Posts

Showing posts from March, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே திரும்பி வா

நண்பனே நண்பனே நலமா நம்மூரில் எல்லோரும் நலம் நாடுகடந்த நம் நட்பு நாதியத்து போனதாலே வீதியெங்கும் பேசுகிறார் வேதனையாய் சொல்லுகிறார் சோதனையான நட்புக்கு-ஆறுதல் சொல்லும்படி இல்லையே காடுக் கம்மாய் சுத்தியது கிணத்துக்குள்ளே மூழ்கியது திருட்டு மாங்காயும் புளியும் திரும்பவும் உண்ணத்தோணுது நம்மூரு உணவுக்கு நானிங்கே அடிமை நண்பன் நீ சென்றதாலே நாக்கும்கூட தனிமை ஏக்கமாய் உள்ளது எப்போது நீ வருவாய் இருவருமே இங்கே-உழைக்க இணைந்தே செல்லலாமே சுற்றமும் நட்பும் சூழ்ந்து வாழ நீ வா உற்றதுணை எல்லோரும் உடனிருக்க திரும்பி வா +++++++கவியாழி+++++++

கவியாழி : பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

கவியாழி : பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும் :                                                                      

தோல்வியில்லைத் தொடர்ந்திடு

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் முடியாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால் வீழ்த்திவிட முடியாது தோற்றதாய் சொன்னாலும் துவண்டுவிட முடியாது தோல்வியை தொடர்ந்தவன் வெற்றிபெற தடையேது மீண்டும் மீண்டுமென மகிழ்ச்சியாய் துவங்கிடு தாண்டுமுயரம்த் தடுத்தாலும் தோல்வியில்லைத் தொடர்ந்திடு

பெத்தவங்களை போற்றுங்க

கற்றதனால் மறக்குமோ பெற்றோரின் கடமைகள் காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு கடையிலும் கிடைக்குமோ கனிவுடனே பேர்சொல்ல கண்குளிரப் பார்த்திருக்க மீண்டும் வந்து பிறப்பாரா மகிழ்ச்சியோடு அழைப்பாரா மற்றவரும் நினைப்பாரோ மகிழ்ச்சியாக சிரிப்பாரோ உற்றாரும் வாருவாரோ உடனிருந்து பார்ப்பாரா கருவுற்ற நாள்முதல் கண்ணுறக்கம் பாராமல் உருவாக்கி வளர்த்தாரே உதிரத்தை உணவாக்கி பெத்தவங்களை போற்றினாலே பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி பெற்றதனால் பிள்ளைகளின் பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்                                                              *********** "பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள்  நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல்  நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான். மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா? இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்

புறப்படு தமிழா ! புறப்படு !!

Image
புறப்படு புறப்படு புயலென விரைந்திடு புதைந்தவர் கனவினை புரிந்திட்டுப் புறப்படு வதைபடு உதைபடு வாழ்பவர் துயர்நீக்க வந்திடும் சிரமங்கள் வென்றிடப் புறப்படு எழுந்திடும் உணர்வுகள் இணைந்திடப் புறப்படு எம்மினம் என்றே உணர்வுடன் புறப்படு மாணவர் உணர்ச்சியை மழுக்கிட முடியாது மக்களின் உணர்ச்சியை மறுத்திடக் கூடாது மாணவர் கிளர்ச்சியே மனதுக்கு மகிழ்ச்சியே மாண்டிட்ட மக்களின் மறுபடி எழுச்சியே

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் போகாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால்-உணர்வை வீழ்த்திவிட முடியாது கடுமையான வார்த்தையாலே நெடுந்துயரம் தீராது கயவனாகி போனதனால்-உனக்கு கண்ணுறக்கம் இனியேது காற்றடிக்கும் திசையெங்கும் கண்டபடிச் செய்திட்ட கற்பனைகெட்டாத காரியத்தால் தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை நேற்றுவரைச் செய்ததை நினைத்துப் பார்த்து தோற்றுவித்த துரோகத்தை ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே கவியாழி.

