Sunday, 4 August 2013

இப்படியும் என்னை வாழ்த்தியோர்


அன்புள்ள நட்புகளுக்கு அடியேனின் வணக்கம்

கடந்த 24.04.2013 அன்று நான் எழுதிய 'நான் புலமை அறிந்தப் புலவனில்லை" என்ற கவிதைப் பற்றி கருத்து கூறியவர்களில் பலர் என்னை கவிஞரே ,பாவலரே,புலவரே என்றும் அருமையாக எழுதுவதாகவும்,தொடருங்கள் என்றும் எல்லா இலக்கணமும் உள்ளடங்கியுள்ளது என்றும் எழுத்துப் பிழை உள்ளதென்றும் முயற்சி தொடரட்டும் என்றும் வாழ்த்தியவர்கள் வணங்கியவர்கள் பலபேர் இருந்தாலும் கருத்தே கூறாமல் இருந்த நல்ல உள்ளங்கள், இனிய நண்பர்கள் நான் பெரிதும் மதிக்கும் நல்லோர்க்கும் எனது பணிவான வேண்டுகோள்" தொடர்ந்து படியுங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கரம்கூப்பி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும் இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன். மேலும் தளத்துக்கு பெயர் வேண்டும் என்ற காரணத்தினாலேயே கவியாழி என்று பெயர் வைத்து எழுதி வந்தேன். இந்தப் பெயர் வைக்க காரணம் கவிதையை ரசிக்கும் யாழின் இசை  ரசிகன் என்ற வரியின் சுருக்கமே "கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இனிமேல் எழுத உள்ளேன். எனவே தொடர்ந்து எனக்கு ஆதரவு தரவேண்டி வேண்டுகிறேன்.

மேலும் எனக்கு பொருத்தமான பெயரைச் சொன்னால் வணங்கி ஏற்றுக்கொள்வேன் மகிழ்வேன் கவியாழியோடு இணைத்துக் கொள்வேன்Ramani S24 April 2013 17:
அருமையான கவிதை
இலக்கணம் தெரிந்தவர்கள் எல்லாம்
கவிதை இயற்றிட முடியாது
ஆயினும் கவிதை இயற்றிட ஆர்வம்
கொண்டவர்கள் இலக்கணம் கற்றுக் கொண்டு
கவிதை வடித்தால் சிறப்பாக இருக்கும்
அதுவும் இலக்கணம் அறிந்து பின்
இலக்கணம் மீறி கவிதைப் படைத்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்
முதலில் சைக்கிள் பழகுபவன்
ஹேண்ட் பார் பாலேன்ஸ் பண்ணத் தடுமாறி
பின் ஹேண்ட்பாரைத் தொடாதே சைக்கிள்
ஓட்டுதலைப்போல
இது என்னுடைய கருத்து
******************************************
திண்டுக்கல் தனபாலன்24 April 2013 12:33
கவிதைகள் பல எழுதி எல்லாத்துன்பங்களையும் மறையச் செய்க... வாழ்த்துக்கள்...
******************************************
இளமதி24 April 2013 12:46
சகோதரரே!...
நானும் உங்கள் மனநிலை, செயல் ஒத்தவளே...
மொழிப்பற்றும் ஆர்வத்தின் காரணமாகவும் எழுதுவதை பகிர்வதுண்டு.
இலக்கண இலக்கிய திருத்தங்களை அதில் தேர்ந்தவர்கள் உரைப்பார்கள்.

இங்கு உங்கள் கருத்தில் தவறெதுவும் என் அறிவிற்கு புலப்படவில்லை. எழுத்துபிழைகள்தான் அதுவும் கணனிதட்டச்சுவதில் ஏற்படுவது சிலசயம் தவிக்க முடியாமல் போகிறது. எனக்கு இப்பிரச்சனை உள்ளது.

மனஞ்சோராமல் தொடர்ந்திடுங்கள் உங்கள் பணியை. போகப்போக திருத்தம் வரும்.
வாழ்த்துக்கள் சகோ!
*****************************************
கி. பாரதிதாசன் கவிஞா்26 April 2013 00:48

வணக்கம்!

