Friday, 18 October 2013

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது
நேரமும் காலமும் கழிந்தது
நிம்மதி சிலநாள் கிடைத்தது
நேர்மையாய் உணர முடிந்தது

பார்ப்பவர் எண்ணம் புரிந்தது
பாதையும் தெளிவாய் தெரிந்தது
பகலும் இரவும் போலவே
பசுமை வெறுமை கடந்தது

இன்றைய நாளில்  நடப்பது
இன்பம் விரும்பி வாழ்வது
இளமை  வெறுமை இழந்தது
இனிமை வாழ்க்கை ஏங்குது

துன்பம் மெல்ல விலகுது
துயரம் தாண்டி செல்லுது
தூயநல்  நட்பும் தொடருது
துணையாய்  அருகில் வாழுது

நாளைய ஏக்கம் தொடருது
நல்லதும் கெட்டதும் தெரியுது
நாணயம் என்னுள் இருப்பதால்
நன்மையும் தீமையும் தெளிந்தது

வேதனை சிலதும் மறைந்தது
வெளிச்சமும்  அதனால் வந்தது
வேண்டி  விரும்பி  மனதுமே
வெற்றி பெறவே  துடிக்குது


-----கவியாழி------

Thursday, 17 October 2013

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே
அகிலம் போற்றும் குணவதியே
எல்லா குழந்தையும் கற்றிடவே
என்றும் கொடுப்பீர் அருள்மழையே

இல்லா பிள்ளையும் கற்றிடவே
இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும்
பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும்
பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும்

சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும்
சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும்
நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை
நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும்

செல்வம் சேர்க்கா பணியாக
செலவில்லாமல் தினம் கற்பிக்கும்
சொல்லில் சிறந்த சீமான்கள்
செய்யும் பணியும்  சிறந்திடவே

அன்பும் அறிவும் பெருகிடவே
அனைவரும் போற்றும் கல்விக்கு
அம்மாதாயே அருள் கொடுத்தால்
ஆயுள் முழுக்க வணங்கிடுவேன்

----கவியாழி----

Monday, 14 October 2013

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே
அன்பில் என்னுள் ஆள்பவரே
அழைத்தால் தினமும் மகிழ்பவரே
ஆறாம் எண்ணில் அழைப்பவரே

அன்பில் சளைத்தவர்  உங்களைபோல்
அருகில் எனக்கு இல்லையே
அதனால் எனக்கும் லாபமே
அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன்

எல்லா  நண்பரும்  மகிழ்வாக
எண்ணி இருந்திட நினைப்பவரே
சொல்லால்  தவறை சுட்டியே
சிறப்பாய் இருந்திடச் செய்பவரே

என்மேல் என்ன கோபமைய்யா
எதற்கு அப்படிக் கடிந்தீரோ
என்னை விடவா உங்களுக்கு
ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு

பொல்லா கோபம் இல்லையே
பொசுக்கி என்னைக் கொல்லவே
எல்லா நாளும் இப்படியே
என்னிடம் திட்டி வதைக்காதீர்


--கவியாழி--


Friday, 11 October 2013

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத
வாலிபமும் மீண்டும் திரும்பாத
வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும்
வாடிக்கையாய் அன்றி நின்றிடும்

திரும்பாத முகத்தையும் திருப்பிடும்
தீராத ஆசையைத் தூண்டிடும்
தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும்
திரவியம் உள்ளதைக் காட்டிடும்

வருந்தாத உள்ளங்கள் இல்லையே
வார்த்தையில்  சொல்லவும் மில்லையே
பொருந்தாத இடத்திலும் பொங்கிடும்
புகழையும் சமயத்தில்  மழுக்கிடும்

தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள்
தெளிவில்லா சங்கதி இன்றுமே
தொடர்ந்திடும் என்பதும் உண்மையா
தெளிந்தீரா இப்போதும் நன்மையாய்

அன்பெனும் அடிமை உண்மையாய்
அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய்
துன்புறும் மனதையும் காத்திடும்
தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும்

புரிந்தீரா சொலவதைக் கேட்டதை
புலப்படுதா சொல்லிலே உண்மையை
வருந்தாத வாலிப மூத்தோரே
வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள்
நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள்
நாட்டிலே நடக்கிற செய்தியும்
நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள்

வீட்டிலே ஆதரவு முக்கியம்
விடியலில் எழுவதும் அவசியம்
பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள்
பார்த்ததும் படிப்பது அவசியம்

தமிழ்மணப் பட்டையை  வைத்தீர்
தணிந்ததா தாகமே இனிமேல்
கருத்துக்கள் அதிகமாய் சொன்னால்
கடையில்  வாடிக்கைப் பலபேர்

அடிக்கடி வலைக்கு வாங்க
அனைவரின் படைப்பையும் படிங்க
பொறுப்புள்ள கருத்தையே சொல்லி
புகழ்பெறம் வரிசையில் நீங்க

எழுத்திலே உமக்கு ஏற்றம்
இருப்பதாய் அறிந்தே உரைத்தேன்
இன்னுமும் சிறப்பாய் எழுதி
இமயம் போற்ற வாழ்க

Thursday, 10 October 2013

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே
பண்பாய் நானும் தினமுமே
பாட்டாய் எழுதித் தருவேனே
பதிலும் தினமும் கொடுப்பனே

உருகி உருகி எழுதியும்
உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
உண்மைத் தன்மை மாறாது
உள்ளதை நன்றே சொல்வேனே

எதுகை மோனை எழுத்திலே
என்றும் தொடர்ந்தே காப்பேனே
எல்லா நேரமும் நல்லதாய்
எதையும் எழுதி விடுவேனே

காதல் காமம் எழுதுவேன்
கண்ணீர் வந்திட சொல்லுவேன்
ஊர்கள் சென்றதை சொல்லுவேன்
உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன்

மனதில் தோன்றும்  எல்லாமே
மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே
மக்கள் என்னை ஒதுக்கும்வரை
மகிழ்வாய் கவிதை படைப்பேனே


அழகாய் கவிதை படைப்பதால்
அன்பாய் நாளும் இருப்பதால்
அனைவரும் என்னை விரும்புவதால்
அதனால் நானும் இறைவனேTuesday, 8 October 2013

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது
என்று கேட்டாலும் தப்பேது
முப்போதும் ஓடினாலும் தப்பாது
முறையாக ஓடிடுவாய் எப்போதும்

ஒவ்வொரு மணித் துளியும்
ஓய்வுக்காய் என்றுமே தவறாது
ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல்
ஒருபோதும் தடுமாறி நிற்காது