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால் நிம்மதியேக் கெட்டிடாது நெறிகெட்டு வாழ்வதாலே நெடுந்துயரம் தவிர்த்திடாது பாடுபட்டுச் சேர்த்தப் பொருள் பயனின்றி வீண்ப்போகாது பழிசொல்லால் உண்மை பயங்கொண்டு ஓளிந்திடாது கடின உழைப்புக்குப் பலன் கண்டிப்பாய் மறைந்திடாது கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம் கடைசிவரைத் தீர்ந்திடாது குறுக்கு வழியில் நடத்தும் குடும்ப வாழ்க்கை இனித்திடாது கூ  ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை கடைசிவரைக் கைவிடாது

புது மொழிகள்-நிஜமா?

புதுமொழிகள் எதிர்பார்த்த நேரத்தில் உதவிக் கிடைக்காவிடில் அவன் ஏழையாகக் கருதப்படுவான். அடுத்தவனைக் கெடுத்து ஆயிரங்கள் பலசேர் ஆயுள்வரை  தவறில்லை. கொடுத்து வாழ்வதை விட பிறரை கெடுத்தும் வாழ் துயரில்லை. உதவி கேட்பவன் தகுதியைப் பார்  உலகை தெரிய அறிவுரை கூர். வட்டித் தொழில் மட்டுமே  பணம் உழைக்காமல் கிடைக்கும் பாவம் செய்யாதவன் பைத்தியம் பரிதாபமாய் விரட்டி விடு. குறுக்குவழியே கோடி நன்மை குடிவளர்க்கும் உண்மை பதுக்குறவன் ஊர் போற்றும் புத்திசாலி பதுக்காதவன் முட்டாளாய்  ஏமாளி திருடி வாழாதான் வாழ்க்கை இறுதியில் தினமும் தொடரும் கஷ்டம்தான்

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான் பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான் குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல் குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான் கள்ள வழியில் காசுப் பார்கிறான் கண்டபடி செலவும் செய்யுறான் உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்   நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான் நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான் இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில் இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான் சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான்  எந்த உணவும் தின்ன முடியாது-நோய் வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான் சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான் சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான் உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்

அந்த நேரங்களில்.......

யாரும் பார்க்காத  நேரத்தில் எப்படி நீ முத்தமிட்டாய் நான் பேசாமல் இருந்தபோது பிறகெப்படி கட்டியனைதாய் தூங்காமல் நடிக்கும்போது ஏன் துணையாக சேர்த்தனைதாய் தீண்டாத நேரத்தில் நீ தீயைஏன்  தூண்டிவிட்டாய் வேண்டாமென நினைத்தபோது வேண்டுமென்று அடம்பிடித்தாய் வேண்டியதை  தூண்டிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறாயே தூண்டிலில் மண்புழுவாய் துடிக்கவைத்து ரசிக்கிறாயே இருநிமிட மௌனத்தில் இடையிடையே கதைபடித்தாய் இன்னுமின்று வேண்டினாலே எதையோ பார்த்து சிரிக்கிறாயே

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு

ஆத்திரக் காரனுக்கு புத்திமட்டு  என்ற பழமொழி  பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததே  இருப்பினும் இன்றைய தலைமுறையினரில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அதனால் எனக்கு தெரிந்த சிலவற்றை உதாரணங்களுடன்  இங்கு கூற உள்ளேன்.  அவசரக்காரனும் ஆத்திரக்காரனும் ஒண்ணுதான் .அதனால்தான் புத்தி மட்டு என்று சொல்கிறார்கள் மட்டு என்றால் குறைவு அதாவது அறிவு குறைவு என்று அர்த்தம். அவசரத்திலும் ஆத்திரத்திலும் செய்யும்  செயல்கள் சரியான முடிவைத்தராது. திட்டமிடல் இல்லாததனால் எல்லாமே நிகழ்வுகளும் நிச்சயமான வெற்றியைத் தராது.அதனால் யோசித்து செய்யும் செயல்கள் சரியாய் இருக்கும். தொழில் ,படிப்பு ,பயணம்,ஆராய்ச்சி,படிப்பில் ஆர்வமுள்ள அனைவருமே திட்டமிட்டு  நல்ல வெற்றியை பெறுகிறார்கள் அதனால் அவர்கள் செய்த உழைப்பு எல்லோருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்.இதில் ஆத்திரமோ அவசரமோ இல்லாததினால் எல்லாமே வெற்றியை முடிகிறது ,இங்கு அவசரமாய் எந்த முடிவும் எடுப்பதில்லை ஆழ்ந்து  சிந்தித்து செய்கிறார்கள்  பெரும்பாலான அசம்பாவிதங்கள் கொலை.கொள்ளை , கற்பழிப்பு ,திருட்டு போன்றவைகள் இங்கு நான் குறிப்பிட்டபழமொழிக்குப்பொருந்தும். குறிப்பிட்ட எல

