Posts

Showing posts from July, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும் பசியில் சேர்த்துப் பாருங்கள் பகிர்ந்தே உணவைப் போடுங்கள் பயனோர் மகிழ்வய் காணுங்கள் இந்தப் பிறவியில் வாழ்வதையே இனிமை யாக்கி  உணருங்கள் இறுதி நாட்களில் மகிழுங்கள் இன்பம் மனதில் சேருங்கள் மகிழ்வாய் வாழப் பழகுங்கள் மனதை போற்றி உணருங்கள் மக்கள் துயரைத் போக்கியே மானிடம் புகழ வாழுங்கள் இனிமேல் புதிதாய் விதிசெய்வீர் இனிமை பணத்தில் இல்லாமல் தலைமேல் பணத்தை சுமக்காமல் தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே ஆழாக்கு சாம்பல் மட்டுமே அறிந்தோர் கையில் கிடைக்குமே அதற்காய் பணமேன் சேர்க்கணும் அதையும் தவிர்த்தும் சாகனும்

கணினியைத் திறந்தால்............

Image
(நன்றி கூகிள்) விடியலைக் கண்டதும்          வேகமாய்த் தேடினேன் விளக்கைப் போட்டதும்         விசையை அழுத்தினேன் தனக்குள்ளே சிரித்து        தகவலாய் வந்தது கணக்குப் பார்க்க        கணினியைத் திறந்தால் கண்டவர் எண்ணிக்கை         காண்டேன் இருநூறு கொண்டேன் கவலை        குறைய வேண்டாமென தமிழ்மணம் சென்றேன்     தளத்தினைப் பார்த்தேன் அமிழ்தாய் வேண்டும்     அப்போதே கைஅமுக்கி இதழ்த் திறந்து       இனிய வாக்கிட்டேன் புனிதமாய் போற்ற          கணினிதான் எனக்கு இனிமையைத் தருது          இன்னலைமறக்குது மனதும் மகிழுது           மாலையிலும் தொடருது தொடந்து வரவே           தினமும் விரும்புது தூக்கம் என்னை           தவிக்கவும் விடுது அறியாத நிகழ்ச்சிதான்           ஆனாலும் மகிழ்ச்சிதான்

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர் விரலாலே தட்டி விட்டேன் விதியாக வந்த சொல்லை விதி மாற்ற முடியுமா கதை தோறும் காட்சியும் கண்டதாய் சொன்னபோது கதை மாறிப் போகுமா கதையென்றே மாறுமோ சினம்கொண்டச் செயலால் சிதைத்து விடும் மனதையே சீர்நோக்கிப் பார்த்தாலே சீக்கிரமே புரியாதோ விலைப் பேச வேண்டாமே விதி மாற்றக் கூடாதே மதியாலே மாறிவிடு மக்களையே வாழவிடு விலைபோயிப் பயனென்ன விடிந்ததுமே சேதிவரும் உலைவாயை மூடினாலும் ஊர்வாயும் மூடாதே கலையாக பார்த்தாலே கல்வியும் மகிழ்ந்திடுமே கடவுளாம் சரஸ்வதியும் கருணை வழி காட்டுமே

உடல் முழுதும் வியர்த்தாலும்.....

Image
   (நன்றி கூகிள்) பாய்ந்து வரும் காளையது பார்தவுடன் வியந்து விடும் பருவமான  உடல தனால் புகுந்து விளையாடி வரும் கருப்பு வெள்ளை நிறமாக காளையது துணிந்து நிற்கும் கன்னியரைக் கண்டுவிட்டால் கழுத்தை தூக்கி முட்டவரும் ஊர் முழுக்க நின்றாலும் உரியதையேத் தேடிவிடும் உள்ளமதைக் கொள்ளை யாக்கி உறவுக்காக் ஏங்கி நிற்கும் பரிதவிக்கும் நிலத்திலே  பக்குவமாய் விதை விதைக்கும்  பாத்தியிலே விதைத்து விட்டு பாதயதைத் தேடித் போகும் உருவமதைக் கண்டவுடன் உடல் முழுதும் வியர்த்தாலும் விதியதனை எழுதி விட்டு விரைவாகப் பதுங்கி விடும்

