Posts

Showing posts from May, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

மனதிலே அன்பிருந்தால்...

இப்போது வணங்கும் இறைவனே முற்போது வாழ்ந்த மனிதனே வெவ்வேறு வுருவில் வணங்குவர் வேதமும் சொல்லுமெனக் கூறுவர் கல்லாக வீசுகின்ற காற்றாக இல்லாத உருவாய் கூறுவர் நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி நேரில் வந்ததாய் கூறுவர் கல்லாமை இல்லாதோர் வணங்கிடும் இல்லாத உருவமே கடவுளே பொல்லாத வைத்தியம் சொல்லுவர் பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர் இயற்கையே கடவுள் என்றிருந்தால் எதற்குக் கோயிலும் குருக்களும் அதற்குப் அன்றாடம் பூசையும் ஆடும் கோழியும் வேண்டாமே இல்லற வாழ்வை துறந்துதான் இறைவனைக் காண முடியுமானால் இறைவனின் தூதனாய் இருப்பவரும் இல்லறம் தவிர்த்து இருக்கலாமே மனதிலே அன்பைக் கொண்டிருந்தால் மனிதனை நண்பனே என்றிருந்தால் துணிவையே மனதினில் வளர்த்திருந்தால் துணைக்கு சாமியும் வேண்டுமா

வேண்டும்நீ எனக்கு வேண்டும்....

ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் ஆசைக்குப் பிள்ளைகள் வாழ்ந்தாலும் ஆம்பிளைத் துணைக்கு ஈடுண்டா அவரின் இணைக்கு நிகருண்டா பெற்றவர் பிறந்தவரி ருந்தாலும் உற்றவர் அன்புக்கு விலையுண்டா கற்றவருமே கண் கலங்குவார் கல்லாதவரோ மனம் புழுங்குவார் சொத்தும் சொந்தமு மெனனக்கு சொல்லென்னா துயரம் தருமே சுகமும் பணமும் வேண்டாமே சொந்தமே என்னுயீரேநீ வேண்டுமே வாழ்ந்த நாட்களை எண்ணியே வாழ்வு முழுதும் நானிருப்பேன் வாடிபோடி என்றழைத்தே நீயும் வசைபாட வேண்டும் அன்பாக மீண்டும் எழுந்து வருவாய் மேனியில் எழுந்திடு உணர்வாய் தாங்கியே அருகில் உன்னைத் தாய்போல் காப்பேன் அன்பாய் வேண்டும்நீ எனக்கு வேண்டும் மீண்டும் துணைக்குநீ வேண்டும் தாண்டும் வாழ்க்கையோடுநீ வேண்டும் தைரியம் சொல்லநீ வேண்டும்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே-- பாடல் 2

நேத்துநானே சொல்லிபுட்டேன் நேரத்தோடு வந்து விட்டேன் காத்திருந்து வாசல்வரைக் கண்டவுடன் துள்ளி ஓடுறாயே ஊர்ச் சனமும் வந்திடுச்சு உறவுகளும் இங்கே கூடிடிச்சு காய்ப் பழங்கள் கனிகளும் கண்ணே உன்னைத் தேடுதே அத்தர் செண்டும் போட்டு அஜந்தாப் பவுடரும் பூசி அத்த மகளுணைக் காண அழகாய் வந்தேன் பாரேன் முன்னே அருகில் வந்து முறையாகச் சிரித்து விட்டு பின்னால் திரும்பி என்னை பெண்மையால் வீழ்த்த வாடி கூட்டத்துல நீ ஒளிஞ்சி நோட்டமிடும் உன் நிழலை பாத்துப் பிட்டேன் பேரழகி பக்கத்துல எப்போ வாரே

