Posts

Showing posts from November, 2013

தெய்வங்கள்

தெய்வங்கள்

கடந்தும் செல்வது நலமோ.............

எத்தனைப் பெரிய மனிதர்கள் எப்படி எளிமையாய் இருந்தே சத்தியம் தவறா வழியில் சமத்துவம் போற்றி  வாழ்ந்தே நித்தமும் மகிழ்வாய்  உணர்ந்த நேர்வழி நெறிமுறை வளர்த்தே சித்தமும் சிவனுமாய்ப் போற்றிச் சீராய்த் திருத்திச்.சொல்லி குற்றமும்  தவிர்க்க வேண்டிக் குறைகளைக் கண்டு களைந்தே அப்பனும் பாட்டனின் வழியில் அன்று வாழ்ந்ததைச் சொல்லி சிற்பமாய் அறிவால் செதுக்கிச் சீராக்கி நேர்வழியில் வாழ அற்பமாய்ச் செய்யும் தவறும் அறியச் சொல்லிக் கொடுத்தே தப்பேதும் இல்லா வாழ்வை தினமும் சொல்லி வந்தே முப்போதும் மகிழ்ந்து வாழ முறையாய் சொல்லி வாழ்த்தினர் இப்போது நிலைமை இல்லை இருப்பதோ நிலைமை  தலைகீழ் தப்பதை உணர்ந்து வருந்தி தகையோரை மதிப்போர் உளரோ கற்பதை முறையாய் சொல்லாக் கல்வியால் வந்த வினையோ காலத்தை உணர்ந்தே நாமும் கடந்தும் செல்வது நலமோ

கார்த்திகைக் குளிரில் காதல் .......

கார்த்திகைக் குளிரில் காதல் கண்ணனின் அருகில் மகிழ்வாய் காரிகைக் கூட்டமும் இணைந்தே காத்திடும் காரணம் ஏனோ பலரும் சூடாய் இருக்க பருவம் மாறிய மழையும் பாவையர் மனதும் இனிக்க பயனாய் இருப்பதும்  தவறா பூத்திடும் பூக்கள் கூட பூவையர் தலையில் சூடி புரியும் லீலைகள் காண புகலிடம் தேடி வருமாம் பூச்சிகள் ஒன்றாய் கூடியே பூத்திட்ட மலர்களைக் கண்டு போட்டிகள் நடத்திட வேண்டி புதிதாய் ஸ்வரங்கள் தருமாம் பூத்த  மலர்களைத் தேடி புறப்பட்ட வண்டினைப் போல புயலாய்க் கண்ணன் வந்தே புதுமை அனுபவம் தருவான் விலங்குகள் ஒன்றாய் அமர்ந்து வேடிக்கை பார்த்தே சிரித்தே வீதியில் ஆடி இன்பமாய் விரும்பியே மகிழ்வாய்  இருக்கும் இரவில் இன்றி பகலிலும் இனிமை விரும்பும் இனங்கள் இமையால் பேசும் கண்ணன் இனிமை தருமே கார்த்திகை [[[[[[[[ கவியாழி]]]]]]]]

சித்தன் அருளே வேண்டும்.........

சித்தன் அருளே வேண்டும்-தினம் சிந்தனை செய்யவே வேண்டும் நித்தமும் நினைக்க வேண்டும்-மனதில் நிம்மதி கிடைத்திட வேண்டும் சத்தியம் போற்றிட வேண்டும் -நல்ல சங்கதி செய்திட வேண்டும் பத்தியம் இருந்திட வேண்டும்-எனக்கு பகலவன் துணையும் வேண்டும் நேர்மையாய் வாழ்ந்திட வேண்டும் -அன்பை நேசித்தே போற்றிட வேண்டும் சீர்மிகு நட்பும் வேண்டும் -என்னை சிரம்போல் காத்திடவேண்டும் கஷ்டமும் தீர்ந்திட வேண்டும் -எல்லோர் கவலையும் தீர்த்திட வேண்டும் இஷ்டமாய்ச் சிவனை நினைக்கும் -நிலை இனிதே நாளும் வேண்டும் எல்லா  வளமும் பெற்று -வறுமை இல்லா நிலையே வேண்டும் பொல்லா எதிரியும் மாறி -மீண்டும் நட்பினைத் தொடர்ந்திட வேண்டும் கொடுத்து உதவி செய்ய-பணம் குறையே இன்றி வேண்டும் கொடுக்கும் மனமே எனக்கு-நாளும் குறை வில்லாமல் வேண்டும் குறைகள் அகன்றே தீர-மனம் குளிர வணங்கிட வேண்டும் குடும்பம்  மகிழ்ந்து வாழ-சித்தன் கூடவே துணையாய் வேண்டும் ########கவியாழி########