புலவர்.ராமநுசம் அய்யா அவர்களின் ஐரோப்பிய நாடுகளின் இன்பச் சுற்றுலா தகவல்கள்

Image
நமது புலவர்.ராமநுசம் அய்யா   வலையுலக நண்பர்களுக்கு வணக்கம், நமது பதிவுலகின் மூத்தப் பதிவர் திரு.ராமநுசம் அய்யா அவர்கள்.தமிழ்நாடு அரசுப்பணியில் மூத்தத் தமிழ் பேராசிரியராக சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பணிபுரிந்தார். அவரின் தீவிர முயற்சியால் தமிழாசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர்த் தகுதியும் பலருக்குப் பதவி உயர்வும் கிடக்கக் காரணமாய் இருந்தார், தமிழுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி தமிழாசிரியர்களின் மனதிலும் வாழ்விலும் மறக்கமுடியாத தொன்றாற்றி வந்தவர். இன்றளவும் தமிழ்மீது தீராக்காதலுடன்  முகப்புத்தகத்தில் தினமும் வலம் வரும் இளைங்கனாகவும் தொடந்து தமிழ்க் கவிதைகளை இலக்கணத்துடன்  எழுதியும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அய்யா அவர்கள்   தமிழ்ப் பதிவர்களை ஒன்று திரட்டும் முயற்சியாக பதிவர்த் திருவிழாவை சென்ற ஆண்டு நடத்தியதுடன் இந்த ஆண்டு 01.09.2013 ல் நடைபெற  உள்ள தமிழ்ப் பதிவர் விழாவையும்  சிறப்பாக நடத்த அறிவுரைச் சொல்லி  வருகிறார். அய்யா அவர்கள் தற்போது 02.08.2013 முதல் வெளிநாட்டுப் பயணத்தை  நாற்பதுபேர் கொண்ட குழுவுடன் தொடங்க  இருக்கிறார்.அய்யாவின் வருகையை  எதிர்பார்த

வாலி நீ கடலாழி....

Image
                  ( நன்றி)   வாலி நீ..... கடலாழி பாட்டில்... பண்பில் வறுமை சொல்லா கவிஆழி பண்ணும் பாட்டும் படைப்பாய்நீ பகுத்தறிவும் சொன்ன பெரியார்நீ இளமை துடிப்பில் என்றுமேநீ ஈடில்லா கவிமழை தந்தாய்நீ ஆண்டவன் கட்டளை அறிந்தவன்நீ அன்னைத் தந்தையை மதித்தவன்நீ கவிதைப் படைப்பில் வல்லவன்நீ தமிழுக்குஅணிகலன் சேர்த்தாய்நீ எப்போதும் ...... எல்லோர் மனதிலும் தமிழாய் வாழும் கவிஞன்நீ

வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....

அயல்நாட்டு முதலீடும் ஆலைகள் பல முடுவதும் நாறிக் கிடக்குது விதியென்று நான் சொல்ல நா கூசுது......   பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார் பொறுமையும் வேண்டு மென்கிறார் வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார் வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார் எத்தனையோ தொழில்கள் முடங்கியதை ஏதுமே அறியாதவராய் இருக்கிறார் ஏற்றத் தாழ்வும் இருந்தாலும்  ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார் பண்ணாட்டு வணிகத்தால் பணமும் பலருக்குமே  வேலை இழப்பும் உள்நாட்டு மக்களின் தவிப்பும் உள்ளபடி நல்லதாய் படிக்கிறார் அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார் அனைவருக்கும் உள்ளதாக  சொல்கிறார் வரிகளையே உயர்த்திக் கூட்டி வருடந் தோறும் சேர்க்கிறார் வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய் வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார் வாழ்வதற்கு  மட்டும் கஷ்டமான வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்

ஆழ் மனது ....