ஒத்தைப் பிள்ளை வேண்டாமே

ஒத்தைப் பிள்ளை போதுமின்னு ஒய்யாரம் செய்யும் நண்பா சத்தியமா தப்பு தான்னு இப்போதே சொல்லி விட்டேன் சொத்து பத்து இல்லாட்டி சொந்தம் மட்டும் இருந்தாலே பத்துத் துயர் போக்கிடவே பக்கத் துணை இருப்பாரே மிச்சம்மீதி அன்பை எங்கே மீண்டும் தேடித் போவதெங்கே சொத்தப் புள்ளை ஒத்தையாக சோகமாக இருக்கு நண்பா உத்தரவும் போட வில்லை உருப்படியா சொல்ல வில்லை ஒத்தையாலே நெஞ்சைக் குத்தி ஓய்வே இல்லாமப் போச்சி சத்தியமா சொல்லி விட்டேன் ஒத்தப் புள்ள வேண்டாங்க மிச்ச உயிரும் போகுமுன்னே சொச்சம் ஒன்னும் பெத்துக்கோங்க

சென்னையில் இன்று நடைபெற்ற இண்டி.பிளாக்கர் கூட்டம்.

இன்று பகல் 2.00மணிக்கு சென்னை அண்ணாசாலை அறிவாலயம் அருகிலிருக்கும் ரியாத் ஹோட்டலில் இண்டி பிளாக்கர் கூட்டம் நடைபெற்றது.இதில் குறைந்தது இருநூறு பிளாக்கர்கள் வந்திருந்தார்கள்.அனைவரும் அழைப்பின் பேரிலும் முன்பதிவு செய்தும் வந்திருந்தார்கள்.இதில் எல்லா மொழிகளில் இருந்தும் பிளாக் வைத்தவர்கள் பங்கேற்றிருந்தார்கள் இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் இளையத் தலைமுறையினரே அதிக அளவில் இருந்தார்கள்.பெரும்பாலானோர் ஆங்கில பிளாக் வைத்தவர்களும் தமிழ்,தெலுங்கு,மலையாளம் போன்ற பிறமொழியினரும் பங்கேற்றார்கள்.எல்லோருமே ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருபவர்களாம்.பெண்களும்கூட நிறையப்பேர் வந்திருந்தார்கள். ஆரம்பம் தாமதமானாலும் அடுத்தடுத்து பல நிகழ்சிகளை ஏற்பாடு செய்து,எல்லோருக்குமே ஊக்கப் பரிசாக திரைப்பட நுழைவு சீட்டு கூப்பன்களை கொடுத்தார்கள் .இடையிடேயே எல்லோரையும் அறிமுகப்படுத்திப் பேசவைத்தது சிறப்பாக இருந்தது. மதிய உணவு சைவம் அசைவம் பிரியாணி போன்ற ஆடம்பர உணவுகளை விரும்பியபடி கொடுத்து மகிழ்ந்தார்கள்.இடைவேளைக்குப்பின் குழுக்களாக பிரித்து குழு நிகழ்ச்சியை நடத்தினார்கள்முதல், இரண்

கவிஞர்களை நானும் போற்றுவேன்

அடுத்தப் புத்தகம் வெளியிட ஆர்வமாய் நானும் உள்ளேன் படித்துப் பார்த்து எனக்கு-சான்றாய் பதிலளித்த வலை நண்பர்களே கொடுத்த ஆதரவுக்குப் பதிலாக கோடி என்னிடம் பணமில்லை பிடித்துப் போன காரணத்தால்-தமிழ் பிறந்த மொழி தெரிந்ததனால் சிறகடித்துப் பறக்கக் கருத்தை சீக்கிரமே தாருங்கள் அடுத்ததாய் சிலந்தி போலப் பிண்ணி-சிறிதே சிற்றெறும்பு போலச் சேர்த்தே பதிவுலகில் நானும் பதிவராக பத்திரிக்கைப் பேசும் மனிதராக பைந்தமிழ் மக்களில் ஒருவராக பணிவுடன் படைக்க விரும்புகிறேன் கற்றறிந்த கவிதை நண்பர்களே கவிதையில் கண்ட சொற்பபிழையை சொல்லுங்கள் மீண்டும் மாற்றுவேன் சொல்வோரை நானும் போற்றுவேன்

நட்பில் நானும் மிதந்தேன்...