ஷேர் ஆட்டோ பயணம்......ஆபத்தா?ஆதாயமா?

இன்றைய விஞ்ஞான காலத்திலும் பலபேர் தங்களது கார்,பைக் போன்ற சொந்த வாகனங்கள் இருந்தாலும் பஸ்,ரயில் போன்ற போக்குவரத்து வசதி மிகுந்து காணப்பட்டாலும்  ஷேர் ஆட்டோவை பயன்படுத்தாதவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்றே சொல்லலாம். ஷேர் ஆட்டோ கிராமத்திலும் சரி  நகரத்திலும் சரி  இதன் பயன்பாடு அவசியமான ஒன்றாய் விளங்குகிறது.பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள், அலுவலகம் செல்பவர்கள் காய்கறி சந்தைக்கும் செல்பவர்கள் ,கூலித் தொழில் செய்வோர்கள் ,மருத்துவமனைக்கும் செல்பவர்கள் போன்ற எல்லோரும் விரும்பும் அவசியம்  இந்தவாகனத்தைப் பயன்படுத்த தவறுவதில்லை. இது பணத்தை மிச்சப்படுத்தவும் விரும்பிய இடத்தில் இறங்கவும் பயமின்றி அதிக மக்களுடன் செல்லவும் வசதியாய் இருக்கிறது..பஸ் வசதி இல்லாத இடங்களிலும்,நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்ற ஆட்டோக்களின் அதிக கட்டண வசூலைத் தவிர்க்கவும் இதன் பயன்பாடு மெச்சத்தகுந்த வகையில் உள்ளது. கிராமங்களில் எல்லோருமே உபயோகப்படுத்துகின்றனர் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அதிக பயணிகளை ஏற்றுவதால்  பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது.நெரிசல் அதிகமாகி இடவசதி குறைவாகவே இருக்கும் .ஆண்பெண் பாகுபாடின்றி இடந

திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை விஜயம்

Image
திருவாளர்.எஸ்.ரமணி .அவர்களின் சென்னை  விஜயம் பற்றி திருமிகு.செல்லப்பா அவர்களின் விருப்பத்திற்கிணங்க நான் அவசியம் தெரிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்கு வியாழன் காலை பதினோரு மணியளவில் அலைபேசிச் சிணுங்கியது.நான் சென்னை வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் முடிந்தால் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வாருங்கள் என்று  அன்பு கட்டளையிட்டார் .( பெங்களூரில் இருந்தபோதே   சென்னை வருவது பற்றி சொல்லி இருந்தார்) திரு.ரமணி அவர்கள் சென்னை வந்தால்  சொல்லுங்களேன் என்று திரு.செல்லப்பா அவர்களும் சொல்லி வைத்திருந்ததால் அவரிடம் தகவல் சொன்னேன்.அவர் உடனே ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் சுமார் இரண்டு மணிக்கே மாம்பலம் ரயில் நிலையம் வந்துவிட்டார். இருவரும் அருகிலுள்ள ஏதாவதொரு ஹோட்டல் சென்று மதிய உணவை அவரோடு உண்ணலாமே என்று சொன்னார். சரியாக இரண்டுமணி முப்பது நிமிட நேரத்தில் திரு.ரமணி அவர்களும் வந்துவிட்டார்.மூவரும் மேற்கு மாம்பலத்திலுள்ள டாட்டா உடுப்பி ஓட்டலில்  (அப்போதுதான் ரமணி அவர்களைப் பார்த்ததும் ஒரு நடுத்தர வயது மங்கை ஆச்சரியப்படுத்தி விட்டார்.) உணவருந்தியப்பின் திருமிகு.புலவர்.ராமாநுசம்  அ

பருவம் மாறிய மழையினாலே.....

