Sunday, 7 October 2012

தம்பிமேல் பாசம்

 
அதிகாலை பிடிச்சு வந்த
அயிர மீனும்
அத்தானுக்கு பிடித்தமான
நாட்டு கோழியும்
மத்தியானம் இருக்கு
சாப்பாட்டுக்கு மறக்காம
வந்திடு தம்பி

வறுத்த நிறமும்
கருத்து போச்சு
கோழி குழம்பும்
கொதிச்சி போச்சு
மாமன் இன்னும் வரலியே
மடிஞ்ச வயிறு
வலிக்குதக்கா

இடிஞ்சி போயி
இருக்கறப்ப
இனிப்பும் பூவும்
வாங்கிவந்து
குடும்பத்தோட சாப்பிடலாம்
கொஞ்சம் நீங்களும் வந்திடுங்க

இனிய ஞாயிறு
நளபாக வாழ்த்துக்கள்

Saturday, 6 October 2012

மறுமணம் வேண்டும்

பூவெல்லாம் பூத்திருக்கு
புது  நெல்லும்  விளைஞ்சிருக்கு

காதோரம் வண்டு வந்து
கவலையோடு சொல்லுது

கோழி குஞ்சுகளோடு
குப்பையை  கிளறி  சாப்பிடுது

பசுவும் கன்றும்
பசியாறி  மகிழ்ந்திருக்கு

ருசியானஉணவும்
பசிதீர  கிடக்குது

விதி மட்டும்
என்னை ஏன் ?

விதவை ....
என்று சொல்லுது ?


மல்லிகை  முல்லை
மனமிங்கே  வீசுது

தினமிங்கே பார்த்தாலும்
தொட்டு பூ பறித்தாலும்

மனமதனை முகர்ந்தாலும்
மல்லிகையை பிடித்தாலும்

குனமேனக்கு இருந்தும்
குறைஎன்ன தெரியலியே

அவனை பார்கிறேன்
அழகை ரசிக்கிறேன்

நாவெல்லாம் இனிக்க
நாளும்  பேசினாலும்

நட்புடன் என்னோடு
நாளும் இருந்தாலும்

என் மனதை அறிந்தாலும்
என்னை அடையலியே

எனக்கும்  இன்பம் வேண்டும்
என்னோடு பகிர வேண்டும்

விதவையின் விதி என்ற
வெட்டி வேஷம் 

கணக்காய்  சொன்ன
கயவரை கொல்ல வேண்டும்

இளமையுள்ள இளைஞனே
இவர்களையும் பாருங்கள்

எழிலோங்க  செய்யுங்கள்
இழி நிலையை மாற்றுங்கள்Thursday, 4 October 2012

எங்கே நிம்மதி?

ஏழெட்டு வீடிறுக்கு
ஏசி  காரும்
நிறைந்திருக்கு

கூவிட்ட குரலுக்கு
கூட்டமாக நிறைய
 வேலையாளிருக்கு

வங்கியிலே பணமிருக்கு
வாங்கி வைத்த
நிலமிருக்கு பொருளிருக்கு

நடைபோக தெம்பிருக்கு
நலம்கேட்க
நட்பிங்கே மட்டுமிருக்கு

இத்தனை  இருந்தும்
இறைவனை நினைத்தும்
தப்பிருக்கே

ஆம்

பெற்றவரை விட்டுவிட்டு
பொறுப்பை மறந்தேனே
தவறு செய்தேனே

நிறைந்த சொந்தமெங்கே
நண்பர்களேங்கே
தமிழே நீயும் எங்கே

இத்தனையும் மறந்து
இங்கே தனியாய் வாழ்வதா
இனிய சொந்தம் மறப்பதா

உண்பதும் உணவா
உறவிழந்து மகிழ்வா
எங்கே நிம்மதி

பணம் பொருள்
போதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்

சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்


Wednesday, 3 October 2012

சின்னஞ்சிறு செல்லங்கள்சின்ன  மலர்களே
சிரிக்கும் பூக்களே

வண்ண நிறத்து
வாண்டு குட்டிகளே

உண்ண மறுக்கும்
உவ்வா செல்லமே

மண்ணையும் திங்கும்
மழலை செல்வங்களே

கண்ணீர் வராமல்
கண்ணடிக்கும் கண்ணே

உன்னை  காணாது
உணவருந்த  முடியாது

கண்ணே கனியே
இனிக்கும் கற்கண்டே

உன்னை விரும்பாதோர்
உலகில் உண்டோ

சின்னஞ் குழியுடன்
சிரிப்பாய் சிவப்பாய்

எண்ணமெல்லாம் நீ
வண்ணமாய்  இருக்கிறாய்

சொன்னதையே நீ
எந்நாளும் இருக்கிறாய்

இந்நாளில் உன்னை
இனிதாக வாழ்த்துகிறேன்

Tuesday, 2 October 2012

இரவில் இம்சை ஏன்?மெல்ல சிணுங்கி வந்து
மேனியெல்லாம் தவழ்ந்து
செல்லாமாய் கடித்கும்
சின்னஞ் பிள்ளையா நீ!


நோயை  பரப்பும்
நேசமில்லா எதிரியே!
இரவில் அழைத்து
இம்சிக்கும் இளவளே!

உறவுக்கா அல்லது
உனது உரிமைக்காகவா!
காதோரம் பாடுவது
கண்ணுரங்க முடியவில்லை....

அப்படியென்ன  ரகசியம்?
அடிக்கடி  தொல்லை செய்ய
வேண்டாமென்றாலும்  மீறி
மீண்டும் மீண்டும் கடிக்கிறாய்.....

முத்தமிட்டு செல்கிறாய்
முடியவில்லை உன் தொல்லை
சத்தமும் பிடிக்கவில்லை
சரியாக  தெரியவில்லை.

மெத்தையில் படுத்ததும்
மெல்ல  கடித்து  ஓடுகிறாய்
எனக்கு பிடிக்கா து
இருந்தாலும் கடிக்கிறாய்

இனி பொறுமையில்லை
உனக்கு  வாழ்க்கையில்லை
ஒழிந்து போ கொசுவே
உன்னால் போச்சு தூக்கம்

ஒழிந்தாய் ! இறந்தாய்!!
இனிமேல் இனிமையாக உறங்குவேன்