Sunday, 30 September 2012

வரதட்சணையா? வேதனையா?
கிழங்களே
கீழ புத்தி கொண்டோரே.......

நாள் முழுதும்
நல்லது செய்யாதவரே.......

மூடங்களே
 மூளையில்லா மூடவரே.......

வாழவேண்டிய
வாரிசுகளை வஞ்சிப்பவரே.......

தாழ்ந்த புத்தியால்
தடம் மாறிய மிருங்களே.........

வாழ்க்கைக்கு
வழி  சொல்லாத வயோதிகரே.....

இன்னுமா தேவை
இல்லறதுக்கு வரதட்சனை?

எண்ணிப்பார்
ஏமாரபோவது யாரென்று?

ஏய்காதே
எள்ளளவு எண்ணிப்பாரீர்!

எதிகாலத்தில்
உண்ண உணவின்றிருப்பீர் !

சொல்லொன்னா
சோகத்தை எதிர்கொள்வீர்

கள்ளமில்லா
நல்லுறவை காசாக்காதீர்!

கண்ணீரால்
கஷ்டத்தை வாங்காதீர்!

நல்வழி வழிகாட்டி
நன்றாக வாழ வையுங்கள்!

காலை வணக்கம்

இன்றும் நான்.......
எழுட்சியோடுதான் உள்ளேன்
இன்னும் சில மணித்துளிகளில்
எழுந்து வருவேன்...............
குழந்தையாக ?
...
கூனி மறைவேன் கிழவனாக......
என்றுமே ...
என்னால் முடியும்
இன்றும்..
நாளையும்...
முடியும்... முடியும்......முடியும்
காலை வணக்கம் !
என்னை காணும் அனைவருக்கும்!!!

எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்


செடியிலே வலை பின்னி சிங்கராமாய்!
செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்!
நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்!
நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்!

எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள்
எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை!
எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான
ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்!

அமிலம் சுரந்து அத்தனையும் முடித்து
அழகாய் வலை அரவறம் தெரியாமல்
 ஆனந்த தொட்டிலில் அதிசிய பிறவி-எதிரியை
 ஆட்கொள்ளும் ஆளுமை சக்தி நீ!

பலசாலியல்ல பயமுறுத்தும் கண்களால்
சில நொடியாவது சிந்திக்க வைக்கிறாய்!
சிக்கனமாய் இடத்தை சூழ்ந்து கொள்கிறாய்!
தக்கணமே எதிரியை தனிமையில் விடுகிறாய்!

உயிருக்காகவா உனக்காகவா உரிமைக்காகவா?
உண்மையில் எதற்காக வாழ்கிறாய் நீ?
என்ன செய்து சாதிக்க நினைக்கிறாய்!
எத்தனை நாள் உயிர் வாழ்ந்திட இருக்கிறாய்!

முடியும் என்பதை முன்னிறுத்தி சொல்கிறாய்!
முயற்சி செய்ய முன்னோட்டம் தருகிறாய்!
புதிய  வாழ்கையை  புரிய வைக்கிறாய்-புதிராய்?
பிள்ளைகள் வாழ காத்து நிற்கிறாய் !!!


 

Wednesday, 26 September 2012

உன்னையே நேசி உண்மையாய் யோசி

இளம் வயதிலேயே
இன்னலை தீண்டியவளே !

இதற்காகவா பிறந்தாய்
இவ்வளவுநாள் வளர்ந்தாய் !

உனக்காக வாழ்ந்திடு
 உணர்ச்சியை பகிந்திடு !

ஒரு  வருடஇன்பம்
ஒருவருக்கும் திருப்தி இல்லை

கணக்காக நடந்தால்
கண்ணியத்தில் குறையுமில்லை

பிறரருக்காக பார்க்காதே
பிறருக்காக வாழாதே!

இளைமை  என்பது
இன்றைய நாள்தான்

இனிமை என்பது
இளமைக்கும்  தேன்தான்

இன்றைய வாழ்வை
இனிமையாக்க  முயற்சி செய் !


உறவுக்காக இருக்கும்
உன் பிள்ளைகளை நேசி !

