Wednesday, 31 October 2012

உடல் தானம் செய்வீர்
உடல் தானம் செய்வீர்
உன்னத முடிவெடுப்பீர்

கடல் கடந்து பார்த்தால்
கட்டாயம் நீயும் செய்வீரே

உயிர்போன பின்னே
உடம்பென்ன செய்யும்

மண்ணரித்து  புழுதின்னும்
மரம்செடி கொடியே வளரும்

பொன்னெழுத்தில்  போற்ற
புகழோடு பலர் வாழ

என்னிருத்தி பாருங்கள்
எண்ணியதை சொல்லுங்கள்

அவயம்  இல்லார்க்கு
அனைத்தும் கிடைக்கும்

அடுத்தவர்  நலம் வாழ
அவசியமான முடிவு செய்Tuesday, 30 October 2012

இதழன்றி என்ன தருவாய்? அன்பே! Photo: மழையில் கூட 
தீவைக்கிறது 
உன் தீண்டல்கள்..

-சம்யுக்தா

 
அருகில் வராதே அணைத்து கொள்வேன்
அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன்
அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு
அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும்

இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன்
இதை மறுத்தால் என்ன செய்வேன்
இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக
இதழன்றி  என்ன தருவாய்  அன்பே

என்னை மீறி எதுவும் நடந்தால்
எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு
பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை
பிணைப்பை உண்டென உணர்ந்திடு

நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ
கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய்
துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை
வஞ்சியே வா வனப்பிதழைத்தா !Monday, 29 October 2012

கவியாழி : முதல்நாள் இரவு

கவியாழி : முதல்நாள் இரவு:  இரவெல்லாம் விழித்திருந்து இமை மூடா தவமிருந்து ஊரெல்லாம் கூடிவந்து-இன்பமாய் உற்றாரின் நலம் பகிர்ந்து விளக்கு தோரணம் விடியும்வர...

Friday, 26 October 2012

இளமை இருப்பது சிலகாலம்


 

இளமை இருப்பது சிலகாலம்
எளிதில் வசப்படும் வரும்காலம்
கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும்
வெற்றி  உன்கையில் எதிர்காலம்

வெற்றியின்  நிழலை தீண்டி விளையாடு
வேகமாய் வந்திடும் உன் பின்னாடி
ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய்
ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு

சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து
வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி
துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று
அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு

பட்டங்கள் தேவை யில்லை படித்த
சட்டங்கள்  துணைகொண்டு வெல்ல
கட்டங்கள்  கடந்து  கவலையும் மறந்து-உயரத்தை
எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடுநினைவிழந்து நிம்மதி கெடும்


ஆரோக்கியம் அவசிய மில்லையென
அவர்களுக்கு தெரியவில்லை  பின்
அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால்
ஆத்திரம்  கொண்டு  ஆளையும் கொல்வது

சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார்

போக்கிட மின்றி  பெரும்பினி சேர்ந்து
மக்களை கொல்லும் மடைமை யாகி  -பணம்
பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும்

குடும்பம் கூடி பேச மறந்து குறுகி

நெடும்பகை தேடி நேசமற்று  மாறும்
நினைவிழந்து  நிம்மதி கெடும்-வாழ்க்கை
நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும்

தரித்திரம் சேரும்  தயவு கெடும்

தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும்
பிரித்திட மனதில்  தினம் பேசும்-குழப்பமாய்
பிள்ளை உற்றார் நேசம் மறையும்

பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து

உரியதை நாடி உள்ளம் போகும்
பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித
பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும்

உழைக்க மறந்து உண்ண தோன்றும்

உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும்
மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில்
மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்