நொடியுமே தவறாக ஓடவில்லை
நிமிடமும் தனக்காக நின்றதில்லை
மணியுமே அவசரமாய் சென்றதில்லை
மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை

ஏழையாய் இருந்தாலும் எப்போதும்
எல்லோரும் அவசியமாய் தன்னோடு
எப்போதும் துணையாக வந்திடும்
எந்நாளும் சரியாகக் காட்டிடும்

இருதயம்போல எப்போதும் ஓடிடும்
இன்முகமாய் காலத்தைக் காட்டிடும்
இதையாரும் வெறுக்கிறவர் இல்லார்
இலவசமாய் தருகிறவர் உண்டா--கவியாழி--

Monday, 7 October 2013

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான்
மாதமும் மழித்தால் நல்லதுதான்
ஆசை அதனால் குறையாது
ஆயுளில் அதனால் பயனேது

மீசை இல்லா முதியோரே
மீண்டும் வசந்தம் கேட்பாரோ
மீண்டும் மீசை வையுங்கள்
மிகுந்த இன்பம் கொள்ளுங்கள்

ஆண்கள் அனைவரும் பெரும்பாலும்
ஆசைக் கொண்டே வளர்திடுவர்
ஆயுள் முழுக்க சிலபேரோ
அதையும் துறந்தே இருக்கின்றனரே

அய்யா பெரியவர்  என்னிடமே
அதனால் கடிந்தே பேசியதால்
என்னா செய்வேன் இளையவன்நான்
எப்படி மறுத்தே சொல்லிடுவேன்

அய்யா வயதில் மூத்தோரே
அய்ந்தாம் நிலையில் உள்ளவரே
அடியேன் என்னை வெறுக்காதீர்
அன்பைக் கொடுக்க மறக்காதீர்


Saturday, 5 October 2013

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே
இல்லறம் சிறக்குமே  கண்டீரா
இன்னலும் தீர்ந்திட சென்றிரா
இன்பமாய் இனியச் சுற்றுலா

மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த
மிதமாய் குளிரும் தரைபகுதியும்
நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும்
நிலமேத் தெரியாத பணிப்பகுதியும்

உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே
ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே
பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே
பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே

துன்பமும் நீங்கிடும் துணையாலே
தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில்
அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில்
அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா

பண்பையும் நன்றே மாற்றிடும்
பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும்
இன்பமாய் சிலநாள் இருந்தால்
இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம்---கவியாழி---

Friday, 4 October 2013

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா
உலகினில் மீண்டும் திரும்புமா
பழகிய நாட்களும் மறக்குமா
பாசமும் நேசமும் கிடைக்குமா

அழகிய நாட்களை மறந்திட
அன்பை மீண்டும் கொடுத்திட
பழகியே நேசத்தை காட்டிட
படைத்தவர் உயிரை மீட்டிட

தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட
திங்களும் வணங்கிட செய்திட்ட
மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட 
மகனாய் என்னை படைத்திட்ட

உறவை மறந்து பிரிந்த
உண்மையில் அன்பைப் பகிர்ந்த
உணர்ச்சியில்  நான் வருந்த
உடையோரை எங்கே மறைந்தீர்

தினம் தோறும் வேண்டுகின்றேன்
திங்கள் தோறும் அழைக்கின்றேன் 
விரும்பாது சென்ற பிதாக்களே
வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன்


---கவியாழி---

Thursday, 3 October 2013

இன்றைய மாணவர் வாழ்க்கை


இன்றைய  மாணவர் வாழ்க்கையோ
இழிந்தே செல்லும் நிலையாலே
பண்பை மறந்தே மாணவனும்
பகலில் குடித்து கெடுவதுமேன்

மகனும்  மறைந்து குடிப்பதில்லை
மாணவனாய் இருந்து படிக்கவில்லை
அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா
தினமும் பணமே கொடுப்பதுமேன்

அறிவை வளர்க்கும் மாணவன்
அடிமையாகும் மதுவைக் குடித்து
அறியாமல் செய்யும் தவறுக்கு
அப்பனும் ஆத்தாளுமே துணையாமே

இளமை  வாழ்வோ சிலகாலம்
இனிமை சேர்க்க ஒழுங்காக
இல்லமும் உன்னைக் கொண்டாட
இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக

தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ
தினமும் கற்பாய் முறையாக
தினமும் படிப்பைத் தொடங்கினால்
தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

Tuesday, 1 October 2013

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன்
வேதனையை மறைக்க வைப்பவன்
எல்லா  வீட்டிலும் இருப்பவன்
ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன்

கொள்ளைப் பணத்தை முழுங்கி
குடும்பம் முழுதையும் வதைப்பவன்
இல்லை யென்றாலும் விடமாட்டன்
இம்சையை தீர்க்கவே  விரும்புவான்

தொல்லை கொடுக்கும் வலிக்கு
தோதாய்  வந்து காப்பவன்
பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும்
பிணியைத் தீர்த்து வைப்பவன்

எத்தனை  நிறத்திலும் இருந்தாலும்
எல்லோர் மனதைப் போலவே
துள்ளிச் சிரித்தே தொடர்வான்
துணையாய் கூடவே வருவான்

வறுமை வயதும் பாராமல்
வாழ்வை தொடர விரும்பினால்
வள்ளல் போலவே  நிம்மதியை
வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான்

முதியோர்தின வாழ்த்துக்கள்

---கவியாழி--Monday, 30 September 2013

கண் கண்ணாடியைக் காணவில்லை

கண்கண்ணாடியைக் காணவில்லை
கண்டு பிடிக்க முடியவில்லை
கண் அழற்சியானதால் எப்போதும்
கண்சிவந்து எரிச்சல் தாளவில்லை

இல்லத்தார் எல்லோரும் கண்டுபிடிக்க
இண்டு இடுக்கு  இடமெல்லாம்
இரண்டு நாளாய்த் தேடுகிறோம்
இயலவில்லை இருக்குமிடம் தெரியவில்லை

நாவறண்டு கத்தினாலும் முடியாது
நாநயமாய் பேசினாலும் வந்திடாது
நான்வைத்த இடத்தைக் காணாமல்
நண்பர்கனிடம் சொன்னாலும் கிடைக்காது

மூன்று வயது நினைவுகூட
முந்தி கொண்டு வருகிறது
மூக்கில் மாட்டும் கண்ணாடியின்
மூடிப்போன இடம் தடயமில்லை

பேயறைந்த முகத்தைப் பார்த்து
பேரன் பேத்தி  சிரிக்கிறார்கள்
பேந்த பேந்த முழிப்பைப் பார்த்து
பேருதவி மனைவியும் செய்கிறார்கள்

வீட்டுக்கு வந்தவரின் கதையை
விருப்பமின்றிச் சொன்னபோது  நானும்
விட்டுவிட்ட பொருள் கணக்கை
விபரமாகச் சொல்ல முடியவில்லை
Saturday, 28 September 2013

பாம்பையே படம் பிடித்தேன்

மைசூர் பயணம் தொடர்ச்சி ......