பருவம் மாறிய மழையினாலே பசுமை வயலும் மாறுது பருவ மழைப் பொய்த்ததாலே பயிரும்  கருகி வாடுது நீர்நிலைகள் எங்கும் நீரின்றி நீரோட்டம் குறைந்தே போகுது நிலத்தின் தன்மை மாறியே நீர்குளமும் காய்ந்தே பொய்க்குது செடிகொடிகள் காய்வதாலே சிறுபூச்சியும்  மடிந்துபோகுது சின்னஞ்சிறு உணவைத் தின்னும் சினம்கொண்டே பாம்பும் அலையுது வனங்கள் எங்கும்  வறட்சியாகி வனவிலங்கும் மடிந்தே போகுது வானத்திலே ஓட்டை விழுந்து வானிலையும் மாறிப்போகுது சூரியனின் கண் சிவந்தால் சூழ்நிலைகள் மாறிப்போகுமே சுடு கதிர்கள் பட்டதாலே சூழும் மரணம் உறுதியாகுமே மனிதன் வாழ மரமும் செழிக்க மழையும் பொழிய  வனமும் செழிக்க உணவை  மீண்டும் உறுதி செய்ய உழைக்க வேண்டும் மழையே பொழிய இதைக்கண்டே இனியேனும் மக்கள் இயற்கை வளத்தைக் காக்க இனமே தழைக்க  இனியேனும் இயன்ற உதவி செய்யலாமே

ஆவியோ பேயோ அலையுது

ஆவியோ பேயோ அலையுது ஆனந்த ஆட்டமும் ஆடுது அடிக்கடி இப்படிக் காண்பதால் ஆங்கிலப் படம்போல் தோணுது அருகில் யாரோ இருப்பதுபோல் அடிக்கடி எனக்கும் தோணுது அணைக்கவும் துடித்து வருது அப்படியே என்னுள் அடங்குது ராத்திரி நேரத்தில் நடக்குது நடப்பதால் பயத்தில் குளிருது நாட்களும் தொடர்ந்தே வருகுது நம்பிக்கை இன்றி இருக்குது ஆண்டவன் நம்பிக்கை வீணாகி ஆனந்தம் கொடுக்க மறுக்குது ஆனாலும் தொடர்ந்து மிரட்டுது அதனால் மனமும் கலங்குது இன்பமாய்ச் சிலநாள் இருக்குது இனிமைச் சுகமும் கொடுக்குது இருந்தும் மனதும் நடுங்குது இனிய தருணத்தை  மறைக்குது துடிப்பும் தொடருது தூண்டுது தொடங்கியே ஆனந்தம் கிடைக்குது துவளுது தூங்கிட நினைக்குது தூங்கியும் உடம்பும் நடுங்குது கடவுளும் இல்லை தடுக்கவும் கடந்தும் மனதை வதைப்பதை கண்ட மருத்துவம் உள்ளதாய் காட்சிகள் உண்டா நண்பர்களே கனவும் இதுவே என்பதும் கண்டவர் என்போல் உள்ளதை கதையை பலபேர் சொல்வதை கவிதை வடிவில் கொடுத்திட்டேன்

