Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

சின்னஞ் சிறு விதைகள்

இறக்கும் முன்னே எதிரியை மன்னித்துவிடு-ஆனால் துரோகியை நினைக்காதே                   ***** நன்றியை கடமைக்கு சொல்லாதே நன்றி உள்ளவனாய் இரு-அதுவே நன்மையாய் தொடரும் துணையாக                   ***** சோதனை  வரும்போது வேதனை கொள்ளாதே-அப்போது வீழ்த்திவிடும் உன்னை                  ***** நேர்மை இருந்தால் நிச்சயம் வெற்றி-ஆனாலும் பொறுமை வேண்டும்                   ***** மன்னிக்க தெரிந்தவன் மனிதனாகலாம்-ஆனால் கோழையாய் வாழ்ந்திடாதே                    *****

தூக்கம் போச்சு

இன்னைக்கு ஏனோ தூக்கம் போச்சு ஆனா துயரமில்லை ஏக்கமும் இல்லை ஏனோ தெரியலை தூக்கம் போச்சே கொசுவும்  இல்லை பசிக்கவும் இல்லை ஏனோ தூக்கம் போச்சு

பூ மாலை

வண்டுண்ட தேன் வழிந்தோடி  செல்ல நண்டு குழம்போடு நங்கையும் காத்திருக்க கண்டவுடன் காமம் கவர்ந்திழுக்க அவனை கட்டியணைக்க நினைத்தாள் பௌர்ணமி  நிலவில் பனிமழை வெளியில் குளிரிலும் சூடாக குமரியின்  தேகம் பருவத்தின் தாகம் அவளுக்கும் மோகம் காத்திருந்த கன்னியை கண்டவுடன்  தீண்டாமல் கண்ணிமையை கவ்வி பெண்மையை தூண்டினான் பேரமுதை தூண்டினான் தேகத்தை  சூடாக்கினான் திசையெங்கும் நகர்த்தி தீண்டி தீண்டி யாடினான் மாதுலையுள் துளைத்து மீண்டும் மீண்டும் மகிழ்ந்தான் தேகத்தை தென்றலாய்  நுகர்ந்தான் இறுதியாய்  தீயை  உணர்ந்தான்

தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

தடம்கேட்டும் தவிக்கின்ற இந்நாளில் தானாக முன்வந்து வழி சொல்லும் புடம்போட்ட நண்பர்களாய் புறப்பட்டு-என் இடம்தேடி  வாழ்த்தும் நண்பர்களே தென்றலாய் வந்து தீண்டியவரும் தினமும் என்னை நாடிவரும் அன்றலர்ந்த பூவைப்போல சூடி-நாளும் அன்பாக நட்பு சொல்லும் அன்பர்களே விதையாக தொடரும் எனது கவிதைகள் விரைவில் முளைக்க துணைபுரிந்து விளையாடும் இலக்கிய மேடைதனில்-நானும் விரைவாக விழுந்து எழ விரும்புகிறேன் துணையாக இருந்து வழி சொல்லி தினமும் என் கவியை படித்து தெரிகின்ற தவறை  தினம் சொன்னால் -நான் திகட்டாமல் ஏற்பேன் திருத்திக் கொள்வேன் தமிழோடு விளையாடி தனியாக உறவாடி துளியாக மனதில் துளிர்கின்ற சிந்தனையை தரணியோரும் படித்து வாழ்த்த-தமிழனாய் பிறந்ததே பேரின்பம் ஆனந்தம் உற்சாகம் வளமாக வேண்டும் வரைகின்ற கவிதை வாழ்நாளில் தோன்றும் நிறைவான  நினைவே தளமாக எண்ணி தாங்கி கொண்டே-உயிராக தமிழை மணந்து தழுவி மகிழ்கின்றேன்

மகிழ்ச்சியான வாழ்வுக்கு

மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனிதனை நேசி மனிதநேயம் கொண்டு மனநிறைவாய் யோசி நல்லதையே பேசி நாணயமாய்  செய்து- நட்புடன்  நல்லிணக்கம் உள்ளவனாய் நல்லோரை  யாசி மரங்களை வளர்த்தால் மழை பெறலாம் மனதை வளர்த்தால் வளம் பெறலாம் இழைதலை கொடியால் நிழல் பெறலாம்-எப்போதும் இனிமையாய் பேசினால் இன்பம் கிடைக்கலாம் உழுதவன் உழைத்தால் உணவு உண்ணலாம் உண்மையாய் நடந்தால் உள்ளம் மகிழலாம் குயவன் செய்வதுபோல் வாழ்வை-குணமாக குடும்பம் தழைக்க வழி செய்யலாம் காற்றும் நீரும் மாசு படாமல் காலை எழுந்ததும் தூசு இல்லாமல் நேசம் தழைக்க நிம்மதி கொடுக்க-தமிழ் பாசம் பொங்கம் பண்புடன் வாழ்வீர்

பாக்கெட் மணி கொடு

கல்லூரிக்கு போகணும் காசு கொடு கைசெலவுக்கு வேணும்  காசு கொடு பேப்பர் வாங்க பேனா வாங்க-நண்பனோடு ஆட்டோ பேருந்தில் செல்ல காசுகொடு புதுப்படம் பார்க்கனும் பிறந்த நாளுக்கு படிக்கும் நண்பனுக்கு பார்ட்டி கொடுக்கணும் பெட்ரோல் போடணும் பழுது பார்க்கனும்-காசுகொடு  பஞ்சர் ஓட்டனும் பார்கிங் செய்ய பரீட்சை கட்டணம் பதிவு கட்டணம் கேண்டீன் போகணும் பிச்சா திங்கணும் படத்துக்கு போகணும் பந்தா காட்டனும்-சேமிப்பு கணக்கில் போடணும் காசு கொடு ஆணும பெண்ணும் அழகை ரசிக்க நானும் போடணும் நல்லதாய் தெரியணும் சென்ட் வாங்கணும் சிறப்பாய் இருக்கணும்-செலவுக்கு நாளும் காசுகொடு அப்பா காசுகொடு

அவசரப் பயணம் அவசியமா?

அவசரம் எல்லோர் மனதிலும் அவசரம் ஆட்சியாளருக்கும் அரசியல்வாதிக்கும் பேச்சு சுதந்திரம் பேணவேண்டி அவசரம்-மேடை பேச்சு எல்லாம் தனி ரகம் அவசரம் இருப்பவன் பணத்தை மறைத்துவைக்க இடம்தேடி பதுக்கும் வேலையில் அவசரம் ஏழைக்கு ஏழ்மை நீங்க அவசரம்-அன்றும் வேலை செய்த கூலிவாங்க அவசரம் எல்லாம் இருதும் வசதி இருந்தும் எதிரியை  நினைத்து நிம்மதி இழந்து பொல்லா  பகையால்  பொறுமைன்றி-உயிர் கொல்லும் நிலை கொடுமைக்கும் அவசரம் வாகனம் ஓட்டும் நேரம்கூட அவசரம் வாழ்க்கை மறந்து மதியும் இழந்து வேகமாக  ஒட்டி செல்லும் அவசரம் -சாலை விபத்தில் உயிர்ப்போவதிலும் அவசரம்

ரசித்தவர்கள்