நட்பில் நானும் மிதந்தேன் நாளும் அன்பில் நெகிழ்ந்தேன் பேச வேண்டித் துடித்தேன் பேசிய பின்பு தவித்தேன் சொற்களைக் கண்டு மலைத்தேன் சொல்ல முடியாது திகைத்தேன் இன்னும் சொல்ல நினைத்தேன் இன்முகம் தேடி அலைந்தேன் அகத்துள் நினைவில் வைத்தே(ன்) அன்றே காண விழைந்தேன் வரவைக் கண்டு மகிழ்ந்தேன் வாய்ப்புத் தேடித் துடித்தேன் சொல்லிப் புகழ விழைந்தேன் சொல்லில் தடுமாறி நின்றேன் மெல்ல முறுவல் முகிழ்த்தேன் மீண்டும் மனத்தில் நினைத்தேன் வீரம் கண்டு சிலிர்த்தேன் தூரம் கேட்டுத் தொடர்ந்தேன் நேரில் காண இருந்தேன் நேரம் இன்றித் தவித்தேன் தொலைவில் இருப்பை அறிந்தேன் தூய நட்பால் நெகிழ்ந்தேன் தமிழைத் தாயாய் துதித்தேன் தாகம் தணியப் படித்தேன்

நெடுநெடுவென வளர்த்தவள்............

நெடுநெடுவென வளர்த்தவள் நேர்ப் பார்வை இல்லாதவள் சிடுசிடுவென இன்று எரிகிறாள் சினத்துடன் ஏனோத் தவிக்கிறாள் கடுகடுவெனும் காரணம் காணாது கண்ணைக் கசக்கி அழுகிறாள் விடுவிடுவென எதேயோ தேடி வழியை நோக்கியேப் பார்க்கிறாள் தடதடவென வண்டியில் அவன் தலையைக் கண்டதும் மகிழ்கிறாள் குடுகுடுவெனப் பாய்ந்து ஓடி கொஞ்சி அவனை அணைக்கிறாள் கிடுகிடுவென இடியின் சத்தம் கண்டு பயந்ததுபோல் நடிக்கிறாள் சலசலவென மழையைப் பார்த்ததும் சத்தமின்றி முத்தமும் கொடுக்கிறாள் சிடுசிடுவும் எங்கோ மறைந்தது சீக்கிரம் உண்மையும் தெரிந்தது படபடவென இதயம் துடித்ததும் பயமும் அவளுக்குத் தெளிந்தது

தேனாய் சுவையாய் இனிக்குமாம்

முள்ளு முள்ளாய் இருக்குமாம் முக்கனியுள் பெருத்து வளருமாம் வேலிபோட்ட காவல் தாண்டி வேண்டியது இனிப்பாய் மணக்குமாம் வண்ணம் ஒன்றே மஞ்சளாம் வாசனை எப்போதும் கெஞ்சலாம் வண்ணப் போர்வைப் போர்த்தியே வாழும் நாளோ சேர்த்தியாம் எல்லா நாளும் கிடைக்குமாம் எல்லோர் மனதும் விரும்புமாம் இல்லா மக்கள் மனதுமே இதனை சுவைக்க விரும்புமாம் தின்னத் தின்ன திகட்டுமாம் தேனாய் சுவையாய் இனிக்குமாம் திரும்பத் திரும்பக் கேட்குமாம் தேனில் ஊறியே சாப்பிட்டால் தேனமுதாய் மனதும் மகிழுமாம் எல்லை யில்லா மகிழ்ச்சியே எல்லோர் மனதில் இருக்குமாம் பிள்ளைமுதல் கிழவர்வரை கொள்ளைப் பிரியம் விரும்புமாம் ---பெயரென்ன???

சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம்

வானத்துக்கும் மேகத்துக்கும் சண்டையாம் மின்னலும் மழையும் இருக்குமாம் சூரியனுக்கும் பூமிக்கும் ஏக்கமாம் சந்தோசம் தினமும் வேண்டுமாம் எருவுக்கும் நிலத்துக்கும் கல்யாணமாம் எல்லா பயிருக்கும் உற்சாகமாம் மலருக்கும் தேனிக்கும் இன்பமாம் மகரந்தம் பூக்களின் கொண்டாட்டமாம் பயிருக்கும் பூச்சிக்கும் சண்டையாம் புழுவுக்கும் குருவிக்கும் கும்மாளமாம் பசுமைக் குளிர்ச்சியாய் இருக்குமாம் பார்க்கும் எல்லாமே மகிழ்ச்சியாம் ஆட்டுக்கும் மாட்டுக்கும் உற்சாகமாம் ஆனந்த பாட்டோடு ஊர்கோலமாம் செடிகளுக்கும் கொடிகளும் கூடுமாம் சிரித்து மகிழ்ந்தே ஆடுமாம் இதெல்லாம் காணும் உழவனுக்கு எப்போதும் கிடைக்கும் மகிழ்ச்சியாம் தப்பாக எண்ணாத அன்னாருக்கு இப்போது காணாத வறட்சியாம்