தமிழ்மணம் 10

எல்லாம் அறிந்தோர் எவரும் இலையென்பேன்!
வல்லோன் அடிகளை வாழ்த்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
****************************************************
அருணா செல்வம்26 April 2013 03:48
அருமையான கவிதை கரு.
கவிதைக்குக் கருத்துதானே முக்கியம்.

தொடருங்கள் கவியாழி ஐயா.
நானும் தொடருகிறேன்.
********************************************
Jeevalingam Kasirajalingam26 April 2013 05:01
ஐயா! அசை, சீர் பார்த்து
எதுகை, மோனை ஆடையுடுத்து
அடி, தொடை பிசகாமல்
அழகாய்ச் சொல்கிறீர்
"நான்
புலமை அறிந்தப் புலவனில்லை" என்று!
தங்கள்
அவையடக்கம்
பாராட்டத்தக்கது!
ஐயா!
எழுத்தை உழைப்பாக்க வேண்டாம்
உலகெங்கும் தூயதமிழ் பேண
எழுத்தை ஒரு பணியாகக் கொள்ளும்!
தவறின்றித் தமிழ் பரப்ப
உன் நண்பர்கள்
தோள்கொடுப்பர் பாரும்!
********************************************

ஹேமா26 April 2013 15:56
அவையடக்கம் ஐயா நிறையவே உங்களுக்கு.எத்தனை விஷயங்களைத் தொட்டுப் புனைகிறீர்கள் கவிதைகளை.வாழ்வின் சுவாரஸ்யம்,அனுபவம் காதல் எல்லாமே சிறப்புத்தான்.வாழ்த்துகள் உங்களுக்கு.உங்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி தொடர்கிறோம் !
********************************************** 
குட்டன்24 April 2013 20:30
கவியாழியே இப்படியென்றால் கற்றுக்குட்டிகள் என்ன சொல்வது!
**********************************************
Chellappa Yagyaswamy25 April 2013 07:55
“முனைவராய் நானே படித்தது மில்லை, முறையே தமிழைக் கற்றது மில்லை” என்கிறீர்களே, நண்பரே! இந்த இரண்டும் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு இந்த அளவாவது எழுத வருகிறது என்பேன். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசம் இது தானே! கண்ணதாசனுக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசமும் இது தானே! பட்டப் படிப்பும், முறையான இலக்கணப் படிப்பும் படைப்பாற்றலைத் திசை மாற்றிவிடும் தன்மை கொண்டவை என்பதற்கு இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் கூற முடியும். எனவே தொடர்ந்து எழுதுங்கள். நிறைய கவிதைகள் படித்துக்கொண்டே இருங்கள். தன்னிரக்கமும், அழுகுரலும் தவிருங்கள். ‘பாஸிட்டிவ்’ கவிதைகளையே எழுதுங்கள். இன்று நாட்டுக்குத் தேவையானது அதுவே!
**********************************************

ஆர்வமுடன் கவிதை எழுதும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரை!
*********************************************

S.டினேஷ்சாந்த்24 April 2013 14:57
உங்களுக்கு மட்டுமல்ல இங்கே கவிதை எழுதும் பலருக்கும் இக்கவிதை பொருந்தும்.நல்ல கவிதை
*********************************************
கோமதி அரசு24 April 2013 15:17
பணியால் முடங்கி போகும் போதும்
பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//
************************************************

கவிகவிதை வீதி... // சௌந்தர் //24 April 2013 12:27
கற்றது கைளயவு தானே....
அழகான தன்னடக்க கவிததை அருமை.
*************************************************
Tamizhmuhil Prakasam24 April 2013 15:20
அருமையான கவிதை ஐயா !!! உலகில் உள்ள அழகினை இரசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் சிறுமை கண்டு பொங்குபவர்கள் கவிஞர்களாவதில் அதிசயமேதுமில்லை. வாழ்த்துகள் !!!
*************************************************
கலாகுமரன்24 April 2013 15:56
புலமை மிக்க கவிதை.. வாழ்த்துக்கள்.
*********************************************

poovizi24 April 2013 18:21
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//

