தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.

      விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.

      எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.

      அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே
அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவருக்கொருவர் உணவு பரிமாறி  உள்ளன்போடு இன்னும் கொஞ்சம் நீங்க சாப்பிடுங்க என்று மாறிமாறி பகிர்ந்து சாப்பிட்டார்கள் .

     அதேபோல் நம்ம மருமக நல்லா கவனிச்சா ,பேரக் குழந்தைகளும் நம்மோடு நல்லா அன்னியோன்யமா இருந்தாங்க மகனும் நல்ல கவனிச்சானே என்று அந்தம்மா சொல்ல அவரும் தலையாட்டி எனக்கு சந்தோசம் உனக்கு என்று இருவரும் பேசிவந்தது  அவர்கள் முழுமகிழ்ச்சியாய்  பேசிக்கொண்டு வந்தது எனக்கும் கேட்டது. இங்கு அவர்களின் சந்தோசமும் குடும்ப உறவும் மேலும் வலுவாகியது
   
          இன்றைய இளையத் தலைமுறையினர் மூன்று மாதம் முழுதாய் குடும்பம் நடத்தத் முடியாமல் மணமுறிவு ஏற்பட்டு சண்டையிட்டு நல்ல நிலையில் வாழ்ந்துவரும் பெற்றோரையும் நடுத்தெருவுக்கு  வரவழைத்து  மொத்த குடும்பமே வெட்கித் தலைகுனிந்து  வருவதையும் அதைப் பற்றி கவலைபடாமல் இன்றைய தலைமுறையினர் செல்வதையும் பார்க்கிறோம்.

         திடீரென எனது  சொந்த ஊர் செல்லும் நிகழ்வுகளை மறந்து  இன்றைய சமுதாயம் ஏன் ஒற்றுமையின்றி இருக்கிறார்கள் என்று சற்று சிந்தித்தேன்.
ஆம், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியாய் இருக்கக் காரணம் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உள்ளன்போடு பேசுவதும் பகிர்ந்து உண்ணுவதுமே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென என்னால் புரிந்துகொள்ள முடிகிறது அப்போதே சில தீர்மானங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் எல்லோருமே அவர்களைப்போல் சந்தோசமாய் வாழலாம்.

      நம் வாழ்க்கை .நம் குடும்பம். நம்ம சந்தோசம் என்று இருவருமே  சுயநலத்தோடு உணர்ந்தால் எல்லோர் வாழ்வும் இன்பமாக இருக்கும்.முக்கியமாக விட்டுக் கொடுத்து வாழ்வதும் பிரச்சனையாகிவிடும் என்று தெரிந்தால் அதைத் தவிர்க்கவும் வேண்டும்.பணத்துக்காகவும் பகட்டுக்காகவும் வாழ்வதை விட்டு மகிழ்ச்சியாய் வாழ விரும்ப வேண்டும்.

       பிரச்சனையை தூண்டிவிடும் சொந்தங்களை தூர வைக்கவேண்டும். பெற்றோரே சொன்னாலும் ஒருவரையொருவர் புரிந்து,விட்டுக் கொடுத்து
வாழ வேண்டும் .வாழ்க்கை என்ற அத்தியாயம் சந்தோசமாக இருக்க அதன் சூட்சுமத்தை புரிந்து கொண்டவரே நல்ல வாழ்க்கையை சந்தோசமாய் வாழ்கிறார்கள்.

       நான் கண்ட வயதில் மூத்த தம்பதிகளைப் போல சந்தோசமாய்  வாழுங்கள் வாழ்கையில் வெற்றி பெறுங்கள்.
 
      இன்று எனது  23  வது திருமண நாளில் நானும் அவ்வாறு மனதொத்த தம்பதிகளாய் வாழ்ந்து காட்டுவேன் என்றும் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை கெட்டிக்காரனாய் வாழ்ந்துக் காட்டுவேன் என்று உறுதிக் கூறுகிறேன்

Comments

  1. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் , உங்கள் மனைவிக்கும்...
    அடுத்தவருக்காக (சொந்த பந்தங்கள்) வாழ ஆரம்பித்தால் தான் பிரச்சனையே. தம் குடும்பம் பற்றி கணவன் ,மனைவி இருவரைத் தவிர மூன்றாம் நபரை(அவர் யாராக இருந்தாலும்) முடிவெடுக்க கேட்டாலே உறவுக்குள் குளறுபடிதான்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானுங்க நம்ம பிரச்சனையை நாம் தான் பேசித் திர்துக்கணும்.உங்க வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  2. திருமண நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