ஆழ்ந்த மனதுக் குள்ளே அன்புடன்  கோபமும்  இருக்கும் ஆனாலும் அப்பப்போ வெடிக்கும் அதனால் மனது வலிக்கும் தாழ்ந்த நிலையினால் அது தன்னையே தரம் தாழ்த்திவிடும் தானாகப் பேசவும் ஏசவும் தனிமையை நாடிக் கொல்லும் வீணான கற்பனையை வளர்க்கும் விவேகமற்ற வேதனையைத் தரும் வீண்பேச்சு ஏளனத்தை மதிக்கும் விடிவில்லா சந்தேகம் வகுக்கும் ஆண் பெண்களைச்  சேர்க்கும் ஆபத்தில் கொண்டுவிடும் ஊன் உறக்கம் தவிர்க்கும் உடன்பாடு இல்லாதுப்  பிரிக்கும் தான் கெட்டு தவித்தும் தனைச்சார்ந்தோரையும் கெடுக்கும் வீணான மனபிழற்ச்சி தரும் வேதனையும் இழப்பும் மிகும் ஏனிந்த மனநிலை இறைவா எப்படி தவிக்கிறார்  புரியுமா தவிர்க்க வழிதான் தெரியுமா தவிப்போரைக் காப்பாற்ற முடியுமா

தட்டச்சும் கணினி அனுபவமும்

                    எனது மலரும் நினைவுகளை மீண்டும் மீண்டும் வரும் சுவையான தருணங்களை   சொல்ல வேண்டும்  என்று திருமதி.சசிகலா அவர்கள் கேட்டுக் கொண்டதால் அவரின் விருப்பத்தின் பேரிலேயே  மீண்டு வருது.                       நான் வளர்ந்தது படித்தது  எல்லாமே சேலம்.வசித்தது அழகாபுரம்  ஐந்து ரோடு பகுதியில்.எல்லோரரையும் போல கல்லூரியில் சேர்ந்தவுடன் என்னையும்  தட்டச்சு பயில வேண்டி என்னையும் 1980 ஆகஸ்ட் மாதத்தில்அனுப்பினார்கள்.                   எல்லோருக்குமே அந்த வயதில் மாணவ மாணவியராய் சேர்ந்து படிக்க அதாங்க தட்டச்சு பயில அருகருகே அமர்ந்து  பேச  மிரட்சியும் விருப்பமும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். நான் மட்டும் விதிவிலக்கா ?.நானும் நாள்தோறும் மாலைநேரம் தவறாமல் வேறு எங்கும் ஊர்சுற்றப் போகமால் செல்லுவேன்.                     அப்போதுதான் கணினிப் பற்றி எனக்கு அறிந்து கொள்ள முடிந்தது காரணம் நான் வரலாறு படைப்பிரிவை சேலம் அரசு கலைகல்லூரியில் படிப்பதால் எனக்கு தெரிந்திருக்கவில்லை.தட்டச்சு பயில வரும் மாணவ மாணவியர் சேர்ந்து கொண்டு அதைப்பற்றி பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்  எனக்கு ப

அடிக்கடி மழைத்துளி

அடிக்கடி மழைத்துளி அணைத்திட துடிக்குது கடிக்கிற எறும்புமே கடையிலே கடிக்குதே ... இடுப்பிடை மடிப்பிலே அணைக்கிற போதிலே இருதயம் படபடவென அடிக்கடித் அடிக்குதே சிலுசிலு மூச்சிலே சேலையும் நழுவுதே சேர்கிற நேரத்தை சீக்கிரம் கேட்குதே விரலிடை மேனியில் மேகலை தேடுதே படர்ந்திட ஆசையில் படருதே தழுவுதே தொடத்தொட வெட்கமே துவழுதே தூண்டுதே சடசட மழையிலே சாந்தியும் அடையுதே

இடையில் வந்த சாதியாலே

உயர்ந்த தாழ்ந்த சாதியென்றே உண்ணும் உணவில் இல்லையே உலகில் பேசும் மொழியிலேயும் உயர்ந்து தாழ்வு மில்லையே உழைக்கும் இனம் மட்டுமே உயர்வுத் தாழ்வு பார்க்கிறார்கள் பிழைக்க வழித் தெரிந்திருதும் பேதம் கொண்டு வாழ்கிறார்கள் ஒற்றுமையாய் வாழ்ந்த மக்கள் ஓலமிட்டே தினம்  அழுகிறார்கள் உழைப்பதற்கே தினம் பயந்து ஓடி ஒளிந்து வாழ்கிறார்கள் மறக்க வேண்டா மென்று மக்களையும் சேர்கிறார்கள் மனிதனையும் மிருகமாக்கி மக்களாட்சி கேட்கிறார்கள் இழிந்த நிலையில் வாழ்கையில் இதையும் ஏன்  வளர்க்கிறார்கள் இடையில் வந்த சாதியாலே இனம் பிரிந்து நிற்ககிறார்கள் துயரம் மிகும் வாழ்க்கையில் துணைக்குச் சாதி வேண்டுமா தூய்மையான அன்பும் நட்புடனே தூய வாழ்க்கை வேண்டுமா

