறிந்துகொள் ஆணவம் கொள்ளாதே அதுவே வாழ்க்கையென அற்பமாய் நில்லாதே கணத்தில் முடியும் அது காமத்தில் தெரியும் பணத்தால் முடியாது மனதால் மட்டுமே முடியும் இன்பம் இருவருக்கல்ல இளமையை முடிபதர்கல்ல

நீயும் இறைவனே

Image
அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனவாக தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே! நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

பிள்ளையாரப்பா! புத்திசொல்லப்பா!!

Image
வினையேதும் செய்யாமல் விதியென்று சொல்லாமல் துணை நிற்க வேண்டாமல் துறவறமும் பூண்டாமல் பண்ணெடுத்து பாடாமல் பகிர்வின்றி வாழாமல் மனிதனை நினைக்காமல் மதப்பற்று கொள்ளாமல் இருப்போர்கள் இல்லாதோர்க்கு இமியலவே நினைதிட்டால் விதையேதும் போடாமல் விளைச்சலையும்  தேடாமல் மனதோடு மனிதமும் மற்றவர்க்கு உதவியும் இல்லாத ஏழைக்கு எழுத்தறிவும் தந்திட்டால் பொல்லாங்கு சொல்லமாட்டார் புறந்தள்ளி பேசமாட்டார் கனபோளிதில் செய்திட்டால் கணபதியே அருள்புரிவான் எல்லோருக்கும் இனிய பிள்ளையார் தின வாழ்த்துக்கள் இராம.கண்ணதாசன் சென்னை

அரசாங்க ஊழியன்

அரசாங்க ஊழியன் அரைகஞ்சி குடிச்சாலும் அன்றாடம் வருமானவரி கட்டாமல்  இருந்தால் சிரமபட்டாவது கட்டிவிட வேண்டும்-இல்லையெனில் சீக்கிரமே கட்டாமல் செத்துவிட வேண்டும் நடுத்தர மக்களுக்கு நாய் பொழப்பு நாகரீகமென நகையும் நல்லுடையும் நல்லகல்விக்கு நாயக அலையவேண்டும்-ஆனாலும் நாதியத்து வேலைக்கு போகவேண்டும் அகத்தில் கவலையும் முகத்தில் பவுடரும் அடுக்கில் சாப்பாடு அளவோடு இருக்கவேண்டும் அடுத்தவனுக்கு வசதியாய் காட்டவேண்டும்-மீண்டும் அடுத்தவேளை சோறில்லாமல் கிடக்கவேண்டும் பளபளக்கும் நகைனட்டு போடவேண்டும் பித்தளைக்கு தங்கபூச்சு போடவேண்டும் வாகனமும் கடனாக வாங்க வேண்டும்-வட்டியுடன் வசவும் கேட்டு தலைகுனிய வேண்டும் பெண்டுபிள்ளை குடியிருக்க வீடு வேண்டும் பெண்டாட்டி புகழ் ஓங்க வாழவேண்டும் கையூட்டு பெறாது இருக்க வேண்டும்-நேர்மையான கடன்காரன் என்று புகழ் பாட  வேண்டும் இப்படியே இருந்தாலும் இருப்பதை கொண்டு தப்பேதும் செய்யாமல் சிக்கனமாய் இருந்தாலும் கற்பனையாய் பேசுவார் கண்டபடி ஏசுவார்- முடிவில் நற்பயனை வேண்டி நாதியத்து  செத்திடவேண்டும்

என் தங்கை

  தங்கை                 *** என்னை துணைக்கு எப்போதும் சார்ந்திருப்பாள் எப்போதும் என்னுடனே கை கோர்த்து நடந்திடுவாள் தப்பே செய்தாலும் அப்பாவிடம் சொல்ல மாட்டாள் தனியாக என்னைவிட்டு கரிசோறும் தின்ன மாட்டாள் சிக்கல் கழித்துவிட்டு  தலை சீவி மகிழ்ந்திடுவாள் எப்போதும் என்னுடனே எதிர்வாதம் செய்திடுவாள் அப்பாவித்தனமாய் அழுதிடுவாள் அண்ணனை காணவில்லையென சின்ன காயம் பட்டாலும் எனக்கு சிரித்துக்கொண்டேகேவி கேவி அழுதிடுவாள் இப்போதும்  இருக்கிறாள் எரிந்து எரிந்து விழுகிறாள் பெற்ற பிள்ளைகளையும் பிணமாகி பொங்கல் என்கிறாள்  கோவத்தில் ஆனாலும் என்னை பார்த்தவுடன் அடங்க மறுத்து அழுகிறாள் தேனாக இருந்த நாட்கள் திரவமாகி விஷமாகி போனாலும் தெரியலையே  அவளை மறக்க தெரிகின்ற உயிர்போகும் நாள்வரை ஊனாகிவிட்டேன் ஊமையாகிவிட்டேன் கானது அவள் துயரை கண்டவுடன் தொடரும் துயரத்தை தொலைக்க முடியுமா? மறுபடியும் அண்னாக பிறக்க முடியுமா? பிறந்தாலும் அன்றுபோல் இருக்க முடியுமா? இராம.கண்னதாசன் சென்னை

இளைப்பாற மடி வேண்டும்

Image
உன்னை பார்க்க வேண்டும் உன்னுடன் பழக வேண்டும் மடிமீது படுக்க வேண்டும் மனக்கவலை விலகவேண்டும் இதமாக நீ வருடவேண்டும் இளைப்பாறி நான் மகிழ வேண்டும் தலைகோதி தழுவ வேண்டும் தலை சாய்ந்து படுக்க வேண்டும் எல்லா கவலையும் மறக்க  வேண்டும் என்னுடனே நீ சேர வேண்டும் தடையில்லா இன்பம் வேண்டும் தழுவி தழுவி சுவைக்கவேண்டும் இதழ் முத்தமும  வேண்டும் இடையிடையே பேசவேண்டும் முக்கனிசாறுதடன்  பருக வேண்டும் முதலாய்  இருப்பதாக நினைக்க வேண்டும் புதிதாக நீ நினைக்க வேண்டும் பூவுலகில் மெய்மறந்து பறக்க வேண்டும் எந்நாளும்  இருக்க வேண்டும் எப்போதும் மகிழ்ச்சி வெண்டும்

என் மகளே!

துள்ளி விளையாடி தோள்மீது சிந்தும் கிள்ளியும் கேலி செய்தும் நீ நல்ல சிரிப்பும் நகையாடிய பொழுதில் கள்ள சிரிப்பும் கும்மாளமும்  பிடித்தது மெல்ல அருகில் வந்து மெதுவாய் சொல்லிய வார்த்தைக்கு  நூறு  பதில் அள்ள அள்ள குறையாத அன்புக்கு தெள்ள தெளிவாய்  பதில் சொன்னேன் நல்லதும் கெட்டதும் நாட்டில் நடப்பதும் உள்ளது உள்ளபடியே உரைத்தேன் சொன்னேன் செல்ல கிளியே செந்தமிழ் மொழியே உள்ளம் இனிக்குது உன்னால் மகிழ்ந்தது சொன்னதும் செய்தாய் சிரிப்போடு இருந்தாய் சொர்கமை இருந்தது சொந்தமாய் முத்தம் கன்ன குழிவிழ கண்சிமிட்டி சிரிதாயே கண்ணினின்மொழி பேசி மகிழ்ந்தாயே என்னை சீன்டியதும்இடைமறித்து உன்னை திட்டியதாய் உள்வாங்கி கண்ணை கசக்கி கடும் கோபமுடன் அன்னையையும் அடித்தாய் அழுதாயே அத்தனையும் நடந்தது அமுதுன்னும் பித்தில்லா பிள்ளை பருவத்தில் சித்தனாக பித்தனாக நானிருந்தேன் சிறிதும் கொபமில்லாது மகிழ்ந்தேன் முப்பது மாதம் தான் முடிந்தது முன்பருவ பள்ளியில் சேர்த்தபோது முடியாது மறுத்து அழுதாய்  பின் முகமலர்ந்து தொடங்கினாய் படிப்பை அன்றே உரைத்தது அவ்வளவுதான் அன்பால் அடித அடியும் மறந்தது அன்பால் கடித்தது கட்டி பிடித்தது அன்பாய்  சிரி