பருகச்சொல்லி அழைப்பாரா.....

இமை இரண்டும் சேர்ந்திருக்க இதழிரண்டில் தேனொழுக அமைதியான ஆற்றலுடன் -அவன் அடியெடுத்து வைத்தவுடன் தடைசொல்லி மறுப்பாரா தயவினையும் வெறுப்பாரா இடையிடையே சிணுங்கி-இன்பமதை இறுக்கமின்றி விடுவாரா சிரிப்புடனே செவ்விதழை சினுங்காமல் கடிப்பாரா சின்னச்சின்ன அசைவுகளை-வெறுத்து சினத்துடனே இழப்பாரா கதை தொடர காத்திருந்து கதவை மூடி வைப்பாரா படையெடுத்து வருபவரை-ஏற்று பாங்குடனே வைப்பாரா பத்துமாதம் முடியுமுன்னே பாசமதை தடுப்பாரா பழுத்துவிட்ட கனியதனை-குழந்தையை பருகச்சொல்லி அழைப்பாரா

இன்பமான வாழ்க்கைக்கு...

    கடந்த வாரம்  எனது நண்பர்வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சி சேலத்தில் நடைபெற்றது.அதற்காக காலை ஐந்து மணிக்கே எழுந்து  எனது இருசக்கர வாகனத்தில காலையிலேயே ரயில் நிலையம் சென்றேன் .அந்த பொழுதே மிகவும் ரம்மியமாக இருந்தது அதுவும் சொந்த ஊருக்குப் போவதற்கு கசக்கவா செய்யும்.       விடிந்தும் வெளிச்சம் தர மறுத்த சூரியன்,அதிகாலை தென்றல் காற்று ஆஹா எத்தனை சுகம் எனக்கு மெதுவாக அந்த காற்றை சுவாசித்தபபடியே சென்றேன்.நேரமாவதுகூட தெரியாமல் மெதுவாக காற்றின் ரிதம் கலையக்கூடாதென  சென்றது மனதுக்கு இதமாய் இருந்தது.       எத்தனைமுறை சொந்த ஊர் சென்றாலும் எங்கிருந்தோ இனம் புரியாத ஆனந்தம் எப்படி வருகிறது  புரியவில்லை. சொந்த ஊரில் சொந்தங்களோடும் நண்பர்களோடும் பழகிய நாட்கள் இடங்கள் எல்லாம் பறந்துவந்து கதைச் சொல்வது எல்லாமே மகிழ்ச்சியாய் உள்ளதேன்.       அன்றும் அப்படித்தான் அசைபோட்டுச் செல்லும்போது அருகிலேயே அவருக்கு - 75அந்தம்மாவுக்கு -70  எடை 50  கிலோவுக்கு குறைவாகவும் ஒல்லியான தேகத்தோடும்  இருந்தார்கள் .மனமொத்த தம்பதிகள் இருவரும் மனமகிழ்ந்து பேசுவதும் சிரிப்பதும் கண்டு எனக்கும் மகிழ்ச்சியாய் இருந்தது. ஒருவ

மீண்டும் அந்தநாள் வாராதோ !