பதிவர் கூட்டம் 01.09.2013

Image
பதிவுலகில் கூட்ட மொன்று பழகி சேர்ந்து வளருது பண்புடனே அனைவருமே பாசம் கொண்டு தொடருது  கலை இலக்கியம் நாடகமும் கல்விப் பற்றி விழிப்புணர்வும் உலகமெல்லாம் நடக்கின்ற உயர்ந்த பல விஷயங்களுடன் வலையுலகில் அனைவருமே வாழ்த்துப் பாடி மகிழுது வேறுநாட்டு மக்களுடன் வலையில் சேர விரும்புது வரும் 01.09.2013 அன்று சென்னையிலே இணைய வேண்டி வருக வருக வென்றே வலை யுலகை அழைக்குது அனைவருமே வந்திடவே அழைப்புச் சொல்லி வருவதால் ஆர்வமுடன் கலந்து கொள்ள ஆசை எனக்கும் தூண்டுது வலையுலகில் பவனி வரும் வயதோரும் முதியோரும் வருங்காலச் சரித்திரமாய் வந்திணைந்து சேர்ந்திடுங்கள்

குண்டுக் குழந்தைகள்

Image
             (நன்றி கூகிள்) தாய்பால் மட்டும் போதுமே தவிர எதுவும் வேண்டாமே நோய்கள் அதனால் தீண்டாதே நன்றே வளர்ந்திட உதவுமே அன்னை மனமும் அறிந்திடும் அன்பாய் பண்பாய் வளர்ந்திடும் காண்போர் மனதும் தீண்டிடும் கன்னத்தை கிள்ளிடத் தூண்டிடும் செயற்கை உணவைக் கொடுக்காதீர் சீக்கிரம் வளர்வதைப் பார்க்காதீர் இயற்கையை மாற்றிப் போகாதீர் இன்னல்கள் தேடி ஓடாதீர் அதிக உட்டம் கொடுப்பதனால் அளவில் பெரிதாய் குழந்தைகளும் எளிதில் உருவம் பெரிதாகி எல்லா உறுப்பும் பெருத்திடுமே பார்க்க நமக்கே அழகாகும் பார்த்ததும் தூக்கிட முடியாது படிக்கும் போதே அதனாலே பசங்கள் கேலியும் செய்வாரே இயற்கை உணவை கொடுங்கள் இதமாய் பதமாய் வளருங்கள் எல்லோர் போல மெலிதாக்க ஏற்றப் பயிற்சியை  நாடுங்கள்

நினைத்தேன் சொன்னேன்....

ஒதுங்கி வாழ்வது தவறு ஒற்றுமை காப்பதே சிறப்பு ஒன்றி ணைந்து  சேர்ந்தால் ஒளிமயமாகு முன் வாழ்வு                    ***** சினம் கொள்ள மறந்தால் சிரிப்பை துணைக்கு அழைத்தால் செழிப்பை முகத்தில் காணலாம் சிறப்பாய் உடலைப் பேணலாம்                      ***** வாழ்க்கை என்றப் பாதை வட்டமானது வண்ணம் மிகுந்தது எளிமையும் மனதில் ஏழ்மையானது எப்படியும் வாழலாம் வாழ்ந்திடு                      ***** உள்ளம் சொல்வதைக் கேட்டு உரியவர் மனதை அறிந்து செய்யும் செயலை துணிந்து செய்திடும் காரியம் ஜெயமே                       ******

17.07.2013 அன்று கோவைப் பதிவர்களோடு ......

