Saturday, 31 August 2013

மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்

      இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.
 உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.


அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார்  எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.

 அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து  அகமகிழ்ந்தேன்.

திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில்  அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம்
மகிழ்ந்தேன்.அப்போதே  பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன்.

அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேயம் பற்றி கூறியது  அவரின் பெருந்தன்மைக்கு சான்றாய் இருந்தது.

இருவரும் மாறிமாறி பேசியதிலிருந்து  பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன நான் நல்லோரிடம் பழகி வந்தேன் என்று மகிழ்ந்தேன் .. புதுப்புது விஷயங்களை பேசினர்கள் என்பதைவிட எனக்கு எவ்வாறு பெரியோர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரைத்ததுபோல் இருந்தது..

ஆனாலும் இருவரின் என்ன ஓட்டமே பதிவர் திருவிழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்றே பேசினார்கள்.இறுதியில் புலவர் அய்யா இந்த விழாவை சிறப்பிக்க  ஆரூர்,மூனா.செந்திலும் .கவிஞர்.மதுமதியும் என்னுடன் பேசி வருவதிலிருந்து  மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்கும் என்பதில்
ஐய்யமில்லை ஆனால் அடுத்த வருட சந்திப்பு பற்றியே சிந்திக்கிறேன் என்று சொன்னது மகிழ்வாய் இருந்தது.

காரணம் இந்த வருடம் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் அடுத்த  வருடம் எப்படி சிறப்பாக நடத்துவது என்ற யோசனையில் புலவர் அய்யா உள்ளார் எனபதே எனக்குத் தெளிவாய் புரிந்தது.அதற்க்கு திரு.ரமணி அவர்கள். எல்லோரிடமும் பேசியப்பின் நிச்சயம் நீங்கள் எதிர்ப் பார்த்தபடி சிறப்பாகவே நடத்தலாம் என்று பட்டும் படாமலும் சொன்னார்,அது அவரது  முன் யோசனையையும் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரையும்  கலந்தே முடிவு சொல்வதாக சொன்னார்.

ஆக மொத்தம் இருவருமே ஒத்தக் கருத்துடன் பதிவர் நலனையே குறிக்கோளாய்  கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நானறிந்த உண்மை. எனவே இருவரின் எதிர்ப்பார்புக்களுக்கிணங்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல விஷயங்களுக்காகவும் நாம் இணைந்து  செயல் பட வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்Friday, 30 August 2013

விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...

             இன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்


செய்ய வேண்டியது

          1,    பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .
     
         2,   நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின்
கைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.

         3,  சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு  பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து  உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.


        4  அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன்று.பெயர் பெரியா விட்டால் அடையாள அட்டையைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.

         5, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது  ஒவ்வோருவரும் என்னப் பேசுகிறார்கள் என்பதைக் கவனமாக கேட்கவும். அவரின் பேச்சுப் பற்றி நீங்கள் உங்களது அனுபவத்தில் கருத்தில் கொள்ளலாம்.
     

தவிர்க்க வேண்டியது

            1, கைபேசியை  அதிர்வு அழைப்புகளில் சரி செய்து வைப்பது அவசியமாகும்.இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்

                2,   அரங்கினுள் அருகில் இருப்பவரிடம்  தனியாக சத்தமாக பேசிக்கொண்டிருக்கக் கூடாது.பொது இடத்தில் அமைதி காப்பது  நலம்.அவசியமாகும்

               3, உணவுக் கூடத்தில் அதிகபட்ச அமைதியுடன் ஒவ்வொருவரும்  வரிசையில் நின்று  உணவை வாங்க வேண்டும் .இரண்டு மூன்று பேருக்கு ஒருவரே வாங்கிச் செல்ல முயற்சிக்கக் கூடாது.