நேர்மை வழியில் வாழ்ந்திடலாம்

பாம்பும் தேளும் பூரானும் பயந்தே ஓடி மறைந்திடுமாம் பகைத்தே நாமும் அடித்தாலே பாய்ந்தே நம்மைக் கடித்திடுமாம் வீம்பாய்க் காளையை மிரட்டினால் விரைந்தே வந்து முட்டுமாம் வீணாய் நிலத்தைப் போட்டாலே விளையும் நிலமும் கெட்டிடுமாம் வேண்டா வெறுப்பாய் பழகினாலே வேற்றுமை வந்தே பிரிக்குமாம் விசயம் இன்றி வாதிட்டாலே வீணே சண்டை வந்திடுமாம் ஈன்ற பொருளைக் காத்தாலே இறுதி நாட்கள் மகிழ்ந்திடுமாம் இல்லை என்றே சொல்லாமல் இருப்பதைக் கொடுத்தல் நலமாகும் எதிலும் பொறுமை இருந்தாலே எல்லா நலமும் கிடைக்குமாம் எளிதில் உணர்ச்சியில் தவறிழைத்தால் எதிராய்க் காரியம் கெடுக்குமாம் பாசம் கொண்டே பழகுங்கள் பகைமை எண்ணம் தவிருங்கள் நேசம் ஒன்றே ஒற்றுமையாய் நேர்மை வழியில் வாழ்ந்திடலாம் ********கவியாழி*******

மழையும் அதிகம் பெய்ததாலே.........

மழையும் அதிகம் பெய்ததாலே மரங்கள் சிரித்தே மகிழ்ந்தனவாம் மழைநீர் தேங்கி இருப்பதனால் மலர்கள் பூத்துச் சிரித்தனவாம் குளங்கள் எங்கும் நிறைந்ததாலே குளத்தில் தவளை கத்தியது கொக்கும் பாம்பும் பூச்சிகளை கொன்றே தின்று திரிந்தது பாம்பும் நிறையத் திரிந்ததாலே பறந்தே மயிலும் வந்தது பசியால் வாடிய கீரியும் பகிர்ந்தே பாம்பைத் தின்றது வனத்தில் எல்லா மிருகமும் வாழ்த்துப் பாட்டு பாடியே வருக மழையே என்றே வரிசையாகப் பாடி ஆடியது நரியும் பறவையும் இசையாக நல்ல சேதியைச் சொன்னது நலமாய் வாழப் பறவைகளும் நடனமாடி அன்பைப் பகிர்ந்தது ஆடும் மாடும் கூடியே ஆட்டம் போட்டு இருந்ததை அங்கே வந்த உழவனும் அதனுடன் சேர்ந்தே ஆடினான் எல்லா இனமும் ,மகிழ்ச்சியாக எளிதில் மனதும் குளிர்ச்சியாக நல்லாள் மழையால் இன்பமாக நன்றே வாழ முடிந்தது எல்லா வனங்களும் மரங்களாய் எல்லோர் மனதும் போலவே எங்கும் மரங்கள் வளர்த்தாலே என்றும் இதுபோல் மகிழலாம் .............கவியாழி,,,,,,,,,

எனது மலேசியப் பயணம்

Image
       நான் உலக அளவிலான கேரம் விளயாட்டுப்போட்டிகாக  1999 ம் ஆண்டு இதே நவம்பர் மாதம் இந்திய அணியின் மேலாளராக நானும்,இந்திய விளையாட்டு வீரர்களுடன் திருவாளர்.பி.பங்காரு பாபு. (சர்வதேசப் பொதுச்செயலாளர்) அவர்களும்  சென்றிருந்த போது நான் மற்றும் தெற்காசிய நிர்வாகிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.  மேலும் பல வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் இந்திய வீரர்களும் வந்திருந்து  நவம்பர் 26ரிலிருந்து 28  வரை நடைபெற்ற உலக போட்டி மிகச் சிறப்பாக  நடைபெற்றது,வழக்கம்போலவே இந்தியாவே ஒட்டுமொத்த பதக்கங்களையும் தட்டிச்சென்றது மகிழ்ச்சியாய் இருந்தது.    இதே மாதத்தில் சென்ற இனிமையான தருணம் மறக்க முடியாதது. -----கவியாழி---

வருகைத் தந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது!! நன்றி !நன்றி!! நன்றி !!!