Image
17.07.2013 அன்று   நான் கோவை ரயிலில் சொந்த வேலையாக கோவைக்கு சென்றிருந்தேன்.என்னை கோவை பதிவர்களின் சார்பாக நண்பர் கோவை ஆவி (ஆனந்த்) அவர்கள் வரவேற்றார். அங்கிருந்து கோவைஆவியும்  நானும்  கோவையின் பிரபலப் பதிவர்களான.திரு.கோவை ஜீவா,உலகதமிழ் சினிமா ரசிகன் ஆகியோரய் சந்தித்தோம்.அங்கு  சென்னையை சேர்ந்த பதிவர்களின் நலன் விசாரித்தார்கள் பிறகு அடுத்த பதிவர் சந்திப்பு நிகழ்வு பற்றி ஆர்வமாய்  கேட்டார்கள் .அடிக்கடி நாங்கள் சந்திப்பதுப் பற்றி சொன்னதும் மகிழ்ந்தார்கள். ஆனால் நான் ரயிலிலேயே மதிய உணவு சாப்பிட்டேன் என்று சொல்லியும் நிச்சயம் எங்களோடும் உணவருந்த வேண்டுமென கட்டாயப்படுத்தி னார்கள் .அதனால் மேலும் நான் சாப்பிட வேண்டிய  சூழ்நிலையில் பரோட்டாவும்  மிளகு கோழி வறுவல் நால்வரும் பேசிக் கொண்டே உணவருந்தினோம். கோவை ஜீவா அவர்கள் எனக்கு பரிமாரியதுடன் கவனமாக அதைப் படங்களும் எடுத்துக் கொண்டார். பேச்சினூடேஉங்க வயது என்ன? என்று நண்பர் ஜீவா அவர்கள் கேள்வி கேட்டு  பின்அவரைவிட மூத்தவன் (நானும் இளைஞன்)என்று புரிந்து கொண்டு  அடுத்த கேள்வியாக எல்லோருமே கேட்க விரும்பும் கேள்வியைக் கேட்க கோவை ஆவி தானாக முன்வந்த

தாய்நாடு அழைக்கின்றது..........

அவசர உலகமோ அதற்குள்ளே அனைத்து உறவையும் கெடுக்கிறதே மிகச்சரியாகப் புரிகிறதே உண்மை மீண்டும் நம்மூர் அழைக்கிறதே எல்லா உறவும் மறக்கிறதே ஏற்றத் தாழ்வும் வருகிறதே என்பதை எண்ணியே மனமே எரிமலையாய் இன்று வெடிக்கிறதே நம்மூரைப் பார்க்க துடிக்கிறதே நல்லதும் கெட்டதும் காண்பதற்கு இல்லமும் தேடி அலைகிறதே இன்பமாய் இதுவே இருக்கிறதே காலடிப் பட்டதும் சிலிர்க்கிறதே கனவுகள் எல்லாம் நிஜமானதே ஊர்விட்டு மறந்து போன  உறவினை மீண்டும் நினைக்கிறதே இத்தனை நாள் மறந்திருந்த இன்பம் மீண்டும் வருகிறதே இங்கேயே நான் தங்கிடவே இன்று மனம் துடிக்கிறதே அப்பாவின் அன்பு மகிழ்கிறதே அம்மாவின் உணவும் ருசிக்கிறதே இப்போதும் உறவுகளை எண்ணி இனித் திரும்ப தருகின்றதே

தினம் தாலாட்டுக் கேட்கும்.....

கொன்றை மலர்க் குலுங்கும் குளமெல்லாம் அல்லி மலரும் கொஞ்ச வேண்டி சூழ்நிலைகள் கொண்டாட்டம் ஏங்கி  நிற்கும் வானமும் மகிழ்ச்சிக் காட்டும் வயலில் நண்டுகள்  ஓடும் மணம் முடிக்கும் மங்கைக்கு மலரும் மகரந்தமும் பிடிக்கும் தலைநிறைய பூச்சூடி துணையோடு தினம் தாலாட்டுக் கேட்கும் தனிமையும் வெறுக்கும்  ஏக்கம் தனியறையில் தானாகப் பேசும் ஆனால்..... ஆடியில் சேர்ந்தாலே ஆபத்தென அன்றே தவறாய் சொல்லி அன்பான தம்பதியைப் பிரித்து ஆருடமாய் சொல்லி வைத்தார்கள் மருத்துவ வசதி இன்றி மறுப்பவர் எவரும் இன்றி வீணான கற்பனையில் அன்று வேதனையாய் பிரித்து விட்டார்கள் மேமாதம் சூரியன் மேகமின்றி மேனியில்  வெயில் படும்போது சான் உடம்பு குழந்தைக்கும் சங்கடங்கள் வந்து சேருமென்றே தோதான சோதிடமும் சொல்லி தொலைவிலே  தள்ளி  வைத்தார்கள் விஞ்ஞான வளர்ச்சியிலே தேவையில்லை விரைவான மருத்துவம் உண்டு சிந்தித்து செயல்படுங்கள்  இன்று சேர்ந்தவரை மகிழ்வாய் விடுங்கள் இன்பத்தில் மகிழ்வோரை இணைத்து இளமையை உணர வாழ்த்துங்கள்

