Monday, 30 December 2013

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது

உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எலும்பு தேய்மானம்,அங்கங்களின் செயல்பாடு,மற்ற போன்றவற்றை மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்பேரில்  பரிசோதனை செய்து நமது உடலைப் பேணி காக்கவேண்டும்

 மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி,நடை பயிற்சி  தியானம், யோகா போன்ற  அவசியமான பயிற்சிகளுடன் கீரை,காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வதாலும்  நமது உடல் வலிமையைச் சரிசெய்து கொள்ளமுடியும். மேலும் தொடர்ந்த எட்டு மணிநேர நல்ல உறக்கமும் இருக்க வேண்டும்.

ஆண்-பெண் உடலுறவு என்பது மிகவும் முக்கியமான அவசியமான மருத்துவரின் ஆலோசனையுமான ஒன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பிள்ளைகள் பிறந்து வாலிப வயதை எட்டியதும் உடலுறவு என்பது அவசியமில்லாத ,தவிர்க்கவேண்டியாதாய், தவறான செயலாய் நினைப்பது  தவறென்று  மருத்துவர்கள் சொல்வது உண்மையானதே.

திடீரென  உணவுக்கட்டுப்பாடு,மன உளைச்சல் ,உடற்பயிற்சி இல்லாமை  சரியான நேரத்தில் உணவு உண்ணாமை,வாய்க்கு ருசியான கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை உண்பது  மது,சிகரெட் போன்ற காரங்களாலாலும் தூக்கமின்மை,அசதி போன்றவற்றால் உடல் பலவீனமாகி  உடலுறவின்போது விருப்பமின்மை ,எழுச்சி இல்லாமல் இயலாமை ஏற்பட்டு  வேண்டாத விஷயமாகி அதிகக் கொழுப்பு ரத்தத்தில் சேர்ந்து இதுவும் மாரடைப்புக்கு வழிசெய்கிறது.

இதய நோயைத் தவிர்க்கப் பல காரங்கள் இருந்தாலும் பெண்களால் இதற்குத் தீர்வு காணமுடியும்.ஆண்கள் சோர்வுற்றிருக்கும்போது ஆறுதலான அவசியமான ஆலோசனை சொல்லி மருத்துவ உதவிக்கு அழைத்துச செல்ல வேண்டும்.உடற்பயிற்சியை வலியுறுத்தி நல்ல ஆரோக்கியமான உணவுகள்,பழம் ,உலர்ந்த கொட்டைகள்(முந்திரி,திராட்சை,பாதாம்) கொடுக்க முன்வரவேண்டும். இவ்வாறான வழிகளில் மாரடைப்பு நோயினால் மரணம் ஏற்படுவத் தவிர்த்து ஆரோக்கியமாய் நீண்ட நாட்கள் வாழமுடியும்.

எல்லாக் குடும்பத்திலும் ஆண்களின்  பங்கு தவிர்க்க முடியாதப் பங்களிப்பு அவசியமாகும்.நமது நாட்டின் கலாச்சாரம் பண்பாடு தவிர்த்துக் குடும்பத்தின் மேன்மை பிள்ளைகளின் கல்வி,குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெண்களைவிட எல்லா ஆண்களுக்கும் உண்டு அதனால்தான்  எல்லா நல்ல கெட்ட காரியங்களில் கூட ஆண்களைப் பிரதானமாக வைத்தே செய்யப்படுகிறது. எனவே பெண்களே ஆண்களின் நலனில் எப்போதையும் விட  நோயுற்றபின் அதிக அக்கறையுடன் கவனித்து மகிழ்வாய் வாழுங்கள்

(இது எனது சொந்தக் கருத்து.)


Saturday, 28 December 2013

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே


பள்ளி செல்லும் பிள்ளைகளே
பாடம் படிக்கப் போறீங்களா
நல்ல செய்தி அறிவுரைகள்
நாளும் கற்கப் போறீங்களா

சொல்லக் கேட்ட செய்திகளை
சொல்லி வைத்த உண்மைகளை
மெல்ல மெல்ல உள்மனதில்
மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள்

தாத்தா பாட்டி சொல்வதிலே
தமிழில் சொன்ன கதைகளிலே
படித்தால் தானே புரிந்திடும்
பள்ளியில் இதையும் படிப்பீரே

