Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

நண்பனே திரும்பி வா

நண்பனே நண்பனே நலமா நம்மூரில் எல்லோரும் நலம் நாடுகடந்த நம் நட்பு நாதியத்து போனதாலே வீதியெங்கும் பேசுகிறார் வேதனையாய் சொல்லுகிறார் சோதனையான நட்புக்கு-ஆறுதல் சொல்லும்படி இல்லையே காடுக் கம்மாய் சுத்தியது கிணத்துக்குள்ளே மூழ்கியது திருட்டு மாங்காயும் புளியும் திரும்பவும் உண்ணத்தோணுது நம்மூரு உணவுக்கு நானிங்கே அடிமை நண்பன் நீ சென்றதாலே நாக்கும்கூட தனிமை ஏக்கமாய் உள்ளது எப்போது நீ வருவாய் இருவருமே இங்கே-உழைக்க இணைந்தே செல்லலாமே சுற்றமும் நட்பும் சூழ்ந்து வாழ நீ வா உற்றதுணை எல்லோரும் உடனிருக்க திரும்பி வா +++++++கவியாழி+++++++

கவியாழி : பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

கவியாழி : பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும் :                                                                      

தோல்வியில்லைத் தொடர்ந்திடு

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் முடியாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால் வீழ்த்திவிட முடியாது தோற்றதாய் சொன்னாலும் துவண்டுவிட முடியாது தோல்வியை தொடர்ந்தவன் வெற்றிபெற தடையேது மீண்டும் மீண்டுமென மகிழ்ச்சியாய் துவங்கிடு தாண்டுமுயரம்த் தடுத்தாலும் தோல்வியில்லைத் தொடர்ந்திடு

பெத்தவங்களை போற்றுங்க

கற்றதனால் மறக்குமோ பெற்றோரின் கடமைகள் காசுக்கெங்கும் கிடைக்குமோ-அன்பு கடையிலும் கிடைக்குமோ கனிவுடனே பேர்சொல்ல கண்குளிரப் பார்த்திருக்க மீண்டும் வந்து பிறப்பாரா மகிழ்ச்சியோடு அழைப்பாரா மற்றவரும் நினைப்பாரோ மகிழ்ச்சியாக சிரிப்பாரோ உற்றாரும் வாருவாரோ உடனிருந்து பார்ப்பாரா கருவுற்ற நாள்முதல் கண்ணுறக்கம் பாராமல் உருவாக்கி வளர்த்தாரே உதிரத்தை உணவாக்கி பெத்தவங்களை போற்றினாலே பேரிண்ப தடையேது  மகிழ்ச்சி பெற்றதனால் பிள்ளைகளின் பெருமைக்கு வேறென்ன புகழ் ஈடு

பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்

              பட்டகாலில் படும் கெட்டகுடி கெடும்                                                              *********** "பட்டகாலில்படும் கெட்ட குடி கெடும்" இது பழமொழி என்பது எல்லோரும் அறிந்ததே .ஆம் நண்பர்களே  நேரத்தில் இந்த பழமொழியை  பொருத்தமான தருணத்தில் நினைவுறுத்துகிறேன்.நமது தமிழ்ச்  சொந்தங்களை இழந்து தவிக்கும் நம் மக்களின்மீது மீண்டும் குற்றம் சுமத்தி கொல்லும் செயலுக்கு நம்மினத்தவர்களே துணைபோகலாமா? நம் தமிழ் மக்ககளே குடிகெட்டு கஷ்டப்படுகிறார்கள்  நம்மைக் கெடுத்து நம்மவரையே கொன்று இன்று நம் நாட்டில் நல்லவர்போல்  நடிக்கும் திறமை யாருக்கு வரும்  அரசியல் என்ற போர்வையில் ஆளுக்கொரு நியாயம்  அவசியமா ? தகுமா?அதிலும் தமிழனே சாதனைப் படைக்கிறான். மற்ற இனத்தினர் வேடிக்கைப் பார்க்க நம் மக்களே சண்டை போட்டுக் கொள்ளும் கொள்ளும் போக்கு தேவைதானா? இன்றைய சூழலில்சொந்தங்களை இழந்து சொத்துக்களையும் இழந்து தவிக்கும் நம் மக்களுக்கு உதவ முன்வராதவர்களே நம் மக்களைப் பழித்தும் இழித்தும் பேசும் நிலை தேவைதானா ? அரசியல் ரீதியான போராட்டத்திற்கு அரசியலே தீர்வே அன்றி இத்தனைபேர் உயிர்துறக்

புறப்படு தமிழா ! புறப்படு !!

Image
புறப்படு புறப்படு புயலென விரைந்திடு புதைந்தவர் கனவினை புரிந்திட்டுப் புறப்படு வதைபடு உதைபடு வாழ்பவர் துயர்நீக்க வந்திடும் சிரமங்கள் வென்றிடப் புறப்படு எழுந்திடும் உணர்வுகள் இணைந்திடப் புறப்படு எம்மினம் என்றே உணர்வுடன் புறப்படு மாணவர் உணர்ச்சியை மழுக்கிட முடியாது மக்களின் உணர்ச்சியை மறுத்திடக் கூடாது மாணவர் கிளர்ச்சியே மனதுக்கு மகிழ்ச்சியே மாண்டிட்ட மக்களின் மறுபடி எழுச்சியே

துரோகியே மடிவாய் நீயே

அழுகின்ற குரலென்றும் அடங்காமல் போகாது அடக்குமுறை எந்நாளும் அறவழியாய் ஆகாது துடிக்கின்ற உயிரென்றும் துணையின்றிப் போகாது துன்பமே எல்லோர்க்கும் வழித்துணையாய்  மாறாது விழுகின்ற நொடிஎல்லாம் விரல்துடிக்க மறவாது விழுந்தாலும் மனதால்-உணர்வை வீழ்த்திவிட முடியாது கடுமையான வார்த்தையாலே நெடுந்துயரம் தீராது கயவனாகி போனதனால்-உனக்கு கண்ணுறக்கம் இனியேது காற்றடிக்கும் திசையெங்கும் கண்டபடிச் செய்திட்ட கற்பனைகெட்டாத காரியத்தால் தூற்றித் துறத்தும் காலம் தூரமில்லை நேற்றுவரைச் செய்ததை நினைத்துப் பார்த்து தோற்றுவித்த துரோகத்தை ஏற்றுக்கொண்டு மடிவாய்  நீயே கவியாழி.

ரசித்தவர்கள்