Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

கண்ணன் வருவானா?முத்தம் தருவானா?

Image
(நன்றி கூகிள்) வெண்ணையைத் திருடிய கண்ணன் வேதமும் சொல்லிடும் மன்னன் ராதையை துரத்தியே மகிழ்ந்தான் ரசித்தவர் விருப்பமும் அதுதான் இன்றும் தொடரும் கனவுகள் இதுபோல் இருப்பதும் தவறா கண்ணனின் லீலைகள் கண்டதால் காண்பவர் உள்ளமும் மகிழ்ந்ததால் திண்ணையில் கதைகளை மறந்து திரையில் காணும் நிகழ்வை இன்னமும் ஏங்கும் பெண்டீர் இருப்பதும் இல்லைத் தவறாய் பூவையே கேளடி உண்மையை பூவினுள் வண்டென புகுந்தே புதுக்கதை என்னிடம்  கேட்டே பொழுதும் தொடர்வதும் ஏனோ பேதையே  தெரிந்தால்  சொல்லடி போதையே எனக்கு குறையலை ஏனடி நில்லடி பாரடியே ஏக்கமும் அவனென கூறடியே பாவையர் ஏக்கமும் தணிக்க பாவலன் அவனென சொல்லடியே தாகமும் தணிந்திட தீர்ந்திடவே தலைவனும் அவனென எண்ணடியே மேனியில் வண்டெனப் புகுந்தே மீட்டிடும் ராகங்கள் இனிதே தேடியே தொடருதே மீண்டும் திருடியே சென்றவன் கண்ணன் வாடிய என்முகம்  பார்க்க வருவானா? மீண்டும் தருவானா?

காடுகளில் மரம் வளர்ப்போம்

காடுகளில் மரம் வளர்ப்போம் கழனி ஓரம் செடி விதைப்போம் நாடு முழுக்க  இயற்கையை நாடிச்  செல்ல அறிவுறுத்துவோம் ஆடுமாடு மேச்சலுக்கு அங்கங்கே தேடித்தேடி செடி வளர்ப்போம் அதனுடைய சாணத்தையே அடியுரமாய் போட்டிடுவோம் சாலை ஓரம் மரங்களும் சமதூரம் நட்டு வந்து வேளை தோறும் நீரூற்றி வளரும்  வரை காத்திடுவோம் தூரம் செல்லும் மக்களுக்கு துணையாக நிழல் கொடுப்போம் தொடர்ந்து வரும் சூரியனை தூரமாக நின்று பார்ப்போம் ஏழைக்கெல்லாம் செடி கொடுத்து ஏரிக்குளம் அருகில் வளர்த்து பாலை நிலமும் பக்குவமாய் பரந்த காட்டையும் அமைப்போம் வீடுதோறும் பச்சைக் காய்கறிகள் விளைவித்தே தினம் உண்போம் காடு கழனி குன்றெல்லாம் காக்கும் மரங்களை  வளர்ப்போம்

இயற்கையைப் போற்றுவோம்

அடர்ந்த மரங்கள் தெரிந்து அங்கங்கே புல்வெளிகள் படர்ந்து தொடர்ந்த காடுகள் மறைந்து தொலைந்தன பசுமை செடிகள் விடிந்ததை சொல்லும் குயிலும் வேடிக்கையாய் பேசும் கிளிகளும் எழுந்ததும் குளித்திடும் காக்கையும் எண்ணிக்கையும் குறைந்த குருவிகள் வேடிக்கைக் காட்டும் குரங்குகள் வேகமாய் செல்லும் பாம்பும் பழங்களைத் தின்ற வௌவாலும் பார்த்திட மகிழ்ந்தே இருந்தன இரம்மியமான இயற்கைச் சூழல் இரவிலும் மகிழ்ச்சியாய் இருந்ததை தொலைத்திடநாமும் காரணமாய் தொடர்ந்தே இருக்கிறோம் வாழ்கிறோம் இயற்கைப் போற்றி வாழ்வதினால் இரசாயனம் கலக்காத காய்கறிகள் தூய்மையான காற்றுடன் மீண்டும் தொடர நாமும் வழிசெய்வோம்

என்னோடு புகைப்படமெடுக்க ஆர்வமா?

01.09.2013 ல் நடைபெறும் பதிவர் திருவிழாவை முன்னிட்டு என்னோடு படமெடுக்க வாருங்கள் எத்தனைபேர் ஆர்வமென கூறுங்கள் கண்ணாக மணியாக காத்திடவே கட்டணமும் ஏதுமில்லை அறியுங்கள் பின்னாத வலையோடு ஆர்வமாய் பின்னூட்டம் போடுகின்ற உங்களுக்கு என்னாலே முடிந்தஉதவி எல்லோர்க்கும் எண்ணற்ற வாழ்த்துக்களைச் சொல்லுகிறேன் நண்பனாக ஏற்றுள்ள தங்களுக்கு நட்புக்காக இதையுமே  செய்வதற்கு பொன்னான நேரத்தை தந்திடுவேன் புகழோடு நட்பையுமே போற்றிடுவேன் கடைவீதி நண்பரிடம் செல்லாமல் கருத்தாய்வு கூட்டங்களில் கலந்து படைக்கூட்டம் எல்லோரும் அன்பாக பகிர்ந்திடுங்கள்  அன்புடனே நன்றியுமே முன்கூட்டி எல்லோரும் பதிவுசெய்து முறையாக அனுமதியும் கிடைத்திடவே குறையாத ஆர்வமுடன் வாருங்கள் கொடுக்காமல் படம்பிடித்துச் செல்லுங்கள் உடனே முன்பதிவு செய்யுங்கள் இச்சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே ---கவியாழி---

இரவெல்லாம் மழை துளிகள்

இரவெல்லாம் மழை துளிகள் இமைமூடா சிந்தனைகள் மிதமான குளிர் காற்று மீண்டு வரும் நினைவுகளால் மழைநேர பொழுது என்னை மறந்த நாட்களை நினைக்கிறது பகல் வேளைக் காட்சிகளாய் படம் காட்டிச் செல்கிறதே மகிழ்ச்சியை மறந்து நானும் மழை யழகை ரசிக்கின்றேதே மரம் கொடிச்  செடிகளும்  மலர்ந்து நிற்பதை காண்கிறதே இமைமூடா நொடிப் பொழுதை இன்முகமாய் வேண்டுகிறது தேநீரும் பழரசமும் தேடியே திசை யெங்கும் பார்க்கிறது கனநேர மழை வீழ்ச்சி காதோரம் இனிக்கிறது கண்ண யர்ந்து தூங்கிடவே கட்டளையும் எனக்கு வருகிறது

நண்பர்கள் தினம்

ஊருமில்லை உறவுமில்லை உடன்பிறந்த சொந்தமில்லை பாசமான பந்தமில்லை பிரிந்திடாத நட்பே உண்மை தேவையென வரும் போதும் தேடிவந்து உதவி செய்யும் தோழமையின் தொடர் அன்பை தொடரவுமே  நன்றி சொல்வோம் நாளை முதல் நன்றியினை நண்பருக்கு வாழ்த்து ரைப்போம் நலவனாய் மாற்றிடவும் நாம் நட்பாக தொடர்ந்து செல்வோம் காலை மாலைக்  கைகூப்பி கண்டவுடன் வாழ்த்து சொல்வோம் கன்னியரும் காளையரை கண்டதுமே கைபிடித்து மகிழ்ச்சி செய்வோம் வேலை இந்த வேளையிலே வேதனைகள் மறந்து சிரித்து வேற்றுமையை தள்ளி வைப்போம் வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழ்வோம்

பதிவர்கள் அனைவரும் வருக.