தீண்டத் தகாத மனிதன் யார்

பிணத்தை தின்பவனா இல்லை பெண்மையை அறியாத மனிதனா தினத்தை யறியாத பிறவியா தீண்டத் தகாத மனிதனா உழைப்பே இல்லாமல் ஒதுங்கியே உழைப்பவன் பணத்தை சுரண்டி பகட்டு வாழ்க்கை வாழ்பவனும் பாவத் தொழில் செய்யுபவனும் அடுத்தவன் பிழைப்பை கெடுத்து ஆயுளும் பணம் சேர்க்கும் அற்பப் புத்திக்காரன் அறிந்தே அன்றாடம் காய்ச்சியிடம் சுரண்டுபவன் பதுக்கலை பலவாறு செய்யும் தலுக்கு மேனியை வைத்து தகாத தொழில் செய்யும் இழுக்குப் பிழைப்பை செய்பவன் பிச்சைக் காரனிடமும் பிடுங்கும் எச்சில் பொறுக்கி கயவன் எந்த நிலையிலும் சாதி(தீ)யை எங்கும் சாதியை வளர்ப்பவன் பொய்யே பேசிப் பிறரையும் நம்ப வைக்கும் பூசாரி பாவம் தீர்க்க வருவோரிடம் பணம் கறக்கும் பொய்யாளன் வாழ்கையே வெற்றி டமாய் வாழ முடியாதோ ரிடமும் குழப்பிக் கூலி கேட்கும் கொடியோன் கொள்கை உடையோன் இவ்வாறான இழிநிலை கொண்டவனே அவ்வறுப்பேசி அடுத்தவனை பழிப்பான் அவனைக் கண்டு அஞ்சாமல் அவ்விடமே அடையாளம் காண்பீர்

கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே

ரவிக்கைத் துணி யுடுத்தி ரத்தக் கலர்ப் பொட்டிட்டு உத்தரவு இல்லாமலே மனசில் உள் நுழைந்த பைங்கிளியே அஞ்சுமுழ மல்லிகைப் பூ ஆடுகிற காது சிமிக்கி பஞ்சுபோல உன்சிரிப்பால் பாடாய் என்னைப் படுத்துறியே திட்டம் போட்ட கெட்டிகாரி திரும்பிப் பார்க்க வைக்கிறியே பட்டம் போட்டு பரிசம்போட பக்குவமாய் நானும் வாறேன் இரட்டை சடை போட்டவளே ராத்திரிய கேடுத்தப் புள்ள கெட்டிக்காரி உன் குறும்பு கட்டி யள்ள தோணுதடி மஞ்சக் கயிறும் தாலியும் மாமன் உனக்கு வாங்கியாறேன் கொஞ்ச நேரம் நின்னுபேசேன் குறையிருந்தா சொல்லிப்போடேன் பஞ்சு மெத்தை தைச்சிருக்கேன் பட்டுத்துணியும் வாங்கிருக்கேன் மஞ்சகொடித் தாலிப் போட்டு கொஞ்சிக்கிறேன் நில்லு பொண்ணே பரிசம் போட நானுவந்தா பதிலைச் சொல்லி அனுப்பாம பாசக்கார மாமன் என்னை-விரட்டி பரிதவிக்க என்னை விட்டுடாதே தொடரும்.....

