Tuesday, 13 August 2013

தந்தையின் கடமை

தந்தையாய் செய்யும் கடமை
தவறைத் திருத்திக் காத்தலாம்
விந்தை நிறைந்த உலகில்
வேடிக்கை மனிதராய் இல்லாமல்

சிந்தையில் புரிந்து வாழ்ந்திட
செயலால் சுட்டிக் காட்டி
பந்தமும்  பாசமும் உணர்த்தி
பாங்குடன் வளர்த்தவர்  வாழ்பவர்

எங்கும் செல்லுகையில் இதுவும்
என்பிள்ளைக்கு வேண்டுமென
ஏங்கும் உள்ளமே எப்போதும்
எதையும் நோக்குவார் அன்போடு

வளர்ச்சியில் விதைப் போட்டு
வாழ்கையை சொல்லித் தருவார்
வளர்வதில் தவறெனில்  நேர்த்தியாய்
வளரவே வழிகாட்டி துணைவருவார்

வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துவார்
வளமோடு வாழ்வதைக் கண்டு
வருவோர் போவோரிடம் சொல்லுவார்
வந்திட்ட துயரம்  மறந்திடுவார்

விந்தை மனிதனை நண்பனே
விதியென்று விட்டு வாழாதே
விடியும் மொருநாள்நீ  விதியென்று
வீதியில் நிற்கும் காலம்வரும்

சிந்தை மகிழந்து  சிறப்பாக
 சேர்ந்து வாழ்ந்திடு உறவை
சீர்நோக்கி வளர்ந்திடு  நீயும்
சீறாவாய் சிறப்பாவாய் நன்றே

24 comments:

  1. சிந்தை மகிழந்து சிறப்பாக
    சேர்ந்து வாழ்ந்திடு உறவை
    சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
    சீறாவாய் சிறப்பாவாய் நன்றே
    >>
    சிறப்பான அப்பாக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. விடியும் மொருநாள்நீ விதியென்று
    வீதியில் நிற்கும் காலம்வரும்//

    இதை நம்மில் பலரும் மறந்துவிடுவதுதான் வேதனை!

    ReplyDelete
    Replies
    1. அப்பனையும் ஆத்தாளையும் மறந்து யாரும் நிம்மதியாய் வாழ்வதில்லை

      Delete
  3. இனிய வாழ்த்து.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
  4. "உறவை சீர்நோக்கி வளர்ந்திடு நீயும் சிறப்பாவாய் " கருத்துமிக்க வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நன்றிங்கம்மா.

      Delete
  5. அடி சீர் விளங்க அழகாக எழுதியுள்ளீர்கள்...

    சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி.தொடர்ந்து வாருங்கள்

      Delete
  6. தந்தையின் கடமையை அழகாக சுட்டிக் காட்டி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. அனுபவமாச்சே? எப்படி சொல்லாமல் இருக்க முடியும்

      Delete
  7. நம்மல்லாம் ஒரு வகையில் அதிர்ஷ்ட சாலிகள்..நம் சமூகத்தில் "அனாதைக் குழந்தைகளாக்கப்பட்ட" குழந்தைகளின் பொறுப்பற்ற தந்தைகளைப் பற்றி யோசிக்கும்போது..

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் .விவேகமற்றவர்களின் விபரீத செயல்

      Delete
  8. வணக்கம்
    சிந்தை மகிழந்து சிறப்பாக
    சேர்ந்து வாழ்ந்திடு உறவை
    சீர்நோக்கி வளர்ந்திடு நீயும்
    சீறாவாய் சிறப்பாவாய் நன்றே

    அருமையான வைர வரிகள் அப்பாவுக்கு சிறப்பான வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி ரூபன்

      Delete
  9. விந்தை உலகில்
    தந்தையின் அருமையினை
    சிந்தை கொள்ள
    தந்தமைக்கு வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

      Delete
  10. தந்தையின் கடமை தளராமல்க் காத்திடெனச்
    சிந்தை நிறைக்கும் சிறந்த சிந்தனை!

    வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ

      Delete
  11. விந்தை மனிதனை நண்பனே
    விதியென்று விட்டு வாழாதே
    விடியும் மொருநாள்நீ விதியென்று
    வீதியில் நிற்கும் காலம்வரும்

    நன்றாகச் சொன்னீர் ஐயா.நன்றி

    ReplyDelete
    Replies
    1. நடக்குமென்பதை நாம் சொல்லுதல் கடமையன்றோ

      Delete
  12. தந்தையின் கடமையையும், பிள்ளைகளின் பொறுப்பையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றிங்கம்மா

      Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்