Image
இம்மாநாடு சிறப்பாக நடைபெற தங்களால் முடிந்த பண உதவியை (இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டு )விழா ஏற்பாட்டாளர்கள் ஆலோசனையின் பேரில் கீழ்க்கண்ட வங்கி கணக்கில் நன்கொடைகள்  வரவேற்கப்படுகின்றன First Name           : Raja (நம்ம அரசனின் இயற்பெயர்) Last Name           : Sekar Display Name      : RAJA. S Account Number : 30694397853 Branch Code        : 006850 CIF No.                : 85462623959 IFS Code             : SBIN0006850 MICR Code         : 600002047 Branch                 : SBI Saligramam Branch  Address               : 49, Arcot Road, Saligramam , Chennai, City Pin - 600093 Contact                : 044- 24849775 பணம் செலுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தொடர்புக்கு:  அரசன்(ராஜா)  -                                                   கைபேசி எண் - 9952967645 --கவியாழி--

குடும்பம் சிறக்கச் செய்வீர்

மனமே மனிதனின் எதிரி மாற்றமே அவனின் நண்பன் தினமும் நல்லதை செய்தால் திடமாய்  மாறும் மனிதமே கெடுதல் செய்யா மனதே கொடுக்கும் நன்மை நன்றே அடுத்தவர் மனதை  வருத்தி ஆறுதல் சொல்ல வேண்டாமே துணையாய் நல்ல வார்த்தை துயரம் போக்க இயலும் துணிவு என்று நினைத்து துச்சம் கொள்ள வேண்டாமே பழிகள் செய்யா வாழ்வும் பழுதாய் போனதும் இல்லை பயந்தும் வாழ்வோர்  என்றும் பெருமை பேசிய தில்லையே கொடுத்தும் உதவி செய்து கோழை யாகக  வேண்டாமே கொள்கை நன்றே வகுத்து குடும்பம் சிறக்கச் செய்வீரே

ஏழையுமே ஏழையாய் ......

ஏழையுமே ஏழையாய்  இல்லை ஏளனமாய் சொல்ல வில்லை எழுச்சியாக  வளர்வ தில்லை ஏற்றமிகு  வாழ்க்கை யில்லை குற்றமுடன்  சொல்ல வில்லை கொள்கையிலே மாற்ற மில்லை கூடி வாழும் வாழ்கையினை கெடுத்ததாக வாழ்வ தில்லை கோழைகளாய் இருந்ததில்லை கொடுத்தவரை மறப்ப தில்லை கொடுப்பதிலே குறையுமில்லை கொடுத்தவரைக் குறைத்ததில்லை போதுமென்ற மனதே எல்லை போட்டிப் போடுவது மில்லை பொக்கிஷமாய் நல்லுறவை பேணிக்காக்க தவற வில்லை நாளைக்கான தேவையினை நாள்தோறும் நினைப்ப தில்லை நன்மையென அறிய வில்லை நாட்டுநடப்பு  தெரிவ தில்லை வேலையுமே  நாளும்  மில்லை வீட்டில் மட்டும் பஞ்சமில்லை விருந்தினரும் வந்து விட்டால் விருந்தளிக்க மறுப்ப தில்லை பேழையாக நட்பதுவை  அவன் பிரிந்து நின்று பார்த்த தில்லை பெற்றவரை விடுவ தில்லை பேணிக்காக்க தவற வில்லை

புலவர் அய்யாவின் வருகை

Image
 மதிப்பிற்குரிய புலவர் ராமநுசம் அய்யா. ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா முடித்து இன்று 18.08.2013 காலை 8.30  மணிக்கு புலவர்.அய்யா மகிழ்ச்சியுடன் வீடுதிரும்பி விட்டார்  மகிழ்ச்சியை  என்னோடு பகிர்ந்து உற்சாகத்துடன் இருக்கிறார்  என்பதையும்   தெரிவித்துக் கொள்கிறேன். அய்யாவின் பிரத்யோகப்படங்கள் மற்றும் பதிவுகள் இனித்  தொடந்து அய்யாவின் தளத்தில் வெளிவரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்

