தெய்வங்கள்

தெய்வங்கள்

புயல் மழைக் காலங்களில்....

புயல் மழைக் காலங்களில் எங்கும்
புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி
அழையாத நண்பனாக உறவாடும்
ஆறுநாள் தொடந்தே இருக்கும்

அடிக்கடித் தும்மலும் அடங்காது
அழும்படி செய்து விடும்
தலைவலி மிகுந்து வேலை செய்ய
தடையாக இருந்தே தொல்லையாக்கும்

கயல்விழிக் காது தொண்டை
கரகரவென்றே இருந்தும் வலிக்கும்
அயல்நாட்டு மருந்து தின்றும்
அடங்காமல் தொடர்ந்து வரும்

ஐங்கடுகு சூரணதைக் குடித்து
அடிக்கடி மிளகு ரசம் பருகி
துளசி தூதுவளை செடியின்
தூய இலைதனை மென்றாலும்

வயல் நண்டு  ரசம் தொடர்ந்து
வாரம் இருமுறை குடித்தால்
வரும் துன்பம் நீங்கித் தீரும்
வழக்கமான வேலைகள் தொடரும்

(கவியாழி)

Comments

  1. அனுபவம் பலருக்கும் உதவும்...

    ReplyDelete
  2. சளித்தொல்லைக்கு கவி மருந்து சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சுரேஷ்

      Delete
  3. கவிதை போன்றே மருத்துவம் அருமை.

    ReplyDelete
  4. அட ஜலதோஷம் கூட கவிதை படைக்க உதவி விட்டது. நன்று

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நீங்க கொடுக்கும் ஆதரவே காரணம்

      Delete
  5. விரைவில் குணமாக வேண்டும் சளி பிடித்தாலே சனி பிடித்தது போல என்பர்!

    ReplyDelete
  6. பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
  7. மருந்து சாப்பிட்டால் ஒரு வாரம் அவஸ்தை, சாப்பிடாவிட்டால் ஏழு நாட்கள் அவஸ்தை என்பார்கள்!

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒரு வைத்தியம்தான்

      Delete
  8. பயனுள்ள பதிவுகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன் பெற நல்ல யோசனைகள்.

    ReplyDelete
  9. கவிதையில் மருத்துவம்
    வித்தியாசமான முயற்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ரசமிகு கவிதை! நண்டு சூப் ரெடி – என்று ஒரு டிபன் கடை வாசலில் தொங்கிய, சிலேட்டுப் பலகையில் எழுதி இருந்ததை பார்த்ததாக நினைவு.
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. நண்டு சூப் நானும் சாப்பிட்டதில்லை

      Delete
  11. கவிதையிலே நோயும் தீர்வும் அருமை அருமை

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை