Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் புத்தமும் சொல்லும் போதனையை புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய் கற்பனை வாழ்க்கை அறுதியில்லை கண்டதும் கேட்பதும் உண்மையில்லை அற்பனாய் வாழ்ந்திட முயலாதே அடிமை கொண்டே  வருந்தாதே உயர்வு தாழ்வு பார்க்காமல் உன்னில் வேற்றுமை காணாமல் உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய் ஒழுக்கம் நன்றே முதலீடாய் கற்பதை நன்றே புரிந்துகொண்டு காப்பாய் நீயும் அமைதிகொண்டு இனத்தில் நாமும் தமிழனாக இந்தியத் தேசத்தின் புதல்வனாக உணர்வாய் மனதில் முதல்வனாக ஒற்றுமை கொள்வோம் மனிதனாக

ரசித்தவர்கள்