 நாங்கள் அனைவரும் மைசூரிலுள்ள மிருக காட்சிச் சாலையில் ஒவ்வொரு பகுதியாக சென்று வந்தோம்.அப்போது மதிய நேரம் என்பதால் பெரும்பாலான விலங்குகள் தூங்கிக் கொண்டிருந்தன.என்னைபோல சுறுசுறுப்பாய் சிலதும் இருக்குமே என்றுதான் அந்தப் பகுதிக்குச் சென்றோம்.

  ஆம் ,நகரத்து நண்பர் பாம்புகள் இருக்கும் பகுதிக்குச் செல்லலாம் என்று அடம்பிடித்தார் . ஒரு கண்ணாடிப் பெட்டி அருகே  நண்பர்களை வழக்கம்போல நானே படம் பிடித்தேன். அப்போது .......

""பின்னாடிப் பாம்பு " என்று சொன்னதும் எல்லோருமே அங்கிருந்து துள்ளி ஓடி வந்தார்கள்.நான் அந்த பாம்பு நீளமாய் கண்ணாடிக்குள்ளே ஊர்ந்து சென்றதை கூறியதும் அப்படியா நாங்கள் மிக்கப் பயந்து  விட்டோம் என்றார்கள்.
என்னோடு வந்த நன்பர்கள்


ஆமாங்க சிங்கமேதான்  என்னைப் பார்த்துப் பயந்துடிச்சி

ராஜ நாகம்  நலம் விசாரித்தது

மலைப்பாம்பு அமைதியானது


மைசூர்  அரண்மனை

 சூரியனின் காலை வணக்கம்                                                 மைசூரும்  மாலை நேரமும்


                       நிமிசம்மா கோயில் அருகில் ஓடிய நதிக்கரை
                                                 நுழைவு வாயிலில் இருந்து அரண்மனை காட்சி                                       மைசூர் அரண்மனை முன்பகுதி
நிமிசம்மா கோவிலின் முகப்புத் தோற்றம்


நான் தங்கியிருந்த ஜே.பி.மாளிகை  தங்கும் விடுதியின்  நீச்சல் குளம்

நான் தங்கிய அறைஎண் 327

  

Wednesday, 25 September 2013

மைசூர் பயணமும் படங்களும்


நான் கடந்த வாரம் மைசூர் சென்றிருந்தேன் 
அங்கு நான்கு நாட்கள் நண்பர்களுடன் தங்கி மகிழ்ந்தேன் 
எல்லா இடங்களும் சென்றேன்
இதயம் மகிழ்ந்து திரிந்தேன்

அருள்மிகு சாமூண்டீஸ்வரி அம்மன் ஆலையம்


எனது அலுவலக நண்பர்களுடன் நான்

நந்திக்கோயில்


மிருகக் காட்சிச்சாலை


விலங்குகளைக் காண சென்ற ஊர்தி


என்னைக் காண ஆவலாய் வந்த பாம்பு


மைசூர் அரண்மனையின் முகப்புத்தோற்றம்

மைசூரின் அதிகாலைத் தோற்றம்

இம்மாதம் நடக்கவிருக்கும் தசரா விழா ஏற்பாடுகள்இன்னும் நிறைய படங்கள் எடுத்திருந்தேன்  எல்லாமே என்னால் பதிவிட முடியவில்லை முடிந்தால் விரும்பினால் மீண்டும் பதிவிடுகிறேன்---கவியாழி--

Tuesday, 24 September 2013

பதிவர் விழாக் கணக்கு சரிபார்ப்புக் கூட்டம்

விழுந்து விழுந்து சிரிக்கும் கே.ஆர்.பி.செந்தில்,
மதுமதி,கவியாழி,அரசன்,மெட்ராஸ் பவன் சிவகுமார்,ஸ்கூல் பையன் .சரவணன்,ஆரூர்.மூனா.செந்தில்.,ரூபக் ராம்,மின்னல் வரிகள்,பாலகணேஷ்,புலவர் அய்யாவைக் காணவந்த எனது நண்பர்.செல்லப்பா.ஆகியோருடன் வணக்கத்திற்குரிய அய்யா.ராமாநுசம்

Monday, 23 September 2013

இயற்கைச் சூழலை ரசியுங்கள்

இயற்கை சூழலை ரசியுங்கள்
இனிமை கிடைப்பதை உணருங்கள்
இன்பம் தேடிச்சென்றாலே எப்போதும்
இளமை கொண்டே வாழலாம்

கண்கள் குளிர்ச்சி கொள்ளும்
கனத்த மனதும் லேசாகும்
அங்கம் முழுதும் மகிழ்ச்சியால்
அடையும் நன்றே உணர்வாலே

மலையில் மரங்களைக் காணுங்கள்
மகிழ்ச்சி கிடைத்திடும் நம்புங்கள்
இலைகள் தழைகள் பசுமையாய்
இன்பம் தந்திடும் இளமையாய்

பசுமை மாறா காட்டிலே
பாய்ந்து தாவிடும் குரங்குகள்
பறந்து பேசிடும் பறவைகள்
பார்க்கும் திசையிலே இன்பமே

மான்கள் துள்ளி ஓடிடும்
மயில்கள் தாவி களித்திடும்
முயல்கள் ஒளிந்தே ஓடிடும்
உள்ளமும் தூய்மை யாகிடும்

அடிக்கடி வெளியே செல்லுங்கள்
ஆனந்தம் மிகுவதைக் காணுங்கள்
குடும்பம் அனைவரும் சேர்ந்தாலே
குறையும் கஷ்டங்கள் தன்னாலே
முத்துக்கள் பத்து

ஈர்ப்பு என்பது
இயல்பாக வந்தால்
தோற்பதில்லை
துணையாகவே நிற்கும்


தோல்வியை பார்க்காதவன்
உலகில் யாருமில்லை
துவண்டு வீழ்பவன் மனிதனில்லை
வேள்விக்கு மயக்கமில்லை
வீண் சந்தேகம்
வெற்றி பெறுவதில்லை
முயற்சிக்கு தடைகளில்லை
முன்னேற்றம் யாரும் தடுப்பதில்லை?