பொறாமை என்பதே வேண்டாமே

அவனா இப்படி மாறினான் அதையும் எப்படி நம்பினான் குணமே போற்றும் நல்லவன்-குறுகிக் குறைத்தப் பண்பே பொறாமையா ஆண்டுகள் பலநாள் பழகியதை அன்பாய் இருந்து மகிழ்ந்ததை தாண்டிய எல்லை நட்புறவை-எண்ணம் தவறாய் நினைப்பது இதுவன்றோ கொடுத்தப் பணத்தைக் கேட்டவரும் கொள்கை மாறிப் போனவரும் தடித்த வார்த்தைப் பேசியதால்-உடனே தானே வந்தது பொறாமையே அண்ணன் தம்பி உறவுகளும் அக்காள்த் தங்கைப் பிரிவதற்கும் எண்ணம் அதையே மாற்றியே-உறவில் ஏற்றத் தாழ்வை வளர்திடுமே தாத்தாப் பாட்டி உறவுகளை தள்ளி வைக்கும் நிலைமைக்கும் உள்ளக் காரணம் இதுவாகும்-அன்பை எள்ளி நகைக்கும் நிலையாகும் பணியில் சிறந்தோர் பரிதவிக்க பாடாய் படுத்தும் இச்செயலால் தெள்ளத்தெளிவாய் கெடுத்திடுவர்-பின்பு தூய்மை மனதையும் நசித்திடுவர் எளிதில் யாரையும் வசப்படுத்தும் எல்லா வயதினர் துணையாகும் பொல்லா நிலைக்குத் தள்ளிவிடும்-வியாதி பொறாமை என்பதே வேண்டாமே

அற்பனாய் தெரியும் அவரே சிவனார்

அழுக்குத் துணியும் பினுக்கு மணதர் அலையில்லா மனமும் ஆனந்த சிரிப்பர் இழுக்கு சொல்லை எதிர்க்க மாட்டர் எல்லா நாளும் மகிழ்ச்சி உள்ளர் பொற்சுவை அறியார்ப் புலனை மதியார் நற்சுவை நாவில் நாளுமே தெரியார் அற்பனாய் தெரியும் அவரே சிவனார் அந்நிலை நமக்கு அறிந்திட முடியார் பணம் பொருள் இடம் வேண்டார் பகட்டு யோக வாகனம் வேண்டார் குணம் தெரி குடிமை வேண்டார் உணவு தினம் உண்ண வேண்டார் சிரிப்பார் சினங்கொண்டு அடிபார் துடிப்பார் தொல்லையென நடிப்பார் அழமாட்டார் அமுதை தொடமாட்டார் ஆனாலும் நோயின்றி படுக்க மாட்டார் எக்கணம் தவமே செய்பவர் ஞானி என்பதை உணர்ந்த மனிதனே யோகி எங்கும் நிறைந்த எல்லோரின் தோணி என்பவன் சிவனே என்பதை யுணர்நீ சிந்தனை செய்வதை சொல்லத் தெரியா நிந்தனை எந்த நேரமும் மிருந்து பித்தனே என்றும் பைத்திய மென்றும் சித்தனை நீவிர் சொல்லல் முறையா

கத்திரி வெய்யிலை வெல்லுவோம்

ஆண்டில் சிலநாள் இதுபோல ஆருடம் பலநாள் சொல்லிவரும் தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன் தகதக வெனவே எரிந்திடுமாம் மரமும் செடியும் காய்வதற்கும் மாடுகள் ஆடுகள் மடிவதற்கும் தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன் தீக் கதிரை வீசுவதேன் மக்கள் துயரில் வாழ்வதற்கும் மலையை நோக்கிச் செல்வதற்கும் அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய் அலைந்தே திரிய வைப்பதுமேன் சின்னஞ் சிறுவர் பெரியோரை சீண்டும் கொடுமைக் காரணத்தால் எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில் எல்லா நோயும் சேர்ந்திடுமே வெய்யிலில் நாளும் அலைவதற்கு வேறுவழியை தெரிந்தெடுத்து நாம் வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம் வேதனையோடு நிறுத்தி வைப்போம் குளுர்சியான உணவுகளும் நன்றே குளிர்மைப் பானைத் தண்ணீரும் மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை மனதில் தருமே உற்சாகம் இந்த வேதனை எனக்குமே இன்றும் இங்கே உள்ளதால் நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள் நோயை நீவிர்த் தடுப்பீரே

