Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இயற்கையின் மறுபிறப்பு

விதை செடியாகி செடி மரமாகி மரம பூ பூத்து பூ கனியாகி கனி விதையாகி விதை மீண்டும் என்னவாகும்? எல்லாம் வினைபயன்? விதை பயன்? என்ன சொல்ல முடியும்? எல்லா விதையும் முளைப்பதில்லை எல்லோர் உறவும் பிறபுக்கல்ல ,உறவுக்கு? எப்படி சொல்வது யாரிடம் கேட்பது? அனைத்தும் அறிந்துகொள் ஆணவம் கொள்ளாதே அதுவே வாழ்க்கையென அற்பமாய் நில்லாதே கணத்தில் முடியும் அது காமத்தில் தெரியும் பணத்தால் முடியாது மனதால் மட்டுமே முடியும் இன்பம் இருவருக்கல்ல இளமையை முடிபதர்கல்ல

நீயும் இறைவனே

Image
அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு   அகிலமும் உனை பார்க்க நேர்நிறுத்து சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில் யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் ! உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும் உன் கணக்கு என்னவென்று   உடலில்   வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக கண்ணுள் காட்டிடும்   கனவாக தெரிந்திடும்! மெய்யும்   பொய்யும் மேனியு   ளதில்லை மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை சொல்லும்   செயலும்   சேர்ந்தே யன்றி -எளிதில் சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை! இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம் இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம் பொய் சொல்வோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில் புரிந்திடும்   மெய்ஞானம்தெரிந்திடும் செயலாலே! நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும் நாணயம் எப்போதும் துணை நிற்கும் வம்பிலுப்போர்   வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் ! கஷ்டம் கடக்கும் காலம் வந்தால் நஷ்டமும் தீரும் நன்மை பெறும் இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-இயன்றதை துஷ்ட மெல்லாம் தூரசென்று   விலகிடும் ! நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்

பிள்ளையாரப்பா! புத்திசொல்லப்பா!!

Image
வினையேதும் செய்யாமல் விதியென்று சொல்லாமல் துணை நிற்க வேண்டாமல் துறவறமும் பூண்டாமல் பண்ணெடுத்து பாடாமல் பகிர்வின்றி வாழாமல் மனிதனை நினைக்காமல் மதப்பற்று கொள்ளாமல் இருப்போர்கள் இல்லாதோர்க்கு இமியலவே நினைதிட்டால் விதையேதும் போடாமல் விளைச்சலையும்  தேடாமல் மனதோடு மனிதமும் மற்றவர்க்கு உதவியும் இல்லாத ஏழைக்கு எழுத்தறிவும் தந்திட்டால் பொல்லாங்கு சொல்லமாட்டார் புறந்தள்ளி பேசமாட்டார் கனபோளிதில் செய்திட்டால் கணபதியே அருள்புரிவான் எல்லோருக்கும் இனிய பிள்ளையார் தின வாழ்த்துக்கள் இராம.கண்ணதாசன் சென்னை

அரசாங்க ஊழியன்

அரசாங்க ஊழியன் அரைகஞ்சி குடிச்சாலும் அன்றாடம் வருமானவரி கட்டாமல்  இருந்தால் சிரமபட்டாவது கட்டிவிட வேண்டும்-இல்லையெனில் சீக்கிரமே கட்டாமல் செத்துவிட வேண்டும் நடுத்தர மக்களுக்கு நாய் பொழப்பு நாகரீகமென நகையும் நல்லுடையும் நல்லகல்விக்கு நாயக அலையவேண்டும்-ஆனாலும் நாதியத்து வேலைக்கு போகவேண்டும் அகத்தில் கவலையும் முகத்தில் பவுடரும் அடுக்கில் சாப்பாடு அளவோடு இருக்கவேண்டும் அடுத்தவனுக்கு வசதியாய் காட்டவேண்டும்-மீண்டும் அடுத்தவேளை சோறில்லாமல் கிடக்கவேண்டும் பளபளக்கும் நகைனட்டு போடவேண்டும் பித்தளைக்கு தங்கபூச்சு போடவேண்டும் வாகனமும் கடனாக வாங்க வேண்டும்-வட்டியுடன் வசவும் கேட்டு தலைகுனிய வேண்டும் பெண்டுபிள்ளை குடியிருக்க வீடு வேண்டும் பெண்டாட்டி புகழ் ஓங்க வாழவேண்டும் கையூட்டு பெறாது இருக்க வேண்டும்-நேர்மையான கடன்காரன் என்று புகழ் பாட  வேண்டும் இப்படியே இருந்தாலும் இருப்பதை கொண்டு தப்பேதும் செய்யாமல் சிக்கனமாய் இருந்தாலும் கற்பனையாய் பேசுவார் கண்டபடி ஏசுவார்- முடிவில் நற்பயனை வேண்டி நாதியத்து  செத்திடவேண்டும்

என் தங்கை

  தங்கை                 *** என்னை துணைக்கு எப்போதும் சார்ந்திருப்பாள் எப்போதும் என்னுடனே கை கோர்த்து நடந்திடுவாள் தப்பே செய்தாலும் அப்பாவிடம் சொல்ல மாட்டாள் தனியாக என்னைவிட்டு கரிசோறும் தின்ன மாட்டாள் சிக்கல் கழித்துவிட்டு  தலை சீவி மகிழ்ந்திடுவாள் எப்போதும் என்னுடனே எதிர்வாதம் செய்திடுவாள் அப்பாவித்தனமாய் அழுதிடுவாள் அண்ணனை காணவில்லையென சின்ன காயம் பட்டாலும் எனக்கு சிரித்துக்கொண்டேகேவி கேவி அழுதிடுவாள் இப்போதும்  இருக்கிறாள் எரிந்து எரிந்து விழுகிறாள் பெற்ற பிள்ளைகளையும் பிணமாகி பொங்கல் என்கிறாள்  கோவத்தில் ஆனாலும் என்னை பார்த்தவுடன் அடங்க மறுத்து அழுகிறாள் தேனாக இருந்த நாட்கள் திரவமாகி விஷமாகி போனாலும் தெரியலையே  அவளை மறக்க தெரிகின்ற உயிர்போகும் நாள்வரை ஊனாகிவிட்டேன் ஊமையாகிவிட்டேன் கானது அவள் துயரை கண்டவுடன் தொடரும் துயரத்தை தொலைக்க முடியுமா? மறுபடியும் அண்னாக பிறக்க முடியுமா? பிறந்தாலும் அன்றுபோல் இருக்க முடியுமா? இராம.கண்னதாசன் சென்னை

ரசித்தவர்கள்