சிரிக்க மறக்காதே
சிந்திக்க மறுக்காதே
பொறுப்பை விலக்காதே
பெருமையாய் பேசாதே


காற்றுக்கு வழி சொல்ல
கடமையாய் இருபது யார்?
காலத்தை நிப்பாட்ட
துணையாய் போவது யார்?


வாழ்கையை தவறவிட்டு
மனம் வெதும்பி போவது நீ.....
வாழ விரும்பி முடிவு 
வழியை திறக்கவும் நீ
நீயே முடிவு செய் 
நேர்மையாய் உணர்ந்து செய்உள்ளம் வதைப்படும்போதும்
உணர்சிகள் தடைபடும்போதும்
இதயம் வலிமையாகிறது


ஈரம் இல்லாத எல்லாமே 
இறைவனிடம் சேர்த்திடும் 
ஆனால் 
எண்ணங்கள் விரும்பிய
எல்லோரிடமும் சேரும்


துன்பப்படுவோருக்கு உதவு
துன்பமாய் ஏற்றுக்கொள்
துயர் நீக்கி தூய்மையாகு
தெய்வமாய் நீ காணலாம்


கடல் கடந்தாலும் கண்ணியம் மறக்காதே
உடல் உழைப்பை கொடுக்க மறுக்காதே
தடம் தவறி வாழ நினைக்காதே
தமிழனின் தைரியத்தை என்றுமே இழக்காதே


பணம் மட்டுமே மகிழ்ச்சியைத்தராது
பாசம் எப்போதும் மறக்க முடியாது
குணம் கெட்டும் வாழ முடியாது
கொள்கை இல்லாமல் வெற்றி கிடைக்காதுவணக்கம்...வணக்கம்...வணக்கம்

வந்துவிட்டேன் மீண்டும் வந்துவிட்டேன்
மக்களுக்கு வணக்கத்துடன்  வந்துவிட்டேன்
விதியாலும் சதியாலும் வேலைப்பளுவாலும்
விரக்தியின் காரணத்தாலும்  இதுநாளும்

மதிகெட்டும் மனமும் புண்பட்டும்
மக்களைக் காணாமல் இருந்துவிட்டேன்
வலைப்பக்கம் வரமுடியாமல்  நெட்டின்
வசதிஇன்றி தினமும் தவித்தேன்

கதையும் மாறியது கடந்தது
கவலையும் கொஞ்சமாய் தீர்ந்தது
நிலையும் தேறியது நெட்டும்
நிம்மதிதேடி இன்றுதான் வந்தது

வலைப்பக்கம் வாராது இருந்தேன்
வாழ்கையில் எதையோ இழந்ததாய்
வாரம் இரண்டும் தவித்தேன்
வந்துவிட்டேன் இனி மகிழ்வேன்

துணையாக வந்த எல்லோரும்
துடிப்பாக மீண்டும் வாருங்கள்
விலையாக அன்பைத் தருவேன்
வணங்கியே ஆசியும் பெறுவேன்

Friday, 13 September 2013

துயரங்கள் தொலைந்து போகும்

துயரங்கள் தொலைந்து போகும் ஆம் மறந்தால் துயரமும் மறைந்து விடும்.மறக்க முயற்சிக்க வேண்டும்  எல்லோருக்குமே மனதில் இனம்புரியாத வலி இருந்துகொண்டுதான்  வரும்.யாருக்குமே துன்பமோ துயரமோ இல்லாத வாழ்க்கை அமைவதில்லை. சிலபேர் சொல்லுவதுண்டு நான் எப்போதுமே துன்பப்படவில்லை என்று ஆனால் உண்மை அல்ல.

வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் இருந்தால்தான் மனதில் மகிழ்ச்சியை உணர முடியும் என்பதை எல்லோருமே ஒத்துக்கொள்ள வேண்டும் .இந்த அனுபவத்தை உணராதவர்கள் யாரும் இருக்க முடியவே முடியாது.அப்படி அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது காரணம் அவர்களுக்காக வேறுயாரேனும் கஷ்டப்பட்டிருப்பார்கள்.

துயரை உணர்ந்தால் தெளிவு பிறக்கும். காரணம் தெரியும் அதனால் மீண்டும் அவ்வாறு நடக்குமுன் நம் மனது நம்மை எச்சரித்துவிடும்.எல்லோருமே எப்போதுமே நிம்மதியாக இருப்பதில்லை.சின்னச்சின்ன விஷயங்களிலும் நாம்
கோபப்படவோ எரிச்சலடையவோ இருப்பதன் காரணம்  அதனால் ஏற்பட்ட மனகஷ்டமே நம்மை அவ்வாறு செய்யச்சொல்கிறது.

வாழ்கையில் ஓவ்வொரு நிலைகளில் துயரப்பட்டிருப்போம் ஒவ்வொருவரும் துன்பப்பட்டிருப்போம்.இதுதான் வாழ்கையின் பரிணாம நிகழ்வு.நம்மையே மறந்து நாம் செய்யும் செயல் சிலருக்கு வேதனையைத் தந்திருக்கலாம் இப்படி ஏதேனும் ஒரு காரணமாய் நாமே இருந்திருக்கலாம்.அது நாமே காரணமாய் இருப்பதாய் சொல்லமுடியாது.

சில நேரங்களில் உதவி செய்ய எண்ணி  நாமும் தெரிந்தே அவ்வாறான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு அதையும் நாமே  ஏற்றுக்கொள்கிறோம். அப்படி அடுத்தவருக்கு உதவியாக செய்து வரும் துன்பம் உங்கள் கணக்கில் சேராது அடுத்தவர் நலனில் அக்கறைக்கொண்டு நம்மை நாமே தெரிந்தே வருத்திக்கொளவது  துன்பமாகாது.

ஏண்டா வம்பை விலை கொடுத்து வாங்கினோம் என்று வருந்துவதுண்டு அது தவறு.அங்கே உங்களால் ஒரு நல்ல தெளிவான நிகழ்வைக் காணமுடிந்தது அதற்காக நீங்கள் செய்த, உணர்ந்த, செலவிட்ட நேரமோ பணமோ குறைவுதான் ஆனால் கிடைத்த அனுபவம் வாழ்கையில் உங்களுக்கு நல்லச் செய்தியை படிப்பினையைத் தரும்.

இவ்வாறு நாம் செய்த அறிந்த செயல்களினால் உங்களுக்கோ உங்களைச் சார்ந்தவருக்கோ அல்லது மற்றவருக்கோ  ஒரு நிகழ்வினால் நல்லப் பாடத்தை  சொல்லித்தரும் வாய்ப்பைப் பெற்று அதனால் நீங்களுமே அதன் நிலையை உணரமுடிகிறது.அவ்வாறு உணர்ந்தால் அதிலிருந்து எப்படி விடுபடுவது அல்லது தவிர்ப்பது என்பதுபோன்ற தெளிவு கிடைக்கும்'

எனவே துன்பமோ துயரமோ நமது வாழ்க்கைப் பாதையில் தவறாக நிற்பதில்லை .அப்படி நின்றாலும் அதைத்தவிர்த்து சரியான வழியைத் தேர்ந்தெடுத்து சரியான பாதையில் செல்ல அறிவுறுத்தும்.ஆம் துன்பமும் நமக்குத் தெளிவைத்தரும் துயரங்களும் நம்மைக் கடந்துபோகும்.---கவியாழி---

Wednesday, 11 September 2013

ஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயைஈஸ்டர் நேசம் என்ற எனது வகுப்பாசிரியயை என்னை மிகவும் கவர்ந்த பிடித்த ஆசிரியை. நான் சாதாரண அரசுப் பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பிடித்த ஆசிரியையை  இன்னும் என்னால் மறக்கமுடியவில்லை. நல்ல சிகப்பாய் மிகவும் அழகாக இருப்பார்கள் .அடிக்கவே மாட்டார்கள்.கன்னத்தை கிள்ளி செல்லமாய் முத்தமிடுவார்கள்.இன்னும் அவரின் முகமும் முத்தமும் அன்பும்  நினைவில் இருக்கிறது.

 அப்போது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும் இரண்டாவது படிக்கும்போது  . மதிய நேரத்தில் நிறைய மாணவர்கள் தூங்கி வழிவார்கள் நானும் அப்போது அப்படித்தான் தூங்கினேன். இதை மறுக்க யாராலும் முடியாது அப்போதைய வயது அப்படித்தான் இருக்கும்.ஆனால் அந்த நேரத்தில் அவர்கள் கதை சொல்ல தொடங்கினால் எல்லோருமே தூங்காமல் இருந்ததுண்டு

அப்போதெல்லாம் நல்ல கான்கிரீட் கட்டிடங்கள் இருக்கவில்லை  ஓடுபோட்ட கூரைகள்தான் இருந்தது. ஆனால் நல்ல உஷ்ணமான காற்றோட்டமாய் 
இருக்கும்.அவ்வாறான மதிய வேளையில் சில நேரங்களில் நானும் அசந்து தூங்கி வழிந்திருக்கிறேன்.அப்போதெல்லாம் சிறு குச்சியை வைத்து அடிப்பதுபோல்  மிரட்டுவார்கள்.

இன்னும் சில ஆசிரியர்களோ வீட்டுப்பாடம்  எழுதாமல் தலைசீவி வாராமல் இருக்கும் மாணவர்களுக்கு கொடுக்கும் அதிகபட்ச தண்டனைகள் காலில் மண்டியிட்டு வகுப்பறையின்  மூலையில் உட்காரச் சொல்வார்கள் . இந்த தண்டனைதான் சின்ன வயதில் மாற்றத்தை ஏற்படுத்த அல்லது படிக்கவைக்க தரும் தண்டனையை இருந்தது.

ஆனால் இன்று  மாணவர்கள் மனதளவில் பாதிக்கும் தண்டனைகளே ஆசிரியர்கள் கொடுக்கும் அதிகபட்ச தண்டனைகளாய் இருக்கிறது.இது மாணவர்களை விரக்தியின் உச்சத்திற்கு கொண்டுபோய் தற்கொலைகள் செய்யும் அளவுக்கு அல்லது அவமானப்படுத்தி அனைவரின்முன் நிற்குமளவுக்கு இன்றைய கல்வித்தரம் கடுமையாய் இருக்கிறது.இதனால் மாணவர் ஆசிரியரிடையே  புரிதல் இருக்க முடிவதில்லை.

ஆனால் எனக்கு எனது ஆசிரியை அன்று கொடுத்த அதிகப் பட்ச தண்டனையே
வெளியில் என்னை நிற்கவைத்து அதையே தண்டனையாய் செய்தார்.இன்று நடக்கும் கொள்ளைகளுக்கும் கொடுமைக்கும் சட்டமே பாதுகாப்புக் கொடுக்கிறது.அதனால் கல்வி என்பது வியாபார நோக்கமாய் இருக்கிறது.

ஆம்,மாற்றம் வேண்டும் கல்வியாளர்களின் மனதில் மாற்றம் வேண்டும்.நல்லக் குடிமகனை உருவாக்கும் நல்லெண்ணம் வேண்டும்.நாளும் நற்பணி செய்யும் நேர்மையான குணம் வேண்டும்

Tuesday, 10 September 2013

கல்விக் கற்க உதவுங்கள்

பணம் மட்டும் வாழ்வாகாது
பணத்தை  உண்ண முடியாது
பணமும்  குணத்தை வாங்காது
பணமே வருந்தி அழாது

மனிதம் கண்டு மகிழுங்கள்
மக்கள் மனதில் நில்லுங்கள்
மட்டில்லாத உதவி செய்து
மற்றோர் மனதில் வாழுங்கள்

நேரில் பார்க்கா தெய்வத்தை
நேர்மை இருந்தால் காணலாம்
நன்மை நாளும் செய்தாலே
நன்றே மகிழ்ந்து காணலாம்

உண்மை உழைப்பு சத்தியத்தை
உலகில் அனைவரும் போற்றியும்
பெண்ணை மதித்து வாழ்ந்தாலே
பேரும் புகழும் கிடைக்குமே

கல்விக் கற்க உதவுங்கள்
கருணை கொண்டே செய்யுங்கள்
கஷ்டம் கொண்டே படிப்போரை
கண்டு உதவி செய்யுங்கள்

படிக்கும் பிள்ளைகள் யாவருமே
பதராய் போக மாட்டார்கள்
பண்பைச் சொல்லிக் கொடுத்தாலே
படிப்பில் மேன்மைக் கிடைத்திடுமே

Monday, 9 September 2013

இனிவேண்டாம் என்தாயே

பழிவாங்கும் செயலாலே
பாவம் மட்டும் குறையுமா
பாரம் அதிகமாய் மாறுமா
பழியும் உன்னோடு சேருமா

மொழியாலே சின்னக் கணைவீசி
முறையின்றி சொன்ன வார்த்தை
வினையாக  எனைக் தாக்குமா
விதிமாறி உன்னை வெல்லுமா

வயதான காலத்தில் வேண்டுமா
வாழ்த்துகிற நிலையும் மீறுமா
தடையான காரணம் என்ன
தயை கூர்ந்து சொல்வாயா

விதியோடு விளையாடும்  நீ
வீணான மதிகொள்ளக் காரணம்
விளையாட்டுப் பிள்ளையின் செய்கையா
விடுத்தவர் கல்வியின் கொள்கையா

இனிவேண்டாம் என்தாயே
இப்போதே இதை நிறுத்திவிடு
இளவலைநீ  அன்பாலே வாழவிடு
இனிமையை இனியேனும்  காணவிடு

மதிகெட்டேன் மனையை விட்டேன்
மருத்துவம் விரும்பியே இழந்தேன்
இனியிழக்க என்னிடம் ஏதுமில்லை
இனியாவது விதியை மாற்றிவிடு
Sunday, 8 September 2013

மனிதம் போற்றி வாழுங்களேன்

இனமே தமிழன் என்றுரைத்து
எதிலும் சேர்ந்தே முடிவெடுத்துப்
பணமோ மதமோ பாராமல்-நட்பை
போற்றி தினமே வாழுங்களேன்

அண்ணன் தம்பி உறவுகளாய்
அனைவரும் கூடி வாழ்வதனால்
திண்ணைதோறும் நட்புறவாய்-அன்பை
தினமும் போற்றி மகிழ்ந்திடலாம்

உறவை மறுத்து வாழ்வதனால்
உயர்வும் மகிழ்வும் தடையாகும்
பிரிவைப் போற்றி வாழாமல்-ஒன்றிப்
பிணைந்தே  மகிழ்ந்தே வாழுங்கள்

மகிழ்ச்சியின் தத்துவம் புரியுமே
மனித நேயம் தெரியுமே
மக்கள் மனதை அறியுமே-உறவை
மானிடம் போற்றி மகிழுமே

சாதியும் மதமும் சொல்கிறது
சரிசமம் உயிரென உயர்வாக
நீதிக் கதைகளும் இதிகாசம்-எங்கும்
நித்தம் சொல்வதும் இதைத்தானே

மனித நேயம் வேண்டாமென
மதமும் எங்கும்  சொன்னதில்லை
மனிதனாக வாழ்வதற்கு  -நீங்களும்
மனிதம் போற்றி வாழுங்களேன்


Saturday, 7 September 2013

முகப்புத்தகத்தில் வெளிவந்த முத்துக்கள் பத்து

தலைவனாய் தன்னையே பிரகடனப்படுத்திக் 
கொள்பவன் புத்திசாலியில்லை

தானென்ற அகம்பாவம் தவிக்க விடும் .
தறுதலையாய் மாற்றிவிடும

நண்பனை தெரிந்து கொள்ள நாடுவாய் 
-கஷ்டமெனநட்பின் ஆழத்தை அறிவாய்

இறந்தபின்பு மறுபிறவியில் மனிதன் 
 சாதியில் சேர்க்கப் படுகிறான்?

தேடல் இருந்தால் தான் தெய்வமும் கூடவரும்

நமக்கெங்கே போச்சு மனித நேயம் ?
தமிழ்இன உணர்வு?

உன் வாழ்க்கை உன் வசந்தம்  உன் விருப்பம் 
வாழ்ந்துவிடு வாழ்க்கையை !

விருப்பமானவர்களாய் தினமும் காதலியுங்கள் 
அதற்கொரு தினம் வேண்டாமே

ஈர்ப்பு என்பது இயல்பாக வந்தால் தோற்பதில்லை 
துணையாகவே நிற்கும்

தேடினால்தான் தெளிவு கிடைக்கும்
ஓடினால்தான் ஓய்வெடுக்க முடியும்
தேடுங்கள் ஓடுங்கள் வெற்றியும் கிடைக்கும்

----கவியாழி----

Friday, 6 September 2013

"முயன்றால் முடியும்"

        வழக்கத்தில்  " முயன்றால் முடியும்" , "முயற்ச்சித் திருவினையாகும் ", "முயற்சியில்லாதார் தோல்வி அடைவார்கள் ", "முயற்சி இல்லாதார் இகழ்ச்சி அடைவர்" இப்படி பல பொன்மொழிகளையும் பழமொழிகளையும் நாம் அறிந்தே கேட்டுவருகிறோம் சொல்லிவருகிறோம். உண்மை என்ன?

            அதற்காக என்னென்ன திட்டமிடல் செய்து வருகிறோமா இல்லையே அதையும் முயற்சிச் செய்யவேண்டும் என்றே ஒவ்வொருமுறையும் காலம் கடத்தி வருகிறோம்.இதனால் யாருக்கு என்ன பயன்  என்பதை அறியாமலே சிலநேரங்களில் நம்மைநாமே ஏமாற்றிக்கொள்வதாய்  அமைந்துவிடுகிறது.  ஆனால் முயன்றால்  மனதும்  நம்மை அவ்வாறு  ஏமாற்றுவதில்லை

        இதற்குத் தீர்வென்ன எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது என்ற வரைமுறையை நாம் தீர்மானிதாலோலிய எந்த விஷயத்திலும்  வெற்றி என்பது எளிதில்  கிடைக்காது.வரைமுறையை வரையறுக்க  வேண்டும் . தெளிவான தீர்க்கமான திட்டமிடல் வேண்டும்.அதற்காக மட்டுமே உழைக்கத் தயாராய் இருக்க வேண்டும்.

        எல்லா வெற்றித் தோல்விக்குமே  காரணம் மனம்சார்ந்த  உணர்ந்த விஷயம்தான்.மனதில் உறுதியும் அழுத்தமும்  இல்லாவிட்டால் அச்செயலை செய்து முடிக்க  இயலாது. மனவலிமையே வெற்றிக்குக் காரணம். இலக்கு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும் அதன்படியே குறிக்கோளாய்  செயல்பட வேண்டும் உழைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

        இங்கு உழைப்பு என்பதும் முயற்சியே அந்த முயற்சிக்கு உழைப்பே காரணமாய் இருக்கிறது.உழைக்கத் தெரியாதவன் வெற்றிபெறுவதில்லை .திருடனுக்கும் உழைப்புடன் கூடிய முயற்சியேத் தேவைப்படுகிறது மாணவர்களுக்குப் படிப்பு என்ற உழைப்பு .விவசாயிக்கு காலம் நேரம் பார்க்காமல் உழைத்தால்தான்  நேர்த்தியான வெற்றிக் கிடைக்கும்.

        சிலநேரங்களில் நாம் நினைப்பதும் நடப்பதும் வேறுவேறாய் இருக்கும் .அங்கு நினைப்பு மட்டுமே இருக்கிறது செயலாக்கம் முயற்சி  உழைப்பு இருப்பதில்லை அதனால்தான் 'நம் நினைப்பு பொழைப்பை கெடுக்குது" என்ற வழக்காடு சொல் இருக்கிறது. வெற்றி என்ற மகிழ்ச்சியை அடைய வேண்டுமானால்  முயற்சி என்ற உழைப்பும் அவசியம்  தேவைப்படும்.

