தந்தையின் கடமை
தந்தையாய் செய்யும் கடமை தவறைத் திருத்திக் காத்தலாம் விந்தை நிறைந்த உலகில் வேடிக்கை மனிதராய் இல்லாமல் சிந்தையில் புரிந்து வாழ்ந்திட செயலால் சுட்டிக் காட்டி பந்தமும் பாசமும் உணர்த்தி பாங்குடன் வளர்த்தவர் வாழ்பவர் எங்கும் செல்லுகையில் இதுவும் என்பிள்ளைக்கு வேண்டுமென ஏங்கும் உள்ளமே எப்போதும் எதையும் நோக்குவார் அன்போடு வளர்ச்சியில் விதைப் போட்டு வாழ்கையை சொல்லித் தருவார் வளர்வதில் தவறெனில் நேர்த்தியாய் வளரவே வழிகாட்டி துணைவருவார் வாழ்வாங்கு வாழ்கவென வாழ்த்துவார் வளமோடு வாழ்வதைக் கண்டு வருவோர் போவோரிடம் சொல்லுவார் வந்திட்ட துயரம் மறந்திடுவார் விந்தை மனிதனை நண்பனே விதியென்று விட்டு வாழாதே விடியும் மொருநாள்நீ விதியென்று வீதியில் நிற்கும் காலம்வரும் சிந்தை மகிழந்து சிறப்பாக சேர்ந்து வாழ்ந்திடு உறவை சீர்நோக்கி வளர்ந்திடு நீயும் சீறாவாய் சிறப்பாவாய் நன்றே