Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

போரின்றி ஈழம் கிடைக்காதோ

ஒற்றுமையாய் தமிழர்கள் இருப்பாரோ ஓரணியில் சேர்ந்து உழைப்பாரோ போரின்றி ஈழம் கிடைக்காதோ-ஐநா புகுந்து வாக்கெடுப்பு நிகழ்த்தாதோ பார்போற்ற மகிழ்ச்சித் திரும்பாதோ பைந்தமிழன் வாழ்வும் சிறக்காதோ பூவுலகில் தமிழன் புகழ் இருக்க-புதிய விஞ்ஞான நிகழ்வும் நடக்காதோ விஜய வருடத்தில் விடிவும் விடுதலைக்கான தூய தெளிவும் வீதியெல்லாம் கோலம் போட்டு-தமிழன் வீடெல்லாம் மகிழ்ச்சி பொங்காதோ அயல்நாட்டில் வாழும் அனைவரும் அப்பா அம்மா கூட்டுக்குடும்பமாய் எப்போ ஒன்றாய் மகிழ்ந்து-இன்பம் தப்பா வாழ்வு மீண்டும் கிடைக்குமா சிண்டு சிறுசும் ஓடியாடி விளையாடி கெண்டு கிழங்கள் பேசி மகிழ்ந்து திண்டு திண்ணை சுற்றம் கூடி-இன்பம் கண்டு மகிழும் நாளும் வாராதோ

சித்திரையே வருக

Image
சித்தரை மாதமே சீக்கிரம் வா சிந்தனை அதிகம் எனக்குத் தா நித்திரை கெட்டுப்போவதாலே-கவிதை நிறைய எழுத நிம்மதித் தா அதிக மழைபொழியும் ஆடியில் அன்பாக இருந்து உருவாகி அறிவாக பிறந்த நீ-அன்பால் அடிமையாக்க அசைந்து நீ வா தவறாக சொல்வோர் இருப்பார் தை மாதம் பிறப்பு என்பார் மைகொண்ட உன் விழியால்-எம்மை மகிழ்ச்சி கொடுக்க நீ வா கோடை வெயில் கொளுத்தினாலும் குறைச் சொல்லி யுன்னை மறுக்காமல் முக்கனியும் சக்கரையும் வைத்து-உன்னை முழுமனதோடு வரவேற்கிறேன் நீ வா இன்னலைத் தீர்க்க இன்று வா ஈழத்தில் அமைதி நிலவ வா இனிமையான சித்திரையே வா-தமிழர் இன்னலைத் தீர்க்க ஓடி வா மழையோடு சேர்ந்து நீ வா மகிழ்ச்சியாய் பொழிந்து நீ வா மக்களின் துயர் நீக்க வா மனிதநேயம் காக்க மீண்டும் வா

தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள்

எட்டுமாத கர்பிணிபோல் எப்போதும் முந்தி நிற்கும் கட்டுடம்பு மாறியே காட்சிதரும் காற்றடைத்த வயிற்றினாலே குனிந்து நின்று பாராது கூணுடம்பு உள்ளோர்க்கு ஏனிந்த வேதனை-எல்லாமே உணவால் வந்த சோதனை இளையோருமின்று இப்படித்தான் எழில் துறந்து காணுகிறார் தொழிலாகப் பலபேர்-அதை துணையாக கொண்டுள்ளார் எத்துணைப் பயிற்சிகள் எப்போதும் செய்தாலும் அழகைக் கெடுக்க -விரைந்து ஆர்வமாய் முந்துகிறாய் தொந்திகணபதியை துதித்து தேங்காய் உடைக்கிறார்கள் தேடிபோய் சிரித்து நின்றால்-என் தொந்தியைப் பார்த்துச் சிரிக்கிறார்கள் அடுத்தவர் பார்த்தாலும் அதைப்பற்றிக் கவலையின்றி கொடுக்கின்ற சத்ததால்- உன்னை அசிங்கமாய் பார்க்கிறார்கள்

பாட்டன் பாட்டியை மறக்காதே

சின்னச் சின்ன பிள்ளைகளே சிரிப்புக் காட்டும் குழந்தைகளே எண்ணம் முழுதும் அப்படியே-அழகால் எடுத்துக் கொள்ளும் செல்வங்களே அன்னம் தவழ்ந்து வரும் அழகு கொண்ட நடையும் கன்னம் குழிவிழ சிரிப்பதையே-நான் கண்டே உள்ளம் மகிழ்கிறதே உண்ணச் சொன்னால் மறுத்தே ஓடும் அழகை பார்பதினால் எண்ணத் தோணுது உன்னோடு-எனக்கும் எகிறிக் குதித்து விளையாட சொன்னச் சொல்லை மீண்டுமே சொல்லிச் சொல்லி வருகின்றேன் இன்னும் புரியா பிள்ளையாக-அழகாய் இதையே மீண்டும் கேட்கிறாயே பள்ளிச் செல்ல மறுத்தே நீ பயந்து ஒளிந்து ஓடாதே பாடம் படித்து பெரியவனாய்-பின்பும் பாட்டன் பாட்டியை மறக்காதே

ஆனந்த வாழ்வு....

மேகமெல்லாம்  ஒன்று சேராதோ மோதிக்கொண்டு மழையும் தராதோ தாகமெ ல்லோர்க்கும் தனியாதோ-தமிழ் தரணியெல்லாம் முழுதுமாய் நனையாதோ விவசாயம் மீண்டும் நன்கு பெருகாதோ விளைச்சலுக்கு நல்ல விலை அடங்காதோ உழைப்புக் கேற்ற ஊதியம் கிடைக்காதோ  -அதனால் உழவனுக்கு  மீண்டும்  வாழ்வு ஒளிராதோ பாடுபட்டுச் சேர்த்தப் பணம் பன்மடங்காய் மீண்டும் உயராதோ பணிசெய்வோர் கடன் சுமையும்-சிறிதும் பனியாக உருகிக் குறையாதோ தேகமெல்லாம் சேர்ந்த நோய்கள் தீர தெளிவான மருந்தொன்று படைக்காதோ தேடித்தேடி நல்லுணவை ருசித்து-இன்பமாய் தினமெல்லோரும் புசித்து மகிழ்வாரே கடனில்லா இல்வாழ்க்கை அமையாதோ கஷ்டமெல்லாம் நிம்மதியாய்  தீராதோ அளவான குடும்பங்கள் மகிழ்ச்சியாய் ஆனந்த வாழ்வு மீண்டும் கிடைத்திட்டால் கனவில்லா நெடுந்தூக்கம் வந்திடுமே-மகிழ்ச்சி கடலெனவே நல்வாழ்க்கை அமைந்திடுமே தினந்தோறும் மகிழ்ச்சி கிடைத்திடுமே-மக்கள் தீராத நோயெல்லாம் விரைவில் தீர்ந்திடுமே

ரசித்தவர்கள்