Posts

Showing posts from October, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள்

தித்திக்கும் தீபாவளித் திருநாள் -------------------- எப்பொழுது விடியுமென்று எல்லோரும் காத்திருக்க எல்லோரும் தெருவிலே பட்டாசு வெடிச்சிருக்க குப்பென்ற இருட்டு கொஞ்சமாய் மறைந்திருக்க-சேவல் கூவாமல் எல்லோரும் எழுந்திருக்கும் திருநாள் ஏழைபணக்காரன் என்றதொரு வித்தியாசம் எங்கும் இல்லாமல் மகிழ்ந்திடும் திருநாள் காலைமாலை என்ற கணக்கு இல்லாமல் - மக்கள் காசுசெலவழிக்கும் தீபாவளி ஒருநாள் புத்தாடைக்கு புதுமஞ்சள் சாந்திட்டே அணிந்திட்டு புதுநாளைக் கொண்டாட மாப்பிளையும் அழைத்திட்டு வித்தாரம் பேசாமல் வீதியெங்கும் கூறாமல் -சண்டை விநியோகம் செய்யாத தீபாவளி நன்னாள் காசுபணம் கரியாக்க கடனாக வாங்கியும் ஓசிப்பொருள் வாங்காமல் உழைத்தே வைத்திருந்து புத்தம் புதிதாய் துணிகள் வாங்கி மகிழ்ந்தே -நாளை  பெரிசு இளசுகளும் போற்றிடும் தீபாவளிநாள் இனிப்புகளும் காரமும் இல்லாத வீடில்லை இரண்டுமுறை தின்னாலும் இன்றுமே தப்பில்லை நெருப்புடனே திரிந்தாலும் தப்பாக நினைக்காமல்-ஆசி நெஞ்சார வாழ்த்துகின்ற தீபாவளித் திருநாள் இந்துக்கள் அல்லாது எல்லோரும் ஒற்றுமையாய் இந்தியத் திருவிழாவ

திரண்ட பாறையுமே தள்ளி

தினந்தோறும் மகிழ்ச்சியாய் ஓடி திசையெங்கும் செழிக்க வைத்து வனத்தையும்  வயலையும் காத்து வானம் மகிழ  வந்தாய் பலஊர்கள் மைல்கள்  தாண்டி பாமரனும் மகிழ்வாய் வாழ பரந்து விரிந்த பாதைவழியே பகலிரவு ஓடிவந்து மகிழ்ந்தாய் கிடந்த கற்கள் மலைகள் கடந்தும்  உடைத்தே நடந்து அடர்ந்த வனம் செழிக்க அமைதியாக உருட்டிச் சென்றாய் திரண்ட பாறையுமே தள்ளி திருட்டுத் தனமாய் கடத்தி வறண்ட இடத்திலும்  சென்று வழியெங்கும் சமன் செய்தாய் கண்குளிரக் காட்சி தந்த  கடவுளாய் போற்றி வந்த  தண்ணீரில் கடந்து வந்து தவமாகக் காத்து நின்றாய் சுரண்டலுக்கு ஆசைப் பட்ட சுயநலக் காரர்களின் கண்ணில் சூழ்ச்சிக்குத்  தப்ப மறந்து சுரண்டி சுரண்டி மடிந்தாய் தினந்தோறும் மணல் அள்ளியதால் திசையெங்கும் வறட்சி வந்தே பருவம் மாறிப் பகலவனின் பார்வையால் பாமரனும் வருந்துகிறான் நிலைமாறக் காரணம் தெரிந்தும் நீயும் மௌனம் காப்பதேன் நிம்மதியைக் கெடுத்தவரை ஏன் நேரம் கொண்டே அழிக்கவில்லை விலைபேசும் நிலைக்கே சென்றாயே வேதனை வேதனையே  எமக்கு விதியில்லை வீரமில்லைத் தடுக்க வீணர்களின்  விலைவ

மேல்சாதி நானென்று சொல்கிறான் ?