Image
நன்றி  !              நன்றி !!                     நன்றி !!! கடந்த 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய எனது பார்வையாளர்களின் எண்ணிக்கை இன்று ஐம்பதாயிரத்தை கடந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். மாதங்கள்                                                  =15 பதிவுகளின் எண்ணிக்கை                =350 பார்த்தவர்களின் எண்ணிக்கை   =50000  இன்றுவரை ஆதரவளித்துவரும் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் சிரம் தாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மீண்டும்  மீண்டும் தொடர்ந்து ஆதரவையும் வேண்டுகிறேன். -------கவியாழி------

நேரம் எனக்குப் போதவில்லை

நேரம் எனக்குப் போதவில்லை நிம்மதியாய்த் தூங்க வில்லை தூரம் அதிகமாய் ஒருவீடும் தொல்லையின்றி  மறுவீடும் இருப்பதால் காலைமாலை என அலைச்சலால் கண்ணெரிச்சல் குறைய வில்லை கண்டபடி தூங்க வேண்டியே கண்ணு ரெண்டும் அழைத்தே உடல் சூடும் குறையவில்லை உள்ளபடி எந்தக் குறையுமில்லை உண்மையாகச் சொன்னாலே எரிச்சல் உடம்பெல்லாம் தாங்க முடியவில்லை மகிழுந்தில் சென்றாலும் வெக்கை மறுபடியும் நிழலையே தேடுது மகிழ்ச்சியை மறந்தே மழையும் மக்களை  இப்படி  வதைக்குது வேலைச் செய்யவும் நேரம் வீணாய்க் கடந்து போகுது விடியல் காலை எழுந்தாலும் விழியில் கண்ணெரிச்சல் இருக்குது வெள்ளாமை இல்லாத நிலமும் விலைவாசியில் துள்ளிக் குதிக்குது எல்லா இடமும் சென்னையில் இப்படித்தான் வீடாய் இருக்குது இயற்கையின் சதியும் காரணமாய் இன்றையச் சூழல் இருக்குது என்னைப்போல் எத்தனைப்பேர் எரிச்சலால் மனம் தவிப்பது

மழையும் பெய்யவில்லை அதனால் .....

அருகருகே அதிக வீடுகளால் அன்றாடக் காற்றும் மறைக்குது ஆளாளுக்கு மின்சார பயன்பாட்டால் அதற்காகப்  பணமும் கரையுது மழையும் பெய்யவில்லை அதனால் மரங்களில் பச்சை செழுமையில்லை மதிய வேளையிலே எல்லோருக்கும் மறுபடித் தூங்கவேத் தயக்கமில்லை  ஏழையும் மனதால் வருந்தி எங்குமே செல்ல இயலவில்லை ஏர்பிடிக்க ஆசை இருந்தும் ஏரித்தண்ணிர்ப் பாய்ச்சலில்லை எப்போது மழை வருமோ எல்லோரின் மனம் மகிழுமோ தப்பாக மரம் வெட்டியதால் தண்டனை இப்போதே உள்ளது  இப்போதே எல்லோரும் யோசியுங்கள் இருக்கிற இடத்தில் மரங்களை இரண்டிரண்டு நட்டு வளருங்கள் இதையே எல்லோருமே சொல்லுங்கள் எல்லோரும் நன்றாக யோசித்தால்  எதிர்காலம் சிறப்பாய் இருக்கும் சொல்லாலே நில்லாமல் செயலில் செய்தாலே மழையும் வருமே  ----கவியாழி

