Posts

Showing posts from 2016

தெய்வங்கள்

தெய்வங்கள்

வயது இரண்டென் ஒன்பதில்

வயது  இரண்டெண் ஒன்பதில் வாலிபம் தொடங்கிய நிலையில் பயமென தெளிந்த பருவத்தில் பார்வையால் காதல் கொண்டோர் பள்ளியைத் துறந்துமுடித்துப் பல்கலைப் படிப்பில் நுழைந்து பிள்ளையைப் பொறுப்பாய் வளர்த்து பிணையில்லா வேலைக் கிடைக்க மெல்ல வெளியுலகில்உலவ மிதமான அறிவுரைச் சொல்லி செல்லமாய் சிறகடித்துச் செல்ல சினமின்றி வழி சென்றோர் கள்ளமின்றிக் கல்வியைக் கடந்து கைநிறையக் காசுக் கிடைத்தும் உள்ளம் மாறாமல் பெற்றோர் உறவினர் நண்பர்கள் வாழ்த்துரைக்க இல்லறம் தொடங்கும் இனியோரும் இணைந்தும் பிணைந்தும் இருப்பார்கள் சொல்லறம் புரிந்தும் மகிழ்வார்கள் சோதனை இடறின்றி வாழ்வார்கள் கவியாழி.......

39 வது புத்தகக் கண்காட்சியும் எனது "என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்' புத்தகமும்

Image
                 அன்பார்ந்த நண்பர்களே! அனைவருக்கும் எனது மகிழ்வான . நேற்று வணக்கங்கள். நேற்று சென்னை தீவுத்திடலில்  நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியைப் பார்பதற்காக சென்றிருந்தேன். நல்லப் பரந்துவிரிந்த இடத்தில் தீவுத்திடல் தமிழ்நாடு உணவு விடுதிக்கும்  போர் நினைவு சின்னம் அருகில் எல்லோருக்கும் வசதியான இடத்தில் அமைந்துள்ளது.            சனிக்கிழமை என்பதாலோ அல்லது  பள்ளிகள் திறந்த காரணத்தினாலோ சற்று கூடம் குறைவாக இருப்பதாகவே உணர்ந்தேன்.நல்ல அகலமான  விசாலமான அரங்கில் நிறையக் கடைகள் இருந்தன.இன்னும் சில கடைகளைத் திறக்காமலும் வைத்திருந்தனர்.              எனதுப் புத்தகம் வெளியிடும் புத்தகக் கடைக்கு சென்றேன் அங்கு எனது புத்தகம் எல்லோர் கண்ணிலும் படும்படியான இடத்தில் கண்ணைக்கவரும்படி வைத்திருந்தார்கள்.அதுப்பற்றிய  புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு சமர்பிக்கிறேன். நண்பர்களே தீவுத்திடலிலுள்ள புத்தகக்கண்காட்சிக்குச் செல்லுங்கள் என்னோட புத்தகத்தோட மற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கி மகிழுங்கள் .நிறைய நண்பர்களுக்கு புத்தகங்களைப் பரிசாக வழங்கி புத்தகம் படிக்கும் ஆர்வத்த

என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்-12.06.2016 அன்று புத்தக வெளியிடு

Image
அன்பார்ந்த வலைப்பூ நண்பர்களுக்கு, நான் நீண்ட நாட்களாக அதிக வேலைப்பளு மற்றும் சில காரணங்களாய் தங்களோடு தொடர்பில் இல்லாமைக்கு வருந்துகிறேன். நான் கடந்த காலங்களில் தொடந்து வலையில் எழுதி வந்த கவிதைகளின்  இரண்டாவது தொகுப்பே " என்றுமே மகிழ்ச்சியாய் வாழலாம்",இதைப் படித்தவர்கள் எழுதிய கருத்துக்களை :kaviyazhi.blogspot.com  என்ற எனது வலைப் பக்கத்தில்  காண முடியும்.இந்தப் புத்தகம் தவிர இன்னும் நிறைய  கவிதைகள் மற்றும் கருத்துள்ள கட்டுரைகள் ,துணுக்குகளைக் காணலாம் இன்று தொடங்கிய  புத்தகத் திருவிழா நடைபெறும் சென்னைத் தீவுத்திடலில் வரும்12.06.2016 அன்று மணிமேகலை பிரசுரத்தாரால் அறிவு சார்ந்த தமிழ் இலக்கிய ஆன்றோர்களும் தமிழ் சான்றோர்களும் வெளிநாட்டில் வசிக்கும்  தமிழ்அறிஞர்களும் மற்றும் எழுத்தாளர்களும் என்னைப் போன்றோர்களும் கலந்துகொள்ளும் சிறப்பானதொரு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாடே வியக்கும் நல்லதொரு விழாவிற்கு தமிழ் வலைப் பதிவர்கள்,நலம் விரும்பும் நல்ல நண்பர்கள் அனைவரையும் வருக வருக என்றும் எனது புத்தகத்தை வாங்கி நல்லக் கருத்துக்களைப் படித்து தொடர்ந்து ஆதரவளிக்குமாறு சிரம் தாழ்ந்த

மற்றவர் மனதிலும் வாழலாம்......

மாமழை தொடர்ந்த சென்னையிலே மதங்களும் அழிந்தது உண்மையிலே பூமாலை படைக்க மறுத்தது-மனிதம் புரிந்தது தெரிந்தது உணர்ந்தது கடும்மழை அதிகம் பொழிந்தும் கரைகள் பலதும் உடைந்தும் படும்துயர் அறிந்துத் தமிழன்-உடனே பகிர்ந்தனர் உணவை விரைந்து மதங்களைக் கடந்து  இணைந்தனர் மனிதனைக் கடவுளாய்  நினைத்தனர் பெருந்தவம் கிடைத்ததாய் எண்ணியே-விரைந்து பெருமையாய் உதவினர் மகிழ்ந்தனர் மாபெரும் மனிதனாய் மாறலாம் மக்களின் மனதில் வாழலாம் மனிதனை மக்களை மதித்தாலே-என்றும் மற்றவர் மனதிலும் வாழலாம் ---கவியாழி---

ரசித்தவர்கள்