இப்போதும் தப்பில்லை
இனிசொல்ல வழியில்லை

மாண்டு  போனவனுக்காக
மீண்டும் தப்பு செய்யாதே !

கோழைக்காக நீயும்
கேள்விக்குறியாய்  இருந்திடாதே !

நீ தான்  நீதிபதி
நின் வாழ்க்கைக்கு அதிபதி

மறுமணம் தப்பில்லை
மறுவாழ்வு கசப்பதில்லை

உருவாக்கு   புதுயுகம்
உனைபோற்றும் இந்த உலகம்

துணிந்திடு செயல்பாடு
துயரத்தை வென்றிடு !!!விதவையாக்கியது யார்? வேதனை வேதனை சுமப்பது நான்?காலமும் பார்த்து நேரமும் பார்த்து
கல்யாணம் கடமையாக பண்ணி வச்சாங்க
கட்டமெல்லாம்   பொருத்தம் பார்த்து-கண்ணியமாய்
கடவுளிடம்  சொல்லிதானே சேர்த்து வச்சாங்க

பெற்றவரும் மற்றவரும் பொருத்தம் பேசி
சுற்றமும் நட்பும்  சொந்தமும் சூழதானே
நற்றமிழ் நல்லோரும் நம்மூர் கடவுளின்-முன்னிபாக
பற்றினேன் பரவசமானேன் பக்தியால் உருகினேன்

இத்தனையும்  செய்ததால் இனிமேல் பயமில்லை
இன்பத்துக்கு  எல்லையில்லை  யாருக்கும் பயமில்லை
பார்க்கும் போதெல்லாம்  படுத்தேன்  இணைந்தேன்-ஆனந்தமாய்
பக்கமிருப்பான்  பிள்ளைகள் பிறந்ததும் என்றிந்தேன்

பிறந்த வீட்டில் பிள்ளைகளுடன் இருந்தபோது
இருந்த இடம் விபச்சாரியிடம் விருந்தானான்
வருந்தினான்  வாங்கி கொண்ட நோயினால்-மருந்தால்
திருந்துவான் என நினைத்து தேடினேன் நிம்மதியை

எதையும் சொல்லவில்லை யாரிடமும் பேசவில்லை
மனதை கல்லாக்கி  மாயந்துவிட்டான் தூக்கில்
மறுநிமிட செய்தியில் நான் மாயந்துவிட்டேன்-மனதால்
மணவாழ்வில் சாய்ந்துபோனேன் சறுகானேன்

குற்றம் செய்தது நானா அல்லது
கும்பிடும் தெய்வம் குற்றவாளி தானா
நம்பிய பெற்றோரா நண்பர்களா- நரகமாய்
நாள் நட்சத்திரம் நல்லோர் வாழ்தியதாலா

தெரியவில்லை புரியவில்லை திசைஎனக்கு
தெரியாத இளம்தளிர்கள் அறியவில்லை
புரியவில்லை போகும் நாட்கள்  விளங்கவில்லை-விதவை
பெயரெனக்கு பிடிக்கவில்லை இருந்தாலும் கலங்கவில்லை

எனக்கும் வேண்டும் எதிரே வருவோரின்
ஏகாந்த பார்வையும்  மனதில் தாக்கமும்
தூக்கமில்லா நாட்களின் துயரமும் எனக்கு-வாழ்வில்
ஏக்கமும் உள்ளது என்பதை உணர்ந்தானா

படைத்ததும் பள்ளியில் படிக்க வைத்ததும்
கிடைத்த மாப்பிள்ளை வசதியை பார்த்ததும்
கிரகபலன் நாள் நட்சத்திரம் கேட்டதும்- சாதனை
நரகத்தில் எனக்கேன்  இந்த   வேதனை

நல்ல பிள்ளைகள் இருந்தும் என்னபயன்
செல்லமாய் சிணுங்கி அள்ளி விளையாட
அவனில்லை ஆனாலும் ஆறுதலாய் இருப்பது-மனதில்
அவனை பழிவாங்க தேறுதலோடு வாழ்வேன் !!