இன்று நீரழிவு நோய் தினம்

எல்லா வயதினரும் பயப்படும் இளையோர் கூட அகப்படும் பொல்லா நோயாம் நீரழிவு புரிந்தே நடந்தால் போய்விடும் தினந் தோறும் மதுப்பழக்கமும் தீராத மனநோயுமே தொடர்ந்தால் வேராக வளர்திடுமாம் நீரழிவு வினையாக நோயாக வந்திடுமாம் மருந்தே இதற்க்குத் துணையாக மாலைகாலை  தின்று வந்தால் மறையும் காலம் அதிகரித்தே மறுபடி நோயும் தொடர்ந்திடுமாம் காலை மாலை வேளைகளில் கடினமான பயிற்சி செய்து வேளை தோறும் மருந்துகளை விட்டு விடாமல் சாப்பிட்டும் வியர்வை பார்த்தே விளையாடி வீதியில் காலாற நடமாடி விதியால் வந்த வியாதியை விரைவில் கட்டுக்குள் வைக்கலாம் மனதில் கவலை வைக்காமல் மருந்தை துணைக்கு அழைக்காமல் தினமும் பயிற்சி செய்தாலே திரும்ப வராமல் தடுத்திடலாம் உடற்பயிற்சியும் மனவலிமையும் உடலுறுப்பை உறுதி செய்யும் மனவளக் கலையையும் யோகாவும் மருந்தைவிட சிறந்த பலனாகும் ********கவியாழி*********

சலூன்கடையும் சாமியின் மடமும்

      சிறுவயதில்  முடிவெட்ட  சலூன் கடைக்கு அனுப்ப மாட்டார்கள் .காரணம் அங்கு அறைமுழுதும் கண்ணாடி  சீருடை அணிந்தவர் அதிக கட்டணம் வசூலிப்பார்கள் சுகாதாரம் என்ற பேரில்  சுழலும் சக்கர நாற்காலி  தினசரிப் பத்திரிகை வெளிநாட்டு முகப்பூச்சு கலர்கலரான பாட்டில்களில்  தண்ணீர்த்  தெளிப்பான் மற்றும்  வானொலிப்பெட்டி என்று மட்டுமே இருந்தது.         இன்றைய நாட்களில்  பெரும்பாலான நகரங்களில் சுகாதாரம் சுத்தம்  வேண்டி பொதுமக்கள் வந்து செல்லுமிடங்களில்  குளிரூட்டப்பட்ட வசதி செய்யப்பட்டுள்ளது .குஷன் மெத்தைகள் அழகிய வேலைப்பாடுகள் ,நறுமணம் வீசிக்கொண்டே நாளும் இருக்கும் வசதி போன்றவற்றுடன் கண்கவர் வண்ண விளக்குகள் போன்ற மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் உள்ளது.         ஆனாலும் மக்கள் சாதாரணக் கடைகளுக்கே செல்லுகிறார்கள்  அன்று வெறுத்த இடமே இன்று அவசியம் தேவையெனப் பட்டது.இப்போதெல்லாம்  எல்லோரும் விரும்புவதேக் காரணம்.காசு கொஞ்சம் கூட இருந்தாலும்  பரவாயில்லையென அவ்வாறான சலூன் கடைக்கே செல்வது வாடிக்கையாகிவிட்டது. ஆனால் அங்கு எப்போதும்போல் கூட்டத்திற்கு குறைச்சலில்லாமல்  இருக்கும்            சொந்தகதைகள் ஊர்க்கதைகள் எப

இல்லமே மகிழ்ச்சியாய் இருக்கலாம்

நாற்பது வயதானால் நண்பனே நாவடக்கம் தேவை என்பதால் நாகரீகம் என்ற பெயரில் நா சுவைதரும் கொழுப்பும் நேரம் கடந்த தூக்கமும் நிம்மதி யில்லா மனமும் ஆண்மையின் ஆசை துறந்தும் அலுவலில் பணி அதிகரித்தும் பணமே  வாழ்க்கை என்ற பணியில் ஓய்வில்லா உழைப்பும் பகலிரவு அலைச்சல் இருந்தால் பசியும் குறைந்தே நோயேமிகும் நயவஞ்சகம் செய்வோரின் நட்பும் நலிந்தோரை இழிந்து பேசுதலும் நல்லோரின் நட்பை மறந்தே நாளும் குடித்தே இல்லாமல் இல்லத்தாளுடன் இனிய பிணைப்பும் இல்லறம் போற்றும் நல்லொழுக்கம் இணைந்தே  வாழும் குடும்பம் இன்முகமாய் எப்போதும் இருந்து தியானமும் தொடர்ந்து செய்து திடமாய் வாழ யோகக்கலையுடன் மனமே விரும்பும் கடவுளை மகிழ்ந்தே வணங்கி வந்தால் இனமே செழிக்க வளர்க்க இன்னுமே சிறப்பாய் வாழலாம் இனிமையாய்   நல்லதைச் செய்யலாம் இல்லமே  மகிழ்ச்சியாய் இருக்கலாம் ````````````````````கவியாழி``````````````````

