அய்யா வயதில் மூத்தவரே
அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர் உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா நண்பரும் மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால் தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--