Posts

Showing posts from March, 2014

தெய்வங்கள்

தெய்வங்கள்

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்-2

Image
.  இரண்டாவது நபராக திரு.துளசிதரன் அவர்களைத் தொடர்புகொண்டு பேசியபோது ஓ..மீசைக்கார நண்பரா என்று கேள்விகேட்டுவிட்டு அவரே தொடர்ந்து நிச்சயம் நான் உங்களைச் சந்திக்க வேண்டும்உங்களை எங்கு எப்படி எப்போது காண்பது என்று ஆசிரியருக்கே உரித்தான கேள்விகளால் மகிழ்வோடு கேட்டார்.நானும் திங்கட்கிழமை வந்து அன்றிரவே சென்னைத் திரும்ப இருக்கிறேன் என்றதும் ஏன் இன்னொருநாள் தள்ளிபோட முடியாதா என்று திரு.தேவதாஸ் அவர்களைப் போலவே கேட்டார்.   நான் என் நிலையைச் சொல்லி அவசர வேலையாக வந்த காரணத்தினால் இப்போது முடியாது மற்றொருநாள் வருகிறேன் பிறகு பார்க்கலாமே என்றதும்  உடனே இல்லை இல்லை நண்பரே உங்களை நான் எப்படியும் பார்த்துவிட  வேண்டும் நான் பணி செய்யும் இடம் பாலக்காடு என்றும் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிசெய்வதாகவும் இங்கிருந்து 180 கிலோ மீட்டர் தள்ளி எனது வீடு உள்ளதென்றும் திங்கள் வந்து வெள்ளியன்று வீடு திரும்புவேன் என்றும் சொல்லியதுடன் இன்றிரவு 10.30 மணிக்கு உங்களது தொடர் வண்டி பாலக்காடு வரும் அப்போது உங்களைச் சந்திக்க முடியுமா அல்லது தூங்கி விடுவீர்களா என்றார்."கரும்புதின்னக் கூலியா நண்பரை சந்திக்க சிர

இணையத்தால் இணைந்தோம் மகிழ்ந்தோம்

Image
          நான் அவசர வேலையாக கேரளாவிலுள்ள  கொச்சின் நகருக்கு செல்வதாய் இருந்தேன்.நான் செல்லும் எல்லா ஊர்களிலும் ஏதாவதொரு இணைய நண்பர்களை சந்திக்க விரும்புவது வழக்கம் அப்படி செல்லும் முன் இணையத்தின் இணையில்லாத தவிர்க்க இயலாத அனைவரும் அறிந்த நண்பர் திரு.திண்டுக்கல்.தனபாலனிடம் கேரளாவில்  இணைய நண்பர்கள் உள்ளனரா என்று ஒரு நாள் முன்புதான் கேட்டேன்.மாலை என்னை அழையுங்களேன் என்று  சொன்னார் மாலையில் அவர் இரண்டு நண்பர்களின் கைப்பேசி எண்களைத் தந்து நீங்களே பேசிவிடுங்கள் என்றார்.         23.03.2014 அன்று  மாலை நான் திரு.தேவதாஸ் அவர்களை தொடர்பு கொண்டபோது மகிழ்ச்சியுடன் என்னை நினைவு கூர்ந்து  எனது தளத்துக்கு வந்து அனைத்தையும் படிப்பேன் என்றும் மற்ற இணைய நண்பர்களைப் பற்றியும் விசாரித்தார்..அப்போது இன்று இரவு புறப்பட்டு நாளைக் காலை எர்ணாக்குளம் வருகிறேன், நான் பயணிக்க ஒரு வாடகை மகிழுந்து (கார்) வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன் உடனே இன்னும் சிறிது நேரத்தில் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னபடியே உங்களுக்கு வாடகைக் கார் பேசிவிட்டேன் என்றார்.மேலும் நானே நேரில் வருகிறேன் என்று மனமுவந்து சொன்னது எனக்கு மக

அன்புச் செல்லக் குழந்தைகளே

அன்புச் செல்லக் குழந்தைகளே அறிவில் சிறந்த முல்லைகளே பண்பேக் குறையா செல்வங்களே பாசம் மிகுந்த மொட்டுகளே நல்லப் பிள்ளை அனைவருமே நன்குப் பேசி மகிழுங்களே அன்பு பாசம் அறிவையுமே அறிந்து பகிர்ந்து சொல்லுங்களே மாலைப் பொழுதில் விளையாடி மகிழ்ந்து நட்பாய் ஆடுங்களே மனதில் உள்ள எண்ணங்களை மதித்து உணர்ந்து செய்யுங்களே நல்ல நல்லக் கதைகளையும் நல்லோர் சொன்ன கருத்துகளும் நாளும் படித்து வாருங்களே நாட்டில் சிறந்து வாழுங்களே அன்னைத் தந்தை சொல்வதிலே அர்த்தம் உணர்ந்து கொள்ளுங்களே அறிவைச் சொல்லும் ஆசிரியர்கள் ஆழ்ந்து  மகிந்து   படியுங்களேன் (கவியாழி)