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை அப்படி இருந்தும் சாதியாடா அப்பனும் பாட்டனும் அறியாமல் அன்றே வளர்த்தத் தீயடா நித்தமும் உழைத்தே வாழ்கிறாய் நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய் புத்தமும் சொல்லும் போதனையை புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய் கற்பனை வாழ்க்கை அறுதியில்லை கண்டதும் கேட்பதும் உண்மையில்லை அற்பனாய் வாழ்ந்திட முயலாதே அடிமை கொண்டே  வருந்தாதே உயர்வு தாழ்வு பார்க்காமல் உன்னில் வேற்றுமை காணாமல் உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய் ஒழுக்கம் நன்றே முதலீடாய் கற்பதை நன்றே புரிந்துகொண்டு காப்பாய் நீயும் அமைதிகொண்டு இனத்தில் நாமும் தமிழனாக இந்தியத் தேசத்தின் புதல்வனாக உணர்வாய் மனதில் முதல்வனாக ஒற்றுமை கொள்வோம் மனிதனாக

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன்

இதழ்நீக்கி இன்பமாய்ச் சென்றேன் இனித்தேன் இருந்தேன் சுவைத்தேன் மார்புக்குள் அவளை அணைத்தேன் மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள் சூடேற்றி சிலிர்த்தே சிணுங்கியே சின்னதாய் புன்னகையில் ஜோலித்தாள் செழுமையாய் உரிமையாய் இணைந்தே சேதியை முடித்தேன் ருசித்தேன் பூவுக்குள் தேனை எடுத்தேன் புரிந்ததும்  பார்வையாலே சிரித்தாள் தூறலும் நின்றது மகிழ்ச்சியாய் தூரத்தில் தெரிந்தது வானவில் மார்புக்குத் திரைப் போட்டு மனதிலே அசைப் போட்டு ஊருக்குள் மகிழ்ந்த நாட்கள் உண்மையான சிறந்த நாட்களே யாருக்குத்தான் இனிக்காது இச்சுவை எதிரிக்கும் ஆசைவரும் இதுபோல ஊருக்கும் தெரிந்திருக்கும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்த தன்றோ

பணத்தை மதிக்க மாட்டேன்....

பணமும் தேவை யானாலும் பணத்தை மதிக்க மாட்டேன் பணத்தாசை இல்லா நானும் பணத்தால் அடிமை ஆகேன் இனிமைப் பேசத் தயங்கேன் இன்முகம் காட்ட மறவேன் இழித்தே எளிதில் பேசேன் இறைவனை அதற்க்காய் தேடேன் நல்லோரை  வணங்கி  மகிழ்வேன் நாளும் சென்றுப் பார்ப்பேன் நலிந்தோரின் வாழ்க்கைச் சிறக்க நல்லதை சொல்லியே வருவேன் பொல்லாதோர் நட்பை மதியேன் பொய்யாக எதையும் சொல்லேன் புகழுக்கு அடிமை ஆகமாட்டேன் புரிந்தோரைக் கைவிட மாட்டேன் உள்ளத்தில் நட்பை வைப்பேன் உண்மையில் அன்பைப் பகிர்வேன் உரிமையாய் குறைகளைச் சொல்லி உண்மை நட்பை வளர்ப்பேன் ````````````கவியாழி```````````