    நல்லா இருங்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா நீங்க எங்களை வாழ்த்தியதுக்கும் வந்ததுக்கும்

      Delete
  3. வாழ்த்துகிறேன் கண்ணதாசன்,உங்கள் வாழ்வு சிறக்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க பித்தன் ஐயா உங்கள் வாழ்த்துக் கிடைத்தமைக்கு நன்றிங்க

      Delete
  4. இனிய மணநாள வாழ்த்துக்கள்! பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா.உங்களுடன் வாழ்த்து பெற்றமைக்கு நன்றிங்க. தொடர்ந்து ஒவ்வொரு வருஷமும் என்னை நீங்க வாழ்த்தனும்

      Delete
  5. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க தனபாலன் அவர்களே.உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  6. கவிஞ்சரே பல்லாண்டு மனம் ஒற்றுமையோடு தங்கள் துணையுடன் காதல் கலந்து வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. யானும் அவ்வண்ணமே.நீங்களும் இன்பமாக இனிமையாக வாழ வாழ்த்துகிறேன்

      Delete
  7. கவிஞ்சரே பல்லாண்டு மனம் ஒற்றுமையோடு தங்கள் துணையுடன் காதல் கலந்து வாழ வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  8. இருவரும் மகிழ்ச்சியாய் இருக்கக் காரணம் அவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உள்ளன்போடு பேசுவதும் பகிர்ந்து உண்ணுவதுமே அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென என்னால் புரிந்துகொள்ள முடிகிறது

    இனிய பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. இன்று எனது 23 வது திருமண நாளில் நானும் அவ்வாறு மனதொத்த தம்பதிகளாய் வாழ்ந்து காட்டுவேன் என்றும் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை கெட்டிக்காரனாய் வாழ்ந்துக் காட்டுவேன் என்று உறுதிக் கூறுகிறேன்

    இருபத்துமூன்றாம் திருமணநாளுக்கு
    இனிய நல்வாழ்த்துகள்..!

    ReplyDelete
  10. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே!

    உங்கள் வாழ்வு இன்னும் இன்னும் சிறக்க பல்லாண்டு நல்வாழ்வு வாழ்ந்திட
    என் இனிய நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  11. இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரரே!

    பல்லாண்டுகாலம் இல்வாழ்க்கை இனிமையாக
    மென்மேலும் நலமும் வளமும் பல்கிப்பெருகிட
    அன்பான இல்லாளுடன் மண்போற்ற வாழ்ந்திவீர்!!!

    ReplyDelete
  12. இன்று எனது 23 வது திருமண நாளில் நானும் அவ்வாறு மனதொத்த தம்பதிகளாய் வாழ்ந்து காட்டுவேன் என்றும் விட்டுக் கொடுத்து வாழ்க்கையை கெட்டிக்காரனாய் வாழ்ந்துக் காட்டுவேன் என்று உறுதிக் கூறுகிறேன்//
    நல்ல உறுதிமொழி.

    திருமண நாள் வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க .எல்லோருமே நால்லாயிருக்க இதுபோன்ற உறுதிமொழி தேவைதானே?

      Delete
  13. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. திருமண நாள் வாழ்த்துக்கள். எங்களுக்கு எல்லாம் இனிப்பு இல்லையா ?

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தருகிறேன் .வாழ்த்துக்கு நன்றி

      Delete
  15. பிரச்சனையை தூண்டிவிடும் சொந்தங்களை தூர வைக்கவேண்டும். பெற்றோரே சொன்னாலும் ஒருவரையொருவர் புரிந்து,விட்டுக் கொடுத்து
    வாழ வேண்டும் .வாழ்க்கை என்ற அத்தியாயம் சந்தோசமாக இருக்க அதன் சூட்சுமத்தை புரிந்து கொண்டவரே நல்ல வாழ்க்கையை சந்தோசமாய் வாழ்கிறார்கள்.

    அருமையான கருத்துக்களைத் தந்துள்ளீர்கள் ஐயா .இது போன்ற நற் கருத்துக்கள் மேலும் தொடர என் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் தருவேன் நிம்மதிக்காக தொடருவேன்

      Delete

  16. வணக்கம்!

    திருமணநாள் வாழ்த்துக்கள்! தீந்தமிழ் போன்றே
    அருமணம் காண்பீா் அகத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

      Delete
  17. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கு நன்றிங்க அருணா

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more