தெய்வங்கள்

தெய்வங்கள்

மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

           எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச்  சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை  இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப்பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்.

             சிறுபிள்ளைகளும் சரி,மாணவர்களும் ,நம்முடன் வேலைசெய்யும் சக ஊழியர்களும் .பழகும் நண்பர்களும் அல்லது வயதில் மூத்தப் பெரியவர்களும் சரி இம்மாதிரியான அங்கிகாரத்தை எதிர்பார்பார்கள் அல்லது செய்த செயல் அவர்களை எப்படி மகிழ்வித்தது என்று நினைத்து  பாராட்டியதை எண்ணி மகிழ்வார்கள்.

           ஒருவர் தான் செய்யும் செயலில்விருப்பப்பட்டோ  மனம் ஒன்றியோ அல்லது செய்யவேண்டிய கட்டாயத்திலோ செய்யும்போது பாரட்டுக் கிடைக்குமேயானால் அதைவிட ஆனந்தம் இருக்காது.ஒவொரு செயலுக்கும் ஒவ்வொருமுறையும் பாராட்டுக்கிடைக்கும்போது நிச்சயம் மனம் மீண்டும் மீண்டும் செய்யும் உத்வேகத்தைத்தரும்.

          உதாரணமாய் ஒரு அவசர அவசியமான வேலைக்காக வெளியூர் சென்று வரவேண்டும் என்ற கட்டாயம் வருகிறது விருப்பப்பட்டோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ சென்றுதான் வரவேண்டும் என்ற சூழ்நிலையில் புறப்பட்டு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதும் அட இவ்வளவு சின்ன  வேலைக்காகவா சிரமப்பட்டோம் என்று எண்ணத்தோன்றும். அதற்குப்பின் அனுப்பியவர் கொடுத்த பாராட்டு பயணக் களைப்பையே மாற்றும் சந்தோசமே மிஞ்சும்.

         மாணவர்களுக்கு எப்போதுமே வீட்டுப்பாடம் செய்வதானால் உடனே செய்ய விரும்பமாட்டார்கள் ஆனால் சீக்கிரம் முடித்தால் நாம் வெளியே செல்லலாம் என்று சொன்னவுடன் விறுவிறுப்பாக சுறுசுறுப்பாக  சந்தோசமாய் செய்து முடிப்பார்கள்.அதுபோலவே மதிப்பெண் பட்டியலைக் கொடுத்தவுடன் ,நீ நல்லாத்தான் செய்திருப்ப உன்மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்லிப்பாருங்கள் உடனே அடுத்தமுறை இன்னும் நிறைய மதிப்பெண் வாங்குகிறேன் என்று பதில் சொல்லுவார்கள்.எனவே நீங்கள் கொடுக்கும் ஊக்கமே இன்னும் சிறப்பாய் மதிப்பெண் கிடைக்க எதுவாய் இருக்கும்.

         மனைவியிடம்  சின்னச்சின்ன விஷயங்களுக்கும் பரவாயில்லையே முன்பைவிட இப்போது இன்னும் சிறப்பாய் இருக்கிறது ஆனால் கொஞ்சம் உப்பு மட்டும் தூக்கலாய் இருக்கிறது என்று சொன்னவுடன்.மகிழ்ச்சியடைவார்கள்.
எல்லா வீட்டுத் தலைவிகளும் வெளியில் சாப்பிட விரும்பமாட்டார்கள் காரணம் அதிக செலவும் அதே நேரம் சுவையும் இருக்காது  என்றும் அவர்களே முன்வந்து வீட்டிலேயே சமைத்துத் தருகிறேன் என்று சொன்னதும் நீ சொல்வதும் சரிதான் இந்தசெலவை நாம் வெளியூர் சுற்றுலாவுக்கு  வைத்துக்கொள்ளலாம் என்றால் மிகவும் மகிழ்வாய் இருப்பார்கள்.

           அடுத்தநாள்  பயண பட்டியலே முன்வைத்து எங்கெங்கு செல்லலாம் தங்கலாம் என்ற எல்லா விபரங்களும் நமக்குத் தருவார்கள்.நமக்கும் அவர்களின் விருப்பமறிந்து செல்வோமேயானால் நமக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.ஒவ்வொரு இடமும் வரும்போது அதன் சிறப்புகளைச் சொல்லி  உற்சாகமாய் இருப்பார்கள்.நம்மையும் மகிழ்வாய் வைத்திருப்பார்கள்.