மெத்தப் படித்தவனும் பெருமையாய் மேல்சாதி நானென்று  சொல்கிறான் மேன்மக்கள் கீழ்மக்கள் உள்ளதென மேடையிலும் பெருமையாய்ப் பேசுகிறான் ஒத்த உள்ளங்களாய் இருந்தோரை ஒரே வார்த்தையில் பிரிக்கின்றான் ஊரேகூடி மகிழ்ந்தாலும் ஒருவனே ஒப்பாரி வைக்கின்றான் நடிக்கின்றான் உழைப்பதிலே ஒற்றுமையாய் இருந்தாலும் உழுவதிலே சேர்ந்து மகிழ்ந்தாலும் உத்தமனாய் சாதியை வளர்க்கிறான் உதவாத காரியத்தைச் சொல்கின்றான் சத்தியமாய் பேதமில்லை வாழ்கையிலே சங்கடங்கள் குறைவில்லை  குடும்பத்திலே சோத்துக்கும் கஷ்டமாக இருக்கின்றான் சொந்தங்களும் மறுத்தே வாழ்கிறான் இத்தனைக்கும் இருப்பது ஒரேஊரில் இழவுக்கும் மகிழ்வுக்கும் செல்கின்றான் இருந்தாலும் எப்போதும் சொல்கின்றான் இவனெல்லாம் இன்ன சாதியென்று எத்தனை நாள் இப்படியேச் சொல்லி எல்லோரையும் பிரித்துப் பார்க்க என்சாமியும் துணைக்கு வருகிறதோ எல்லோரையும் பிரித்துப் பார்க்கிறதோ .......கவியாழி........

அடுத்தநிலை ஏற்றமாய் இருக்கும்

நடுத்தர வாழ்க்கையே நரகமாக நாட்டிலே பலபேர் வாழ்வதற்கு நம்மில்  சிலரும் காரணமாம் நாணயம் மறந்தும் இருப்பதனால் கிடைக்கிற  ஊதியம் போதலை கிடைத்தாலும் அன்றாட செலவுக்கே கொடுத்தாலும் போதாது  மிஞ்சாது கொடுமையே மிஞ்சும் தங்கும் பிள்ளையின் நலன் கருதியே பிணியையும் மறந்த நிலையில் படிக்கவும் பயணமும் செய்ய பணத்தைக் கட்டியும் மீதியில்லை உற்றார் உறவுக்கும் உதவி உண்மையில் செய்ய் முடியாது மற்றோர் மதிப்பு வேண்டி மடத்தனமாய் செலவு செய்யாதே சோர்வின்றி மனம் தளராது சோம்பலின்றி மிகுந்த கஷ்டப்படு மிகுந்த வருமானம் மட்டுமே மகிழ்ச்சியாய் வந்திடும் தங்கிடும் அடுத்தத் தலைமுறை வந்திட்டால் ஆனந்தம் வந்திடும் தந்திடும் அதுவரை பொறுத்திடு படிக்கவை அப்படிச்  சொல்லியே ஊக்கப்படுத்து அவனுக்கும் வந்திடும் முயற்சியே அப்புறம் கிடைத்திடும் மகிழ்ச்சியே அதையார் தடுத்திட முடியும் அடுத்தநிலை  ஏற்றமாய் இருக்கும் ======கவியாழி=======

என்னை அடையாளம் கண்டுபிடிக்க முடிகிறதா?

Image
நான் 1980 ஆம் ஆண்டு  சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில்(Littel Flower Higher Secondary School) +2 படித்து  முடிக்கும்போது எனது வகுப்புத் தோழர்களுடன் எடுத்துக் கொண்ட முதல் புகைப்படம். முடிந்தால் என்னைக் கண்டுபிடித்து அடையாளம் சொல்லுங்களேன் --------------------------------------------------------------------------------------------------------------------- பதில் -------- மேலிருந்து இரண்டாவது வரிசையின் இரண்டாவதாய்  நிற்கும் கருத்த உருவமாய் ஒல்லியான ஏழ்மையின் அடையாளமாய்  தெரிபவன் நானே நான்.

