Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

புறப்படு தமிழா ! புறப்படு !!

Image
புறப்படு புறப்படு புயலென விரைந்திடு புதைந்தவர் கனவினை புரிந்திட்டுப் புறப்படு வதைபடு உதைபடு வாழ்பவர் துயர்நீக்க வந்திடும் சிரமங்கள் வென்றிடப் புறப்படு எழுந்திடும் உணர்வுகள் இணைந்திடப் புறப்படு எம்மினம் என்றே உணர்வுடன் புறப்படு மாணவர் உணர்ச்சியை மழுக்கிட முடியாது மக்களின் உணர்ச்சியை மறுத்திடக் கூடாது மாணவர் கிளர்ச்சியே மனதுக்கு மகிழ்ச்சியே மாண்டிட்ட மக்களின் மறுபடி எழுச்சியே

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் போகாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால்-உணர்வை வீழ்த்திவிட முடியாது கடுமையான வார்த்தையாலே நெடுந்துயரம் தீராது கயவனாகி போனதனால்-உனக்கு கண்ணுறக்கம் இனியேது காற்றடிக்கும் திசையெங்கும் கண்டபடிச் செய்திட்ட கற்பனைகெட்டாத காரியத்தால் தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை நேற்றுவரைச் செய்ததை நினைத்துப் பார்த்து தோற்றுவித்த துரோகத்தை ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே கவியாழி.

நேர்மையே நிம்மதி

நேர்மையாய் வாழ்வதனால் நிம்மதியேக் கெட்டிடாது நெறிகெட்டு வாழ்வதாலே நெடுந்துயரம் தவிர்த்திடாது பாடுபட்டுச் சேர்த்தப் பொருள் பயனின்றி வீண்ப்போகாது பழிசொல்லால் உண்மை பயங்கொண்டு ஓளிந்திடாது கடின உழைப்புக்குப் பலன் கண்டிப்பாய் மறைந்திடாது கஷ்டப்பட்டு சேர்த்தப் பணம் கடைசிவரைத் தீர்ந்திடாது குறுக்கு வழியில் நடத்தும் குடும்ப வாழ்க்கை இனித்திடாது கூ  ட்டுக் குடும்ப வாழ்க்கைமுறை கடைசிவரைக் கைவிடாது

புது மொழிகள்-நிஜமா?

புதுமொழிகள் எதிர்பார்த்த நேரத்தில் உதவிக் கிடைக்காவிடில் அவன் ஏழையாகக் கருதப்படுவான். அடுத்தவனைக் கெடுத்து ஆயிரங்கள் பலசேர் ஆயுள்வரை  தவறில்லை. கொடுத்து வாழ்வதை விட பிறரை கெடுத்தும் வாழ் துயரில்லை. உதவி கேட்பவன் தகுதியைப் பார்  உலகை தெரிய அறிவுரை கூர். வட்டித் தொழில் மட்டுமே  பணம் உழைக்காமல் கிடைக்கும் பாவம் செய்யாதவன் பைத்தியம் பரிதாபமாய் விரட்டி விடு. குறுக்குவழியே கோடி நன்மை குடிவளர்க்கும் உண்மை பதுக்குறவன் ஊர் போற்றும் புத்திசாலி பதுக்காதவன் முட்டாளாய்  ஏமாளி திருடி வாழாதான் வாழ்க்கை இறுதியில் தினமும் தொடரும் கஷ்டம்தான்

கோழையாக சாகிறான்.

பணம் உள்ளவன் பதுக்கி வாழுறான் பாசத்தை மறந்து பணத்தையே காக்கிறான் குணம் உள்ளவன் கொடுக்க நினைத்தும்-இல்லாமல் குடும்ப நலனை மட்டும் பார்க்கிறான் கள்ள வழியில் காசுப் பார்கிறான் கண்டபடி செலவும் செய்யுறான் உள்ளபடி சொல்ல போனால் -நேர்மையற்ற ஊழியத்தை  தொழிலாகச் செய்யுறான்   நல்லவரைக் கண்டு நையாண்டி செய்யுறான் நாலுகாசு பாதுகாக்க நாயைபோலக் காக்கிறான் இல்லாததை  ஏளனமாய் சொல்லுறான்-இறுதியில் இல்லாமை அறிந்து சொன்னார்கள் என்கிறான் சொந்தமும் பந்தம்மும்  சுற்றம் மறந்து சொத்து நிறைய  சேர்த்து வைக்கிறான்  எந்த உணவும் தின்ன முடியாது-நோய் வந்ததாலே மாத்திரை மட்டுமே  திங்குறான் சின்னப் புத்தியால் செய்வதை மறக்கிறான் சிறந்தோரை  இழந்து   சாபத்தையும் சேர்கிறான் உள்ளபடிச் சொல்லப்போனால் உறக்கமின்றி-கோழையாக ஊர்வாயை உலைவாயை கொண்டே சாகிறான்

ரசித்தவர்கள்