Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இப்படியும் என்னை வாழ்த்தியோர்

அன்புள்ள நட்புகளுக்கு அடியேனின் வணக்கம் கடந்த 24.04.2013 அன்று நான் எழுதிய 'நான் புலமை அறிந்தப் புலவனில்லை" என்ற கவிதைப் பற்றி கருத்து கூறியவர்களில் பலர் என்னை கவிஞரே ,பாவலரே,புலவரே என்றும் அருமையாக எழுதுவதாகவும்,தொடருங்கள் என்றும் எல்லா இலக்கணமும் உள்ளடங்கியுள்ளது என்றும் எழுத்துப் பிழை உள்ளதென்றும் முயற்சி தொடரட்டும் என்றும் வாழ்த்தியவர்கள் வணங்கியவர்கள் பலபேர் இருந்தாலும் கருத்தே கூறாமல் இருந்த நல்ல உள்ளங்கள், இனிய நண்பர்கள் நான் பெரிதும் மதிக்கும் நல்லோர்க்கும் எனது பணிவான வேண்டுகோள்" தொடர்ந்து படியுங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கரம்கூப்பி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இனிமேல் கவியாழி என்ற புனைப் பெயருடன் மட்டுமே எழுதவே விரும்புகிறேன். மேலும் தளத்துக்கு பெயர் வேண்டும் என்ற காரணத்தினாலேயே கவியாழி என்று பெயர் வைத்து எழுதி வந்தேன். இந்தப் பெயர் வைக்க காரணம் கவிதையை ரசிக்கும் யாழின் இசை  ரசிகன் என்ற வரியின் சுருக்கமே "கவியாழி".கண்ணதாசன் என்ற இயற்பெயர் இருந்தாலும் அந்த மாபெரும் கவிஞரின் பெயரை எவ்விதத்திலும் களங்கப் படுத்தாமல் தவிர்த்து நான் புனைபெயரில் இ

கரும்பலகையைக் காணவில்லை

Image
                                                                           கரும்பலகை(சிலேட்) இன்னும் தவிர்க்க முடியாதது கரும்பலகை.இப்போதும் பலரும் தங்களின் குழந்தைகளுக்கு முதலில் எழுத்தக் கற்றுக் கொடுப்பது இது போன்ற கரும்பலகையில்தான். கணினியின் பயன்பாடு  எல்லோர் வீட்டிலும்  உபயோகத்தில் இருந்தாலும்  முதன் முதலில் எழுதக் கற்றுகொடுக்கும் சிலேட் எண்ணும் கரும்பலகையில்தான்  சொல்லித்தரும் வழக்கம் உள்ளது நானும் இதுபோன்றதில் தான் எழுதிப் பழகினேன் .எனது அப்பா அப்போது என் கைபிடித்து சரியாக எழுதுவதுப் பற்றிச் சொல்லித்தந்தார்.அதன்பின்பே பள்ளியில் சேர்ந்து எழுதப் பழகிக் கொண்டேன்     எழுதிவிட்டு அழிப்பதற்கு சிறு துணியையோ கையாலோ அழித்த ஞாபகம் இன்னும்நினைவில் இருக்கிறது.மேலும் அப்போதே என்வயதிலிருந்த மாணவர்கள் தண்ணீர் தழை,கோவை இலை போன்றவற்றைக் கொண்டு அழித்தால் எழுத்துக்கள் மிக துல்லியமாகவும் எழுதும்போது விரைவாகவும் எழுத முடியும் என்பதால் அப்போதே அதை காசுக்கு விற்றுவருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறான இலைத்தழைகளைப் நகரத்தில் பார்ப்பதே அரிதாகிவிட்டது

நல்லவங்க சேரும் கூட்டம்.....01.09.2013

வில்லு வண்டி பூட்டிகிட்டு வீதிவழிப் போற மச்சான் சொல்லுறத கேளுங்களேன் சித்த நேரம் நில்லுங்களேன் நாலுஊரு தாண்டி நானும் நல்ல சேதி கேட்கப்போறேன் நின்னுகிறேன்  சொல்லுபுள்ள நேரம் பார்த்துப் போகணுமே பல்லு இல்லா கிழவனுமே பார்த்து என்னை சிரிக்கிறாங்க பத்திரமா போயி சீக்கிரம் பார்த்தசேதி சொல்லு மச்சான் மத்த ஊருபோல இல்ல மாமன் பெத்த செல்லக்கிளி சத்தியமா நானும் வந்து சங்கதிய சொல்லப் போறேன் நம்ம தமிழ் நாட்டுலத்தான் நடக்கப் போற கூட்டத்துக்கு நாலுஊருத் தள்ளி நீயும் நாலுசேதி கேட்டுவாயேன் உள்ளதையே சொல்லப் போனால் ஊருக்குப் போறவேலை  நல்லவங்க சேரும் கூட்டம் சென்னையிலே நடக்குதடி சீக்கிரமா போயிவந்து சீருகொண்டு வாங்க மச்சான் சேலையோட தாலியோட சீர்திருத்த மணம் பண்ணிக்கலாம்