உலகம் முழுவதும் உங்களுக்காய்
உரிய முறையில் எழுதியதை
பலதும் கற்றுப் பயனடைவீர்
பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர்

இதையே அனைத்து ஆசிரியரும்
எடுத்துச் சொல்லி மாணவர்க்கும்
கதையில் உள்ள உண்மைகளை
கற்றுத் தெளிய  வைத்திடுவீர்

உள்ளம் மகிழப் படித்திடுங்கள்
உண்மை நிலையும் அறிந்திடுங்கள்
உலகம் சிறக்க வாழ்ந்திடவே
உயர்ந்த களமே அமைப்பீரேWednesday, 25 December 2013

வேலைக்கு ஆட்கள் தேவை

வேலைக்கு ஆட்கள் தேவை ,ஆண்-பெண் ,அதிகச் சம்பளம், ஏ.சி வசதியுடன் வேலை வாய்ப்பு,தங்குமிடம் உணவு இலவசம்,குறைந்த நேரம், அனுபவமில்லாத,குறைந்த கல்வித் தகுதி இருந்தால் போதும்,வாகனம் இலவசம்,குழந்தைகள் காப்பகம் உண்டு, போனஸ் ,வீட்டுவாடகை ,
குடும்பத்துடன் தங்குமிடம் இலவசம் போன்ற  பல சலுகைகளுடன் அழைத்தாலும் உள்ளூரில் வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை.

ஆனாலும் மும்பை,குஜராத்,டெல்லி,கேரளா,ஆந்திரா,கர்நாடகா  போன்ற வெளியூர்களுக்குச் சென்று அங்குக் கடுமையாக உழைத்தும் அந்தந்த ஊர்களில் தங்கியும் வேலைச் செய்கிறார்களே ஏன் அப்படி இங்கு நம்மூரிலேயே ஏன் உழைக்க முன்வருவதில்லை .பல நேரங்களில் கொத்தடிமை மீட்பு ,அங்குத் தமிழர்களை அடித்து விரட்டுகிறார்கள்,சம்பளம் கொடுக்கவில்லை  போன்ற எல்லாப் பிரச்சனைகள் இருந்தாலும் உள்ளூரில்  வேலைசெய்வதில்லை 

இது ஏன்? யாரால் ? எப்படி? இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதோ? ஏழ்மை என்பதே தமிழ் நாட்டில் இல்லையோ? அல்லது தொழில் வளம் மிகுந்த நிலையில் உள்ளதோ?.
தமிழர்களின் பொருளாதார நிலை  உயர்ந்து விட்டதோ? இப்படி எண்ணற்ற கேள்விகள் என்மனதில் எழுகிறது ,உண்மையா? உங்களுக்கும் இதுபோல் மனதில் கேள்வி  வருகிறதா? இல்லையா?

இன்று தமிழகத்தில் எல்லா மக்களும் மகிழ்ச்சியாய் உயர்ந்த நிலையில் வாழ்ந்து வருகிறார்களா என்றால் அதுவும் இல்லை ஆனாலும் இங்கு வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை அதனால் தொழிலில் மந்த நிலை ஏற்படுகிறது உற்பத்தி குறைச்சல் ,ஏற்றுமதி குறைச்சல் ,விவசாயம் செய்வதற்கும்  ஆட்கள் இல்லாமல் இருப்பதாகப் பேசப்படுகிறது.ஆனாலும்  மக்கள்  வாழ்ந்து வருகிறார்கள்.

இன்று பெரும்பாலான தொழில் நகரங்களில் வெளியூர் ஆட்கள் வேலைச் செய்து வருகிறார்கள் அதுவும் குறைந்த சம்பளத்துடன் அதிக நேரம் வேலை,கடுமையான உழைப்பு  இருந்தாலும் நிச்சயமான வேலை நிரந்தரமாய்க் கிடைக்கிறது. பணியிடம் அருகிலேயே தங்குமிடம் ,பள்ளி ,
போக்குவரத்து வசதி போன்ற இன்னபிற சலுகைகளுடன் மகிழ்ச்சியாய்க் குடும்பத்துடன் வேலைச் செய்து வருகிறார்கள்.

