Friday, 31 May 2013

மனதிலே அன்பிருந்தால்...


இப்போது வணங்கும் இறைவனே
முற்போது வாழ்ந்த மனிதனே
வெவ்வேறு வுருவில் வணங்குவர்
வேதமும் சொல்லுமெனக் கூறுவர்

கல்லாக வீசுகின்ற காற்றாக
இல்லாத உருவாய் கூறுவர்
நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி
நேரில் வந்ததாய் கூறுவர்

கல்லாமை இல்லாதோர் வணங்கிடும்
இல்லாத உருவமே கடவுளே
பொல்லாத வைத்தியம் சொல்லுவர்
பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர்

இயற்கையே கடவுள் என்றிருந்தால்
எதற்குக் கோயிலும் குருக்களும்
அதற்குப் அன்றாடம் பூசையும்
ஆடும் கோழியும் வேண்டாமே

இல்லற வாழ்வை துறந்துதான்
இறைவனைக் காண முடியுமானால்
இறைவனின் தூதனாய் இருப்பவரும்
இல்லறம் தவிர்த்து இருக்கலாமே

மனதிலே அன்பைக் கொண்டிருந்தால்
மனிதனை நண்பனே என்றிருந்தால்
துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்
துணைக்கு சாமியும் வேண்டுமா

Thursday, 30 May 2013

வேண்டும்நீ எனக்கு வேண்டும்....

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும்
ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும்
ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா
அவரின் இணைக்கு நிகருண்டா

பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும்
உற்றவர் அன்புக்கு விலையுண்டா
கற்றவருமே கண் கலங்குவார்
கல்லாதவரோ மனம் புழுங்குவார்

சொத்தும் சொந்தமு மெனனக்கு
சொல்லென்னா துயரம் தருமே
சுகமும் பணமும் வேண்டாமே
சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே

வாழ்ந்த நாட்களை எண்ணியே
வாழ்வு முழுதும் நானிருப்பேன்
வாடிபோடி என்றழைத்தே நீயும்
வசைபாட வேண்டும் அன்பாக

மீண்டும் எழுந்து வருவாய்
மேனியில் எழுந்திடு உணர்வாய்
தாங்கியே அருகில் உன்னைத்
தாய்போல் காப்பேன் அன்பாய்

வேண்டும்நீ எனக்கு வேண்டும்
மீண்டும் துணைக்குநீ வேண்டும்
தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும்
தைரியம் சொல்லநீ வேண்டும்


Wednesday, 29 May 2013

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே-- பாடல் 2

நேத்துநானே சொல்லிபுட்டேன்
நேரத்தோடு வந்து விட்டேன்
காத்திருந்து வாசல்வரைக்
கண்டவுடன் துள்ளி ஓடுறாயே

ஊர்ச் சனமும் வந்திடுச்சு
உறவுகளும் இங்கே கூடிடிச்சு
காய்ப் பழங்கள் கனிகளும்
கண்ணே உன்னைத் தேடுதே

அத்தர் செண்டும் போட்டு
அஜந்தாப் பவுடரும் பூசி
அத்த மகளுணைக் காண
அழகாய் வந்தேன் பாரேன்

முன்னே அருகில் வந்து
முறையாகச் சிரித்து விட்டு
பின்னால் திரும்பி என்னை
பெண்மையால் வீழ்த்த வாடி

கூட்டத்துல நீ ஒளிஞ்சி
நோட்டமிடும் உன் நிழலை
பாத்துப் பிட்டேன் பேரழகி
பக்கத்துல எப்போ வாரே

Tuesday, 28 May 2013

ஒத்தைப் பிள்ளை வேண்டாமே

ஒத்தைப் பிள்ளை போதுமின்னு
ஒய்யாரம் செய்யும் நண்பா
சத்தியமா தப்பு தான்னு
இப்போதே சொல்லி விட்டேன்

சொத்து பத்து இல்லாட்டி
சொந்தம் மட்டும் இருந்தாலே
பத்துத் துயர் போக்கிடவே
பக்கத் துணை இருப்பாரே