ஓய்வு கொடுக்க வேண்டுமா

Image
ஆண்டுகள் பதினெட்டும்  என்னோடு ஆனந்த பயணம் செய்துவந்த அடிக்கடி நிற்காதக் களைக்காத ஆதவனின் நண்பன் கடிகாரம் வேதனையும் நாளும் கண்டவன் வேடிக்கை பலதும் பார்த்தவன் வீறிட்டு அழத்தெரியாத  பண்பன் வேகமாய் செல்லாத துணைவன் சாப்பிடும் நேரம் சொல்பவன் சாதனைக் கண்டே ரசித்தவன் சரிநிகர் சமமாய்  இருந்தவன் சங்கடம் பலதும் கண்டவன் அடிக்கடிப் பார்த்திடும் கடிகாரம் ஆன்மா இல்லாத அவதாரம் அனைவரும் விரும்பும் பலநேரம் அதுவே எல்லோருக்கும் ஆதாரம் உடலோடு உறவாட தவறவில்லை உயிரின்றி  என்றுமே நின்றதில்லை உள்ளமும் என்றுமே வெறுத்ததில்லை உறவாக என்னையும் பிரிந்ததில்லை ஓய்வு வேண்டியே விரும்பியே ஓடிக்கொண்டே இருந்தாலும் வயதால் ஒளியிழந்து கையில் துடிக்கிறான் ஓய்வு கொடுக்க வேண்டுமா ------கவியாழி------

வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது

வலைப்பக்கம் தினமும் பார்க்காவிட்டால் வருத்தம் மிகுந்தே  தொடர்கின்றது வாழ்கையில் இழந்ததாய் நினைக்கிறது வேதனை மிகுந்தே தவிக்கின்றது எண்ணங்களைப்  பகிர்ந்து கொண்டு  எழுத்துலகில் நீந்தத் துடிக்கிறது சின்ன வயது பையனோடும் சேர்ந்திருக்க இன்றும்  முடிகின்றது  இத்தனைநாள் மறைத்து வைத்த இன்பமான தருணத்தை ரசிக்கின்றது இனிமையான நினைவுகளை நன்றே  இப்போதும் எழுத துடிக்கின்றது வெளிநாட்டு உறவின் வேதனையும் விருப்பமில்லா வாழ்வின் அவசியமும் வேடிக்கைக் காட்டிச் செல்கிறது வேதனை பலதும் மறைகிறது வாழ்த்தும் நிறையக் கிடைக்கிறது வசந்தமும் மீண்டும் தொடர்கிறது வயதும் வேண்டி நினைக்கிறது வாழ்க்கைச் சிறப்பாய் நகர்கிறது =====கவியாழி=====

தீண்டாத இரவுகள்.......

மழையும் அடிக்கடி  வருவதால் மனதும் துடிக்குது  தேடுது மாலை ஆவதும் முன்பே மயக்கமும் வருது  தொடருது காரமாய் சாப்பிடத் தோணுது காண்பதை யெல்லாம்  விரும்புது காற்றையும் மீறியே அனலாய் காத்தும் மூக்கிலே  வருகிறது சூரியன் பார்த்ததும் மறையுது சுகமாய் மறைந்தே போகுது சில்லுன்னு காத்தும் வீசுது சீக்கிரம் போர்த்திக்க ஏங்குது துணையும் தேடிடும் நேரத்தில் தூறலும் அவசரம் காட்டுது தொடரவே வேண்டுது  விரும்புது தொடக்கமே மகிழ்ச்சியாய் இருக்குது நறுமணம் வீசுது மணக்குது நரம்பெல்லாம் சூடும் ஏறுது நடுவிலே தூக்கம் கலைந்ததால் நடுநிசிக் கனவாய் முடிந்தது -----கவியாழி-----

இனிமேல் மரங்கள் வளர்க்கணும்

வனமும் வனப்பையும் இழந்தால் வனத்தின் நிறமும் மாறுமாம் வானமும் இயல்பை மாற்றியே வானத்தின் தன்மையும் கூடுமாம் எல்லா இடமும் வெளிச்சமாய் எங்கும்  வெய்யில் எரிக்குமாம் ஏரிக் குளமும் வற்றுமாம் எரிச்சல் அதிகம் இருக்குமாம் பொல்லா நிலையால் பலபேரோ பொசுங்கி மடிந்தே விழுவாராம் பொழுதும் கழிந்தால் மட்டுமே பொறுத்தே வெளியில் வருவாராம் இந்த நிலைக்குக் காரணம் இழந்த மரங்கள் அதிகமாம் இதையே நாமும் அறிந்தேனும் இனிமேல் மரங்கள் வளர்க்கணும் மழையும் நன்றாய் பெய்யுமாம் மரங்கள் அடர்ந்து வளருமாம் மக்கள் துயரம் நீங்கியே மக்கள் மனமும் குளிருமாம் வானம் மகிழ்ந்தே குளிர்ச்சியாய் வருடம் முழுக்க பெய்யுமாம் வாழ்வில் இதையே  மகிழ்ச்சியாய் வானத்தைப் பெருக்கிக் காக்கணும் =====கவியாழி=====

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே.....