  முயற்சியுங்கள் முன்னேறமுடியும் முன்னேற்றமே வாழ்க்கையைச் சந்தோசமாக கொண்டு செல்லும்.இகழ்ச்சியைத் தூர வையுங்கள்  அதையே வெற்றிப்பாதைக்கு அடிக்கல்லாக இட்டு வாருங்கள் . ஓவ்வொரு அடியும்  கவனமாக காலெடுத்து வைத்தால்  வெற்றி என்ற கனியைச் சுவைக்க முடியும்.ஆம் முயன்றால் முடியும் .

வாழ்த்துக்கள்.----கவியாழி----


Thursday, 5 September 2013

பதிவர்கள் கூட்டம்

                                 நான் சுய அறிமுகம் செய்யும்போது

                                       நண்பர்களுடன் நான்(நன்றி வெங்கட்)
ஆர்வமாய் வந்தார்கள்  அனைவரும்
ஆங்காங்கே பேசினார்கள் மகிழ்ந்தார்கள்
ஆனந்தமாய் சிரித்தார்கள்  இணைந்தார்கள்
அன்பாய் எல்லோரும் இருந்தார்கள்

இன்பமே முகத்தில் தெரிந்தது
இளமையாய் இருந்தது மகிழ்ந்தது
துன்பமும் மறந்தது நட்பால்
தூரமாய் அன்றுமே விலகியது

பண்பால் சிறந்த படைப்பாளிகள்
பசியைத் துறந்த உழைப்பாளிகள்
நல்லதே சொல்லும் நல்லோர்கள்
நட்பையே போற்றும் நல்பதிவர்கள்

இளமை மறந்த பெரியோர்கள்
இன்பமும் வெறுக்காத  இளைஞர்கள்
இன்னுமே மணமாக பையங்கள்
இனிமேல் தேடப்போகும் அவர்களும்

சுதந்திரம் கொண்டே மகிழ்ந்தார்கள்
சூழ்ந்தே பேசிச் சிரித்தார்கள்
சொந்தம் கொண்டு அழைத்தார்கள்
சொல்லொன்னா இன்பத்தில் மகிழ்ந்தார்கள்
---கவியாழி---

Tuesday, 3 September 2013

என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்

ஆர்வத்துடன்  அனைவரும்


 புலவர் அய்யாவுடன் பதிவர்களும் நானும்


எனது சுய அறிமுகத்தின் பொது

Sunday, 1 September 2013

பதிவர்கள் வரவைக் கண்டு மகிழ்ந்தேன்


பதிவர்கள் எழுச்சியைக் கண்டேன்
பறந்து வருவதை அறிந்தேன்
உறவை வளர்க்க துணிந்தேன்
உங்களை வரவேற்று மனம் கனிந்தேன்

சொல்லிப் புகழ விழைந்தேன்
சொல்லில் தடுமாறி நின்றேன்
மெல்லியச் சிரிப்பினை உதிர்த்தேன்
மீண்டும் மீண்டுமே சிரித்தேன்

நட்பில் நானும் மிதந்தேன்
நாளும் அன்பில் நெகிழ்ந்தேன்
பேச வேண்டித் துடித்தேன்
பேசியப் பின்பு நினைத்தேன்

வீரம் கண்டு சிலிர்த்தேன்
தூரம் கேட்டுத் தொடர்ந்தேன்
தொலைவில் இருப்பதை அறிந்தேன்
தூய நட்பால் தொடர்ந்தேன்

நேரில் காண இருந்தேன்
நேரமின்றி நான் தவித்தேன்
தமிழைத் தேனாய் குடித்தேன்
தாகம் தீர்ந்து முடித்தேன்

Saturday, 31 August 2013

மூத்தப் பதிவருடன் சென்னைக்கு வந்த முதல் பதிவர்

      இன்று மாலை மூன்று மணிக்கு எனக்கு அவசர அழைப்பு திரு.ரமணி அய்யா. மதுரை அவர்களிடமிருந்து "நான் சென்னை வந்துவிட்டேன் நான் உடனே புலவர் அய்யாவைப் பார்க்க முடியுமா என்று சொன்னார்.
 உடனே எக்மோர் ரயில் நிலையம் சென்று அவரை புலவர் அய்யாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன்.


அங்கு முதன் முதலில் திரு .ரமணி அவர்கள்தான் பதிவர் திருவிழாவுக்கு வந்தார்  எனபதை சுமார்.மாலை 4.15 க்கு புலவர்.அய்யா அவர்கள் உறுதி செய்தார்.

 அதன்பின் இருவரும் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தார்கள்.எனக்கு ஏதோ புத்தகத்தில் படித்த ஞாபகம்.இருவரும் தொடர்ந்து பேசியதிலிருந்து எவ்வளவு பெரிய ஜாம்பவான்களிடம் நட்புப் பாராட்டியுள்ளேன் என்பதை நினைத்து  அகமகிழ்ந்தேன்.

திரு.ரமணி அய்யா அவர்கள் ஈ.வே.ரா. பெரியாரின் பாட சாலையில்  அவருடன் அன்பைப் பகிர்ந்து திருச்சியில் பயின்றவர் என்பதை அறிந்து மனம்
மகிழ்ந்தேன்.அப்போதே  பெரியாருடன் வீட்டில் தங்கி அவருக்கு பணிவிடைச் செய்தவர் என்பதை அறிந்து வியப்புற்றேன்.

அதுபோலவே புலவர் அய்யா அவர்கள் மாண்புமிகு.எம்.ஜி.ஆர். அவர்களை நேரில் சந்தித்தது பற்றியும் அவரின் ஆளுமைத்திறன் மற்றும் மனித நேயம் பற்றி கூறியது  அவரின் பெருந்தன்மைக்கு சான்றாய் இருந்தது.

இருவரும் மாறிமாறி பேசியதிலிருந்து  பல விஷயங்கள் எனக்குப் புரிந்தன நான் நல்லோரிடம் பழகி வந்தேன் என்று மகிழ்ந்தேன் .. புதுப்புது விஷயங்களை பேசினர்கள் என்பதைவிட எனக்கு எவ்வாறு பெரியோர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுரைத்ததுபோல் இருந்தது..