அன்னையர் தின வாழ்த்துக்கள்

என்னையே ஈன்ற எனக் குயிரீந்த கல்லே யல்லாத கடவுள்கள் நீவீரே அன்னையின் சேவையை அருகில் செய்யும் திண்ணைப் பாட்டியும் தேடும் தெய்வமே உண்மை உணர்ந்து உள்ளம் உவந்து செவ்வனே செய்யும் செவிலியரும் அன்னையே பிள்ளையாய்ப் போற்றி படிப்பைக் கொடுத்து நல்லொழுக்கம் தந்த ஆசிரியரும் உண்மையே அருகருகே படித்தாலும் அன்பாய் பழகிய பள்ளித் தோழியரும் பண்பில் அன்னையே என்னையும் ஆணாய் எடுத்துச் சொன்ன மனைவிக்கும் இன்று நன்றி சொல்லுவோம்

இதயமே .... இனிய இயந்திரமே !

இதயமே இயக்கத்தை நிறுத்தாத இனிய இயந்திரமே ! என்றுமே நிற்காத உன் தந்திரமே எனக்கு மாத்திரமே ! காற்றடைத்த என் உடம்பில் திரவம் குடித்து தினம் வாழ்கிறாயே ! மகிழ்ச்சியும் வேதனையும் ஏற்றுக்கொள்ளும் உனக்கு எசமான் யார் ? நீயும் பரிதாபம் ஓய்வு கொடுத்தால் மீண்டும் வருவாயா வருந்தி விடுவாயா ! எனக்கும் ஆசை எப்படி கொடுப்பதென்று நான் இருந்தால் முடியாது இறந்தால் முடியும் ? வேண்டுமென்று கேட்பாயா வேதனையில் துடிப்பாயா போதுமென்றுச் சொல்வாயா போய்சேர்ந்துத் துயில்வாயா.....

கனவு-சின்ன வயது நிகழ்வே

உண்மை சொல்ல முடியா உணர்வை காண தெரியா கண்ணு றக்க கனமே-நமது கனவு என்ற நிசமாம் சின்ன வயது நிகழ்வே சொல்லி வந்த வார்த்தை மெல்ல பேசும் உளறல்-மீண்டும் சொல்லி பார்க்க விடுமாம் வண்ண இளமை நாளை வாழ்ந்து முடிந்த வேளை திண்ணை தோறும் சென்று-அதை தெருவில் பேச விடுமாம் உண்ண முடியா விருந்தய் உறக்கம் கூட தொடரா வண்ண மேனி கனவே-காதல் வாசல் தேடி தருமாம் சின்ன பெரிய சனங்க சிரித்துப் பேசும் மனங்க எண்ணம் பேசும் நிசமே-காலை எழுமுன் வரும் கனவாம் எண்ணம் போல வருமாம் இந்த உண்மை நிசமாம் வண்ணம் தொடங்கி வருமாம்-அங்கு வாசம் கூட தருமாம்

என்னுள் மழையைத் தா !

மோகமாய் பவனிவரும் பருவ மங்கை மேகமே அங்கங்கள் அசைவதால் உன் மேகலைகள் திரண்டெழுந்தே இடிவருதோ மின்னலும் கண்டவுடன் பயந்து மின்னுகிறதோ உன் விருப்பத்தால் மீண்டும் மீண்டும் மழை வருதோ தாகமே தீருமுன் தடம்பார்த்து ஓடும் மழைநீர் தவம் கிடக்கும் மரங்களுக்கு சேர்கின்றதோ ஆகவே மேகமாய் தவழ்ந்து வா மீண்டும் மீண்டும் அசைந்துவா என் மனதும் மகிழ வா என்னுள் மழையைத் தா

நுங்கும் நீரும்

இளமையான நுங்கெடுத்து பதமாகப் பார்த்து சீவி அதுள் ஒரு விரலால் அழுத்தினால் உடனே ப்ளீச் என்று நீர் வரும் மீண்டும் மீண்டும் விரல் நுழைத்து வாயால் கவ்வினால் தீண்டும் சுவை தீராது மீண்டும் கேட்கும் மறுபடி அதையே நோக்கும் பின் ஆசையும் அப்போதே அடங்கும் மனமும் அமைதியாகும்