நாலுபேரு சேர்ந்து குடிச்சாலே நாகரீகம் மறந்து சிரிப்பாரோ நாணயம் மறந்த பேச்சாலே நல்லவர் மனதை வதைப்பாரோ அறிவும் மழுங்கி இளிப்பாரோ ஆடைத் துறந்து  இழப்பாரோ அடுத்தவர் மனத்தைக் கெடுப்பாரோ அடிமை மதுவால் ஆவாரோ குடியால் மென்மை துறப்பாரோ குடும்பம் இழக்க நினைப்பாரோ குழந்தை பெறவே மறுப்பாரோ குணத்தை இழந்து தவிப்பாரோ பெருமை அடைந்து மகிழ்வாரோ பணத்தை அழித்து திரிவாரோ பெண்ணின் சாபம் பெறுவாரோ பொய்யாய் வாழ்க்கை வாழ்வாரோ மிகுந்த குடியால் குடும்பமே மேன்மை இழந்தும் தவிக்குமே மற்றோர் மனதும் வருந்தியே மனிதனை சிரிக்க வைக்குமே இல்லறம்  அழிய  காரணம் இதையேன் மகிழ்வாய் நினைக்கனும் இனியும் சிலநாள் தவிர்க்கனும் இனிமை வாழ்வும் தொடரனும் ===கவியாழி===

மகிழ்ச்சியைத் துறப்பவள்

இளமைக் காலம் முதலே இளையவர் நன்கே வளர இன்முகம் காட்டி சிரித்தவள் இளமை மறந்து வாழ்ந்தவள் விடைலை வயதில் நின்றவள் வீதியில் வீம்பாய் நடந்தவள் வேடிக்கைப் பார்த்துச் சென்றவள் வாழ்க்கைச் சிறையில் மகிழ்ந்தவள் குடும்பம் தொடங்கி வைப்பவள் குழந்தை சிலதைப் பெற்றவள் குறும்புத் தனத்தை மறந்தவள் குழந்தை வளர்வதால் நிமிர்ந்தவள் சோதனைக் காலம் கண்டவள் துணையுடன்  மகிழ்ந்து வாழபவள் துயரம் மிகுந்தும் நகைப்பவள் தூய்மை  அன்பைக் கொடுப்பவள் ஆக்கம் கொடுத்த தாய் அவள்தான் எனது சகோதரி அன்பாய் இருக்கும் மனைவி அடுத்தது எனது மகளே ******கவியாழி*******

வெற்றி பெறவே துடிக்குது..............

நேற்றைய வாழ்க்கை முடிந்தது நேரமும் காலமும் கழிந்தது நிம்மதி சிலநாள் கிடைத்தது நேர்மையாய் உணர முடிந்தது பார்ப்பவர் எண்ணம் புரிந்தது பாதையும் தெளிவாய் தெரிந்தது பகலும் இரவும் போலவே பசுமை வெறுமை கடந்தது இன்றைய நாளில்  நடப்பது இன்பம் விரும்பி வாழ்வது இளமை  வெறுமை இழந்தது இனிமை வாழ்க்கை ஏங்குது துன்பம் மெல்ல விலகுது துயரம் தாண்டி செல்லுது தூயநல்  நட்பும் தொடருது துணையாய்  அருகில் வாழுது நாளைய ஏக்கம் தொடருது நல்லதும் கெட்டதும் தெரியுது நாணயம் என்னுள் இருப்பதால் நன்மையும் தீமையும் தெளிந்தது வேதனை சிலதும் மறைந்தது வெளிச்சமும்  அதனால் வந்தது வேண்டி  விரும்பி  மனதுமே வெற்றி பெறவே  துடிக்குது -----கவியாழி------

