இளமையான நாட்களில் இல்லறம் அமைத்திட்டால்
இனிமையான பிள்ளைப்பேறு சீக்கிரமே
கிடைத்திட
துணையோடு மனம் மகிழ்ந்து துள்ளலுடன்-அன்போடு
இணைந்து அளவோடு பேசி வாழுங்கள்
இணைந்து அளவோடு பேசி வாழுங்கள்
இன்பத்தைத் தேடி இணையாக ஒன்றிணைந்து
சந்தமும் பாட்டும்போல சங்கமம் கூடி
திங்களாய் சேர்ந்த திரவியத்தை–முத்ததாக
ஆழியுள் சேர்த்து அங்கத்துள் வைத்தது
அன்று முதல் குடத்துள் கருவாக்கி
ஐந்தாவது வாரத்தில் அழகான உருவாக்கி
பிஞ்சு விரலும் அவயங்களும்
பேழைக்குள்-உருவாகி
நஞ்சுக் கொடியுடன் இணைந்து வளர்ந்து
கொஞ்சும் குரலையும் குடும்ப உறவையும்
மஞ்சமென போற்றி மாணிக்கமாய் ஜொலிக்க
பத்துமாதம் முன்னே பாசத்தோர் ஏங்க-பிள்ளை
பரவசம் பொங்க பாரினில் பிறந்திடுமே