பூ வை ..பூவையே

பூ வை தலையில் பூவையே மை வை நெற்றியில் தமிழே மீன் வை மின்னலாய் கண்ணையே நீ வை நினைவில் என்னையே பா வை தமிழில் கவியே கோ வை மனதில் எண்ணியே தீ வை தினமும் ஆசையில்

உறவு மின்று செத்துடிச்சு

மழையப் பார்த்து ஏங்கிடுச்சு கண்ணி ரண்டும் பூத்திடுச்சி மேக மெல்லாம் ஓடிப்போச்சு மேனி யெல்லாம் எரிஞ்சிடுச்சி குளமெல்லாம் வத்திப் போச்சு கொக்கு நாரை அதிகமாச்சி வயலெல்லாம் காஞ்சி போச்சு ஆடு மாடு மேஞ்சிடுச்சி நில மெல்லாம் மனைகளாச்சு நிறைய வீடு வந்திடுச்சி நில மற்று போனதாலே உழவன் வாழ்க்கை மடிஞ்சிடுச்சி மனதெல்லாம் மாறிபோச்சு மனிதநேயம் குறைஞ்சிடுச்சி பணத்துக்காக அடகு வச்சு கனத்த வட்டி வளர்ந்துடிச்சி இனத்துச் சண்டை வந்துடிச்சு இதய மெல்லாம் நொறுங்கிடுச்சி தேச நலன் குறைஞ்சிடுச்சி தேவை மட்டும் மாறிடுச்சு உணர்ச்சி யெல்லாம் மழுங்கிடுச்சி உண்மையன்பு தேய்ந்சுபோச்சு உருப்படியாய் சேர்ந்து வாழும் உறவு மின்று செத்துடிச்சு

வேண்டும் வேண்டும் நிம்மதி வேண்டும்

மீண்டும் எனக்கு நிம்மதி வேண்டும் மீளாத் துயரும் தாண்டிட வேண்டும் தாண்டும் உயரம் தெரிந்திட வேண்டும் தாழ்மை உணர்வு நீங்கிட வேண்டும் நாளும் நட்பை புரிந்திட வேண்டும் நல்லவர் கெட்டவர் அறிந்திட வேண்டும் பாழும் மனமே திருந்திட வேண்டும் பண்பில் நல்லவர் துணைவர வேண்டும் தீதும் நன்றே என்றிட வேண்டும் தீமை இல்லா மனதும் வேண்டும் தீயவர் ஒதுங்கி போய்விட வேண்டும் தினமும் என்னை அழைப்பவர் வேண்டும் பாலை நிலமும் மாறிட வேண்டும் பருவம் முழுதும் மழைபெற வேண்டும் பறவை குருவிகள் பயனுற வேண்டும் பார்க்கும் இடமே செழிப்புற வேண்டும் உழவன் வாழ்க்கை சிறப்புற வேண்டும் உழுதே விளைச்சல் பெருகிட வேண்டும் வேளை தோறும் உறக்கம் வேண்டும் வேதனை இல்லா கனவும் வேண்டும் நாளை நடப்பதை அறிய வேண்டும் நல்லது கெட்டது தெரிய வேண்டும் வேளை தவறா உணவும் வேண்டும் விடியல் தோறும் மகிழ்ச்சி வேண்டும் சோர்வே எனக்கு நீங்கிடவேண்டும் சோதனை இல்லா வாழ்க்கை வேண்டும் நாளை எனதே என்றிட வேண்டும் நாளும் நல்லதை செய்திட வேண்டும்

தேடிவரும் பறவையே

Image
தேனெடுக்க ஆசையாய் என்னை தேடிவரும் சிறுப் பறவையே ! நான் வணங்கும் மன்னவன் நாளை வேண்டும் வேளையில் தான் குடிக்க வேண்டியதை தாகம் தீர்த்து சென்றவரை ஏன் தடுக்க முடியவில்லையென என்மீது கோபபட்டால் என்செய்வேன் ? என்னை விட்டு விலகிவிடு விரைந்து தூர பறந்துவிடு பட்டுபோன்ற உன்னழகை பார்த்ததினால் கெட்டுபோன மனதை மட்டும் தந்துவிடு

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more