Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கடவுளைக் கண்டால் சொல்லுங்களேன்.......

கடவுளைக் கண்டால் உடனடியாய் கண்டவர் வாழ்க்கைச் செழித்திடவே உடனே வரமும் கேட்பீரே உயரும் நிலையைப்  பெறுவீரே கடனே இல்லாத வாழ்க்கையைக் கஷ்டம் தராத நாட்களை தடமே முடியா பாதையை தெரிந்தும் சொல்லச்  சொல்வீரோ பகைமை இல்லா உறவுகள் பணமே கேட்கா நண்பர்கள் குணமே புரிந்த மனைவியும் கொடுமை சொல்லா பிள்ளையும் படமே எடுக்கா நாகமும் பயமே இல்லா பறவையும் பசுமை எங்கும் மாறாத படைப்பை கேட்டுப்  பார்த்தீரா எதிலும் மகிழ்ச்சி கிடைக்கவே என்றும் முயற்சி செயிக்கவே எண்ணம் முழுதும் உண்மையாய் எப்படி உதவி செய்வாரோ மனதில் என்றும் அன்புடனே மற்றவர் உயர வார்த்தைகளை தினமும் ஒருவர் என்றழைத்து தெரிந்த  வரத்தைக் கொடுப்பாரோ நன்மை செய்ய சொல்லுங்கள் நல்லவர் பெருக வாழ்த்துக்கள் நாளும் மகிழ்ச்சிப் பெறவே நல்ல வரங்களைக் கேளுங்கள் (கவியாழி)

சிந்தை யது மங்கும்.....

சிந்தை யது மங்கும் சித்தம் மழுங்கி நடுங்கும் வித்தை செய்யும் மனதால் விடியும் வரை கலங்கும் சொந்தமும் தள்ளி வெறுக்கும் சொல்லைக் கேட்க மறுக்கும் சந்தங் களின் றின்றி சரீரம் அதிரக் கத்தும் வேந்தன் முதல் வீரன் வேட்கை யுள்ள யாரும் விரும்பி அருகில் வந்தால் வெட்டித் தலை சாய்க்கும் எங்கும் இருள் பரவி இருட்டாய் மனதுள் இருக்கும் அருகில் வர பயந்தே ஆட்டமாய் ஆடி ஒடுங்கும் தூக்க மின்றித் தவித்தே துயரம் கொள்ளும் மனிதன் தீர்க்க வரும் நிகழ்வால் துயரம் பறந்தே போகும் (கவியாழி)

நட்பை நானும் மறக்கவில்லை

பணத்தை நானும் மதிப்பதில்லை-அதனால் பணமும் என்னிடம் தங்குவதில்லை தப்பாக நட்பை சொன்னதில்லை-இன்றும் தவறாக யாரிடமும் பழகுவதில்லை தோல்வியின் முகத்தை ரசித்ததுண்டு-அங்கே தோழனின் நட்பை கண்டதில்லை விடியும்வரை நான் காத்திருந்து -விளக்கை விரைந்தும் அணைத்த தில்லை துணையாய் நானும் இருந்ததுண்டு-அன்பாய் துணிந்து நெருங்கி வந்ததுண்டு நன்றி மறந்து வாழவில்லை-அதையும் நானும் மறுத்துப் பேசவில்லை கொள்கை மறந்து நினைவில்லை-என்றும் கோழையாக நானும் விரும்பவில்லை இத்தனை தூரம் வருவதற்கு-நட்பே இணைத்து வந்ததை மறக்கவில்லை (கவியாழி)

குழந்தைப் பாட்டைப் பாடுங்கள்

பூஜ்யமும் ஒன்றும் ஒன்று புவியில் பிறந்திட்டாய்  இன்று 0+1=1 ஒன்றும் ஒன்றும் இரண்டு அப்பா அம்மா இரண்டு 1+1=2 இரண்டும் ஒன்றும் மூன்று உன்னோடு சேர்த்து மூன்று 2+1=3 மூன்றும் ஒன்றும் நான்கு பாப்பா பிறந்தால் நான்கு 3+1-4 நான்கும் ஒன்றும் ஐந்து தாத்தா பாட்டியும் ஐந்து 4+1=5 ஐந்தும் ஒன்றும் ஆறு நண்பனைச் சேர்த்தால் ஆறு 5+1=6 ஆறும் ஒன்றும் ஏழு புறப்படும் நேரம் ஏழு 6+1=7 ஏழும் ஒன்றும் எட்டு படிப்பில் கவனத்தை எட்டு 7+1=8 எட்டும் ஒன்றும் ஒன்பது தூங்க செல்வாய் ஒன்பது 8+1=9 ஒன்பதும் ஒன்றும் பத்து உணரும் வயதும் பத்து 9+1=10

ஏற்காட்டில் செய்த சமூக நலப்பணிகள்

Image
    1980 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்தபோது  NCC,NSS  போன்ற சமூகப்பணி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. படிக்கும்போதே   வாய்ப்புக் கிடைத்ததால் நான் பல முகாம்களில் பங்குகொண்டு கிராமங்களுக்குச் சென்று சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ,மாணவர்களுக்கு கல்விப் பற்றிய அறிவுரைகள் கோவில்களுக்கு வெள்ளையடித்தல் சாலை வசதி மேம்பாடு போன்ற சமூக அக்கறை கொண்ட பணிகளில் நாட்டம் ஏற்பட்டது, எனக்கு ஏற்பட்ட சமூக சேவை ஈடுபாடு காரணமாக சேலத்தில் இயங்கி வந்த சேலம் மிட்டவுன் ஜேசிஸ் சங்கத்தில் உறுப்பினரானேன் .அங்கு பல சமூக சேவைகள் செய்யும் நிகழ்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பும் எனக்கு கிட்டியது இதன் காரணமாக இதையே நாம் தொடர்ந்தால் என்ன என்ற எனக்குள் மனதில்  ஏற்பட்ட கேள்வியின் காரணமாகவே பின்னாளில் ஏற்காட்டில் எனக்கு சமூக சேவை செய்யும் எண்ணத்திற்கு தூண்டுகோலாய் இருந்தது.       1986 ம் ஆண்டு நிரந்தர அரசாங்க பதவி நான் விரும்பிய எற்காட்டிலேயே காப்பீட்டுத்துறை வளர்ச்சி அதிகாரியாக நிரந்தர வேலையில் பணி நியமனம் செய்யப்பட்டேன்.பணி நிமித்தமாக நான் எல்லா வங்கிகளுக்கும் சென்று வந்ததால் என்னைப் போன்ற இளையோர்களுடன்சேர்ந்து பழகும் வாய்ப்

ரசித்தவர்கள்