Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்

Image
      இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.  உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார்  எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.  அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து  அகமகிழ்ந்தேன். திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில்  அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம் மகிழ்ந்தேன்.அப்போதே  பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன். அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேய

விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...

             இன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன் செய்ய வேண்டியது           1,    பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .                2,   நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின் கைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.          3,  சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு  பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து  உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.         4  அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன

உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு

Image
                                                                     எல்லோருக்கும் நன்றி மொத்தப் பதிவுகள்                ; 295 கருத்துரைகள்                     ; 6,073 வருகைத் தந்தவர்கள்         ; 37,943 வலையில் இணைந்தவர்கள்          ; 131 நிலையாக ஒன்றே சொல்லாமல் நில்லாது தினமே எழுதியுமே சுவையாக மகிழ்வாக இருந்திடவே சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும் விலைக்காக  எதையுமே எழுதவில்லை வேதனையும் யாருக்குமே தந்ததில்லை கலையாக எண்ணியேக் கவிதைகளை காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன் குறுகிய காலத்தில் இத்தனையும் குறையாத  அன்போடு என்னுடனே குறைவான  எண்ணிக்கையில் வந்தாலும் குற்றமென  எந்நாளும் கூறாமல் பிடிக்காமல் போனாலும் பழிக்காமல் பிழைகளை தவறாக எண்ணாமல் தமிழ் மணத்தில் இடம்பிடிக்க தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய் நிற்பதற்கு என்னாலே இயலாது ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்

கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?

Image
(நன்றி கூகிள்) வெண்ணையைத் திருடிய கண்ணன் வேதமும் சொல்லிடும் மன்னன் ராதையை துரத்தியே மகிழ்ந்தான் ரசித்தவர் விருப்பமும் அதுதான் இன்றும் தொடரும் கனவுகள் இதுபோல் இருப்பதும் தவறா கண்ணனின் லீலைகள் கண்டதால் காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால் திண்ணையில் கதைகளை மறந்து திரையில் காணும் நிகழ்வை இன்னமும் ஏங்கும் பெண்டீர் இருப்பதும் இல்லைத் தவறாய் பூவையே கேளடி உண்மையை பூவினுள் வண்டென புகுந்தே புதுக்கதை என்னிடம்  கேட்டே பொழுதும் தொடர்வதும் ஏனோ பேதையே  தெரிந்தால்  சொல்லடி போதையே எனக்கு குறையலை ஏனடி நில்லடி பாரடியே ஏக்கமும் அவனென கூறடியே பாவையர் ஏக்கமும் தணிக்க பாவலன் அவனென சொல்லடியே தாகமும் தணிந்திட தீர்ந்திடவே தலைவனும் அவனென எண்ணடியே மேனியில் வண்டெனப் புகுந்தே மீட்டிடும் ராகங்கள் இனிதே தேடியே தொடருதே மீண்டும் திருடியே சென்றவன் கண்ணன் வாடிய என்முகம்  பார்க்க வருவானா? மீண்டும் தருவானா?

காடுகளில் மரம் வளர்ப்போம்

காடுகளில் மரம் வளர்ப்போம் கழனி ஓரம் செடி விதைப்போம் நாடு முழுக்க  இயற்கையை நாடிச்  செல்ல அறிவுறுத்துவோம் ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே தேடித்தேடி செடி வளர்ப்போம் அதனுடைய சாணத்தையே அடியுரமாய் போட்டிடுவோம் சாலை ஓரம் மரங்களும் சமதூரம் நட்டு வந்து வேளை தோறும் நீரூற்றி வளரும்  வரை காத்திடுவோம் தூரம் செல்லும் மக்களுக்கு துணையாக நிழல் கொடுப்போம் தொடர்ந்து வரும் சூரியனை தூரமாக நின்று பார்ப்போம் ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து ஏரிக்குளம் அருகில் வளர்த்து பாலை நிலமும் பக்குவமாய் பரந்த காட்டையும் அமைப்போம் வீடுதோறும் பச்சைக் காய்கறிகள் விளைவித்தே தினம் உண்போம் காடு கழனி குன்றெல்லாம் காக்கும் மரங்களை  வளர்ப்போம்

ரசித்தவர்கள்