Friday, 8 November 2013

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்


இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்
இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன்
மார்புக்குள் அவளை அணைத்தேன்
மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே
சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள்
செழுமையாய் உரிமையாய் இணைந்தே
சேதியை முடித்தேன் ருசித்தேன்

பூவுக்குள் தேனை எடுத்தேன்
புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள்
தூறலும் நின்றது மகிழ்ச்சியாய்
தூரத்தில் தெரிந்தது வானவில்

மார்புக்குத் திரைப் போட்டு
மனதிலே அசைப் போட்டு
ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள்
உண்மையான சிறந்த நாட்களே

யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை
எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல
ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை
ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

Wednesday, 6 November 2013

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும்
பணத்தை மதிக்க மாட்டேன்
பணத்தாசை இல்லா நானும்
பணத்தால் அடிமை ஆகேன்

இனிமைப் பேசத் தயங்கேன்
இன்முகம் காட்ட மறவேன்
இழித்தே எளிதில் பேசேன்
இறைவனை அதற்க்காய் தேடேன்

நல்லோரை  வணங்கி  மகிழ்வேன்
நாளும் சென்றுப் பார்ப்பேன்
நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க
நல்லதை சொல்லியே வருவேன்

பொல்லாதோர் நட்பை மதியேன்
பொய்யாக எதையும் சொல்லேன்
புகழுக்கு அடிமை ஆகமாட்டேன்
புரிந்தோரைக் கைவிட மாட்டேன்

உள்ளத்தில் நட்பை வைப்பேன்
உண்மையில் அன்பைப் பகிர்வேன்
உரிமையாய் குறைகளைச் சொல்லி
உண்மை நட்பை வளர்ப்பேன்
````````````கவியாழி```````````


Tuesday, 5 November 2013

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில்
மேகத்தின் மேனியெல்லாம் தழுவி
கன்னலென இருந்தக் கார்மேகத்தை
வண்ண ஒளிவீசிச் சிரித்தாள்

எண்ணம் எனக்கோ தெரியாமல்
என்ன சொல்வதெனப் புரியாமல்
சின்ன விழியிரண்டை மூடினேன்
சில்லென்ற காற்றில் தேடினேன்

கன்னம் சிவந்த கயல்விழியால்
கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள்
தின்ன மறந்த தேன்பலாவின்
திகட்டாத சுவையை மறுப்பேனா

இன்னும் வேண்டுமென எப்போதுமே
இனிமையான சுவையைத் தீண்டியே
உண்ண விரும்பும் அவளை
உதறித் தள்ளி விடுவேனா

ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின்
ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா
ஓய்வாய் அருகில் அமர்ந்தேன்
ஒருகிழி நடுவில் கிழித்தேன்


இடைவெளி.........


Monday, 4 November 2013

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே
பேதைமை கொள்வோரைக் கடித்தே
போதையும் கொண்டே மீண்டும்
பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே

அரக்கனை அழிக்க வேண்டாம்
அவனையே வாழவும்  வைத்தால்
அத்தனை திருடனையும்  கொன்றே
அகிலமும் சிறக்கும் நன்றே

உணவில் கலப்படம் செய்வோர்
உரிமையை  மறுத்திடும் முதலாளி
ஊரையே சுரண்டும் தலைவன்
ஊழலை வளர்க்கும் மனிதன்

சோம்பலை விரும்பும் மக்கள்
சொன்னதைக் கேட்கா  இளைஞன்
சுரண்டலைச் செய்யும்  அரசியலார்
சுற்றித் திரியும் சோம்பேறி

உழைக்க மறுக்கும் கணவன்
ஊதாரி செலவிடும் பெண்கள்
உடலை வருத்தா ஊழியன்
உண்மையே சொல்லாத் திருடன்

நாளையை விரும்பா மாணவன்
நாணயம் இல்லா ஆசிரியர்
நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே
நாளும் வட்டிக் கேட்பவன்

போன்றோரைக் கொன்று வதைக்கவே
போக்கிடம் இன்றி அலைந்தே
பொழுதும் கொல்லுதல் செய்தே
பேயும் வாழட்டும் மகிழ்ந்தே=======கவியாழி======

Sunday, 3 November 2013

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத
சுற்றமும் நட்பும் உதவிக்காய்
இஷ்டமாக வருவார்கள் இல்லையென
இல்லாத ஒப்பாரி வைப்பார்கள்

காரியம் நடைபெற வேண்டுமானால்
கண்ணீர் விட்டும் அழுவார்கள்
கவலைத் தீர்ந்ததும் உணராது
கண்டபடித் தவறாய் சொல்வார்கள்

குற்றம் சொல்லிப் பயனில்லை
குறையாய் எண்ண வழியில்லை
கொள்கை இல்லா மனிதனுக்கு
குணமாய் அமைந்தது இயல்பன்றோ

இல்லை யென்றே சொல்லாமல்
இருக்கும் போதே  கொடுத்திடுங்கள்
கொள்ளை இன்பம் உங்களுக்கு
கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம்

பெற்றப் பிள்ளைகள் பேரின்பம்
பிணிகள் அகன்றே நன்றாக
இல்லை என்ற நிலையாக
இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம்

இதயம் மகிழ உதவிடுங்கள்
இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய்
இதையும் நல்ல சேமிப்பாய்
இருக்கும் போதே செய்திடுங்கள்


-----கவியாழி-----