நேற்று -இன்று வாழ்க்கை

 கடந்த கால வாழ்க்கைமுறை ஈரெட்டில் கல்லா கல்வி. பதினாறு வயதுக்குள் கல்வியின் அவசியத்தைப் புரிந்து  படிக்கவேண்டும் மூவெட்டில் ஆகாத்திருமணம் இருபத்திநாலு வயதிற்குள் திருமணம் செய்யவேண்டும் அல்லது அதைப்பற்றி முயற்சியும் வேண்டும் .இதற்குள்  செய்யும் திருமணம் இனிமையை  தரும் என்பதே சிறப்பு. நாலெட்டில் பெறாப்பிள்ளை முப்பத்திரெண்டு வயதிற்குள் பிள்ளைப்பேறு அடைந்திருக்க வேண்டும்  அல்லது தகுதியை நிருபிக்க வேண்டும்.அதற்குமேல் பெற்ற பிள்ளைக்கும் பெற்றோருக்கும் புரிதல் இருக்காது . ஐயெட்டில் சேராச் செல்வம் நாற்பது வயதிற்குள் தனியாக பணம் சேர்த்து வீட்டையும் கட்டி செல்வத்தையும் தேடி வைத்து விடவேண்டும். இதை பெரியோர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன் ஆனால்.... இன்றைய வாழ்க்கை முறை 1-5       குழந்தைப் பருவம் மகிழ்ச்சியானது மகிழ்வார்கள் 5-25     படிப்பு படிப்பு வேறெதுவும்  முடியாது 25-35   வேலை கிடைத்தல்,திருமணம், உழைப்பு,சொத்து சேர்த்தல்  35-40   சேமிப்பு  ,மனக்குழப்பம் 40-60 பிள்ளைகளின் வாழ்க்கைப் பற்றிய  நிம்மதியில்லாத நிலை இறுதிவரை அவர்களின் நல்வாழ்வு குறித்த

மனமே. தினமே உன் குணமே

ஆற்றின் வழியைப்போல் தினமும் அகன்றே நெளிந்து விரிந்தும் மாற்று வழியில்லா மனமே மாற்றமே உனது வாழ்க்கையா போற்றும்போது புகழ்ந்தே இருக்கிறாய் பூரிப்பால்  கனிந்தே புன்னகையாகிறாய் நேற்று நடந்ததை மறந்துவிடுகிறாய் நிம்மதியாய்  மகிழ்ச்சியில் சிரிக்கிறாய் ஏற்றம் கொண்டாலும் மகிழ்கிறாய் ஏமாந்து போனாலும் அழுகிறாய் தூற்றும்போது கோபம் கொள்கிறாய் துடித்தெழுந்தே தீயாய் எரிக்கிறாய் தோற்றதால் துவண்டு விழ்கிறாய் தோல்வியால்  துள்ளி எழுகிறாய் ஊற்றுவழி தெரிந்தும் உண்மையாய் ஒன்றும் யரியாது வாழ்கிறாய் மாற்றம் தேவையெனில் அழிக்கிறாய் மாறியதும் உடனே அமைதியாகிறாய் மக்கள் வாழவும் வழியாக்கும்நீ மனதில் நலமாய் தங்கிடு ஏய் மனமே ...... இனிமேல்  மாறிவிடு மனிதனை வாழவிடு மனதில் நிம்மதி கொடு

நண்பனே நீயும் நலமா?

நண்பனே நீயும் நலமா நங்கையின் உடலும் சுகமா பண்பனே ஏன் பதறுகிறாய் பயனின்றி ஏன் அழுகின்றாய் உன்துணை நண்பர்கள் இருக்க ஊராரும் உறவுகளும் உதவ பெண்துணை  பிணியும்தீரும் பிறந்திடும் நல்கால முனக்கே சிந்தனை முற்றும் மறந்திடு சேர்ந்திட்ட நட்பால் மகிழ்ந்துடு கந்தனை கடம்பனை நினைத்திடு கஷ்டமும் விலகிடும் தெரிந்திடு இத்துணை மக்கள்  வாழ்கையில் இல்லா துயரம் பார்த்தாயா இதுவும் உனக்கு  சோதனையே இனிமேல் தீர்த்திடும்  வேதனையே தனமாய் தருவார் நண்பர்களே தயவாய் இருப்பார் சொந்தங்களே பிணியும் தீர்த்திடும் உள்ளத்திலே பிறகேன் கவலை வாழ்கையிலே

