தெய்வங்கள்

தெய்வங்கள்

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை
ஏளனமாய் சொல்ல வில்லை
எழுச்சியாக  வளர்வ தில்லை
ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை

குற்றமுடன்  சொல்ல வில்லை
கொள்கையிலே மாற்ற மில்லை
கூடி வாழும் வாழ்கையினை
கெடுத்ததாக வாழ்வ தில்லை

கோழைகளாய் இருந்ததில்லை
கொடுத்தவரை மறப்ப தில்லை
கொடுப்பதிலே குறையுமில்லை
கொடுத்தவரைக் குறைத்ததில்லை

போதுமென்ற மனதே எல்லை
போட்டிப் போடுவது மில்லை
பொக்கிஷமாய் நல்லுறவை
பேணிக்காக்க தவற வில்லை

நாளைக்கான தேவையினை
நாள்தோறும் நினைப்ப தில்லை
நன்மையென அறிய வில்லை
நாட்டுநடப்பு  தெரிவ தில்லை

வேலையுமே  நாளும்  மில்லை
வீட்டில் மட்டும் பஞ்சமில்லை
விருந்தினரும் வந்து விட்டால்
விருந்தளிக்க மறுப்ப தில்லை

பேழையாக நட்பதுவை  அவன்
பிரிந்து நின்று பார்த்த தில்லை
பெற்றவரை விடுவ தில்லை
பேணிக்காக்க தவற வில்லை


Comments

  1. ஏழையிடம் பணம் இல்லையென்றாலும் நல்ல மனம் இருந்தால் ஏழை இல்லை என்பதை .உலகப் புகைப்பட நாளான இன்று படம் பிடித்துக் காட்டி இருக்கும் விதம் அருமை !

    ReplyDelete
    Replies
    1. ஏழை எப்போதுமே மனதால் ஏழை இல்லை என்பதும் உண்மைதான்

      Delete
  2. நல்ல மனம் வாழ்க... நாடு போற்ற வாழ்க...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க நண்பரே

      Delete
  3. நாளைக்கான தேவையினை
    நாள்தோறும் நினைப்ப தில்லை
    நன்மையென அறிய வில்லை
    நாட்டுநடப்பு தெரிவ தில்லை

    வேலையுமே நாளும் மில்லை
    வீட்டில் மட்டும் பஞ்சமில்லை
    விருந்தினரும் வந்து விட்டால்
    விருந்தளிக்க மறுப்ப தில்லை

    பேழையாக நட்பதுவை அவன்
    பிரிந்து நின்று பார்த்த தில்லை
    பெற்றவரை விடுவ தில்லை
    பேணிக்காக்க தவற வில்லை


    ஆறு பத்திகளையும் மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கும் வருகைக்கும் நன்றிங்க

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. அருமை வாழ்த்துக்கள்,
    அவன் ஏழையே இல்லை.

    ReplyDelete
  6. நல்லதோர் கவிதை.

    ReplyDelete
  7. அருமை...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. சொல்ல இனி வார்த்தை இல்லை
    சொல்லாமல் விட்டதும் ஏதுமில்லை.
    நல்ல மனம் இருப்பதால் அவர் ஏழை(யும்) இல்லை

    நல்ல கருத்தை நயமுடனே சொல்லி விட்டீர்கள்

    ReplyDelete
    Replies
    1. மனதால் அவன் ஏழையில்லை உண்மைதான்

      Delete
  9. யார் தான் ஏழை!

    ஏழையென்று
    எவரையும் சொல்லேன்!
    உள்ளம் நிறைந்தவனுக்கு
    ஏனையவற்றில் தட்டுப்பாடு வரலாம்...
    எல்லாம் நிறைந்தவனுக்கு
    உள்ளம் கல்லுப் போல...
    எதை வைத்து
    எவரை ஏழை என்பேன்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனமும் உதவி செய்ய முடியாதவனுமே ஏழை

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more