Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சொல்வீரே... நல்லோரே...

இல்லா நிலையில் உள்ளோர்க்கு-இயைந்து இருப்பதைக் கொடுக்கச் சொல்வீரே பொல்லா வார்த்தையைச் சொல்லாமல் -புரிந்து புகழை மட்டும் சொல்வீரே நல்லோர் வாழ்த்த நாளும்- நகைந்தே நட்புடன் வாழச் சொல்வீரே எல்லா நாட்களும் நல்லதென்றே -உணர்ந்து எதையும் மகிழ்ந்தே சொல்வீரே தினமும் நல்ல வார்த்தைகளைத் -தொடர்ந்து தெரிந்தே வாழ்த்தச் சொல்வீரே (கவியாழி)

புயல் மழைக் காலங்களில்....

புயல் மழைக் காலங்களில் எங்கும் புறப்பட்டுச் சென்றாலே மூக்குச்சளி அழையாத நண்பனாக உறவாடும் ஆறுநாள் தொடந்தே இருக்கும் அடிக்கடித் தும்மலும் அடங்காது அழும்படி செய்து விடும் தலைவலி மிகுந்து வேலை செய்ய தடையாக இருந்தே தொல்லையாக்கும் கயல்விழிக் காது தொண்டை கரகரவென்றே இருந்தும் வலிக்கும் அயல்நாட்டு மருந்து தின்றும் அடங்காமல் தொடர்ந்து வரும் ஐங்கடுகு சூரணதைக் குடித்து அடிக்கடி மிளகு ரசம் பருகி துளசி தூதுவளை செடியின் தூய இலைதனை மென்றாலும் வயல் நண்டு  ரசம் தொடர்ந்து வாரம் இருமுறை குடித்தால் வரும் துன்பம் நீங்கித் தீரும் வழக்கமான வேலைகள் தொடரும் (கவியாழி)

அரசுபள்ளிப் ஆசிரியர்கள்,மாணவர்கள் -அன்றும் இன்றும்

கிராமப்புற மற்றும் நகர்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ஆரம்ப பள்ளிகளின் ஆசிரியர்களே முக்கிய பங்காற்றினார்கள் என்றால் மிகையாகாது.குறைந்த எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதை ஊக்கப் படுத்தும் விதமாக சொந்த பணத்தில் மாணவர்களுடைய கல்விக் கட்டணத்தை செலுத்தியும் ஆசிரியர்களே அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று மாணவர்களை அழைத்துப் பாடம் சொல்லித்தந்தார்கள். பெற்றோர்களையும் சந்தித்து கல்வியறிவின் தேவையையும் படித்தால் பிற்காலத்தில் அறிவு மேம்பாடு ,வாழ்க்கைத்தரம் உயர்வு அரசு வேலை போன்ற அறிவுரைகளைச் சொல்லி மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வற்புறுத்துவார்கள்.மாணவர்களை படிக்க வைக்க வேண்டி அரசு வழங்கும் மதியஉணவுத் திட்டத்தில் ஏழை மானவர்களைச்  சேர்த்து மதிய உணவு தந்து படிக்க வைத்தார்கள்.மாணவர்களின் குறைநிறைகளை பெற்றோர்களுக்குத் தெரியப் படுத்தி மாணவர்களின் கல்விக்குப் பேருதவி  செய்தார்கள் நானும் அரசுப் பள்ளியில்தான் எட்டாம் வகுப்புவரைப் படித்தேன்.நான் ஆரம்பக் கல்வி படிக்கும்போது மாணவர்கள் மேல் அக்கறையுள்ள பல ஆசிரியர்கள் தாங்களாகவே மாணவர்களை அழைத்துவர கிராமத்திற்குள் செல்வார்கள

இறைவா எங்கே நீ இருக்கின்றாய்

இறைவா !எங்கே நீ இருக்கின்றாய் இதையும் பார்த்தும் சிரிக்கின்றாய் மறையோர் புலவர் இருந்தாலும் மனதைக் கெடுத்தே பாடுகின்றார் பலபேர் அறியா மொழியாலே பக்தி பாடலெனப் பாடுகிறார் சிலபேர் தமிழில் பாட வந்தால் சினமே கொண்டே தள்ளுகிறார் தட்டில் விழுகின்ற காசைப் பார்த்து தருவார் பூவும்  குங்குமம் திருநீறுமே பொட்டில் அறைந்தது போல் பேசியுமே புறமே சற்றே தள்ளிச் சாடுகின்றார் மனமே வருந்தி வருவோரை தினம் மனதில் உன்னையே  நினைப்போரை கனமே அருகில் பார்க்க விடாமல் கடிந்தே உடனே துரத்து கின்றார் இருந்தால் இதையும் பார்த்துக் கொண்டு எப்படி அங்கே நீ  வாழுகின்றாய் தப்புகள் உனக்கும் தெரியலையா தண்டனை  யாருக்கும் புரியலையா? (கவியாழி)

36வது வயதிலும் அப்பாவிடம் அடிவாங்கினேன்.....

Image
எனக்கு அப்போது 36 வயது , நான் சென்னையில் எனது (United India Insurance)காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணிபுரிந்து மனைவி மகளுடன் சென்னையில் தனியாக வசித்து வந்தேன். நான் அப்பா அம்மாவை பார்க்க நினைத்தாலும்  அடிக்கடி எனது சொந்த ஊரான சேலத்திற்குச் செல்வதில்லை .ஊரில் எனது இரண்டு சகோதர்களும் நான்கு சகோதரிகளும் 32 பேரன் பேத்திகளும் மற்றும் எல்லா உறவினர்களும் வசித்து வருகிறார்கள் இருந்தும் என்னையே வரவழைப்பார். நான் அவரை நேரில் சென்று பார்க்க வேண்டி அவராகவே பொய்யான காரணத்தைச் சொல்லி உடல்நிலை சரியில்லை,மனநிலை சரியில்லை என்று சாப்பிடாமல் இருந்து என்னை வரவழைப்பது வழக்கம்.நானும் நேரில் சென்ற உடன் எழுந்து என்னுடன் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருப்பார் அதைப் பார்க்கும் எனது அண்ணனும் தம்பியும் செல்லமான பொறாமையுடன் ,நீயே சென்னைக்கு அழைத்துச் செல் என்று சொல்வார்கள். அப்பா என்னைப் பார்த்து சிரித்து நான் அங்கெல்லாம் வரமாட்டேன் என்பார். இதே கார்த்திகை மாதத்தில் அப்போது அவருக்கு வயது 83 இருக்கும் நல்ல ஆரோக்கியமாகவும் இருந்தார்.அப்போது சிறிய அளவில் கால்வீக்கம் மற்றும் கால்வலி வந்து நடக்க முட

ரசித்தவர்கள்