காவிரித்தாயின் வருகையும் கண்கொள்ளாக் காட்சிகளும்

Image
நான் கடந்த  வாரம்எனது மகிழுந்தில்  ஒகேனக்கல் செல்வதாய் திட்டமிட்டு தருமபுரி வழியாக பெண்ணாகரம் என்ற ஊர் சென்று ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளிக்கலாமென ஆவலோடு சென்றேன் .ஆனால் அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக வழியிலேயே காவல்துறையினர் அன்போடு மறுத்தார்கள்.ஆனாலும் சில கட்டுப்பட்டுகளுடனும் அங்கு சென்றாலும் குளிக்க தடை இருப்பதால் அனுமதிக்க மாட்டர்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.அவர்கள் சொல்லியதுபோல் அருவிப் பக்கம் யாரையுமே அனுமதிக்கவில்லை.அங்கே  கடை வைத்தவர்களையும் அனுமதிக்கவில்லை.எக்கசக்க கட்டுப்பாடு  இருந்தாலும் வேறு வழியாக நீர் வரும் வழியில் சென்றுப் பார்த்து மகிழ்ச்சி அடைந்ந்தோம். நீர் வரத்து அதிகமாக இருகரைகளையும் அடக்கி கரைபுரண்டோடியது  கண்டதும் பயமும் தொற்றிக் கொள்ள  குளிக்க முடியாமல் திரும்பினோம் ஒகேனக்கல் அருவி அருகே எடுத்தப் படங்கள் ஒகேனக்கல் சென்று விட்டு மீண்டும் பெண்ணாகரம் வந்து மேச்சேரி வழியாக மேட்டூர்அணை அணையாவது பார்க்கலாம் என்று வந்தால் அணையை ஒட்டிய பதினாறு கண் வழியே செல்லவும் தடை இருந்ததால் .மேட்டூர் அணை நிரம்பி வழிந்த காட்சியைப் பார்த்துவிட

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு

"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" இந்த பழமொழியை அறியாதவர் சொல்லாதவர் பெரும்பாலும் இருக்க முடியாது.காரணம் இதன் தனித்துவம் அப்படி.எல்லா விசயங்களிலும் எல்லோரும் சொல்லும்படியாய் இருக்கும் சாப்பிடும் உணவாக பழமாக மேலும் நட்பாக, எதிரியாக,கோபமாக ,சொல்லாக இருந்தாலும் தொழிலாக ,பயணமாக ,தூக்கமாக ஏக்கமாக இப்படியே நிறைய விசயங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். என்ன இருந்தாலும் தமிழ்ப் பழமொழியை நமது சொல்லாடல் சிறப்பாக சொல்லவே இப்படி பழமொழிகள் மூலம்  நமது முன்னோர்கள் சுருங்க சொல்லி விளங்க வைத்தார்கள்.ஆயிரம் அர்த்தங்களை இரண்டே வரிகளில் ரத்தினச் சுருக்கமாக சொல்லிய நமது வள்ளுவர் பெருமான்கூட இதுபற்றி சொல்லி இருக்கிறார். நாம் உண்ணும் உணவு நமது உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது  என்பது உண்மைதான்.அதற்காக எப்போதும் எல்லா உணவு வகைகளையும் பிடிபிடியென்று சாப்பிட்டு  விட்டால் செரிமானம் செய்ய நேரமும் காலமும் இருக்காது அதனால்தான் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அவயங்களைப் பாதிக்கிறது என்பது எவ்வளவு உண்மை. அதுபோலவே பணம் பணம் பணம் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் முடிவு என்பது நமது என்னத்தைப் பொறுத்தத

கண்தானம் செய்வீர்.........