11.03.1990 அந்தநாள் ஞாபகம் 11.03.2013  அன்றும் வருவதால் வாழ்ந்த நாள் எண்ணிக்கையில் வருடம் இருபத்து மூன்றாகிறது கொஞ்சநாள் வாழ்க்கையில்லை குறைவான மகிழ்ச்சியில்லை நிறைவான நாட்களிலே-எங்களுக்கு நெடுந்தூரப் பயணமிது எல்லாமும் பார்த்துவிட்டோம் ஏழ்மையைத்  தாண்டிவிட்டோம் எங்களுக்கு ஒரே பெண்ணென-இறைவன் எழுதியதாய் நிறுத்திவிட்டோம் தொலைவானப் பயணத்திலே தோல்விகளும் பார்த்திருந்தும் இனிதான வாழ்க்கைக்கு-இனியும் இணைந்தே வாழ உள்ளோம் இந்நாளில் எல்லோரும் இனிய வாழ்த்துச் சொல்லி இனிவரும் நாட்களையும்-சேர்ந்து இன்பமாக்க வாழ்த்துங்களேன்

அவள்தான் மனைவி........

வாலிப வயது வந்தவுடன் வாழ்கையை முடிவு செய்து வளர்த்த வீட்டை மறந்து-இன்பமாய் வாழ்ந்திட துடித்திடுவாள் பெற்றோரின் முன்னிலையில் பேரின்பம் காண வேண்டி பொறுமையாய்  இருந்திடுவாள்-ஆதலால் பெண்மையை காத்திடுவாள் திருமணம் முடிந்ததும் திரும்பியே கையசைத்து விரும்பிய வாழ்க்கைக்கு-கணவருடன் விருப்பமுடன் சென்றிடுவாள் எண்ணியதை தந்திடுவாள் எண்ணமதை அறிந்திடுவாள் கண்குளிர அமர்ந்து கொஞ்சி-அவனின் கண்மூடி விளையாடி டுவாள் பொன்னே மணியே என்று போதையை ஏற்றிடுவாள் பெண்மையை தருவதற்கு-நித்தம் பொறுமையை வென்றிடுவாள். அன்புடன் தந்திடுவாள் ஆசையாய் உணவளிப்பாள் அத்தனையும் பகிர்ந்துவிட்டு அருகிலேயே துணையிருப்பாள் அவள்தான்  மனைவி ! ஆயுட்காலத் துணைவி !!

அன்னையாய் போற்றுவோம் பெண்மையை !

இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு இன்றைய வேலையென்ன என்றெழுந்து இருப்பவரைத்  தெய்வமாக வணங்கி-தினமும் இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை என்பிள்ளை என்குடும்பம் என்வீடென எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும் நலம்வாழ  இறைவனையும் வணங்கிடுவாள் கணவனின் துயர் நீக்கும் காசுக்காக கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள் கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும் கருணையே வடிவான பெண்மையும்  போற்றிடுவாள் விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன் வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள் விரும்பியதை  ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள். அன்பையே போதிக்கும்  அன்னைய வளுக்கு ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும் அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம் அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்

பாவி என்றால் யார்?

           பொதுவாக வழக்கத்தில் எல்லோருமே சொல்லக்கூடிய இந்த வார்த்தை ஆச்சர்யமாக வழக்கத்தில் சொல்வது.இதன் உண்மையான முழுப்பொருளும் தெரியுமா? பெரும்பாலும் எல்லோராலும் இவ்வார்த்தை தவிர்க்க முடியாத வார்த்தையாகி விட்டது.            அடப்பாவமே ,அடப்பாவி ,அடிப்பாவியே  என்று யாரையெல்லாம் அழைக்கிறோம் ஏன்? அவ்வாறு அழைக்கிறோம்  பாவி என்றால் என்ன பொருள்? என்ன அர்த்தம் ?. அடப்பாவமே என்றால் வருத்தப் படுவதாகவும், அடப்பாவி என்று கொடுஞ்சொல்லால்  திட்டுவதுபோலவும் அடிப்பாவியே எனும்போது மட்டும் தவறு செய்ததாக சொல்லுவதாயும் அழைப்பதேன் ?         பாவி,படுபாவி ,கொடும்பாவி என்று திட்டுவதற்கும் சொல்வழக்கம் உண்டு .ஏன் இங்கு திட்டுவதற்கு பாவி,படுபாவி,கொடும்பாவி என்று சொல்லுகிறோம் இதெல்லாம் எனக்கு விளங்கவில்லை  ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் இருந்தாலும் எல்லா வார்த்தைகளும் தவறான அர்த்தத்தை கொடுப்பதேன்.         தெரிந்தால் சொல்லுங்கள் அல்லது எனக்கு தெரிந்தப் பின்னர் நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்

வண்டின்சுவைத் தெரிவாயா ?.........

