தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்று அம்மாவாசை


காலையில் எழுந்ததும்
கடமையாக செய்வது

மனதில் கருத்தாய் நிறுத்தி
நினைவில் வைத்து

இறந்த பெற்றோரை
நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்!

இந்த நாளில் மட்டும்
சொந்த நாளாய் நினைகிறேன்

பிள்ளை பருவத்தை
மெல்ல நினைக்கிறேன்

சொல்ல வார்த்தையில்லை
சொல்வதில் வெட்கமில்லை

சின்ன பிள்ளைபோல
சாகும்வரை அன்புடன்  இருந்ததை!

எப்போதும் உண்மையான
எள்ளளவும் குறையாத அன்பினை

உள்ளமெங்கும் உள்ளதை
உள்ளபடி நினைத்து அழுகின்றேன்!!!

ஒருபொழுது பட்டினியாய்
உங்களை நினைத்து மடிகிறேன்

எள் தண்ணியிட்டு
எனது இறந்தோரை நினைத்து

நல் மனதோடு நினைதிட்டு
 நாள் முழுதும் விரதமும்

உங்களை நினைத்து
உளமாற நினைக்கும் நாள்

இந்த  நாள் மட்டும்
இமைகளுக்கு  இருப்பதில்லை உறக்கம்

என்றுமே மறந்ததில்லை
உங்களின்  அன்பான ஏக்கம்


Comments

 1. இந்த நாள் மட்டும்
  இமைகளுக்கு இருப்பதில்லை உறக்கம்

  என்றுமே மறந்ததில்லை
  உங்களின் அன்பான ஏக்கம் ..

  இறந்த பெற்றோரை
  நிறைந்த மனதுள் நினைக்கும் நாள்!

  மனம் கனக்கும் பகிர்வுகள்..

  ReplyDelete
  Replies
  1. பெற்றோரை பிரிந்து வாழும் அனைவருக்கமான வருத்தமான நிகழ்வு நாள்

   Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more