வெளியூர் ஆட்களை நேரடியாய் நியமனம் செய்யாமல் குத்தகை ஊதிய அடிப்படையில் வேலைகள் விடப்படுவதால் முதலாளிகளுக்கு அவர்களால் எந்தப் பிரச்சனையுமில்லை.சம்பளப் பட்டுவாடா,  ,போனஸ்,ஊதிய உயர்வு ,சீருடை,சிறப்பு ஊதியம் ,விடுமுறை,இதர பல சலுகைகள் போன்ற பல  முதலாளி-தொழிலாளி பிரச்சனையின்றியும் இருப்பதால் நிம்மதியாய்த் தொழில் நடத்த முடிகிறது என்ற வாதமே பெரும்பாலான  முதலாளிகளுக்கு வசதியாய் உள்ளது. 

இதற்குப் பல காரணங்கள் சொன்னாலும் ரயில்,பஸ், போன்ற போக்குவரத்து வசதிகளும் .மேம்பட்ட சாலை வசதியும் ஒரு காரணம் என்றே எனக்குத் தோணுகிறது.இந்தியாவில் எந்தப் மூலையிலும் வேலைக் கிடைத்தால் மகிழ்ச்சியே என்று மற்ற ஊர்களுக்கு சென்று அங்கும் கடுமையான வேலையே செய்து உள்ளூர் மக்களின் பழைய  பழக்கவழக்கங்கள் இன்றி சுதந்திரமான சூழ்நிலை வேண்டியே பலரும்  சென்று விடுவதால் உள்ளூர் வேலையாட்கள் கிடைப்பதில் சிரமம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.

ஆனால் ஒருசிலரே இதனால் மேன்மையான வாழ்க்கையைத் தொடருகிறார்கள்,சிலரோ எனக்கு வேலை கிடைக்கவில்லை என்ற காரணத்தைச் சொல்லி வேலைக்கு செல்வதைத் தவிர்த்து வீணான பிரச்சனைகளுக்கு ஆட்பட்டு விரக்தியான நிலையில் தானும் கேட்டு பிறரின் மனநிம்மதியையும் கெடுத்து வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

வெளியூர் மக்கள் இங்கு வந்து வேலை செய்யும்போது நம்மூர் மக்களுக்கும் வேலை வாய்ப்பு இருக்கிறது.இதில் யோசிக்க வேண்டிய விஷயமென்றாலும்  சமூகத்தில் தானும் மதிக்கப்பட வேண்டும் எந்த வேலையானாலும் பரவாயில்லை என்ற மனமாற்றம்  இருந்தால் எல்லோரும் ஒற்றுமையாக சிறப்பாய் வேலை செய்யவும் வாழவும் முடியும் அயல் நாட்டினர் இங்கு வந்து வேலை பார்த்து செல்லும்போது நம்நாட்டில் வேலைவாய்ப்பு இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை.

Monday, 23 December 2013

விரும்பி உன்னை முத்தமிட...

நண்பரையே இன்று காணவில்லை
நாளும் கடந்து போகவில்லை
எந்நிலையை எடுத்துச் சொல்ல -அவரன்றி
எவரிடமும் மனது இல்லை

பொன்பொருளைக் கேட்டதில்லை
பெரும் தொகையும் தருவதில்லை
என்னிடமும் கிடைப்பதற்கு வழியுமில்லை-அவரும்
எனக்கும் சுமையாய் இருந்ததில்லை

இரவிலின்று தூங்கவில்லை
இன்று மனதில் மகிழ்ச்சியில்லை
என்னவென்று புரியவில்லை -எப்படியோ
என்னிடம் அமைதி இல்லை

திரும்பி வரும் நேரத்தை நான்
திசையெங்கும் பார்த்திருக்கிறேன்
தெருவோரம் நின்று நானும்-உனக்காய்
தேடிவந்து  தவமிருக்கிறேன்

Saturday, 21 December 2013

இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்          எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM) பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள்  எழுதி வருகிறார்.


         இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும்  டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து  அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.


         ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார்.


""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில்  'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு (ரூ.5000) கிடைத்துள்ளது. இதற்கான  விழா வரும்  29-12-2013  ஞாயிறு மாலை சென்னையில்  TAG Centre இல் நடைபெற உள்ளது.  கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்""


  இந்த மகிழ்வான நேரத்தில் நாமும் இணைந்து திரு.செல்லப்பா  அவர்களை வாழ்த்துவோம்

  
           அவரது கைபேசி எண்; 9600141229- தொலைபேசி எண்.044-67453273..கவியாழி.