ஆனாலும் இருவரின் என்ன ஓட்டமே பதிவர் திருவிழாவை எப்படி சிறப்பாக நடத்துவது என்றே பேசினார்கள்.இறுதியில் புலவர் அய்யா இந்த விழாவை சிறப்பிக்க  ஆரூர்,மூனா.செந்திலும் .கவிஞர்.மதுமதியும் என்னுடன் பேசி வருவதிலிருந்து  மிகவும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நடக்கும் என்பதில்
ஐய்யமில்லை ஆனால் அடுத்த வருட சந்திப்பு பற்றியே சிந்திக்கிறேன் என்று சொன்னது மகிழ்வாய் இருந்தது.

காரணம் இந்த வருடம் சிறப்பாக நடைபெறும் என்ற நம்பிக்கையும் அடுத்த  வருடம் எப்படி சிறப்பாக நடத்துவது என்ற யோசனையில் புலவர் அய்யா உள்ளார் எனபதே எனக்குத் தெளிவாய் புரிந்தது.அதற்க்கு திரு.ரமணி அவர்கள். எல்லோரிடமும் பேசியப்பின் நிச்சயம் நீங்கள் எதிர்ப் பார்த்தபடி சிறப்பாகவே நடத்தலாம் என்று பட்டும் படாமலும் சொன்னார்,அது அவரது  முன் யோசனையையும் பெருந்தன்மையைக் காட்டுகிறது.எல்லோரையும்  கலந்தே முடிவு சொல்வதாக சொன்னார்.

ஆக மொத்தம் இருவருமே ஒத்தக் கருத்துடன் பதிவர் நலனையே குறிக்கோளாய்  கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் நானறிந்த உண்மை. எனவே இருவரின் எதிர்ப்பார்புக்களுக்கிணங்க அனைவரும் ஒன்றிணைந்து நல்ல விஷயங்களுக்காகவும் நாம் இணைந்து  செயல் பட வேண்டியது அவசியமெனக் கருதுகிறேன்Friday, 30 August 2013

விழாவில் கலந்துகொள்ளும் பதிவர்கள் கவனத்திற்கு...

             இன்றிலிருந்தே பதிவுலகம் சென்னையை நோக்கி புறப்படத் தயாராய் இருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்க நாங்களும் தயார்தான் என்பதை அனைத்துக் குழுவினரின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன்


செய்ய வேண்டியது

          1,    பதிவர்கள் ஒவ்வொருவரும் கூடவே இன்னொரு பதிவரை அழைத்துவர முயற்சியுங்கள்.இவ்வாறான தனியுலகில் அவர்களையும் இடம்பெற செய்வது எல்லோரின் கடமையாகும். அவர்கள் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்விலும் உங்களின் பங்களிப்பும் நிச்சயம் இருக்கும் .
     
         2,   நிகழ்ச்சிக்கான இடத்தின் விலாசமும் ஒருங்கிணைப்புக் குழுவினரின்
கைபேசி எண்களும் கையோடு மறக்காமல் எடுத்துவர வேண்டும். அல்லது வரும் முன்பே தகவலை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ தெரிவித்தல் நலம்.

         3,  சென்னை வந்தவுடன் அரங்கத்தில் உள்ள செல்லும் முன்பே முன்பதிவு  பகுதியில் உள்ள பொறுப்பாளரிடம் சென்று உங்கள் பெயரைப் பதிவு செய்து  உங்களுக்கான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.


        4  அமைதியான முறையில் எல்லோருக்கும் நாகரீகமாக வணக்கம் சொல்லி நலம் விசாரித்து நமது பண்பாட்டை காத்தல் நன்று.பெயர் பெரியா விட்டால் அடையாள அட்டையைப் பார்த்து அறிந்து கொள்ளவும்.

         5, மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போது  ஒவ்வோருவரும் என்னப் பேசுகிறார்கள் என்பதைக் கவனமாக கேட்கவும். அவரின் பேச்சுப் பற்றி நீங்கள் உங்களது அனுபவத்தில் கருத்தில் கொள்ளலாம்.
     

தவிர்க்க வேண்டியது

            1, கைபேசியை  அதிர்வு அழைப்புகளில் சரி செய்து வைப்பது அவசியமாகும்.இது மற்றவர்களுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்

                2,   அரங்கினுள் அருகில் இருப்பவரிடம்  தனியாக சத்தமாக பேசிக்கொண்டிருக்கக் கூடாது.பொது இடத்தில் அமைதி காப்பது  நலம்.அவசியமாகும்

               3, உணவுக் கூடத்தில் அதிகபட்ச அமைதியுடன் ஒவ்வொருவரும்  வரிசையில் நின்று  உணவை வாங்க வேண்டும் .இரண்டு மூன்று பேருக்கு ஒருவரே வாங்கிச் செல்ல முயற்சிக்கக் கூடாது.

            4.  அரங்கத்திற்கு வெளியே நின்றுகொண்டு இரைச்சலாய் பேசக்கூடாது

            5,  தங்களது உடைமைகளையும் விலை உயர்ந்தப் பொருட்களையும் அவரவர் சொந்தப் பொறுப்பில் பாதுகாத்து கொள்வது உங்களின் கடமை.
---கவியாழி---

Thursday, 29 August 2013

உங்கள் அன்பிற்கு நன்றி- 28.08.2013 ல் ஓராண்டு நிறைவு

                   


                                                 எல்லோருக்கும் நன்றிமொத்தப் பதிவுகள்                ; 295

கருத்துரைகள்                     ; 6,073

வருகைத் தந்தவர்கள்         ; 37,943

வலையில் இணைந்தவர்கள்          ; 131


நிலையாக ஒன்றே சொல்லாமல்
நில்லாது தினமே எழுதியுமே
சுவையாக மகிழ்வாக இருந்திடவே
சுறுசுறுப்பாய் எழுதியது அத்தனையும்

விலைக்காக  எதையுமே எழுதவில்லை
வேதனையும் யாருக்குமே தந்ததில்லை
கலையாக எண்ணியேக் கவிதைகளை
காலமெல்லாம் எழுதிடவே வாழ்த்துங்களேன்

குறுகிய காலத்தில் இத்தனையும்
குறையாத  அன்போடு என்னுடனே
குறைவான  எண்ணிக்கையில் வந்தாலும்
குற்றமென  எந்நாளும் கூறாமல்

பிடிக்காமல் போனாலும் பழிக்காமல்
பிழைகளை தவறாக எண்ணாமல்
தமிழ் மணத்தில் இடம்பிடிக்க
தந்திட்டீர் ஐந்தாவது இடத்தினையே

நிலையாக இவ்விடத்தில் நிரந்தரமாய்
நிற்பதற்கு என்னாலே இயலாது
ஆனாலும் தந்திடுவீர் ஆதரவை
அன்புடனே நல்லாசி வேண்டுகிறேன்