Monday, 31 December 2012

கோழையாக வாழ்ந்திடாதே

 கோழையாக வாழ்ந்திடாதே

 

 

கோழையாக வாழ்ந்திடாதே எந்த
கொடுமைக்கும் நீ பயந்திடாதே
ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை
யாரிடமும் மறந்தும் காட்டிடாதே

பேச்சிலே  பணிவாக இருந்தாலே
பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே
பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை
பெருகிடும் உனது உழைப்பாலே

நேர்மையய் என்றும் மறக்காதே
நெஞ்சிலே துணிவை இழக்காதே
வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை
விஞ்சிடும் உனது அறத்தாலே

வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு
வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே
வாய் நிறைய சிரிப்பதாலே-அவன்
வாழ்கையை பெரிதாய்  நினைக்காதே

தோல்விக்கு பயந்து இருக்காதே
தொடரும் கவலைகள் மறைந்தாலே
தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே


2013-இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 


Sunday, 30 December 2012

எதுகையே?மோனையே ?

 எதுகையே மோனையே


 
 (நன்றியுடன்)எதுகையே மோனையே
என்னுயிர்ப் பேழையே
தென்றலே தீண்டிடும்
திருமேனிக் காரிகையே

உன்னிடம் அடைக்கலம்
உள்ளத்தில்  சங்கமிக்க
என்விழியில் மின்சாரம்
ஏற்றியது ஏனடியே

அச்சாரம் போட்டதாலே
அவசரமாய் தோன்றியதோ
வித்தாரம் பேசவந்து
விளையாட்டை தேடுவதேன்

தென்னாட்டு மங்கையே
தேரோடும் கங்கையே
உன்வீட்டு முற்றத்தில்
உன்னருகே வந்திடுவேன்

ஊரெல்லாம் உறங்கியதும்
உன்மடியில் தவமிருப்பேன்
காணாது கண்டதை மீண்டும்
கண்டெடுத்து மூழ்கிடுவேன்

ஊர்கூடி ஒன்றினைத்து
உன்னையே மணமுடிப்பேன்
தேர்கூடும் சொந்தங்கள்
தெருவெல்லாம் வாழ்த்திடவே

Friday, 28 December 2012

பழமொழிகள்-இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

இறைக்கிற கிணறுதான் சுரக்கும்

       "கிணற்றில் நீர் இறைக்க இறைக்க மீண்டு தண்ணீர் ஊறுகிறதோ அது போல நாம் அடுத்தவருக்கு உதவி செய்ய செய்ய நமக்கு கிடைக்கும் என்று அர்த்தம் "

        எங்கப்பா அடிக்கடி சொல்லுகின்ற வார்த்தை இது ,ரொம்பநாளா எனக்கு இதை பத்தி தெரியவே இல்லை ஏதோ பழமொழி சொல்லுகிறார் எனவும் பொழுது போக்கா சொல்லுகிறார் என்று நினைச்சிருந்தேன்

        ஒருமுறை எனக்குசெலவுக்கு காசில்லை அப்போ நான் ஏன்ப்பா இருக்கறப்ப நான் எல்லாத்துக்கும் கொடுக்கிறேன் இப்ப காசில்லாமல் இருக்கும் இந்த நேரத்திலும் என்னை பணம் கெட்டு தொந்தரவு பண்றாங்க எனக்கு இருக்கிற கஷ்டத்தை விட அவங்களுக்கு கொடுக்க முடியவில்லையே என நினைக்கும் போது எனக்கு வருத்தமாய் உள்ளது என்றேன்

         ஒரு இரண்டு மணிநேரம் என்னையும் என்னுடைய மன நிலையையும் கவனிச்ச அவர் , என்னை கூப்பிட்டார்  நான் அருகில் சென்று அமர்ந்தேன் அப்போ "இத்தனை நாளா  கையில இருக்கும்போது எல்லோருக்கும் நீ கொடுத்த அப்ப எல்லோரும் சந்தோசமா வாங்கினாங்க அதைத்தான் இப்பவும் உன்கிட்ட எதிர்பாக்கிறாங்க",தப்பு உன்னுதும் இல்லை அவங்கமேல குறை சொல்லவும் முடியாது ஏன்னா  கொடுக்கறது உனது சுபாவம் வாங்கறது அவங்க வாடிக்கை என்றார்.