Image
                 கண்ணே விழியே கயல்விழியே காண்பது அனைத்தும் உன்எழிலே என்னே சிறப்பு நான் பார்க்க எப்படி இறக்கும் நீ நோக்க எங்கினும் கண்டிடும் எழிலழகை எல்லா நிறத்தின் கலையழகை அறிந்தவர் தெரிந்தவர் அனைவரையும் அறியத்தானே கண் படைத்தான் இப்படி சிறந்த அவயத்தை எப்படி வீணாய் அழித்திடலாம்  இறந்தும் தானம் கொடுத்திட்டால் எழிலை மீண்டும் பார்த்திடலாம் ஆணோ பெண்ணோ அனைவருமே  அவயம் உதவும் மனமிருந்தால் கண்ணின் மணியைத் தந்திடலாம் கடவுள் படைப்பாய் வாழ்ந்திடலாம் இறந்ததும் உலகம் இருண்டதாய் இப்படி நாமேன் யோசிக்கணும் இரண்டு விழிகளும் தானம்செய்வீர் இருவர் வாழ்வில் ஒளிகொடுப்பீர் இதயங்கள் போற்ற வாழுங்கள் இறைவனின்செயலைச் செய்யுங்கள் விழியே இன்றி வாழ்வோருக்கு விடியல் கிடைத்திட உதவுங்கள்

சுற்றமும் நட்பும் எங்கே?

சுகம்வரும் செல்வமும் சேரும் சுற்றமும் நட்பும் சூழ்ந்துவரும் அகம் மகிழ அன்புடன் தேடிவரும் அனைத்தும் மகிழ்ந்தே  பணம்தரும் வினைசேரும் விதியும் மாறும் வீழ்ச்சி கண்டபின்னே தேடும் விடியலே கேள்வி கேட்கும் விரும்பிய எல்லாமே போகும் சுமையோடு கடன் சேர்ந்தால் சுற்றம் எங்கே நட்பு எங்கே சோதனையை மறப்பதெங்கே சொந்தமும் சென்ற இடமெங்கே நிம்மதி எங்கே  நீதிஎங்கே  நித்தமும் மகிழ்ந்த நண்பநெங்கே பணம் எங்கே பாசம் எங்கே பகைவனைத் தவிர தெரிந்தவனங்கே அற்பமாய் வாழும் வாழ்க்கையை அன்றே மறந்து திருந்திடு ஆணவம் அழியும் நேரத்தில் அதிசயம் நடக்கும் புரிந்திடு  உலகம் ஒருநாள் மாறும் உள்ளம் மகிழ்ச்சியில் சேரும் கஷ்டமும் தீர்ந்தே இனிமேல் கவலை எனக்கும் தீரும் நேற்றைய வாழ்வும் உணமையல்ல நடந்ததும் முடிந்ததும்  வாழ்க்கையல்ல நேர்மை மட்டுமே நிரந்தரமாய் நித்தமும் என்னையே  மாற்றிடுமே நானும் ஜெயிப்பேன் வாழ்வேன் நன்றிமறாவா நண்பனாய் இருப்பேன் நாவில் நல்லதை சொல்வேன் நாடும் போற்றிட வாழ்வேன்

அழகிய கனிகளைப் பார்த்தேன்......

Image
(நன்றி கூகிள்) அழகிய கனிகளைப் பார்த்தேன் அதையே கைகளில் எடுத்தேன்  தாங்கிய கிளையைக் கண்டேன் தாவியே ஓடிப் பறித்தேன் இளமை அழகை கண்டேன் இதழில் சுவையைக் கொண்டேன் பழகிய சுவையை உணர்ந்தேன் பழத்தை முழுவதும் ரசித்தேன்  பதமாய் ரசத்தைப் பிழிந்தேன் பருகிப் பருகி மகிழ்ந்தேன்  திரண்ட முழுதும் சுவைத்தேன் தீண்டியே மகிழ்ச்சியில் திளைத்தேன்  தினமும் வேண்டியே நின்றேன் தெகிட்டா தமிழை மணந்தேன்  கலையாய் அதையே கனித்தேன் கவிதையை அதனால் படைத்தேன்

ரசித்தவர்கள்