Posts

தெய்வங்கள்

தெய்வங்கள்

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா

இத்தனை நாள் எங்கிருந்தாய் நண்பா இனிமேலும் இருந்திடலாம் அன்பாய் புத்த கங்கள் சுமந்த காலத்தை- நாமும் புதிதாய் நினைத்து மகிழ்ந்திடலாம் வா ! கற்பனையாய் படித்த அந்த நாட்களில் கல்விகற்க மட்டும் பழகி வந்தோம் விற்பனைக்கே அறிவை வருத்த வில்லை விடிந்ததுமே மனப்பாடம் செய்து வந்தோம் கற்பனையாய் மட்டுமே அதிகம் எழுதியதால் கைநிறைய அடியும் வாங்கி கொண்டோம் கற்றதனால் பலபேர்கள் மகிழ்ச்சியாய்-ஆசிரியர்கள் கைகுலுக்கி பாராட்டும்  பரிசும் பெற்றார்கள் இடைவெளி நேரம் விட்டதுமே இணைந்து பேசி மகிழ்ந்து வந்தோம் மடையாய் வெள்ளம் செல்வது போல் மாலையில் பறந்தே சென்று விட்டோம் நெடுநாள் தொடர்பு மறந்திருக்க நேசமும் பாசமும் சேர்த்திழுக்க பலநாள் நினைவுகள் பகிர்வதற்கு-நம்மில் பலபேர் சேர்ந்தே பகிர்ந்தே மகிழ்ந்திடலாம்  கவியாழி.கண்ணதாசன் 10.04.2020.சென்னை

இளமைக் கால நண்பர்கள்

Image
நண்பர்களுடன் மீண்டும் சந்திப்பு முதலில் உள்ளவர்.சா.திருமாவளவன் அடுத்தவர் சரவணன் என்ற அமுலு நாங்கள் மூவரும் சேலத்தில் புனிதபால் மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாகப் சேர்ந்த  நாள் முதல் சேர்ந்து பழகிவந்தோம்.மூவருக்கும் அரசுப்பணி கிடைத்ததும் மற்றும் திருமணம் முடிந்ததும் பதினைந்து வருட நட்பைத் துறந்து தனித்தனியே பிரிந்தோம். நான் உறவினர் திருமணத்தில் கலந்துகொள்ள சேலம் சென்றிருந்தபோது அவர்கள் இருவரையும் சந்திக்க வேண்டுமென்ற ஆவல் இருந்தது.அதை அவர்களிடத்தில் திருமாவளவன் தற்போது வங்கி கிளை மேலாளராய் திட்டக்குடிக்கு அருகில் பணிபுரிந்து வருகிறார்.திரு.சரவணன் அவர்கள் சேலம் கோட்டத்தில் ரிவே துறையில் பணிபுரிந்து வருகிறார்

சித்தமும் கலங்கிட செய்தாயோ ?

தலைநிமிர்ந்தே தினமும் வணங்கி தலைவனாய் கும்பிட்டு மகிழ்ந்தோம் நிலையில்லா வாழ்க்கையினை நீ- இன்று நெடும் சுமையாய் எம்மை நினைத்தாயோ தினம் பலபேர் மடிவதால் தீங்கு செய்யும் மக்களுக்கு பணமும் பொருளும்பயனின்றி-மக்களின் பாசம் நேசம்  பகிர்ந்தாயோ அழிவுப் பாதையை அறிந்தாயோ அழிக்கும் வேலையும் இதுவன்றோ இழிவாய் தெரியும் இதனை நீ-இனியும் இறைவா மீண்டும் அழிவைத் தொடராதே பூமியின் சுழற்சியை புரிய வைக்க புத்துயிர் மக்களை  தெளிய வைக்க நித்தமும்  நிம்மதி யிழக்க செய்து-மனிதன் சித்தமும் கலங்கிட செய்தாயோ கவியாழி. கண்ணதாசன்

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே

மகிழ்ச்சியாய் உதிக்கும் சூரியனே மறந்ததை இழந்ததை அறிவாயோ புகழ்சியின்  உச்சத்தில் உன்னை-இன்றும் பூமியில் தினமும் வணங்குகிறோம் இயற்கையை மனிதன் அழித்தனால் இளமையில் உழைக்கத் தவறியதால் உறக்கத்தை நீயும் கெடுத்தாயோ-மக்களின் உழைப்பையும் மறக்கத் துணிந்தாயோ மக்களில் பலபேர் மகிழ்ச்சிக்கு மானிடம் மறந்ததை அறிந்தாயோ மதத்தால் இன்றும் பிரிவினையை-அன்பை மனிதனும் மறந்ததை உணர்ந்தாயோ பிழைக்கவும் வழியே தெரியாமல் பிணமாய் மக்கள் உயிர்வாழும் பணத்துக்கும் மதிப்பைக் கொடுக்காமல்-உலகே பயத்துடன் வாழ பணித்தாயோ கவியாழி.கண்ணதாசன் 07.04.2020- சென்னை

எல்லை யில்லா எழிலாள்.......

