Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழைக்காலம்

Image
மழைப்பூச்சி மழை  வரும்   திசையை மகிழ்வுடனே   சொல்லும் மடியும்முன்னே! மறுபடியும் காண மழைக்காலம்  தான் காண வேண்டும்!! துணைக்காலமும் குறைந்து ஓடி இளைத்துளிரில் மறைந்துகொள்ளும் உன்னைப்போல் என்னுள் தங்கி விடும் !!!   தட்டான் பூச்சி ஓடி  ஓடி  களைத்தாலும்  உடனடியே  சிக்காது  ஒளிந்திருந்து  பார்த்தாலும் உவப்புடனே   பறந்துவிடும் தேடிப்பிடிததும் துவண்டுவிடும் உன்னைப்போல!!!    நீர்த்தேரை குதித்து  வரும் கொண்டாடி  மகிழும் பிடிக்கப்போனால் பாய்ந்து  ஓடும் கடிக்காது கண்ணால்  பயம் காட்டும்  உன் ,  கண்ணைப்போல!!!

திருவிழா தொடங்கியாச்சு

Image
  திருவிழா தொடங்கியாச்சு தெருவெங்கும் கூட்டமாச்சு உருமாறி  மனசெல்லாம்-அன்பான  உண்மையாக  மாறியாச்சு நவராத்திரி தொடங்கியதும் நண்பர் இல்லம் பார்த்தாச்சி நலம் கேட்டு சிரித்து-நட்பாக நாளெல்லாம் மகிழ்ச்சியாச்சி ஆயிரம் கஷ்டமானாலும் அடுத்த மாசம் தீபாவளி அடுக்கடுக்காய்  செலவுகள்-கடனும் அருகில்வர முடிவாச்சி சின்னவங்க பெரியவங்க செலவு செய்ய உள்ளவங்க சேர்ந்து பேசி முடிவாச்சி-சிக்கனமாய் சொந்த பட்டியல் தேர்வாச்சி வீட்டு  தலைவருக்கு விலைவாசி கவலையாச்சி வேண்டிய செலவு  விபரம்-மனதில் வேகமாய் நாடி துடிச்சாச்சி

வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு

Image
வாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும் துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு நாட்களை கடத்தி நமக்கென்ன பயன் நாமிங்கு இணைவதால் என்ன பிழை பூக்களை போல்  நீ வாடுவதை- புரிந்தும் ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே தூங்கி எழுந்ததும் துணை தேடிடும் ஏங்கி  இழந்ததை நாடிடும் இன்பம் தாங்கித்தான் இருப்பேனே  துணையாக-என்றும் பாங்கி உன்னை பார்த்திடுவேன்  நலமாக நிலவுக்குள்  நாம் நடந்தால் நிம்மதி நேரம் செல்லும் முன்னே சொல்லடி ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை தூரம் அதிகமில்லை  துணிந்து நில்லடி நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும் உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும் கனவு  மீண்டும் உன்னை துரத்தி- இறுதி காலம் முடியுமுன் ஆசையை  நிறுத்தி உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார் சொல்லென சொல்லி  சிதைத்துடுவார் நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி இல்லறமாக கிடைக்க  நான் ஏங்குகிறேன்

ஆயுதபூஜை - மகிழ்ச்சியா? நிகழ்ச்சியா?

Image
  முதலாளி சொன்ன  நேரத்தில் செய்ய முடியல செய்த பொருளை -வியாபாரி கேட்க ஆளில்லை   தொழிலாளி ஓடாத இயந்திரம் உருகாத  வியர்வை தேடாத பாட்டு-தொழிலாளி தேவையில்லை  எனக்கு குடும்ப தலைவன் மின்சாரம்  இல்லாது மிச்சமிருந்த  சாப்பாடும் மிளகாய் வெங்காயம்-பழைய கஞ்சிதான் குடிக்கணும்   மனைவி சாயங்காலம் செய்திட்ட சரியா  வேகாத சப்பாத்தி குருமா-வழியில்லை சாப்பிட்டுத்தான் ஆகணும் பிள்ளைகள் சுண்டலும் இல்லை கிண்டலும் இல்லை கடமைக்காக இன்று -கடலைப்பொறியும் கஷ்டமாம் என்ன சொல்ல?

கல்வி (காசு பார்ப்போரின்) கடவுள்

Image
கல்வி கடவுளென நேரில் கண்டவர்கள் கூறுவதால் சொல்லி கொடுத்த-நல்ல ஆசிரியரை மறப்பது தகுமோ? நல்லொழுக்கம்-நேர்மை நற்பண்பை போதித்த நம்பெற்றோரையும் -மறந்து நாடுவது கோவில் தானோ கல்வி கட்டணம் அள்ளி கொடுத்தாலும் கண்டபடி அங்கு-இருந்து திட்டு வாங்கினாலும் புத்தகத்தை துடைத்து-அதில்  அழகாய் பொட்டிட்டிட்டு விபூதி பட்டையில்-விரைவாக குங்குமம் சந்தனம் வைத்து அர்ச்சனை செய்தால்-படிப்பு அனைத்தும் புரியுமோ? தட்சனை கொடுத்தால்-படிப்பின் தரம் கூடுமோ? நம்பிக்கை நல்லதே! நாளும் படித்தால் நல்ல மதிப்பெண்-வெற்றியும்  நன்றுகிடைக்குமே !!

ரசித்தவர்கள்