எனக்கு வேண்டும்

எனக்கும் ஆசை எப்படியும் முடியுமென என்னவள் மறுக்கிறார் என்னசெய்யலாம்? ஆசையும் இருப்பதால் அது முடியுமா என்று ஒவ்வொரு நாளும் உள்ளம்தான் சொல்லுது இந்தமுறை இருக்கலாம் என்று? சொல்லி பார்த்தேன் சொந்தமாய் வேண்டுமென்று! எள்ளி நகைகிறாள் என்னை இன்னும் முறைக்கிறாள்! பள்ளி படிப்பும் பள்ளியறை இல்லையென்றால், என்ன செய்வேன் எப்படி கொஞ்சுவேன்? கண்ணே மணியே கண்ணனின் மகனே என்று!!! இராம.கண்ணதாசன் சென்னை

கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா?

கடவுளே கடவுள் இருந்தால் கஷ்டமும் தருவானா? கயவர்கள் நிம்மதியாய் காசு பார்க்க விடுவானா? திருடன்  துரோகிஎல்லாம் தைரியாமாய் திரிவானா? காசு பணத்திற்காக கள்ள தொழில் செய்வானா? இல்லாதவன் ஏங்குகிறான் இருப்பவனோ  பதுக்குகிறான் உள்ளதை சொல்பவன் உயர்வின்றி தவிக்கிறான் நல்லவனாய் இருப்பவன் நாளும்  மனதால்இறக்கிறான் பொல்லாங்கு சொல்பவன் புகழோடு இருக்கிறான் உனக்காக செய்வதை ஏழைக்கு கொடுக்கசொல்! உயர்வாக உன்னிடம் ஒழுக்கத்தை பயிலசொல்! தனக்காக உள்ளதுபோக தருமம் செய்யச்சொல்! மனித நேயம்  மறக்காமல் மனிதனை இருக்கசொல்! மனிதனாக இருக்க மனிதாபிமானம் மதிக்கசொல்! பெற்றோரை,மற்றோரை மாண்புடனே மதிக்கசொல்! தனியோளுக்கம் கற்றுதந்த ஆசிரியரை மதிக்கசொல்!!!

கன்னி பெண்ணே வருவாயா?

Image
முக்குடமும் தளும்ப முந்தானை விலக்கிவிட்டு சொக்கிவிடும் சுந்தரியே! சூரியனும்  நானும் சுட்டுவிட போகிறோம் ? தாகமெனக்கு தருவாயா? தங்கமேனியே வருவாயா? தாகம்  தீர்க்க குடம் தண்ணீர் தருவாயா? பூமியும் தெரியவில்லை பொழுதும் அடங்கவில்லை கூவும் குயிலும் குரல் கொடுக்கும் தவளையும் மேவி அழைக்குது மேகமும் கருக்குது மோகம்  குறையவில்லை மேனியோ அடங்கவில்லை போக பெண்ணே நீ போதை ஏற்றாதே! பார்போரிடம் என்னை தூற்றாதே தவறியும், கால சக்கரமும் கண்டிப்பாய் உருண்டோடும் கைபிடிக்க காத்திருக்கேன் கரையேறி வருவாயா? கனிந்த முத்தம் தருவாயா  கட்டியனைப்பாயா? இராம.கண்ணதாசன் சென்னை

என்ன ஆச்சு?

பார்த்ததும் ? நான்...... தோற்றுவிட்டேன் கை பட்டதும்........... பயந்துவிட்டேன் தொட்டவுடன் துவண்டு விட்டேன்! நேற்றுவரை புரியவில்லை நிகழபோவது என்னவென்று? பூத்தது போலானேன்! தேனூருது தென்றலும் வீசுது தேகமெல்லாம் நடுங்குது ஏனோ?       .................... இராம.கண்ணதாசன் சென்னை

கல்யானதிற்குப்பின்

மெல்ல மெல்ல இடைபிடித்து மெதுவாக முத்தமிட்டு செல்லமாக இதழ் சுவைத்து செளுமைதனை ஆட்சி செய்து இனிமை மேலோங்க இமைகளும் இடைஏங்க சொல்லாத கதைகளும் சொல்லமுடியா நிலையிலும் உள்ளபூர்வ உரிமையோடு கள்ளமில்லா காதலினை கணிந்துருக செய்திடுவீர் ! காதலுடனே இணைந்திடுவீர் !!