காதலுக்காய் கடிதம் எழுதி....

வீட்டுப் பாடம் படித்தெழுத விடியற்காலை எனக்குப் பிடிக்கும் விடிஞ்சதுமே நீண்ட நேரம் வீசும் காற்றும் பிடிக்கும் தாண்டிஓடி ஆடப் பிடிக்கும் தைரியமாய் மரத்திலேற பிடிக்கும் சைக்கி லோட்டப் பிடிக்கும் சடுகுடு ஆடவும் பிடிக்கும் மரத்தின் உச்சிஏறி நின்று அங்கிருந்து குதிக்கப் பிடிக்கும் ஒற்றுமையாய் நண்பர்களுடன் ஊர்முழுக்கச் சுற்றப்பிடிக்கும் சீக்கிரமேப் பள்ளிச் சென்று சேர்ந்துப் பழகப் பிடிக்கும் சிணுங்கி அடிக்கும் அவளழகை சற்றுத்தள்ளி ரசிக்கப் பிடிக்கும் கற்பதனைக் காத்து நிற்கும் கன்னியரும் எனக்குப் பிடிக்கும் காதலுக்காய் கடிதம் எழுதி கண்டவுடன் கிழிக்கப் பிடிக்கும் இப்படித்தான் இமைமையை கழிந்ததாய் இன்றுதான் எனக்குப் புரிந்தது தப்பதெவும் செய்யாமல் இருந்ததால் நட்பதுவே நல்லவனாய் மாற்றியது

அவரவர் வாழ்கையை வாழுங்கள்.....

அம்மா வாழ்ந்த காலத்திலும் அடிமையாக இருந்ததில்லை அப்பா தாத்தா பாட்டியிடம் அன்பாய் இருக்கத் தவறவில்லை எல்லோர் சொல்லையும் கேட்டறிந்து எந்த முடிவும் செய்திடுவார் இல்லா நிலையிலும்  உள்ளதையே இனிமையாகச் சொல்லிடுவார் வசதியான வாழ்க்கைக்கு  என்றும் வெளியில் வேலைக்கு சென்றதில்லை வருவோர் போவோர் நண்பரிடமும் வீட்டுச் சண்டையைச் சொன்னதுல்லை இப்போ நிலைமை மாறியது இனிமை வாழ்வும் மறைந்தது... தப்பாய் எண்ணும் பழக்கத்தால் தனியாய் செல்லும் நிலையானது பிரிந்தே வாழ்ந்து வந்தாலும் பொறுப்பாய் இணைந்தே உழைத்தாலும் இருந்தும் சண்டை வருகிறதே இல்லற வாழ்வும் கசக்கிறதே அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு அன்பாய் பரிவாய் பேசுங்கள் அடுத்தவர் பேச்சைக் கேட்காமல் அவரவர் வாழ்கையை வாழுங்கள்

பணம்....பணம்...பணம்..

மக்கள் பலபேர் மடிவதற்கும் மனதை வருத்திக் கொல்வதற்கும் நிச்சயக் காரணம் பணமாமே நித்தமும் கெடுப்பது இதுதானே மனிதரில் சிலபேர் தவிப்பதற்கு மனமே வருத்தி மாய்வதற்கு மனிதம் தெரியாப் பணமாமே மனிதனின் குணமும் கெடுதாமே நாளும் நாளிதழ் பார்க்கின்றோம் நல்லச் செய்திகள் இருந்தாலும் வாழும் முறையில் மாற்றத்தால் வருத்தித் தினமும் அழுகின்றோம் தினமும் நாமே காண்கிறோம் தெரிந்தும் மௌனம் காக்கிறோம் குணமே இல்லாப் பணத்தாலே குடும்பமே தற்கொலை செய்கிறதே அவசர உலகில் அனைவருமே அடிமை வாழ்வு வாழ்வதற்கும் அக்கம் பக்கம் நடப்பதற்கும் அடைக்கலம் கொடுப்பது பணமாமே

வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல.........