அம்மா கடவுள் சரஸ்வதியே

அம்மா கடவுள் சரஸ்வதியே அகிலம் போற்றும் குணவதியே எல்லா குழந்தையும் கற்றிடவே என்றும் கொடுப்பீர் அருள்மழையே இல்லா பிள்ளையும் கற்றிடவே இலவசக் கல்வியை கொடுப்பவர்க்கும் பொல்லாப் பணத்தைப் பிடுங்கியும் பொழுதும் கொள்ளை அடிப்பவர்க்கும் சொல்லில் கடுமையாய்  இருப்போர்க்கும் சொல்லித் தந்தே மகிழ்பவர்க்கும் நல்ல ஒழுக்கமும் நன்னடத்தை நாளும் கற்பிக்கும் ஆசிரியருக்கும் செல்வம் சேர்க்கா பணியாக செலவில்லாமல் தினம் கற்பிக்கும் சொல்லில் சிறந்த சீமான்கள் செய்யும் பணியும்  சிறந்திடவே அன்பும் அறிவும் பெருகிடவே அனைவரும் போற்றும் கல்விக்கு அம்மாதாயே அருள் கொடுத்தால் ஆயுள் முழுக்க வணங்கிடுவேன் ----கவியாழி----

அய்யா வயதில் மூத்தவரே

அய்யா வயதில் மூத்தவரே அன்பில் என்னுள் ஆள்பவரே அழைத்தால் தினமும் மகிழ்பவரே ஆறாம் எண்ணில் அழைப்பவரே அன்பில் சளைத்தவர்  உங்களைபோல் அருகில் எனக்கு இல்லையே அதனால் எனக்கும் லாபமே அடிக்கடி கோபமாய் வாழ்த்துங்களேன் எல்லா  நண்பரும்  மகிழ்வாக எண்ணி இருந்திட நினைப்பவரே சொல்லால்  தவறை சுட்டியே சிறப்பாய் இருந்திடச் செய்பவரே என்மேல் என்ன கோபமைய்யா எதற்கு அப்படிக் கடிந்தீரோ என்னை விடவா உங்களுக்கு ஏக்கம் தந்திடும் மீசையுமக்கு பொல்லா கோபம் இல்லையே பொசுக்கி என்னைக் கொல்லவே எல்லா நாளும் இப்படியே என்னிடம் திட்டி வதைக்காதீர் --கவியாழி--

வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

வயதாகிப் போனாலும் வற்றாத வாலிபமும் மீண்டும் திரும்பாத வாழ்த்துகின்ற வயதிலும் வந்திடும் வாடிக்கையாய் அன்றி நின்றிடும் திரும்பாத முகத்தையும் திருப்பிடும் தீராத ஆசையைத் தூண்டிடும் தெரிந்தோரை மீண்டுமே அழைத்திடும் திரவியம் உள்ளதைக் காட்டிடும் வருந்தாத உள்ளங்கள் இல்லையே வார்த்தையில்  சொல்லவும் மில்லையே பொருந்தாத இடத்திலும் பொங்கிடும் புகழையும் சமயத்தில்  மழுக்கிடும் தெரிந்தோரே உண்மையை சொல்லுங்கள் தெளிவில்லா சங்கதி இன்றுமே தொடர்ந்திடும் என்பதும் உண்மையா தெளிந்தீரா இப்போதும் நன்மையாய் அன்பெனும் அடிமை உண்மையாய் அமைந்திட்ட வாழ்கையே நன்மையாய் துன்புறும் மனதையும் காத்திடும் தூயஒழுக்கமும் வாழ்வில் சேர்த்திடும் புரிந்தீரா சொலவதைக் கேட்டதை புலப்படுதா சொல்லிலே உண்மையை வருந்தாத வாலிப மூத்தோரே வாழ்கையும் இன்னுமே ......கலங்காதீர்

தமிழ்மணப் பட்டையை வைத்தீர்.....

நண்பரே அன்பரே வாருங்கள் நல்லதை எல்லோர்க்கும் தாருங்கள் நாட்டிலே நடக்கிற செய்தியும் நல்லதாய் கதைகளும் சொல்லுங்கள் வீட்டிலே ஆதரவு முக்கியம் விடியலில் எழுவதும் அவசியம் பாட்டுக்கள் கதைகள் கட்டுரைகள் பார்த்ததும் படிப்பது அவசியம் தமிழ்மணப் பட்டையை  வைத்தீர் தணிந்ததா தாகமே இனிமேல் கருத்துக்கள் அதிகமாய் சொன்னால் கடையில்  வாடிக்கைப் பலபேர் அடிக்கடி வலைக்கு வாங்க அனைவரின் படைப்பையும் படிங்க பொறுப்புள்ள கருத்தையே சொல்லி புகழ்பெறம் வரிசையில் நீங்க எழுத்திலே உமக்கு ஏற்றம் இருப்பதாய் அறிந்தே உரைத்தேன் இன்னுமும் சிறப்பாய் எழுதி இமயம் போற்ற வாழ்க

