இன்ப இரவை இனிமையாக முடித்துவிட்டு
இன்றைய வேலையென்ன என்றெழுந்து
இருப்பவரைத் தெய்வமாக வணங்கி-தினமும்
இதயம் மகிழத் தொடங்குவாள் சமையலை
என்பிள்ளை என்குடும்பம் என்வீடென
எந்திரமாய் இல்லாமல் அறிவார்ந்து
நல்லாள் செய்வாள் நல்லுணவு சமைப்பாள்-எல்லோரும்
நலம்வாழ இறைவனையும் வணங்கிடுவாள்
கணவனின் துயர் நீக்கும் காசுக்காக
கண்ணியமான வேலைக்கும் சேர்ந்திடுவாள்
கருத்தாகங்கே களப்பணியும் செய்திட்டு-எப்போதும்
கருணையே வடிவான பெண்மையும் போற்றிடுவாள்
விரைவாக வந்திடுவாள் விழுதுகளைக் கண்டவுடன்
வீட்டிற்குள் ஆனந்தமாய் நுழைந்திடுவாள்
விரும்பியதை ஊட்டி மகிழ்வாள்- பிள்ளைக்கு
வீட்டுப்பாடம் சொல்லியும் துணைபுரிவாள்.
அன்பையே போதிக்கும் அன்னைய வளுக்கு
ஆத்திரமே வந்திட்டால் அத்தனையும் நாசமாகும்
அகமறிந்து செய்திட்டால் அன்பே நிரந்தரமாம்-பெண்ணிடம்
அன்போடு இருப்போம் அன்னையாய்ப் போற்றுவோம்