         சரி, உனக்கு ஒரு யோசனை சொல்லுறேன் நீ ஏன் இப்போ அவங்களிடம் கேட்டுப்பாரேன் என்று சொன்னார் .எனக்கு ஒண்ணுமே புரியலை யாரிடம் கேட்பது கேட்டா கொடுப்பாங்களா மாட்டாங்களா என்று எனக்கு சந்தேகம் தயக்கமாய் இருந்தது ,எனக்கு இன்னொரு யோசனை தோன்றியது முதலில் அம்மாவிடம் கேட்கலாமா அல்லது அப்பாயே கேட்டு பார்ப்போமே என்று
யோசிக்கும்போதே அவரே எனக்கு ஐநூறு ரூபாய் கொடுத்தார்,

        அப்போதான் அவர் என்னிடம் இந்த பழமொழியை சொன்னார் ,உன்னிடம் பணம் உள்ளபோது  நீ அடுத்தவருக்கு உதவி செய்தால் மீண்டும் உனக்கு கிடைக்கும் ,நான் பணம் தராவிட்டாலும் மற்றவர்கள் உனக்கு  தானாக அவர்களே முன்வந்து உதவி செய்வார்கள் நீ கொடுத்த பணத்தில் சிறிதளவாவது உனக்கு மீண்டும் கிடைக்கும் என்றார்.

         அப்புறம் அக்கா,மமா மச்சான்  என்று அவர்களாகவே  முன்வந்து  பணத்தை வைத்துகொள் என்று திணித்தார்கள்.எனக்கு மிகப்பெரிய சந்தோசம் .அப்பத்தான் என் அப்பா தூரத்திலிருந்து பார்த்து சிரித்தது தெரிந்தது.அடிக்கடி அவர் சொல்லிவந்த பழமொழியின் அர்த்தமும் புரிந்தது

    நாம் மனமுவந்து எல்லோருக்கும் உதவி செய்தால் தானாகவே நமக்கு மீண்டும் உதவி கிடைக்கும் அல்லது அதற்கான சூழ்நிலையும் அமையும் .என்பதுதான் பழமொழியின் சாராம்சம்.


தமிழக விவசாயின் வாழ்வு

 தமிழக விவசாயின் வாழ்வு
 ஊரெல்லாம்  ஓடுகிண்ற தண்ணீரை
ஒருவருக்கும் கொடுக்காமல் அவர்
வாடுகின்ற விவசாயி வாழ்வை-பாராமல்
தேடுகின்றார் பாவம் நாடுகின்றார்

பயிர்கள்  கருகி அழிந்தாலும்
உயிர்கள் மடிந்து வீழ்ந்தாலும்
உருகி கெஞ்சி கேட்டாலும்-உளறல்
உண்மை என்றே உறைக்கின்றார்
 
பழகி  பேசி வாழ்ந்தாலும்
பாவம் மக்கள் என்ன செய்வர்
அழகில்லாத அரசியலால் தினம்-அரசும்
அறிக்கையே  அறமாய் எண்ணுகின்றார்

உழவில்லாத  நாட்களுக்கு ஊதியமாம்
இழந்த  பயிருக்கு  இழப்பீடாம்
மறைந்த உழவனின்  உயிரை-வாழ்வை
மறுபடியும் மீட்டு யார் தருவார்


ஒற்றை பயிரை வளர்ப்பதனால்
உழைப்பும் வீணாய் போகிறதே
பற்றை துறந்து பணமும்-வீணாய்
பயிரும் கருகி சாகிறதே

இச்செயல்  மறந்து இனிமேலும்
இதர பயிரை வளர்த்திட்டால்
இன்னல் இன்றி இருந்திடலாம்-இனிமேல்
இயைந்து பயிரிட  தொடங்கிடுங்கள்Wednesday, 26 December 2012

தேனடை நிறமோ?

தேனடை நிறமோ
தித்திக்கும் சுவையோ

நானருகில்  பார்த்ததுமே
நாணமென்ன சுந்தரியே

நீ அருகில் வந்ததுமே
நீரூற்றாய் ஆனதேனோ

திரவியமே  தேனமுதே
திகட்டாத நற்சுவையே

பூதொடுத்த மாலையிட்டு
புதுத்தாலி  பின்னலிட்டு

ஊர் உறங்கும் வேளையிலே
உன்னையே சொந்தமாக்குவேன்

காத்திருந்து  பார்த்திருந்து
காத்திட்ட கடவுள் முன்னே

ஊர்திரண்டு வாழ்த்திடவே
உன்னையே மணம் முடிப்பேன்

உனக்கு என்னை தந்திடுவேன்
உன்னுயிரோடு கலந்திடுவேன்