கல்லில் வடித்த சிலையோ கற்பனை வடிவின் கலையோ சொல்லில் விளங்க வில்லை சுடராய் தெரிந்தாள் அழகாய் எல்லை யில்லா எழிலாள் ஏக்கம் கொண்ட குயிலாள் வெள்ளை அழகே இல்லை விரைந்தே சிரித்து மறைந்தாள் கொள்ளை அழகாய் இருந்தும் குறையாய் இருந்தது வறுமை பிள்ளை யவளைப் பெற்றோர் பிணியில் அவளை வளர்த்தார் இல்லை என்ற நிலையில் ஏழ்மை சூழ்ந்த வழியில் தொல்லை யில்லா அழகால் தூரத்தில் பார்க்க மறைந்தால்..... .பருவம் பதினெட்டில்........8 ..................(கவியாழி)................

தமிழ் மரபுவழிப் பயணம்

Image
        17.03.2019  அன்று ஞாயிற்றுக்கிழமையில் தமிழ் மரபு அறக்கட்டளையின்  தமிழ் மரபுவழித் தேடி 36 பேர்  குளிரூட்டப்பட்ட பேருந்தில் சென்றோம்.செல்வி.சுபாசினி அவர்களின் தலைமையில் திரு.ஸ்ரீதரன் அய்யா அவர்களின் வழிகாட்டுதலுடனும் திரு.காந்தி. அவர்களால்  பயணம்  ஏற்பாடு செய்யப்பட்டு கோயம்பேட்டிலிருந்து காலை ஆறு மணிக்குப் புறப்பட்டு முதலில் காஞ்சிபுரம் அடுத்த காவேரிபட்டினம் அருகிலுள்ள மகிந்திரவாடி  எனும் சிற்றூரில் அமைந்த குடைவறைக் கோவிலுக்கு முதலில் சென்றோம். பின்னர் அங்கிருந்துப் புறப்பட்டு ராணிபேட்டை சிப்காட் வழியாக திருவலம் சென்றோம்,நாங்கள் பேருந்தைவிட்டு இறங்கி கோவிலுக்குள் நுழையுமுன்னே நடைசாத்திவிட்டார்கள் என்பது வருத்தமாக இருந்தாலும் அங்கு வெளியே இருந்த கலைநுட்பமான கல் தாழி மேலும் சுவரில் வரைந்திருந்த சிற்பங்கள் மற்றும் கல்கதவு போன்றவற்றை  வியப்புடன் பார்த்தோம்.பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மேல்பாடி நோக்கி பயணமானோம் ,நல்லவேளை அங்கு கோவில் திறந்தே இருந்தது அங்கே ஆர்வத்துடன் உள்ளே நுழைய முற்படுமுன் அதிக வெப்பத்தினால் தரையில் கால் வைக்கமுடியாத நிலையில் பலரும் தயக்கம் காட்ட

மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி..

உருவம் செழித்தே இருந்தும் உள்ளம் உணர்வை மறுத்தும் பருவம் தொடரும் கனவில்  பார்த்ததும் மனதில்  ஒளிக்கும் பொல்லா இளமை கனவு பொருந்தா நேரமும் வருத்தும் இல்லா நிலையை உணர்ந்தே எல்லா மகிழ்ச்சியும் பறக்கும் வாலிபம் வாயிலைத் தட்டும் வருவதை சொல்லி நிற்கும் மேகலை நனைய கண்ணீர் மேனியில் வழிந்தே நனையும் பூமகள் மனதில் தினமும் பூத்திடும் கனவுகள் கோடி மாமகள் தருணம் நாடி மகிழ்ந்திடும் நினைவுகள் தேடி...                                                 .பருவம் பதினெட்டில்........7 .8 .......(கவியாழி)....

ரசித்தவர்கள்