மயங்கியே படர்ந்தாள் தொடர்ந்தாள்

மின்னலிடைக் கொடியாள் வானத்தில் மேகத்தின் மேனியெல்லாம் தழுவி கன்னலென இருந்தக் கார்மேகத்தை வண்ண ஒளிவீசிச் சிரித்தாள் எண்ணம் எனக்கோ தெரியாமல் என்ன சொல்வதெனப் புரியாமல் சின்ன விழியிரண்டை மூடினேன் சில்லென்ற காற்றில் தேடினேன் கன்னம் சிவந்த கயல்விழியால் கண்டவுடன் சிரித்தாள் மறைந்தாள் தின்ன மறந்த தேன்பலாவின் திகட்டாத சுவையை மறுப்பேனா இன்னும் வேண்டுமென எப்போதுமே இனிமையான சுவையைத் தீண்டியே உண்ண விரும்பும் அவளை உதறித் தள்ளி விடுவேனா ஓடிச்சென்றுப் பார்த்தேன் அவளின் ஒருசுளையைத் தவிர்க்க முடியுமா ஓய்வாய் அருகில் அமர்ந்தேன் ஒருகிழி நடுவில் கிழித்தேன் இடைவெளி.........

பேயும் வாழட்டும் மகிழ்ந்தே.............

பேயும் இருந்தால் நன்றே பேதைமை கொள்வோரைக் கடித்தே போதையும் கொண்டே மீண்டும் பேயும் வதைக்கட்டும் தொடர்ந்தே அரக்கனை அழிக்க வேண்டாம் அவனையே வாழவும்  வைத்தால் அத்தனை திருடனையும்  கொன்றே அகிலமும் சிறக்கும் நன்றே உணவில் கலப்படம் செய்வோர் உரிமையை  மறுத்திடும் முதலாளி ஊரையே சுரண்டும் தலைவன் ஊழலை வளர்க்கும் மனிதன் சோம்பலை விரும்பும் மக்கள் சொன்னதைக் கேட்கா  இளைஞன் சுரண்டலைச் செய்யும்  அரசியலார் சுற்றித் திரியும் சோம்பேறி உழைக்க மறுக்கும் கணவன் ஊதாரி செலவிடும் பெண்கள் உடலை வருத்தா ஊழியன் உண்மையே சொல்லாத் திருடன் நாளையை விரும்பா மாணவன் நாணயம் இல்லா ஆசிரியர் நலிந்தவர் வாழ்வைச் சுரண்டியே நாளும் வட்டிக் கேட்பவன் போன்றோரைக் கொன்று வதைக்கவே போக்கிடம் இன்றி அலைந்தே பொழுதும் கொல்லுதல் செய்தே பேயும் வாழட்டும் மகிழ்ந்தே =======கவியாழி======

இதுவும் மனித இயல்பன்றோ..........

கஷ்டத்தில் வாழும்போது காணாத சுற்றமும் நட்பும் உதவிக்காய் இஷ்டமாக வருவார்கள் இல்லையென இல்லாத ஒப்பாரி வைப்பார்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் கண்ணீர் விட்டும் அழுவார்கள் கவலைத் தீர்ந்ததும் உணராது கண்டபடித் தவறாய் சொல்வார்கள் குற்றம் சொல்லிப் பயனில்லை குறையாய் எண்ண வழியில்லை கொள்கை இல்லா மனிதனுக்கு குணமாய் அமைந்தது இயல்பன்றோ இல்லை யென்றே சொல்லாமல் இருக்கும் போதே  கொடுத்திடுங்கள் கொள்ளை இன்பம் உங்களுக்கு கொடுத்தே இதயம் மகிழ்ந்திடுமாம் பெற்றப் பிள்ளைகள் பேரின்பம் பிணிகள் அகன்றே நன்றாக இல்லை என்ற நிலையாக இனிதே மகிழ்ந்தே வாழ்ந்திடுமாம் இதயம் மகிழ உதவிடுங்கள் இனிமை வாழ்வுக்கு நிரந்தரமாய் இதையும் நல்ல சேமிப்பாய் இருக்கும் போதே செய்திடுங்கள் -----கவியாழி-----

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more