அருமை கவிஞ்சரே
******************************************** 
பட்டிகாட்டான் Jey24 April 2013 19:08
Arumai !
**********************************************
கிரேஸ்25 April 2013 08:10
//இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை
இலக்கியம் நாளும் படிப்பது மில்லை
வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ்
வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே// அது தானே நம் நாட்டுப்புறப் பாடல் ஐயா..இலக்கணம் இலக்கியம் எல்லாம் பார்த்தா பாடினார்கள்..நம்மில் கலந்திருக்கும் நம் மொழி எழுதவைத்திடும் அல்லவா? கவி அருமை.
***********************************************

மனோ சாமிநாதன்25 April 2013 18:13
மகிழ்வினில் எழுதும் கவிதையைக் காட்டிலும் வலியில் எழுதும்போது தான் கவிதை வரிகள் அழகாய் வந்து விழும். அதில் சத்தியமும் அழகும் சேர்ந்து வரும். அது போன்ற கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்!!

***********************************************
நல்ல உள்ளங்களுக்கு நன்றி


கவியாழி
சென்னை

Saturday, 3 August 2013

கரும்பலகையைக் காணவில்லை

                     


                                                     கரும்பலகை(சிலேட்)


இன்னும் தவிர்க்க முடியாதது கரும்பலகை.இப்போதும் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு முதலில் எழுத்தக் கற்றுக் கொடுப்பது இது போன்ற கரும்பலகையில்தான்.

கணினியின் பயன்பாடு  எல்லோர் வீட்டிலும்  உபயோகத்தில் இருந்தாலும்  முதன் முதலில் எழுதக் கற்றுகொடுக்கும் சிலேட் எண்ணும் கரும்பலகையில்தான்  சொல்லித்தரும் வழக்கம் உள்ளது

நானும் இதுபோன்றதில் தான் எழுதிப் பழகினேன் .எனது அப்பா அப்போது என் கைபிடித்து சரியாக எழுதுவதுப் பற்றிச் சொல்லித்தந்தார்.அதன்பின்பே பள்ளியில் சேர்ந்து எழுதப் பழகிக் கொண்டேன்


  
எழுதிவிட்டு அழிப்பதற்கு சிறு துணியையோ கையாலோ அழித்த ஞாபகம் இன்னும்நினைவில் இருக்கிறது.மேலும் அப்போதே என்வயதிலிருந்த மாணவர்கள் தண்ணீர் தழை,கோவை இலை போன்றவற்றைக் கொண்டு அழித்தால் எழுத்துக்கள் மிக துல்லியமாகவும் எழுதும்போது விரைவாகவும் எழுத முடியும் என்பதால் அப்போதே அதை காசுக்கு விற்றுவருவார்கள்.
ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறான இலைத்தழைகளைப் நகரத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது

Friday, 2 August 2013

நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

வில்லு வண்டி பூட்டிகிட்டு
வீதிவழிப் போற மச்சான்
சொல்லுறத கேளுங்களேன்
சித்த நேரம் நில்லுங்களேன்

நாலுஊரு தாண்டி நானும்
நல்ல சேதி கேட்கப்போறேன்
நின்னுகிறேன்  சொல்லுபுள்ள
நேரம் பார்த்துப் போகணுமே

பல்லு இல்லா கிழவனுமே
பார்த்து என்னை சிரிக்கிறாங்க
பத்திரமா போயி சீக்கிரம்
பார்த்தசேதி சொல்லு மச்சான்

மத்த ஊருபோல இல்ல
மாமன் பெத்த செல்லக்கிளி
சத்தியமா நானும் வந்து
சங்கதிய சொல்லப் போறேன்

நம்ம தமிழ் நாட்டுலத்தான்
நடக்கப் போற கூட்டத்துக்கு
நாலுஊருத் தள்ளி நீயும்
நாலுசேதி கேட்டுவாயேன்

உள்ளதையே சொல்லப் போனால்
ஊருக்குப் போறவேலை
 நல்லவங்க சேரும் கூட்டம்
சென்னையிலே நடக்குதடி

சீக்கிரமா போயிவந்து
சீருகொண்டு வாங்க மச்சான்
சேலையோட தாலியோட
சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்
Thursday, 1 August 2013

திருவாளர்கள் ;ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன் அவர்களும் 


ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன்  ஆகிய இருவரைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இருவரும் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருவருமே புதியவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப் படுத்துவதில் இருவருக்கும் நிகர் எனக்குத் தெரியவில்லை .

