Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

எப்போதும் வெற்றிபெற...

மழுக்கினால் மீண்டும் கூராகு மறுபடி சிறந்து  சீராகு தடுக்கினாலும் விழுந்து விடா தைரியமாய் நிமிர்ந்து நில்லு களப்பணியில் கவலையின்றி கருத்துடனே செய்ய மறுக்காக் கச்சிதமாய் இலக் கதனை கடைசிவரை முடித்திடு தடுத்திடு மந்தத் தடைகளைத் தகர்த்திட முயற்சி செய்து பகிர்ந்திட்ட காரியம் முடித்து பார்போரை வியக்கச் செய்திடு எப்படியும் எழுந்து நின்று எல்லோரும் வியந்திடவே நீ எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால் எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே (கவியாழி)

பகட்டு வாழ்கையால் பயனேது ?

ஆயிரம் பலதும் சேர்த்தாலும் ஆயுளும் அதிகம் இருந்தாலும் ஆலயம் தோறும் பணமாக ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும் ஊரும் பெரும் செல்வாக்கும் உயர்ந்த பொருளை கொண்டாலும் உற்றார் அருகில் இல்லாத உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா பேரைச் சொல்லி அழைத்திடவும் பேதைமை இன்றி பழகிடவும் நாளும் அருகில் மகிழ்வுடனே நல்ல நண்பர்கள் வேண்டுமடா வாடா போடா என்றழைக்க வாழ்ந்த கதைகளை தெரிவிக்க ஆத்தா அப்பனும் அருகிலின்றி ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா சுற்றமும் சொந்தமும் துணையின்றி சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும் பற்றும் பாசமும் கிடைக்காத பகட்டு வாழ்க்கையால் பயனேது (கவியாழி)

பொறுப்பில்லா பிள்ளையினால்....

பொறுப் பில்லா பிள்ளையினால் பொறுமை யிழந்து  தவிப்பவரே வெறுப் படைந்து  வேதனையால் வெம்பியே வருந்த வேண்டாம் தடுத்திடும் காரண மறிந்து\ தைரியம் தனைக் கொடுத்து மிடுக்குடன் நடக்க சொல்லி மக்களை  நீர் வளர்த்தால் இலக் கங்கே தருகையிலே இயலாமல் தவிக்கையிலே கலக்க மின்றி யோசித்தால் காணும் பலன் கிடைப்பதையும் துடுக்குடனே செய்யும் வேலை துன்பமதைத் தடுக்கு மென்றும் துணிந்து நின்று முயற்சிக்க துணையாய் சொல்லும் வார்த்தை கவனமாக உணர்தினாலே கவலை யெல்லாம் தீர்த்திடுமே கனிவுடனே இருக்கு மெனவே கடுமை யின்றி சொல்வீரே (கவியாழி)

அதிகாலைப் பனிபொழிவால்.....

Image
அதிகாலைப் பனிபொழிவால் ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும் அதன்பின்னே  மழைத்துளியும் அடிக்கடியும் தூரட்டும் மிதமாக மழை பெய்தும் மீண்டும் மகிழ்ச்சி  இருக்கட்டும் பதமாக சிணுங்கலோடு தொடக்கம் பக்குவமாய்  உணர்ந்து ரசிக்கட்டும் இடையிடையே கதைச் சொல்லி இதமாக தழுவ வேண்டும் இடியுடன் மழை பொழிந்தால் இறுக்கி அணைக்க வேண்டும் மெலிதான மெல்லிசையை மெய்மறந்து கேட்கவேண்டும் மேனியெங்கும் சிட்டெறும்பாய் மெதுவாக கவ்வ வேண்டும் உடலெங்கும் கொடிபோல தழுவ வேண்டும் காதல் உணர்சிகளை எழுச்சியுடன் ஒற்றுமையாய் தீண்டவேண்டும்

பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....

குற்றம் மட்டும் சொல்லாதீர் குறையைச் சுட்டி நகைக்காதீர் சுற்றம் நட்பும் சேர்ந்தேனும் சொல்லி  மாற்ற தவறாதீர் நக்கல் செய்து பேசுவதும் நல்லதைச் சொல்ல மறுப்பதுமே சிக்கல் கொண்டு இருக்கையிலே சொல்வதை முனைந்து சொல்வீரே அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள் ஆளுமை கற்க உதவுங்கள் மாணவ பருவ  வாழ்கையுமே மகிழ்ந்தே இருக்க வைப்பீரே அக்கம் பக்கம் பழகுவதை அருகில் உள்ள நண்பர்களை சுற்றம் உறவும் இருப்பதையுமே சொல்லி புரிய வைத்திடுங்கள் நிச்சயம் முடிந்தால் கல்விக்கு நேரமும் பணமும் செலவழித்து பக்கத் துணையாய் இருப்பீரே பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே

ரசித்தவர்கள்