ஆனாலும் தவிக்கிறேன்

அவ்வளவு வயதில்லை அதனால் தவிக்கிறேன்! சொல்ல வெட்கமில்லை சொல்லத்தான் இருக்கிறேன் ! பிள்ளை இருக்கும்போது...... பெருமையாக சொல்லவில்லை ! காதல் இல்லாமல்.... கஷ்டத்தை சொல்லாமல்... கனா மட்டும்தான் ? கடமையில் கண் இருந்தும், கழிகிறது கஷ்ட காலம் எனக்கும் புரிகிறது ?? என்னதான் செய்வது? கடந்து போன இன்பம்.... கனவில் தான் நடக்குது நாட்களைதான் கடத்துது ஆனாலும் தவிக்கிறேன் ?

சித்தனும் பித்தனும் நீயே

நீ என்ன சித்தனா? நிலை மறந்த பித்தனா? எனை வணங்கும் பக்தனா? அன்பனா? அறியோனா? உடையில்லை உள்ளத்தில் பிழையில்லை வீடில்லை வெறும் தரையில் பற்றில்லை பகட்டில்லை பேசவில்லை நேசமில்லை பாசமில்லை பசியுமில்லை எதிரியில்லை இழப்புமில்லை பார்ப்போரின் கண்களுக்கு பைத்தியக்காரன் பார்த்துவிட்டேன் நீ பாராளும் வேந்தன் பிரச்சனைஇல்லா ஈசன்

மானம்கெட்ட மடையனே!

Image
தடைகளே தடங்களாய்     இருந்திட நினைத்தேன் !     தறிகெட்ட மதியோரையும் மதித்தேன் சிரித்தேன் ! உடை மட்டும் வெள்ளையாய் உடுத்தி   உள்ளத்தை   இருளாக கண்டேன் ! கயவனே கள்ளனே   கண்ணிழந்த குருடனே     காட்சி அறிவாயா ? கண்திறந்து பார்ப்பாயா ?   நேற்றுவரை வரை என்செய்தாய் ! நிலைமை மறந்து நிம்மதி கெடுத்து , பிழை நீ செய்வதை  பேதை உலகம் அறியும் ! பின்னால்   நீ புரிவாய் !     நிலை கெட்டவனே .... நெஞ்சில்லாதவனே ... வஞ்சனை கொண்டேனே ..... வாளும் வாழ்க்கை தேவையா ?     பிளையோனே பித்தனே , இனியேனும்   திருந்திடு  என்னை நீ புரிந்திடு கலைத்திட்ட    என் கனவை   நீ   மறந்திடு   காலமும் நிம்மதி பெறுவாய்   இனிமேலும் வதைக்காதே ! இனி என்னை நினைக்காதே ! நிம்மதி இழக்காதே ! புத்தியிழந்து சிரிக்காதே   ! உழைப்பும் உண்மையும்  ஒருநாள் பேசும்   உரெல்லாம் உணர்ந்து     உன்னை ஏசும்       மறக்காதே மதியிழந்து தொலைக்காதே!!!

இளையோரே

அன்பான இளையோரே ,   உற்றாரும் உறவினரும் !   உங்களுடைய பெற்றோரும் ! மொட்டாக வளந்துவரும் சிற்றாறும்   பட்டாடை புதுதுணியுடன் , பலவேறு நகைனட்டுடன்     வற்றாத வாழ்த்துக்களோடு மணவாழ்க்கை துவக்கிடுவீர் !                                                 ***** இளையோரே இனிமையான மனதொரே ,   பணம் வரும் ! பக்தி வரும் ! நல்ல குணம் வருமா ? சுகம் வரும் சொர்கமும் வரும் நல்ல சுற்றம் வருமா ?   பெற்றோரை பிரிந்தபின் நிம்மதிதான் வருமா ?   சிந்தனைசெய் சிறப்பான திருமனம்செய்வீர்                      ******* எந்திர உலகிலே எல்லோரையும் மறந்து   எவ்வளவு நாள் தனிமை வேண்டும்   அப்பனும் ஆத்தாலும் சுப்பனும் வேண்டும்   சொந்தங்களும் வேண்டும் இப்பவே புறபடு   இனிமையை கொண்டாடிட இல்லறம் அமைத்திடு

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more