தெய்வங்கள்

தெய்வங்கள்

முத்துக்கள் பத்து





ஈர்ப்பு என்பது
இயல்பாக வந்தால்
தோற்பதில்லை
துணையாகவே நிற்கும்


தோல்வியை பார்க்காதவன்
உலகில் யாருமில்லை
துவண்டு வீழ்பவன் மனிதனில்லை
வேள்விக்கு மயக்கமில்லை
வீண் சந்தேகம்
வெற்றி பெறுவதில்லை
முயற்சிக்கு தடைகளில்லை
முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை?


சிரிக்க மறக்காதே
சிந்திக்க மறுக்காதே
பொறுப்பை விலக்காதே
பெருமையாய் பேசாதே


காற்றுக்கு வழி சொல்ல
கடமையாய் இருபது யார்?
காலத்தை நிப்பாட்ட
துணையாய் போவது யார்?


வாழ்கையை தவறவிட்டு
மனம் வெதும்பி போவது நீ.....
வாழ விரும்பி முடிவு 
வழியை திறக்கவும் நீ
நீயே முடிவு செய் 
நேர்மையாய் உணர்ந்து செய்



உள்ளம் வதைப்படும்போதும்
உணர்சிகள் தடைபடும்போதும்
இதயம் வலிமையாகிறது


ஈரம் இல்லாத எல்லாமே 
இறைவனிடம் சேர்த்திடும் 
ஆனால் 
எண்ணங்கள் விரும்பிய
எல்லோரிடமும் சேரும்


துன்பப்படுவோருக்கு உதவு
துன்பமாய் ஏற்றுக்கொள்
துயர் நீக்கி தூய்மையாகு
தெய்வமாய் நீ காணலாம்


கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே
உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே
தடம் தவறி வாழ நினைக்காதே
தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே


பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது
பாசம் எப்போதும் மறக்க முடியாது
குணம் கெட்டும் வாழ முடியாது
கொள்கை இல்லாமல் வெற்றி கிடைக்காது



Comments

  1. முத்தான தத்துவங்கள் அருமை! நன்றி!

    ReplyDelete
  2. அத்தனை உபதேசங்களும் அருமை!
    சிரிக்கும் அந்தக் குழந்தை எத்தனை அழகு!

    ReplyDelete
  3. இறுதி வரிகள் முற்றிலும் உண்மை...

    ReplyDelete
  4. அழகிய குழந்தைப்படத்துடன் முத்துக்கள் அருமை.

    ReplyDelete
  5. ஒவ்வொரு முத்தும் நன்முத்து! அருமை ஐயா!

    ReplyDelete
  6. மழலை முத்துடன் மிளிர்கின்றன அத்தனை முத்துக்களும்!...

    ReplyDelete
  7. சிறப்பான முத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  8. முயற்சிக்கு தடைகளில்லை
    முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை?

    முத்துகள் பத்தும் ஜொலிக்கின்றன..!

    ReplyDelete
  9. பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது
    பாசம் எப்போதும் மறக்க முடியாது
    குணம் கெட்டும் வாழ முடியாது
    கொள்கை இல்லாமல் வெற்றி கிடைக்காது//

    நன்றாக சொன்னீர்கள்.
    முத்துக்கள் பத்தும் அருமை.

    ReplyDelete
  10. முத்துக்கள் மதிப்புமிக்கவை.

    ReplyDelete
  11. ஒவ்வொன்றும் நல் முத்துக்கள் ஐயா நன்றி

    ReplyDelete
  12. மதிப்பான முத்துக்கள்
    சொல்லிச் சென்ற விதமும் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. "பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது
    பாசம் எப்போதும் மறக்க முடியாது
    குணம் கெட்டும் வாழ முடியாது
    கொள்கை இல்லாமல் வெற்றி கிடைக்காது" என்ற
    அடிகளில் உண்மை இருக்கிறது
    ஆனால்,
    நம்மாளுகள் கருத்திற் கொண்டால்
    இனிய வாழ்வை அமைக்கலாமே!

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more