வண்டின் சுவைத் தெரிவாயா? -------------------------------------------- மல்லிகைப் பூ தொடுத்து மலராக அசைந்து வந்து சொல்லாமல்ச் சொல்லியதாய் செல்லமாய்ச் சீண்டுகிறாய் சிறைபிடித்துத் தாண்டுகிறாய் துள்ளி ஒடும் மானைப்போல தோகைவிரித்த மயிலைப்போல மேல்லபேசும் தேனிப்போல மெதுவாய் சொல்லும் வார்த்தையாலே மேனியெல்லாம் சிலிர்க்குதடி காரிகையே கற்கண்டே காலம் சொல்லும் பூச்செண்டே கற்பனையை கடந்து வந்து கட்டியணைக்க மாட்டாயா கனிரசத்தை உணர்வாயா உள்ளமெல்லாம் புஞ்சையாக உழவனுக்கு மழையாக எண்ணிகொள்ளத் தோனுதாடி ஏக்கமின்னும் கூடுதடி என்னருகே செல்லும்போது வானமின்று வெளிச்சமழை வந்திறங்கும் நேரமுன்னே வாசமுல்லை மார்கழியே வந்தென்னை அணைப்பாயா வண்டின்சுவைத் தெரிவாயா

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்

அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்    இந்த பழமொழி உண்மையா? தெய்வத்திற்கு பரிகாரம் செய்தால் சரியாகிவிடாதோ? அப்புறம் எப்படி இந்த பழமொழி சரியானதாகும்.அந்த காலத்தில் சொன்ன பழமொழி  அனைத்துக்கும்  அர்த்தம் உண்டென்றால்  அருகிலுள்ள உறவுகளை அழித்தவனுக்கு என்ன தண்டனையை தெய்வம் தரப்போகிறது.          சின்னஞ்சிறுசு முதல் பெண்கள், ஊனமுற்றவர்கள், சிறப்பாக வாழ்ந்திருந்த முதியவர்கள் வரை எண்ணிலடங்கா மனித உயிர்களை அழித்தொழித்த படுபாதகனுக்கு  அந்த ஆண்டவன் என்ன தண்டனையை கொடுக்கப் போகிறார்      அதற்காக பரிகாரம் செய்தால் எல்லாமே சரியாகிவிடுமே இதுதானே இந்து புராணங்களும் இதிகாசங்களும் சொல்கிறது. பெரும்பாலும் எல்லா மதங்களும் வருந்தி பாவமன்னிப்புக் கேட்டு விட்டால் சரியாகி விடுவதாகவே  சொல்கிறது. அப்புறம் எப்படி தெய்வம்  தண்டனை கொடுக்கும் அவன் எப்படி அழிவான் .இறந்தவர்களின் ஆத்மா எப்படி சாந்தியடையும்.        ஒருத்தனை பத்துபேர் சேர்ந்து கொல்வதும் பச்சிளங் குழந்தையை தெருவில் வீசிவிட்டு செல்வோர்க்கும் கற்பழிப்பு குற்றம் செய்வோருக்கும்  கலப்படம், கொள்ளை, பதுக்கல் இன்னும் நாட்டில் நடைபெறும் எ

ஆட்டோக்கார அண்ணாச்சி....

ஆட்டோக்கார அண்ணாசி அறிவியல் கணக்கு என்னாச்சி ஆயில் அதிகமா போடுறதாலே-கண்ணு அரிப்பு அதிகமா போயிடுச்சி சந்துபொந்தா போகுறீங்க சாகசமெல்லாம் செய்யுறீங்க கண்ணு எரியும் புகைய விட்டு-மக்களுக்கு கண்ணீரையும் வரவைக்கிறீங்க மோட்டார் சைக்கிலபோறவங்க முகத்திரையும் வீனா போச்சு மூச்சு முட்டி நிக்கிறதும்-திட்டி முனகிகிட்டே போக வைக்கிறீங்க சுவாசகோளாறு உள்ளவங்க மூச்சுவிட முடியலிங்க சுற்று சூழல் பாதுகாக்க-நீங்களும் சுகாதாரம் பற்றி யோசிங்க

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more