Posts

Showing posts from July, 2020

தெய்வங்கள்

தெய்வங்கள்

சிரிக்கவும் சிந்திக்கவும் சிறந்த நட்பு

அருகில் வந்ததும் முகம் மலரும் ஆனந்தமாய் முதுகில் தட்டி கொண்டே என்னடா எப்படி இருக்கிறாய் நலமா-என்றே எற இறங்க மனதை அளந்து பார்க்கும்  புரியும் வரையில் கேள்வி கேட்டு புதிதாய் எதையோ தேடிப் பார்க்கும் மனதில் உள்ள வார்த்தை கேட்டு-அறிந்தே மருந்தாய் நட்பு நோட்டம் பார்க்கும் உடையில் தெரியும் சுருக்கம் மெல்லாம் உள்ளம்  வரையில் ஊர்ந்து சென்று தடைகள் என்ன என்பதை மட்டும்- உணர்ந்தே தைரியமான  நல்ல வார்தைகள்  சொல்லும் மனதில் ஓடும் சிந்தனை தனக்கு  மகிழ்வாய் இல்லை என்பதை காட்டும் தனமும் உடலும்  தவிப்பதை கண்டு -கண்கள் கனமே உணர்திக் கைகளைப் பற்றி தினமே பழகும் நட்பாய் இருந்தும் தெளிவாய் உள்ளம் இல்லையே வென்று பணமாய் பொருளாய் கொடுத்திட நினைக்கும்-நட்பே பரிவுடன் சொல்லும் அறிவுரைக்கோடி முகத்தைப்   பார்த்து அகத்திதில் புகுந்து முடிவில் உண்மை நிலையைக் காணும் கிடைக்கும் நட்பே கடைசி வரைக்கும்- உண்மை கடந்தும் நட்பே  என்றும் வெல்லும் கவியாழி....... சென்னை

60ல் தனியே இருக்கும் தைரியமில்லை....

இனியும் தொடரும் ஆக்கமும் ஊக்கமும் இனிதே கடந்த நாட்களின் அர்த்தமும் புதிதாய் தொடங்கும் பொழுதும்  கழிய-பறவையாய் புறப்பட்டு செல்வேன் பதிய தொடக்கமாய் பறக்கும் பறவைக்கு பார்வை முழூவதும் பசியை உணர்ந்தே தேடி தெரியுமாம் பார்க்கும் இடமெல்லாம் பறவையாய்- திரிந்து  பாசம்தேடி மகிவாய் பறந்து  போவேன் வாழ்வில் இதுவரை யாரையும் இழித்ததில்லை வாழ்வில் நட்ப்பை  வறுமையாய் விட்டதில்லை தாழ்ந்தும் பணிந்தும் தவறாய் வாழ்ந்ததில்லை - நட்பை தவிக்கவிட்டு தனியாய்  நடந்தே சென்றதில்லை  வாழ்க்கையும் வாய்மையும் என்றுமே தோற்றதில்லை வாழ்ந்தவர் வாழ்க்கையை மனதில் மறக்கவில்லை ஏழ்மையை மனதால் வென்று வாழ்ந்தும்-எப்போதும் ஏழைக்கு உதவிட இன்றுமே மறந்ததில்லை நாளும் பொழுதும் தேடி பிறக்கவில்லை நல்ல நேரம் பார்த்து  செய்ததில்லை கோளும் சூழும் கொண்ட வழியில்-மனிதனாய் கொள்கை கொண்டே இனியும் வாழ்வேன் இன்பமும் துன்பமும் இணையாய் இருப்பதில்லை இணையை பிரிந்தும் இதுவரை சென்றதில்லை தன்னலம்  கொண்டே தனியுறவு வைத்ததில்லை-60ல் தனியே இருக்கும் தைரியம் எனக்கில்லை ---கவியாழி---    சென்னை   11.07.2020  

ரசித்தவர்கள்