வாகனம் ஓட்டிச் செல்லும்போது வருகிறக் கோபத்தில் மறுந்துடாதீர் வண்டியை வேகமாய் ஒட்டாதீர் வழியில்  தவறாய் செலுத்திடாதீர் தலையில் கவசம் அணிவதனால் அழகும் கெட்டுப் போகாதே தடுமாறிக் கீழே விழுந்தாலும் தலையும் எங்கும் மோதாதே கண்டவர் அருகே வந்தாலும் கண்களை வேறங்கும் திருப்பாதீர் கைபேசி அழைப்பையும் தவிர்த்திடுவீர் கவனமாய் வாகனம் செலுத்திடுவீர் நீண்ட தூரம் செல்லுகையில் நிதானம் எப்போதும் இழக்காதீர் இருக்கைப் பட்டையை அணிந்தே இயல்பாய் வாகனம் செலுத்திடுவீர் வேகம் மட்டும் மகிழ்ச்சியல்ல வாழ்க்கை உண்டு மறந்துடாதீர் தாகம் தண்ணீர் இடையிடையே தவிர்த்தே வாகனம் செலுத்திடுவீர்

பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி

Image

இந்நாள் தவிப்பு....

இதயமெல்லா மின்றுத் தவிக்கிறதே ஈன்றவர் நினைவு வருகிறதே தாண்டிய தூரமும் தெரிகிறதே தாங்கியோரை நினைத்தேத் தவிக்கிறதே என்னைத் தவிக்க விட்டு எங்கே சென்றீர்கள் கடவுளே விண்ணைத் தாண்டி வரவா வேதனையைச் சொல்லி அழவா வேண்டுவேன் உங்களை  மீண்டுமே வேதனைத் தாங்கியேக் காத்திட மீண்டுமென் உங்களின் அன்பையே மீட்டிடப்  பிறந்திட விரும்புதே ஈன்ற இந்நாள் தெரியுமா என்னை அறிந்திட முடியுமா வேண்டுவேன் உங்களது ஆசியை வேதனைத் தீர்த்திட வாருங்கள் விதியை மாற்றியே வாருங்கள் வெளிச்சமும் எனக்குத் தாருங்கள் தாண்டிய நாட்களை நானுமே திரும்பிப் பார்த்தே வாழ்கிறேன் அடுத்தப் பிறவி யாதென அறிந்து நீவீர் சொல்வீரோ தடுத்தே என்னை உம்முடன் துணைக்கு அழைத்துச் செல்வீரோ

உலகம் முழுவதும் உயிரோடு உறவாடு......

உலகம் முழுவதும் அங்கங்கே உரிமைப் பிரச்சனை வருகிறதே உயிர்கள் பலவும் மடிகிறதே உயர்வும் அதனால்  தடுக்கிறதே கலகம் கலவரம் திருட்டுகளும் கயவர் கூட்டக் கொள்ளைகளும் கடிந்தே தினமும் நடக்கிறதே கவலை மனதில் தருகிறதே விலையும் தினமும் ஏறுவதால் விஞ்சிக் கவலைத் தருகிறதே பொன்னும் பொருளும் இல்லாமல் புலம்பும் நிலையே வருகிறதே திண்ணைப் பேச்சு இப்பொழுதே தினமும் வீணாய் போகிறதே பண்ணை எங்கும் காணாமல் பரந்த வெளியாய் இருக்கிறதே கவலை இல்லா வாழ்க்கைதனை கடக்கும் நிலையும் திரும்புமோ நிலைமை எப்போ மாறுமோ நிம்மதி மீண்டும் திரும்புமோ சண்டை என்றும் இல்லாமல் சமத்துவம் எங்கும் விரும்பினால் அனைத்துமே நிலைமை மாறிடும் அகிலமே அன்பால் செழித்திடும்

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more