           இங்கு நாம் விட்டுக்கொடுக்கும் எல்லா விஷயங்களும் மற்றவரை சந்தோசமடையவே செய்கிறது  அதனால் நமக்கும் காலம் நேரம் தவிர்க்கப்பட்டு இருவருக்குமே இன்பத்தையும் நெருக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.எனவே ஒவ்வொருவரும் நமக்கு அருகிலுருப்பவர்களைப் பாராட்டுக்கள் நீங்களும் மகிழ்வாய் இருக்க உதவும் எனவே எப்போதுமே மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்
     
       
----------கவியாழி----------



Comments

  1. உண்மை... மனதார பாராட்டும் சிறிய வார்த்தைகள் கூட மிகப் பெரிய சாதனை செய்ய உத்வேகம் கொடுக்கும்...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  2. உண்மையே உளமார பாராட்ட போட்டி பொறமை கூட வராது அத்துடன் பாராட்டுவதால் சந்தோஷப் படுத்துவதால் நாம் எதை இழக்கப் போகிறோம்.
    அத்துடன் அதனால் எமக்கும் அமைதியும் சந்தோசமும் நிச்சயமாக கிடைக்கும்.
    நல்லவைகளை உரக்கவே சொல்லலாம். தவறுகளை காதோடு யாருக்கும் தெரியாமல் சொல்லலாம் அல்லவா. அன்பும் நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் இருவருக்குமே வளரும். நல்ல விடயம் எடுத்து வந்தீர்கள் நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  3. சூப்பர் ஐடியா சார். குறிப்பாக மனைவியின் சுற்றுலா திட்டம் உண்மை. உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய அனுபவங்கள் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  4. அருமையான கருத்து. ஆனால் இந்த பாராட்டும் குணம் அமையப் பெறுவது அத்தனை எளிதல்ல. நமக்கு எப்படி பிறர் பாராட்டினால் பிடிக்குமோ அதுபோலத்தான் பிறருக்கும் என்பதை நம்மில் பலரும் உணர்வதே இல்லை. இத்தகைய பதிவுகளைப் படிக்கும்போதுதான் அட! நமக்கும் இந்த குணம் இல்லையே என்று தோன்றும். அந்த உணர்வை தூண்டியதற்கு உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம்
    ஐயா

    பதிவில்அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. முகம் மலர்ந்த சிறு வார்த்தைகூட பெரு வெற்றிக்குக் காரணமாகலாம்.
    நன்றி ஐயா.

    ReplyDelete
  7. உண்மைதான் .. பாராட்ட தெரிந்தவனுக்கு தான் பாராட்டின் அருமை தெரியும்

    ReplyDelete
  8. பாராட்டுதல் பற்றி அருமையான பகிர்வு!

    ஒருத்தரைப் பாராட்ட நல்ல மனம் ஒன்றே போதுமே.
    அதைவிட நம்ம சொத்தா செலவாகிடப் போகிறது.

    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ உங்களுக்கு!

    ReplyDelete
  9. பாராட்டத் தயங்காதவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  10. குறிப்பாக, (தன்னுடைய) மனைவியைப் பாராட்டிப் பேசவேண்டியது அவசியமே! அதனால், சொல்லமுடியாத சில பலன்களும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது, அதுவும் எதிர்பாராத தருணத்தில்!.....

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  11. பரவாயில்லை! வாழத் தெரிந்து கொண்டீர்! நன்று!

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  12. எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறது.
    எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போதுதான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறது.
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  13. "எப்போதும் எல்லோரையுமே மகிழ்வாய் பாராட்டுங்கள் அப்போது தான் அவர்களின் செயல் அங்கிகரிக்கப்படுகிறதுப் பின்பே அவர்களுக்கு ஆனந்தம் கிடைக்கிறது.அதனால் செய்த செயலைச் சீர்தூக்கிச் சிறப்பாய் செய்தோமா இல்லை இதைவிட இன்னும் சிறப்புறச் செய்யலாமா என்ற சுயப் பரிசோதனைச் செய்ய வாய்ப்புக் கிடைக்கும்." என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    உளவியல் நோக்கிலும் இது உண்மையே! பிறரது பின்னூட்டமே ஒருவரது முன்னேற்றத்திற்கு உந்து சக்தி!

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  14. நல்ல சிந்தனை கவியாழி.....

    பாராட்டுவதில் ஒருவர் என்ன குறைந்து விடப்போகிறார்.....

    த.ம. 9

    ReplyDelete
  15. ஒவ்வொருவரும் நமக்கு அருகிலுருப்பவர்களைப் பாராட்டுக்கள் நீங்களும் மகிழ்வாய் இருக்க உதவும் எனவே எப்போதுமே மகிழ்வாய்ப் பாராட்டுங்கள்

    நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்...


    ReplyDelete
  16. மிக ஆழமான கருத்தை மிக எளிமையாக சொல்லிச் சென்ற விதம் அருமை. ’ஊக்குவிப்போர் இருந்தால் ஊக்கு விற்பவன் தேக்கு விற்பான்” எனும் கவிதை வரிகள் ஒத்த தங்கள் படைப்புக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. நாமும் எல்லோரையும் எப்போதுமே நன்றியுடன் பாராட்டி மகிழ்வோம்

      Delete
  17. அன்பின் கவியாழி கண்ணதாசன் - மகிழ்வாய்ப் பாராட்டுங்கள் - பதிவு அருமை. மற்றவர் செய்யும் எச்செயலையும் முகம் மலர - ம்கிழ்வாய்ப் பாராட்டுங்கள் - அப்பாராட்டின் மதிப்பே தனி தான். நாமும் மகிழ்வோம் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more