Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

உணர்வில் தமிழன் என்றிருந்தால்........

தமிழைப் போற்றி வந்தவர்கள் தனியாய் பிரிந்தக் காரணமேன் மொழியால் ஒன்றாய் சேர்ந்தவர்கள் மோதிக் கொல்லும் நிலையெதனால் உயிராய் உணர்வாய் வாழ்ந்தவர்கள் உடனே விலகிப் போனதுமேன் பகையைச் சேர்த்து எப்பொழுதும் பண்பை மறந்து வாழ்வதுமேன் சாதியும் மதமும் எப்பொழுதும் சண்டை வந்திடக் காரணமேன் மோதிக் கொண்டு இருப்பதற்கு முடிவைக் காணா போவதுமேன் தம்மை பிரித்த துரோகிகளின் தரத்தை அறிய வேண்டாமா உண்மை நிலையை உணராமல் உயிரைப் போக்க வேண்டுமா ஒற்றுமையோடு நாம் இருந்தால் உணர்வில் தமிழன் என்றிருந்தால் கற்றவர் சொல்லை கேட்டறிந்தால் சுற்றமும் நட்பாய் வாழ்ந்திடலாம்

மகிழ்வாய் நானும் வணங்குகிறேன்

கடந்தன நாட்கள் -200 கண்ட பதிவுகள்- 200 பார்த்தவர் பார்வைகள்- 20,000 மகிழ்ச்சியாக உள்ளது மனமெழுதச் சொன்னது நெகிழ்சியான தொடக்கமே- 200 நாட்களை தாண்டியது மெய்யாய் கொடுத்த முடிந்தோர் ஆதரவில் அடியேன் முடித்தேன்- 200 அடங்கும் பதிவுகள் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை பெருமையாக எண்ணவில்லை உருக்கமான பயணத்தில்- 20000 உண்ர்வுடன் வந்தனரே தொடர்ந்து வந்து துணைபுரிந்த தோழர்களை கிடந்தே நானும்- நன்றியுடன் மகிழ்ந்து வணங்குகிறேன் எனக்கு ஊக்கம் கொடுத்து "அம்மா நீ வருவாயா அன்பை மீண்டும் தருவாயா" என்றமுதல் புத்தகத்தை வெளியிட முன்னுரை எழுதித் தந்துஎன்னை உற்சாகப் படுத்திய மரியாதைக்குரிய புலவர்.ராமாநுசம் அய்யா ,திருவாளர்.எஸ்.ரமணி திருவாளர்.பாலகணேஷ் இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.மேலும் எனக்கு பிளாக்கைதொடங்கி கொடுத்த திருமதி.சசிகலா சங்கர் அவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.எனக்கு எப்போதும் அன்போடு என்னை வழிநடத்திய நண்பர்கள் மதுமதி,திண்டுக்கல்.தனபாலன்,பட்டிக்காட்டான் ஜெய், கூகுள்,தமிழ்மணம்,வலைச்சரம் குழு,தமிழ்10,இன்ட்லி,முரளிதரன்,மற்றும் உடன் வந்து ஊக்கப்படுத்திய இ

சின்னஞ் சிறு விதைகள்-5

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு வேதனையால் வீறி அழுததுண்டு-எதிரி வீசும் பார்வையைக் கண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை

தற்கொலையால் மடிந்து விடாதே

ஆத்திரத்தில் அறிவிழந்து தவறிழைக்காதே அடிக்கடியே அதைநினைத்து குறுகிவிடாதே நீண்டநெடு நேரமுண்டு மறந்துவிடாதே-எதிரில் நேரமுனக்கு காத்திருக்கு வருத்தப்படாதே தோல்வியாலே துயரமென்று துவண்டுவிடாதே தொடர்ந்துவரும் கடமையை நீ மறந்துவிடாதே மாந்தருண்டு மனிதமுண்டு மறந்துவிடாதே-மனதை மாற்றி தற்கொலையால் மடிந்துவிடாதே காலமுண்டு வாழ்க்கையுண்டு கலங்கிவிடாதே காத்திருக்கு வெற்றியதை தவிர்த்துவிடாதே அனைவருக்கும் நிகழ்வதைத் தெரிந்துகொண்டு-அன்பு அத்தனையும் மறந்துவிடும் வெற்றிகொண்டு வெற்றித் தோல்வி வருவதுண்டு வீரமென்று வெகுசிலரே பார்பதுண்டு தொற்றுக் கொண்டு தொடர்வதுண்டு-வாழ்வில் தோல்விப் பிறகு வெற்றியாவதுமுண்டு கற்றவர் பலபேர் சொல்வதுண்டு கற்பனையாய் சிலதும் நிகழ்ந்ததுண்டு வெற்றியே வரலாறு படைத்ததுண்டு-நல்ல விடையதிலே கிடைத்திடுமே இனிமைகொண்டு

தினமும் பலபேர் மடிவதற்கு......

தினமும் பலபேர் மடிவதற்கு பணமும் பகையும் காரணமா குணமே இல்லா கோழையர்கள் கொடுக்கும் தொல்லையின் வேதனையா மனதும் வருந்த வேண்டுமா மனிதமும் மறக்கத் தோனுமா மக்கள் பலபேர் மடிவதினால் மனிதனின் துயரேத் தீர்திடுமா மனிதம் மறந்து போவோரே மக்கள் கவலை மறந்தோரே பணமே குறியாய் வாழ்வோரே பணத்தை உணவாய் உண்பீரோ மதமும் எங்கும் சொல்வதில்லை மனதில் கவலை வளர்ப்பதற்கு மக்களின் குறையை நீக்கிடவே மாற்று வழிதான் இருக்கிறதே கவலை மனதில் மறைவதற்கு கணிதம் சொல்லும் விடையென்ன அறிவியல் ஆயிரம் வளர்ந்தாலும் அதற்கும் தீர்வு இருக்கிறதோ தற்கொலை செய்யும் இழிந்தோரே நற்செயல் இதுவென யாருரைத்தார் தற்கொலை தண்டனை யாருக்கு நிர்கதியாகிடும் உன் சொந்தகளுக்கு

ரசித்தவர்கள்