மிச்சம்மீதி அன்பை எங்கே
மீண்டும் தேடித் போவதெங்கே
சொத்தப் புள்ளை ஒத்தையாக
சோகமாக இருக்கு நண்பா

உத்தரவும் போட வில்லை
உருப்படியா சொல்ல வில்லை
ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி
ஓய்வே இல்லாமப் போச்சி

சத்தியமா சொல்லி விட்டேன்
ஒத்தப் புள்ள வேண்டாங்க
மிச்ச உயிரும் போகுமுன்னே
சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க


Sunday, 26 May 2013

சென்னையில் இன்று நடைபெற்ற இண்டி.பிளாக்கர் கூட்டம்.

இன்று பகல் 2.00மணிக்கு சென்னை அண்ணாசாலை அறிவாலயம் அருகிலிருக்கும் ரியாத் ஹோட்டலில் இண்டி பிளாக்கர் கூட்டம் நடைபெற்றது.இதில் குறைந்தது இருநூறு பிளாக்கர்கள் வந்திருந்தார்கள்.அனைவரும் அழைப்பின் பேரிலும் முன்பதிவு செய்தும் வந்திருந்தார்கள்.இதில் எல்லா மொழிகளில் இருந்தும் பிளாக் வைத்தவர்கள் பங்கேற்றிருந்தார்கள்

இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் இளையத் தலைமுறையினரே அதிக அளவில் இருந்தார்கள்.பெரும்பாலானோர் ஆங்கில பிளாக் வைத்தவர்களும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பிறமொழியினரும் பங்கேற்றார்கள்.எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருபவர்களாம்.பெண்களும்கூட நிறையப்பேர் வந்திருந்தார்கள்.

ஆரம்பம் தாமதமானாலும் அடுத்தடுத்து பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்து,எல்லோருக்குமே ஊக்கப் பரிசாக திரைப்பட நுழைவு சீட்டு கூப்பன்களை கொடுத்தார்கள் .இடையிடேயே எல்லோரையும் அறிமுகப்படுத்திப் பேசவைத்தது சிறப்பாக இருந்தது.

மதிய உணவு சைவம் அசைவம் பிரியாணி போன்ற ஆடம்பர உணவுகளை விரும்பியபடி கொடுத்து மகிழ்ந்தார்கள்.இடைவேளைக்குப்பின் குழுக்களாக பிரித்து குழு நிகழ்ச்சியை நடத்தினார்கள்முதல், இரண்டு மூன்று குழுக்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.அதுபோல பொதுசேவைச் செய்துகொண்டு இருப்பவர்களின் அனுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கொடுத்து மற்றவர்களையும் ஊக்கப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது

அதுதவிர பரிசாக சிலருக்கும் சாம்சங் கலேக்சி கைப்பேசியும் கொடுத்தார்கள் இறுதியில் ஒருவருக்கு மாருதி எஸ்4சொகுசு காரும் பரிசாக கொடுத்தார்கள்.முடிவில் பங்குபெற்ற எல்லோருக்கும் நினைவுப் பரிசாக இண்டி பிளாகர் பனியனையும் கொடுத்து எல்லோரையுமே கௌரவப்படுத்தினார்கள்.இறுதியில் கூட்டம் முடிந்ததும் எல்லோருக்குமே தேனீர் காப்பி,வடை கொடுத்து சிறப்பித்தார்கள்.

இந்த விழா ஏற்பாடுகளை அம்பிபூர் நிறுவனமே எல்லா செலவுகளையும் செய்து இவ்விழா சிறக்கப் பேருதவியாக இருந்தார்கள்.

இங்கு வந்திருந்த எல்லா வயதினரும் ஆர்வமோடு பங்குபெற்று நிகழ்ச்சியை சிறப்பித்தது மகிழ்ச்சியாய் இருந்தது.இந்த தருணத்தில் இண்டி பிளாகர் நிறுவனத்துக்கும் ஆம்பிபூர் நிறுவனத்துக்கும் நன்றியை சொல்லுவது சிறப்பாகும்.