பெரும்பாலான தளத்தில் சென்று வாசித்து அதற்கு வாக்களிப்பதோடல்லாமல் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லி உற்சாகப் படுத்தும் நல்ல உள்ளம் படைத்தவர்கள்.

அதுமட்டுமல்ல  இருவரின் பதிவுகளும் எல்லோரும் விரும்பிப்படிக்கும் படி சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் இருக்கும்..ரமணி அய்யா எழுதும் தமிழுக்கு  நிகர் அவரேதான். ஒவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை இருக்காதா  அவரிடம் சொல்லித் திருத்தி பேர் வாங்கலாமே என்று நினைத்தால் அதற்கு இன்றுவரை வாய்ப்பே இல்லை.அவ்வளவு சிறப்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுதுகிறார்.

இலக்கணம் பற்றி எனக்கு எளிமையாக விளக்கும்போது நான் அவர் அருகில் இருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காத என ஏங்கி வருகிறேன்.அவரும் என்னை மதுரைக்கு வரச்சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்குத்தான் நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்கவில்லை.

திண்டுக்கல் தனபாலன் கணினியி கல்விப் பற்றிப் போதிய கல்வியறிவு இல்லாவிட்டாலும் அவரின் தீவிர முயற்சியால் புதுவிதமான யுக்திகளைக் கையாண்டு சிறந்த முறையில் பதிவிட்டு வருகிறார்.தரத்துடனும் அழகாகவும் அடுத்தவர் பொறாமைப்படும் அளவுக்கு மிக நேர்த்தியாக கணினியில் அவரின் வேலைப்பாடு இருக்கும்.

அதேபோல் பிறருக்கு கணினிப் பற்றிய சந்தேகமெனில் தானாக முன்வந்து தளத்தை சீர்செய்து இணைப்புகளை உருவாக்கித்தருவார். 24*7 எல்லா நேரத்திலும் இவரை தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்கலாம்.கணினி உலகில் உலா வரும் பலர் வெளிநாட்டிலிருந்தும் இவரின் உதவியைப் பெற்று பயனடைகிறார்கள் என்பதை நானறிவேன்.

 அதிகப் பதிவு எழுதாத, படிக்கத்  தெரியாத பதிவர்களின் மத்தியில் இவர்கள் இருவரும் ஜொலிக்கும் நட்சத்திரங்களாய்  மின்னிக் கொண்டிருக்கிறார்கள்.
பதிவர்களுக்கு சேவையும் ஆலோசனையும் செய்து ஒவ்வொரு தளத்துக்கும் சென்று வரும் இவர்களின் பணியை அவசியம் எல்லோரும் பாராட்டதான் வேண்டும்.

இப்போதும் அடிக்கடி பதிவுகளும் கொடுத்து  வாக்களித்தும் வரும் இருவரின் பணியை  சேவையை நான் மனதார மனமகிழ்ந்து தனிப்பட்ட முறையில் நான் பாராட்டுகிறேன்.


இவர்களைப்போல் பதிவுலகில் சேவை செய்துவரும் பல நண்பர்களைப் பற்றி நீங்களும் ஏன் ஊக்கப் படுத்தும் விதமாய் பாராட்டலாமே...தொடருங்கள்....

கவியாழி
சென்னை

Wednesday, 31 July 2013

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும்
பசியில் சேர்த்துப் பாருங்கள்
பகிர்ந்தே உணவைப் போடுங்கள்
பயனோர் மகிழ்வய் காணுங்கள்

இந்தப் பிறவியில் வாழ்வதையே
இனிமை யாக்கி  உணருங்கள்
இறுதி நாட்களில் மகிழுங்கள்
இன்பம் மனதில் சேருங்கள்

மகிழ்வாய் வாழப் பழகுங்கள்
மனதை போற்றி உணருங்கள்
மக்கள் துயரைத் போக்கியே
மானிடம் புகழ வாழுங்கள்

இனிமேல் புதிதாய் விதிசெய்வீர்
இனிமை பணத்தில் இல்லாமல்
தலைமேல் பணத்தை சுமக்காமல்
தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே

ஆழாக்கு சாம்பல் மட்டுமே
அறிந்தோர் கையில் கிடைக்குமே
அதற்காய் பணமேன் சேர்க்கணும்
அதையும் தவிர்த்தும் சாகனும்