கான்க்ரீட் காற்றும் காடுகளும் மரங்களும்

         தென்றல் காற்று ,மழைக் காற்று ,சோலைக் காற்று ,வாடைக் காற்று என பலவாறு  அழைத்தேப் பழக்கப்பட்ட நமக்கு கான்க்ரீட் காற்றுப் பற்றியும் தெரிந்திருக்கும்.அவ்வாறு தெரியாத நண்பர்களுக்காக இந்தப் பதிவைப் பகிர்வதற்கு விரும்புகிறேன்.          தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுதும் காட்டிலும் குடிசையிலும் கொட்டடியிலும் சாலை ஓரத்திலும் குறுகியக் குடிலையே வசிப்படமாகக் கொண்ட அடித்தட்டு மக்களின் கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டினால் சிறிதேனும் சேமிப்பை வைத்துக் கொண்டு கடன் வாங்கியாவது ஒரு சிறிய தார்சுக் கட்டிடத்தை  கட்டி  வசிக்கும் நிலையில் எல்லோருமே ஆசைப் படுகிறார்கள்.         கட்டுமான நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு அழகிய சிறந்த பாதுகாப்பான காற்றோட்டமான ,வெளிச்சமான வீடுகளை தொகுப்பு வீடுகளாய்,அடுக்குமாடிக் குடியிருப்புகளாய் தனி பங்களாக்களாய்  கட்டி  அவரவர் விரும்பும் வண்ணம் கண்ணைக்கவரும் வகையில் விலையைக் கூட்டியும் கட்டிக் கொடுக்கிறார்கள்.         மேலும் கூட்டுக் குடும்பமுறை நடைமுறையில் தவிர்க்கப் படுவதாலும் ,வேலைக்காக சொந்த ஊரை விட்டு தனிக்குடித்தனமாய் வாழ வேண்டிய அவசியம் ஏற்படுவதனால

தத்து நடை நடந்துவந்து....

தத்து நடை நடந்து வந்து தாவித்தாவி தூக்கச் சொல்லும் திக்கித் திக்கி பேசுகின்ற தின்ன அடம் செய்யுகின்ற முத்து முத்துப் பல்லைக் காட்டி முத்தம் தந்து மடியில் அமர்ந்து முப்பொழுதும் அருகில் வந்தும் முத்தமழை விரும்பித் தந்தும் பட்டுப் போன்ற மேனியுடன் பாட்டுப்பாடிக் கதைகள் கேட்கும் பாட்டன் பாட்டி எப்பொழுதும் பக்கத்திலே இருக்கச் சொல்லும் பஞ்சுபோன்ற மெத்தை யாக்கி படுத்துறங்கி நெஞ்சின் மேலே பகலும் இரவும் எப்பொழுதும் பக்கத்திலே நெருங்கி வந்து தொட்டுத் தொட்டுப் பேசிதினம் தொந்தரவு செய்கின்ற மொட்டு போன்ற மழலைகளுக்கு நித்தம் கதை சொல்லுங்களேன்  (கவியாழி)

மழையே நீயும் மீண்டும் வா!வா!!

மழையே நீயும் வா வா மகிழ்ச்சி எமக்குத் தா தா மரங்கள் வளர  செடிகள் வளர மீண்டும் மீண்டும் தொடர்ந்து வா பிழையே செய்யா உயிரினமும் பிழைக்க வைக்கத் தொடர்ந்து  வா பிழையாய் வெட்டிய  மரத்தை பிழைக்க வைக்க நீயும் வா புயலாய் சூழ்ந்தும் ஓடிவா புதிதாய் உணர்வைக்  கொடுக்க வா பூச்சியும் பறவையும் பறக்கவும் புல்லும் பூண்டும் முளைக்கவும்  வா நாட்டு மக்கள் மனங்குளிர வா நல்ல காற்றுமே கிடைக்க நாகரீகம் என்ற பெயரில் நாசமாக்கும் குளிர்விப்பான் தவிர்க்க வா கடனே கேட்கா  காற்றை கண்குளிர கொடுக்க  வா காய்ந்த நிலத்தைப் பசுமையாக்க கழனிப் பயிர்கள் செழிக்க வா நாட்டு உழவன் மகிழ வா நாளும் உணவு கிடைக்க வா நீயும் உடனே விரைந்து வா நித்தமும் மக்கள்  மகிழ வா (கவியாழி)

ரசித்தவர்கள்