Posts

Showing posts from January, 2015

தெய்வங்கள்

தெய்வங்கள்

கவிஞர் .கி.பாரதிதாசன் . வலைப்பதிவரின் இந்திய வருகை மற்றும் நிகழ்ச்சிகள்

Image
திருவாளர்.கவிஞர்.கி.பாரதிதாசன் அவர்களை கடந்த 26.01.2015 திங்கள்கிழமை இந்திய சுதந்திர தினத்தன்று புதுவையில் சந்தித்தேன். நான் "தமிழ்மாமணி" புலவர் .எழில்நிலவன் அவர்களை நான்  சந்திக்கச் சென்றிருந்தபோது  எதிபாராத விதமாக அவரது தந்தையும் புலவருமான .திருவாளர்.கலைமாமணி .கிருஷ்ணசாமி அவர்களுடன் கண்டு மகிழ்ந்தேன்.அந்த சந்திப்பு மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நான் கவிஞர்.பாரதிதாசன்.தமிழ்மாமணி புலவர் .எழில்நிலவன்,கி.பாரதிதாசன் அவர்களின் தந்தையும் கலைமாமணி,புலவர்.கிருஷ்ணசாமி அய்யா அவர்கள் நானும் அவரும் தமிழும் தமிழ்த் தொண்டுகள் பற்றிய கலந்துரையாடல்                                                மகனும்                                  தந்தையும் தமிழ்மாமணி.புலவர்.புதுவை.எழில்நிலவன் அவர்களின் புதல்வியும்  இளம் முனைவருமான இரா.எழிலரசி சனார்தணன் அவர்களைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கவிஞர்.கி.பாரதிதாசன் வாழ்த்தியபோது மேலும்...... புலவர் கி.பாரதிதாசன்  அவர்கள் எழுதிய "ஏக்கம் நூறு" கனிவிருத்தம்" ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா

இனிமேல் கணக்கைத் தொடங்கு...

மார்கழி மாதத்தில் வண்டுகள் மலர்களைத் தேடி வருவதில்லை மலரினில் சேர்ந்திடும் பனியினால் மலரும் தேனைத் தருவதில்லை பனியும் அதிகம் பெய்வதாலே பூக்களும் அதிகமாய் பூப்பதில்லை பெண்களும் பூக்களை நினைத்தே பொழுதும் மகிழ்ச்சியாய் இல்லை பனியில் தேனிகள் வருவதில்லை பகிர்ந்தே மகரந்தம் செல்வதுமில்லை அதிகப் பனியால் ஆண்களுக்கும் அதற்கும்  இப்போ விருப்பமில்லை இனிமேல் பனியும் குறைந்து இளமை செடிபோல் வளர்ந்து உறவும் மகிழ்வாய் இருந்து-மக்கள் உடனே கணக்கைத் தொடங்கு (கவியாழி

சென்னையிலிருந்து ரெய்ச்சூர் வரை ...

Image
05.01.2015 அன்று சென்னையிலிருந்து மும்பை மெயிலில் இரண்டாம் வகுப்பு குளிர்சாதன வசதியுடைய தொடர்வண்டியில் இரவு 10.50 மணிக்குப் புறப்பட்டு  பிற்பகல் காலை 12.00க்கு ரெய்ச்சூர்  சேர்ந்தேன் அதிக வெய்யிலோ குளிரோ இல்லாமல் மிதமான சூழல் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது.அதிக  கூட்டமோ  நெரிச்சலோ இல்லாமல் அமைதியான சூழலில் இருந்தது மிகவும் பிடித்திருந்தது இங்குள்ள எல்லா உணவகங்களிலும்இதுபோன்ற பெரிய அளவிலான இட்லி கிடைத்தது.இரண்டு இட்லியே காலை,இரவு  உணவுக்கும் போதுமானதாக இருந்தது.சாம்பார் கொடுக்காமல் துவையலுடன் ஊறுகாய் போல மிளகாய் கரைசல் மட்டுமே தந்தார்கள் அருகில்  ராகவேந்திரர் நிர்மானித்த மந்த்ராலயம்  இருக்கிறதாகவும் அங்கு சென்றுவிட்டு பஞ்சமுகி ஆஞ்சிநேயரை தரிசனம் செய்யலாம் என  என்னுடன் பயணித்த நண்பர் சொன்னதால் அங்கு சென்று ராகவேந்திர சாமிதரிசனம் செய்தப்பின் அங்கு அனைவருக்குமான இலவச மதிய உணவும்  சாப்பிட்டோம்.அங்கு அனைவரோடும்மிக சுகாதாரமான  தரையில் உட்கார்ந்து உணவருந்தியது மனதுக்கு இதமாகவே இருந்தது. திங்கள் காலை எட்டு மணிக்குப் புறப்பட்டு மும்பை தாதர் விர

வாழ்த்து

Image
நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு  வாழ்த்துக்கள்.எல்லா வளமும் செல்வமும் அமைதியும் கிடைக்க வாழ்த்துகிறேன்

ரசித்தவர்கள்