Friday, 5 July 2013

மனிதம் போற்றி வாழ்ந்திடவே

மதமும் மொழியும் மக்களையே
மனிதம் போற்றி வாழ்ந்திடவே
தினமும் அதையேச் சொன்னாலும்
தீமைச் செயலைச் செய்வதுமேன்

பகைமை மனதில் வேண்டாமே
பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
தகைமை இல்லா நிகழ்ச்சியால்-பகையே
தொடர்ந்து வளர்ந்து  வருகிறதே

உறவைக் கெடுத்து வருகிறதே
உள்ளம் சிதறி விடுகிறதே
பொறுமை இல்லா மனத்தையே-அது
பெரிதும் தாக்கி அழிக்கிறதே

இளையோர் முதியோர் எல்லோர்க்கும்
இப்படி நிலைமை ஆவது ஏன்
இயந்திர உலகில் இப்போதும்-தீர்க்க
இதனைப் போக்க மருந்தில்லையோ

தந்திரம் செய்து தவறிழைக்கும்
தரித்திரக் காரன் திருந்தினாலே
வந்திடும் வினைகள் தீருமே-மக்கள்
வாழ்கைவும் சிறப்பாய்  இருக்குமே

சிந்தனை இதனை செய்யுங்கள்
சிறந்ததை முறையே சொல்லுங்கள்
சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே
சிறக்க  முனைந்தே வாழ்ந்திடுங்கள்

துயரம் கொள்ள வேண்டாமே
துணையாய் உறவை கண்டாலே
மனிதநேயம் போற்றினால்-பகைமை
மறந்துப் பாசம் வளர்க்கும்

Thursday, 4 July 2013

பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்

                                              பச்சைக் கீரையைப் பார்த்தவுடன்
நிச்சயம் உண்ண மனம் வருதே
அதிக விலையில் விற்பதில்லை
அதையும் சிலரோ விரும்பவில்லை

பார்த்தால் நம்மைக் கூப்பிடுமாம்
பக்கத்தில் போனால் நாறிடுமாம்
பயந்தே வாங்கி சமைத்தாலே
பலனோ வருவது நோய்நொடியாம்

மழையில் பணியில் அதிகமாக
மலிந்த விலையில் கிடத்திடுமாம்
மனதோ உண்ணத் துடித்திடுமாம்
மறுபடி மீண்டும் தடுத்திடுமாம்

குப்பை மேடு கழனிகளில்
குளிர்ச்சியாக மிகுந்தே வளர்ந்திடுமாம்
கோழி ஆடு மாடுகளும் விரும்பி 
குனிந்தே அதையும் திண்ணுடுமாம்

இப்போ நிலைமை அதுவில்லை
இயற்கை உரமோ போடவில்லை
செயற்கை மருந்தை தெளிப்பதனால்
சீக்கிரம் வளர்ந்தே விடுகிறதாம்

இயற்கையை மாற்றி வருவதனால்
இழப்போ மனித உயிர்தானே
இனிமேல் கீரையை விளைவிக்க
இயற்கை உரங்களை போடுங்களேன்

Wednesday, 3 July 2013

மலையில் சிவனைக் கண்டிடவே....


                          (நன்றி-கூகிள்)


மலையில் சிவனைக் கண்டிடவே
மனதில் அமைதிக் கிடைத்திடவே
துணையும் உறவும் மகிழ்ந்திடதே
தூரப் பயணம் செய்தனரே

காட்டில் மரங்களை வெட்டியதால்
கட்டடம் பலதும் கட்டியதால்
ஏட்டில் சொல்ல இயலாத
எண்ணில் அடங்கா உயிரிழப்பை

இத்தனை உயிர்கள் மடிந்ததை
இப்படி நடந்தது எச்செயலால்
கற்பனை கெட்டா உயிரிழப்பு
கண்டதும் மனது கொதிக்கிறதே

ஊருக்கும் உறவுக்கும் தெரியாது
உயிரைத் துறந்த நல்லோர்கள்
உடலைக் கூட காணாத
உண்மை நிலையை அறிவீரா

மக்கள் மனதைக் காயமாக்கும்
மடமையான இச்செயலால்
மனதும் இப்போ வலிக்கின்றதே
மழையோ அதையே சொல்கிறதே

இயற்கை வளங்களை காத்திடுவோம்
இனியே அதனை போற்றிடுவோம்
செயற்க்கையாலே வரும் துயரை
சீக்கிரம் தடுத்து முறியடிப்போம்

மரங்கள் அருகில் வளர்த்திடுவோம்
மலைவளம் நன்றே காத்திடுவோம்
இயற்கை செய்யும் பேரிழப்பை
இனிமேலாவது தடுத்திடுவோம்Tuesday, 2 July 2013

உலகமே உறவாகிவிட்டது

உலகமே உறவாகி விட்டது
உரிமையுள்ள துணையாகி விட்டது
வலைப்பக்கம் தினம் வராவிட்டால்
வருத்தமாகி மனம் தவிக்கின்றது

இளமைக்கும் முதுமைக்கும் இதுவே
இன்பமான தளமாக உள்ளது
எத்திசையும் உறவு கொள்ள
ஏழுகடல் தாண்டியும் இணைக்கின்றது

எண்ணங்களைப்  பகிர முடிகிறது
எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது
சின்ன வயது பையனோடும்
சரிசமாய் பேசத் துடிக்கின்றது

புதுஉலகம் புதுஉறவை பார்க்க
புத்தகமாய் நினைவைக் கோர்க்க
எத்தனையோ தூரத்துக்கும் செல்கிறது
எழுத்துலகே என்னையும் ஈர்க்கின்றது

இத்தனைநாள் மறைத்து வைத்த
இன்பமான தருணத்தை ரசிக்கின்றது
இனிமையான நினைவுகளை இப்போதும்
இனிமையாக எழுத முடிகின்றது

Monday, 1 July 2013

எனக்கும் பெண்ணைப் பிடிக்கும்...

சின்ன வயதில் எனக்கு
சிரித்துப் பேசிப்பழக பிடிக்கும்
எண்ணமதைக் கவிதையாக
எழுதிப் பார்க்கப் பிடிக்கும்

வஞ்சிக்கொடி இடைப் பிடிக்கும்
வண்ண வண்ண உடைபிடிக்கும்
கொஞ்சிப் பேசும் எண்ணமுடன்
கூடிப்பேசும் இடம் பிடிக்கும்

தஞ்சம் தேடும் விழியாளின்
தாக்கும் பார்வைப் பிடிக்கும்
தள்ளி நின்று அவளருகே
தஞ்சம் கேட்கப் பிடிக்கும்

நித்திரையில் அவள் வந்து
நினைவதில ணைக்கப் பிடிக்கும்
நீண்ட நேரம் கனவுலகில்
நேர்மையாக பழகப் பிடிக்கும்

நல்ல நல்ல கவிதைகளை
நண்பியிடம் சொல்லப் பிடிக்கும்
நீண்டநேரம் பேசுகின்றப் பெண்
நட்பினையும் எனக்குப் பிடிக்கும்

அஞ்சி நின்று குறுகுறுன்னு
அவளிழிதலை சுவைக்கப் பிடிக்கும்
ஐந்திரண்டு நிமிடம் அவளழகை
ஐயத்தோடு ரசிக்கப் பிடிக்கும்

எத்தனையோ சொல்ல வேண்டும்
என்நினைவை அழைக்க வேண்டும்
பொக்கிசமாய் நினைவுகளை புனிதமாக
போற்றவேண்டும் பாடவேண்டும்