Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நான் புலமை அறிந்தப் புலவனில்லை

இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை இலக்கியம் நாளும் படிப்பது மில்லை வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ் வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே புலமை அறிந்த புலவனு மில்லை பொழுதும் எழுதும் கவிங்ஞனு மில்லை அனைத்தும் தெரிந்த அறிங்ஞனு மில்லை-வழக்கில் அறிந்ததை கொண்டேஎழுதுவதென் நெல்லை முனைவராய் நானே படித்தது மில்லை முறையே தமிழைக் கற்றது மில்லை பிழையாய்க் கருத்தைச் சொல்வதுமில்லை-இதையே பிழைப்பாய்க் கொண்டு வாழ்வது மில்லை பணியால் முடங்கி போகும் போதும் பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும் துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே அறிந்தோர் என்னை அறியச் செய்வீர் அதையும் நன்கு திருந்தச் சொல்வீர் புரிந்தோர் நிலையை புரிந்து கொண்டு-கவிதை புனையத் தொடர்ந்து புகழைத் தாரீர்

குறையே பேசும் நண்பர்களே

குறையே பேசும் நண்பர்களே குறைத்தே மனதில் காயங்களை மறைந்துப் போகா வார்த்தைகளை மறுபடி மடிந்து பேசுவதேன் நிறைகளை நீங்கள் பேசினால் நியாயமாக முதுகில் தட்டினால் பறந்தே போகும் வலியெல்லாம் பார்ப்பவர் மனதில் மகிழ்ச்சியாய் தவறே அவரும் செய்தாலும் தனையே மறந்து புரிந்தாலும் உறவை வளர்க்க உறுதுணையாய் உள்ளதைச் சொல்லி திருத்தலாமே உலகில் பலபேர் இருந்தாலும் உணர்த்த முடியா காரணத்தால் பகையே அதனால் உண்டாகி பலரும் வருந்தும் நிலைவேண்டா ஒற்றுமை கொண்டு வாழ்வதினால் உயர்வே நிறைய பெற்றிடலாம் கற்றவர் இதனை கண்டுரைத்து கண்டவர் திருந்த வாய்ப்பளிப்போமே

முதலில் அப்பனையே நாளும் தொழுவேன்

அப்பனுக் கிணையாக உலகில் ஆயிரம்த் தெய்வமும் உண்டோ ஆண்டவன் என்று சொன்னால்-முதலில் அப்பனையே நாளும் தொழுவேன் கற்பனைக் கெட்டாத கனவுகளுடன் கைபிடித்து நடக்கச் செய்து கண்விழித்துக் கதைசொல்லி-தினமும் கருத்துக்கள் ஆயிரம் சொல்வார் வார்த்தையில் மட்டும் சொல்லாமல் வாழ்க்கையைக் கற்றுத் தந்ததார் போர்கலம் தான் வாழ்க்கையென-தினம் புலர்ந்ததும் சொல்லி வைத்தார் ஏற்பதும் படிப்பதும்  வாழ்க்கையென எப்போதும் சொல்லியே வளர்த்தார் எந்நாளும் அறிவையே எப்போதும்-நல்லவை எடுத்துரைத்தே  படிக்க வைத்தார் சொல்லாத வார்த்தையை செய்கையில் செய்துகாட்டி புரிய வைத்தார் இல்லாமை இல்லையென-திறமை இருப்பதை  காட்டி வளர்த்தார் அறிவையும் அன்பையும் வளர்த்து ஆணவம் என்பதை வெறுத்து துணிவையும்  தூய்மையும் கொடுத்து-மனதில் துணையாக எப்போதும் இருந்திடுவார் ஆயிரம் வார்த்தையில் அடங்காது ஆணவம் எப்போதும் தோன்றாது அன்னையும் தந்தையுமே எனக்கு-கடவுள் அதற்க்குப் பின்னே மற்றதென்பேன்

விதியை மாற்றும் சாலைவிதி

தலைகவசம் அணியாதோர் தாங்கலாய் தேடிக்கொள்ளும் தலைவிதியே மரணம்              ----------- சாலைவிதியை மதிக்காமல் செல்லுகின்ற அன்பர்களே ஓலையின்றி  தேடிவரும் உத்தரவு மரணமே                 -------- விதிமறந்து  வேகமாய் வீதியில் சென்றால் மதிமயங்கும் இறுதியில் மரணமே கொடுக்கும்               --------- துர்மரணத்தை தேடியே தூங்கிக் கொண்டே தூரமாய் வேகமாய் வாகனம் செல்லும்             ----------- வீட்டிற்கு செல்லவே வாகனம் வேண்டும் விதிமாறி சுடுகாட்டிற்கு ஓட்டிச் செல்லாதே               ----------- குடும்பத்தை நினைத்து வாகனம் செலுத்து கூடிய மட்டும் வேகத்தைக் குறைத்து                --------- போதையில் வாகனம் போய்சேரும் இடமோ மருத்துவ மனை வளாகம்              ----------- விதியை வெல்ல வேகமாய் ஓட்டும் புரியாத நிமிடத்தில் பேராபத்து காத்திருக்கும்                ------------ இருசக்கர வாகனத்தை முறுக்கினால் இன்பமாம் இடையில் சறுக்கினால் இறுதியில் துன்பமாம்             ------------ விதியை மாற்றும் வேதனையை சேர்க்கும் மதிமயங்கி வேகமாய் மரணத்தை தழுவும்            ======

மனிதம் போற்றி வாழுங்களேன்.....

இனமே தமிழன் என்றுரைத்து எதிலும் சேர்ந்தே முடிவெடுத்து பணமோ மதமோ பாராமல்-நட்பை போற்றி தினமே வாழுங்களேன் அண்ணன் தம்பி உறவுகளாய் அனைவரும் கூடி வாழ்வதனால் தின்னைதோறும் நட்புறவாய்-அன்பை தினமும் போற்றி மகிழ்ந்திடலாம் உறவை மறுத்து வாழ்வதனால் உயர்வும் மகிழ்வும் தடையாகும் பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப் பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள் மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே மனித நேயம் தெரியுமே மக்கள் மனதை அறியுமே-உறவை மானிடம் போற்றி மகிழுமே சாதியும் மதமும் சொல்கிறது சரிசமம் உயிரென உயர்வாக நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும் நித்தம் சொல்வதும் இதைத்தானே மனித நேயம் வேண்டாமென மதமும் எங்கும்  சொன்னதில்லை மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும் மனிதம் போற்றி வாழுங்களேன்

ரசித்தவர்கள்