Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே பசுமை வயலும் மாறுது பருவ மழைப் பொய்த்ததாலே பயிரும்  கருகி வாடுது நீர்நிலைகள் எங்கும் நீரின்றி நீரோட்டம் குறைந்தே போகுது நிலத்தின் தன்மை மாறியே நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது செடிகொடிகள் காய்வதாலே சிறுபூச்சியும்  மடிந்துபோகுது சின்னஞ்சிறு உணவைத் தின்னும் சினம்கொண்டே பாம்பும் அலையுது வனங்கள் எங்கும்  வறட்சியாகி வனவிலங்கும் மடிந்தே போகுது வானத்திலே ஓட்டை விழுந்து வானிலையும் மாறிப்போகுது சூரியனின் கண் சிவந்தால் சூழ்நிலைகள் மாறிப்போகுமே சுடு கதிர்கள் பட்டதாலே சூழும் மரணம் உறுதியாகுமே மனிதன் வாழ மரமும் செழிக்க மழையும் பொழிய  வனமும் செழிக்க உணவை  மீண்டும் உறுதி செய்ய உழைக்க வேண்டும் மழையே பொழிய இதைக்கண்டே இனியேனும் மக்கள் இயற்கை வளத்தைக் காக்க இனமே தழைக்க  இனியேனும் இயன்ற உதவி செய்யலாமே

ஆவியோ பேயோ அலையுது

ஆவியோ பேயோ அலையுது ஆனந்த ஆட்டமும் ஆடுது அடிக்கடி இப்படிக் காண்பதால் ஆங்கிலப் படம்போல் தோணுது அருகில் யாரோ இருப்பதுபோல் அடிக்கடி எனக்கும் தோணுது அணைக்கவும் துடித்து வருது அப்படியே என்னுள் அடங்குது ராத்திரி நேரத்தில் நடக்குது நடப்பதால் பயத்தில் குளிருது நாட்களும் தொடர்ந்தே வருகுது நம்பிக்கை இன்றி இருக்குது ஆண்டவன் நம்பிக்கை வீணாகி ஆனந்தம் கொடுக்க மறுக்குது ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது அதனால் மனமும் கலங்குது இன்பமாய்ச் சிலநாள் இருக்குது இனிமைச் சுகமும் கொடுக்குது இருந்தும் மனதும் நடுங்குது இனிய தருணத்தை  மறைக்குது துடிப்பும் தொடருது தூண்டுது தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது துவளுது தூங்கிட நினைக்குது தூங்கியும் உடம்பும் நடுங்குது கடவுளும் இல்லை தடுக்கவும் கடந்தும் மனதை வதைப்பதை கண்ட மருத்துவம் உள்ளதாய் காட்சிகள் உண்டா நண்பர்களே கனவும் இதுவே என்பதும் கண்டவர் என்போல் உள்ளதை கதையை பலபேர் சொல்வதை கவிதை வடிவில் கொடுத்திட்டேன்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும் பயந்தே ஓடி மறைந்திடுமாம் பகைத்தே நாமும் அடித்தாலே பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டுமாம் வீணாய் நிலத்தைப் போட்டாலே விளையும் நிலமும் கெட்டிடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினாலே வேற்றுமை வந்தே பிரிக்குமாம் விசயம் இன்றி வாதிட்டாலே வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல் இருப்பதைக் கொடுத்தல் நலமாகும் எதிலும் பொறுமை இருந்தாலே எல்லா நலமும் கிடைக்குமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய்க் காரியம் கெடுக்குமாம் பாசம் கொண்டே பழகுங்கள் பகைமை எண்ணம் தவிருங்கள் நேசம் ஒன்றே ஒற்றுமையாய் நேர்மை வழியில் வாழ்ந்திடலாம் ********கவியாழி*******

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,

எனது மலேசியப் பயணம்

Image
       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.    இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது. -----கவியாழி---

ரசித்தவர்கள்