திருவாளர்கள் ;ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன் அவர்களும்

Image
  ரமணி அய்யாவும்,திண்டுக்கல் .தனபாலன்  ஆகிய இருவரைப் பற்றி எல்லோருக்குமே தெரிந்திருக்கும். இருவரும் தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இருவருமே புதியவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை ஊக்கப் படுத்துவதில் இருவருக்கும் நிகர் எனக்குத் தெரியவில்லை . பெரும்பாலான தளத்தில் சென்று வாசித்து அதற்கு வாக்களிப்பதோடல்லாமல் அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு திருத்தங்கள் ஏதேனும் இருந்தால் சொல்லி உற்சாகப் படுத்தும் நல்ல உள்ளம் படைத்தவர்கள். அதுமட்டுமல்ல  இருவரின் பதிவுகளும் எல்லோரும் விரும்பிப்படிக்கும் படி சிறப்பாகவும் சிந்திக்கும்படியும் இருக்கும்..ரமணி அய்யா எழுதும் தமிழுக்கு  நிகர் அவரேதான். ஒவ்வொருமுறையும் நான் ஏதாவது பிழை இருக்காதா  அவரிடம் சொல்லித் திருத்தி பேர் வாங்கலாமே என்று நினைத்தால் அதற்கு இன்றுவரை வாய்ப்பே இல்லை.அவ்வளவு சிறப்பாக எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக எழுதுகிறார். இலக்கணம் பற்றி எனக்கு எளிமையாக விளக்கும்போது நான் அவர் அருகில் இருந்து தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காத என ஏங்கி வருகிறேன்.அவரும் என்னை மதுரைக்கு வரச்சொல்லியிருக்கிறார் ஆனால் எனக்குத்தான் நே

ஆழாக்கு சாம்பல் மட்டுமே....

பணத்தை சேர்க்கும் பயனையும் பசியில் சேர்த்துப் பாருங்கள் பகிர்ந்தே உணவைப் போடுங்கள் பயனோர் மகிழ்வய் காணுங்கள் இந்தப் பிறவியில் வாழ்வதையே இனிமை யாக்கி  உணருங்கள் இறுதி நாட்களில் மகிழுங்கள் இன்பம் மனதில் சேருங்கள் மகிழ்வாய் வாழப் பழகுங்கள் மனதை போற்றி உணருங்கள் மக்கள் துயரைத் போக்கியே மானிடம் புகழ வாழுங்கள் இனிமேல் புதிதாய் விதிசெய்வீர் இனிமை பணத்தில் இல்லாமல் தலைமேல் பணத்தை சுமக்காமல் தவிர்ப்பீர் விட்டுச் செல்வதையே ஆழாக்கு சாம்பல் மட்டுமே அறிந்தோர் கையில் கிடைக்குமே அதற்காய் பணமேன் சேர்க்கணும் அதையும் தவிர்த்தும் சாகனும்

கணினியைத் திறந்தால்............

Image
(நன்றி கூகிள்) விடியலைக் கண்டதும்          வேகமாய்த் தேடினேன் விளக்கைப் போட்டதும்         விசையை அழுத்தினேன் தனக்குள்ளே சிரித்து        தகவலாய் வந்தது கணக்குப் பார்க்க        கணினியைத் திறந்தால் கண்டவர் எண்ணிக்கை         காண்டேன் இருநூறு கொண்டேன் கவலை        குறைய வேண்டாமென தமிழ்மணம் சென்றேன்     தளத்தினைப் பார்த்தேன் அமிழ்தாய் வேண்டும்     அப்போதே கைஅமுக்கி இதழ்த் திறந்து       இனிய வாக்கிட்டேன் புனிதமாய் போற்ற          கணினிதான் எனக்கு இனிமையைத் தருது          இன்னலைமறக்குது மனதும் மகிழுது           மாலையிலும் தொடருது தொடந்து வரவே           தினமும் விரும்புது தூக்கம் என்னை           தவிக்கவும் விடுது அறியாத நிகழ்ச்சிதான்           ஆனாலும் மகிழ்ச்சிதான்

விலை பேச வேண்டாமே...

விழியோரம் கண்ணீர் விரலாலே தட்டி விட்டேன் விதியாக வந்த சொல்லை விதி மாற்ற முடியுமா கதை தோறும் காட்சியும் கண்டதாய் சொன்னபோது கதை மாறிப் போகுமா கதையென்றே மாறுமோ சினம்கொண்டச் செயலால் சிதைத்து விடும் மனதையே சீர்நோக்கிப் பார்த்தாலே சீக்கிரமே புரியாதோ விலைப் பேச வேண்டாமே விதி மாற்றக் கூடாதே மதியாலே மாறிவிடு மக்களையே வாழவிடு விலைபோயிப் பயனென்ன விடிந்ததுமே சேதிவரும் உலைவாயை மூடினாலும் ஊர்வாயும் மூடாதே கலையாக பார்த்தாலே கல்வியும் மகிழ்ந்திடுமே கடவுளாம் சரஸ்வதியும் கருணை வழி காட்டுமே

ரசித்தவர்கள்