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே பண்பாய் நானும் தினமுமே பாட்டாய் எழுதித் தருவேனே பதிலும் தினமும் கொடுப்பனே உருகி உருகி எழுதியும் உணர்ச்சி மிகுந்தே சொல்லியும் உண்மைத் தன்மை மாறாது உள்ளதை நன்றே சொல்வேனே எதுகை மோனை எழுத்திலே என்றும் தொடர்ந்தே காப்பேனே எல்லா நேரமும் நல்லதாய் எதையும் எழுதி விடுவேனே காதல் காமம் எழுதுவேன் கண்ணீர் வந்திட சொல்லுவேன் ஊர்கள் சென்றதை சொல்லுவேன் உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன் மனதில் தோன்றும்  எல்லாமே மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே மக்கள் என்னை ஒதுக்கும்வரை மகிழ்வாய் கவிதை படைப்பேனே அழகாய் கவிதை படைப்பதால் அன்பாய் நாளும் இருப்பதால் அனைவரும் என்னை விரும்புவதால் அதனால் நானும் இறைவனே

மணிக்கூடும் மனிதக்கூடும்

எத்தனை மணித்துளிகள் இப்போது என்று கேட்டாலும் தப்பேது முப்போதும் ஓடினாலும் தப்பாது முறையாக ஓடிடுவாய் எப்போதும் ஒவ்வொரு மணித் துளியும் ஓய்வுக்காய் என்றுமே தவறாது ஒப்பில்லா காலத்தை உணர்த்தாமல் ஒருபோதும் தடுமாறி நிற்காது நொடியுமே தவறாக ஓடவில்லை நிமிடமும் தனக்காக நின்றதில்லை மணியுமே அவசரமாய் சென்றதில்லை மனிதரைப்போல் குற்றமாய் சொன்னதில்லை ஏழையாய் இருந்தாலும் எப்போதும் எல்லோரும் அவசியமாய் தன்னோடு எப்போதும் துணையாக வந்திடும் எந்நாளும் சரியாகக் காட்டிடும் இருதயம்போல எப்போதும் ஓடிடும் இன்முகமாய் காலத்தைக் காட்டிடும் இதையாரும் வெறுக்கிறவர் இல்லார் இலவசமாய் தருகிறவர் உண்டா --கவியாழி--

மீசை மட்டுமே அழகா

மீசை இருந்தால் அழகேதான் மாதமும் மழித்தால் நல்லதுதான் ஆசை அதனால் குறையாது ஆயுளில் அதனால் பயனேது மீசை இல்லா முதியோரே மீண்டும் வசந்தம் கேட்பாரோ மீண்டும் மீசை வையுங்கள் மிகுந்த இன்பம் கொள்ளுங்கள் ஆண்கள் அனைவரும் பெரும்பாலும் ஆசைக் கொண்டே வளர்திடுவர் ஆயுள் முழுக்க சிலபேரோ அதையும் துறந்தே இருக்கின்றனரே அய்யா பெரியவர்  என்னிடமே அதனால் கடிந்தே பேசியதால் என்னா செய்வேன் இளையவன்நான் எப்படி மறுத்தே சொல்லிடுவேன் அய்யா வயதில் மூத்தோரே அய்ந்தாம் நிலையில் உள்ளவரே அடியேன் என்னை வெறுக்காதீர் அன்பைக் கொடுக்க மறக்காதீர்