            4.  அரங்கத்திற்கு வெளியே நின்றுகொண்டு இரைச்சலாய் பேசக்கூடாது

            5,  தங்களது உடைமைகளையும் விலை உயர்ந்தப் பொருட்களையும் அவரவர் சொந்தப் பொறுப்பில் பாதுகாத்து கொள்வது உங்களின் கடமை.
---கவியாழி---

Thursday, 29 August 2013

உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு

                   


                                                 எல்லோருக்கும் நன்றிமொத்தப் பதிவுகள்                ; 295

கருத்துரைகள்                     ; 6,073

வருகைத் தந்தவர்கள்         ; 37,943

வலையில் இணைந்தவர்கள்          ; 131


நிலையாக ஒன்றே சொல்லாமல்
நில்லாது தினமே எழுதியுமே
சுவையாக மகிழ்வாக இருந்திடவே
சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும்

விலைக்காக  எதையுமே எழுதவில்லை
வேதனையும் யாருக்குமே தந்ததில்லை
கலையாக எண்ணியேக் கவிதைகளை
காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன்

குறுகிய காலத்தில் இத்தனையும்
குறையாத  அன்போடு என்னுடனே
குறைவான  எண்ணிக்கையில் வந்தாலும்
குற்றமென  எந்நாளும் கூறாமல்

பிடிக்காமல் போனாலும் பழிக்காமல்
பிழைகளை தவறாக எண்ணாமல்
தமிழ் மணத்தில் இடம்பிடிக்க
தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே

நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய்
நிற்பதற்கு என்னாலே இயலாது
ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை
அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்

Wednesday, 28 August 2013

கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?

(நன்றி கூகிள்)


வெண்ணையைத் திருடிய கண்ணன்
வேதமும் சொல்லிடும் மன்னன்
ராதையை துரத்தியே மகிழ்ந்தான்
ரசித்தவர் விருப்பமும் அதுதான்
இன்றும் தொடரும் கனவுகள்
இதுபோல் இருப்பதும் தவறா

கண்ணனின் லீலைகள் கண்டதால்
காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால்
திண்ணையில் கதைகளை மறந்து
திரையில் காணும் நிகழ்வை
இன்னமும் ஏங்கும் பெண்டீர்
இருப்பதும் இல்லைத் தவறாய்

பூவையே கேளடி உண்மையை
பூவினுள் வண்டென புகுந்தே
புதுக்கதை என்னிடம்  கேட்டே
பொழுதும் தொடர்வதும் ஏனோ
பேதையே  தெரிந்தால்  சொல்லடி
போதையே எனக்கு குறையலை

ஏனடி நில்லடி பாரடியே
ஏக்கமும் அவனென கூறடியே
பாவையர் ஏக்கமும் தணிக்க
பாவலன் அவனென சொல்லடியே
தாகமும் தணிந்திட தீர்ந்திடவே
தலைவனும் அவனென எண்ணடியே

மேனியில் வண்டெனப் புகுந்தே
மீட்டிடும் ராகங்கள் இனிதே
தேடியே தொடருதே மீண்டும்
திருடியே சென்றவன் கண்ணன்
வாடிய என்முகம்  பார்க்க
வருவானா? மீண்டும் தருவானா?

Tuesday, 27 August 2013

காடுகளில் மரம் வளர்ப்போம்

காடுகளில் மரம் வளர்ப்போம்
கழனி ஓரம் செடி விதைப்போம்
நாடு முழுக்க  இயற்கையை
நாடிச்  செல்ல அறிவுறுத்துவோம்

ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே
தேடித்தேடி செடி வளர்ப்போம்
அதனுடைய சாணத்தையே
அடியுரமாய் போட்டிடுவோம்

சாலை ஓரம் மரங்களும்
சமதூரம் நட்டு வந்து
வேளை தோறும் நீரூற்றி
வளரும்  வரை காத்திடுவோம்

தூரம் செல்லும் மக்களுக்கு
துணையாக நிழல் கொடுப்போம்
தொடர்ந்து வரும் சூரியனை
தூரமாக நின்று பார்ப்போம்

ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து
ஏரிக்குளம் அருகில் வளர்த்து
பாலை நிலமும் பக்குவமாய்
பரந்த காட்டையும் அமைப்போம்

வீடுதோறும் பச்சைக் காய்கறிகள்
விளைவித்தே தினம் உண்போம்
காடு கழனி குன்றெல்லாம்
காக்கும் மரங்களை  வளர்ப்போம்