Posts

Showing posts from June, 2018

தெய்வங்கள்

தெய்வங்கள்

பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே !

உலகில் தோன்றும் உயிர்கள் யாவும் இறைவன் கொடுத்த வரமாய் எண்ணும் உயர்ந்த எண்ணம் கொண்டோர் பலரும்_ பெண்ணை குறையாய் எண்ணி கொடுமை செய்தே ! கருவில் வளரும் சிசுவை அறிந்தும் கட்டளை விடுவார் கருவில் சிதைப்பார் உருவாய் வளர்ந்து  மகளாய்ப் பிறந்தால்- உடனே உயிரையும் எடுப்பார் உணர்வை  இழந்தே !! கடவுள் உருவாய் கருணை மழையாய் காலையும் மாலையும் பாலைத் தந்திடும் பசுவும் ஈன்றிடும் கடுவன் சிசுவைக்-கொல்வார் பாலை மட்டும் உணவாய்  கொண்டே !!! பசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே பார்த்திடும் கண்கள் வேதனை கொண்டே சிசுவை கொல்லுதல் முறையாய் என்றே- மனதில் சிவனைக் கேட்கிறேன் கேள்வியாய் இன்றே !!!! ------- கவியாழி-------

கடவுளைக் கண்டோரின் கட்டளை எதுவோ?

கடவுளின் பெயரால் கையேந்தி நிற்பவனும் காடு கழனிகளில் சாதி வளர்ப்பவனும் உடமையை இழந்தவனிடம் ஊசி விற்க -இன்னும் ஊரையே கொளுத்தியும் உத்தமனாய் நடிக்கின்றான் சட்டிப் பானையில் சமைத்து வந்தாலும சாதியை வளத்துப்  பெருமைக் கொண்டாடி வெட்டிப் பேச்சால் வீதிக்கு வீதி-பிழைப்பாய் விற்கிறான் வேதனையை வளர்கிறான்  பொட்டிப் பாம்பாய் வளர்ந்த வனெல்லாம் பொறுமை கொண்டு படித்தவன் கூட புட்டி முழுதாய்க் குடித்துவிட்டு-சாதி பெருமைப் பேசிப்மடிந்தே சாகிறான் நீதி நேர்மை நிம்மதி தருமென நியாயம் தர்மம் சந்ததி விளக்கென போதியரசன் போற்றிய கொள்கையை-இன்று புரிந்தும் மறந்தும் வாழ்வது முறையா? --கவியாழி--

ரசித்தவர்கள்