இன்பமாய் உலா.....செல்லுங்கள்

இன்பமாய் உலா செல்வீரே இல்லறம் சிறக்குமே  கண்டீரா இன்னலும் தீர்ந்திட சென்றிரா இன்பமாய் இனியச் சுற்றுலா மலைப்பகுதியும் மரங்கள் வளர்ந்த மிதமாய் குளிரும் தரைபகுதியும் நீரால் சூழ்ந்த நீர்ப்பகுதியும் நிலமேத் தெரியாத பணிப்பகுதியும் உல்லாசமாய் எல்லாமும் நினைத்தே ஊரெல்லாம் தொலைதூரம் சென்றே பொல்லாதக் கோபத்தைக் குறைத்தே பொறுமையாய் செல்வீரே அடிக்கடியே துன்பமும் நீங்கிடும் துணையாலே தினந்தோறும் மகிழ்ந்திடும் வாழ்கையில் அன்பையும் கூட்டிடும் மகிழ்ச்சியில் அனைவரும் விரும்பிடும்  சுற்றுலா பண்பையும் நன்றே மாற்றிடும் பணியிலும் ஊக்கத்தை கூட்டிடும் இன்பமாய் சிலநாள் இருந்தால் இதயமும் மகிழ்ந்தே சிரிக்குமாம் ---கவியாழி---

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமே

உணர்ந்தவர் பிரிந்தால் துயரமா உலகினில் மீண்டும் திரும்புமா பழகிய நாட்களும் மறக்குமா பாசமும் நேசமும் கிடைக்குமா அழகிய நாட்களை மறந்திட அன்பை மீண்டும் கொடுத்திட பழகியே நேசத்தை காட்டிட படைத்தவர் உயிரை மீட்டிட தினமும் மகிழ்ச்சியே தந்திட்ட திங்களும் வணங்கிட செய்திட்ட மனிதருள் தெய்வமாய் திகழ்ந்திட்ட  மகனாய் என்னை படைத்திட்ட உறவை மறந்து பிரிந்த உண்மையில் அன்பைப் பகிர்ந்த உணர்ச்சியில்  நான் வருந்த உடையோரை எங்கே மறைந்தீர் தினம் தோறும் வேண்டுகின்றேன் திங்கள் தோறும் அழைக்கின்றேன்  விரும்பாது சென்ற பிதாக்களே வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்களேன் ---கவியாழி---

இன்றைய மாணவர் வாழ்க்கை

இன்றைய  மாணவர் வாழ்க்கையோ இழிந்தே செல்லும் நிலையாலே பண்பை மறந்தே மாணவனும் பகலில் குடித்து கெடுவதுமேன் மகனும்  மறைந்து குடிப்பதில்லை மாணவனாய் இருந்து படிக்கவில்லை அவனின் வாழ்வைக் கெடுப்பதற்கா தினமும் பணமே கொடுப்பதுமேன் அறிவை வளர்க்கும் மாணவன் அடிமையாகும் மதுவைக் குடித்து அறியாமல் செய்யும் தவறுக்கு அப்பனும் ஆத்தாளுமே துணையாமே இளமை  வாழ்வோ சிலகாலம் இனிமை சேர்க்க ஒழுங்காக இல்லமும் உன்னைக் கொண்டாட இருப்பாய் சிறப்பாய் பொறுப்பாக தலைமைப் பொறுப்பை அறிந்தேநீ தினமும் கற்பாய் முறையாக தினமும் படிப்பைத் தொடங்கினால் தெரியும் மகிழ்வாய் எதிர்காலம்

வெள்ளையப்பன் வேதனையை மறைப்பவன்

வெள்ளை நிறத்தவன்  அவன் வேதனையை மறைக்க வைப்பவன் எல்லா  வீட்டிலும் இருப்பவன் ஏழையின் வீட்டிலும் குடியிருப்பவன் கொள்ளைப் பணத்தை முழுங்கி குடும்பம் முழுதையும் வதைப்பவன் இல்லை யென்றாலும் விடமாட்டன் இம்சையை தீர்க்கவே  விரும்புவான் தொல்லை கொடுக்கும் வலிக்கு தோதாய்  வந்து காப்பவன் பிள்ளைத் தாத்தா பாட்டிக்கும் பிணியைத் தீர்த்து வைப்பவன் எத்தனை  நிறத்திலும் இருந்தாலும் எல்லோர் மனதைப் போலவே துள்ளிச் சிரித்தே தொடர்வான் துணையாய் கூடவே வருவான் வறுமை வயதும் பாராமல் வாழ்வை தொடர விரும்பினால் வள்ளல் போலவே  நிம்மதியை வாரிவழங்கியே மகிழ்ந்திடுவான் முதியோர்தின வாழ்த்துக்கள் ---கவியாழி--

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more